Home » Articles » பாதை மாறிய பயணங்கள்

 
பாதை மாறிய பயணங்கள்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

சமீபகால செய்திகளையும், நிகழ்வுகளையும் பார்க்கின்ற போது, இன்றைய இளைஞர் சக்தி தவறான பாதையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளப்பட்டு வருவதை எல்லோருமே அறிவோம்.
ஆனால், வழக்கம் போல நண்பர்களுடன் கருத்துப் பரிமாற்றம், நான்கு சுவர்களுக்குள் விவாதம் என்ற அளவில் முளையிலேயே கருகி விடுகிறது.
இந்நிலைக்கு காரணம் என்ன? அதில் நம் ஒவ்வொருவரது பங்கு, நம் செயல்பாடுகளில் தேவையான மாற்றம், அதனால் விளையும் மாற்றங்கள் என வகைப்படுத்திச் சிந்திப்போம்.
பாதைகள் உருவான விதம்:
ஒருவர் பின் ஒருவராக ஒரே தடத்தில் நடக்கின்றபோது அது பாதையாகிறது. அந்தப் பாதையில் ஆரம்பத்தில் பயணம் செய்தவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பார்கள். பின்னால் சென்றவர்கள் பாதிப்பின்றி பயணித்திருப்பார்கள்.
“வாழ வேண்டும் என்றெண்ணி மனிதனாக
வந்ததில்லை; எனினும் நாம் பிறந்து விட்டோம்
வாழ வேண்டும் உலகில் ஆயுள் மட்டும்
வாழ்ந்தவர்கள் அனுபவத்தைத் தொடர்ந்து பற்றி”
இது அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் கூற்று.
நாம் வாழும் வாழ்க்கை நம் முன்னோர்கள் வழிகாட்டுதலில் அமைய வேண்டும்; அப்படி வாழ்ந்தால் தான் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும் என்பது இதன் பொருள்.
பொருந்தாக் கலாச்சாரம்:
ஆனால், இன்று மேல்நாட்டு கலாச்சாரத்தின் தாக்கம் நம் உடை, உணவு, வசிப்பிடங்களில் பரவி வருகிறது. இதனால், நம் உடல் ஆரோக்கியம் கெட்டு, தன்னம்பிக்கை இழந்து விரக்தியோடு வாழும் சூழல் தான் உருவாகும்.
அந்தந்தப் பகுதிகளில் நிலவும் வெயில், குளிர் தான் நாம் அணியும் உடைக்குக் காரணமாயும், உணவுக்கான விளை பொருட்களாயும் உள்ளன. ஆனால் நாம் மேல் நாட்டு மோகத்தின் காரணமாக, பொருளாதார முன்னேற்றத்தால், நமக்கான பாதையிலிருந்து தடம் மாறி, தடுமாறிப் பயணம் செய்கிறோம். இதனால் வரும் விளைவுகள் என்னவென்று தெரிந்து கொள்ளவும் மனமில்லா நிலை தான் இன்று நிலவுகிறது.
பொது நலம் என்பது புறந்தள்ளப்பட்டு, சுயநலம் முதன்மைப் படுத்தப்பட்டு வேகமாகப் பயணம் நடைபெறுவதால், நியாய உணர்வுள்ளவர்களது குரல் எவர் காதிலும் விழுவதில்லை.
கிராமங்களில் முன்னேர் செல்லும் வழியில் பின்னேர் சென்றால், நிலமானது ஆழமாக உழப்பட்டு, மண் புரட்டப்பட்டு நல்ல விளைச்சலுக்குக் காரணமாகும் என்று கூறுவதை நாம் அறிவோம்.
அதுபோல் தான் நம் முன்னோர்களின் அற வாழ்க்கையை ஒட்டி நாம் வாழ்ந்தால், எவ்வித சூழ்நிலையாலும் பாதித்து புரட்டப்பட்ட நம் மனமானது அறநிலையை உணர்ந்து துன்பமில்லா வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
விஞ்ஞான வளர்ச்சி:
இயற்கை வளங்களை வாழ்க்கை வளங்களாக மாற்றும் நம் அறிவின் வெளிப்பாடு தான் விஞ்ஞான முன்னேற்றம்.
ஓர் உதாரணம் மூலம் இந்த அலங்கோலத்தைப் பார்க்கலாம். பல வெளிநாடுகளில் ஓர் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் மிகவும் குளிராக இருக்கும். அதற்கேற்றவாறு அணியும் உடைகளைத் துவைக்க வாஷிங்மிஷின் கண்டுபிடித்தனர். துணிகளை அழுக்குடன் உள்ளே போட்டால், சுத்தப்படுத்தி, காய வைத்துக் கொடுத்துவிடும்.
எடுத்து பெட்டி போட்டு (Iron Box-ல் அழுத்தி) அணிந்து கொள்வார்கள். எந்தக் குளிராக இருந்தாலும் பாதிப்பில்லை.
அதேபோல, சமையல் பாத்திரங்கள் (பெரும்பாலும் பீங்கான் மற்றும் கண்ணாடியலானவை) சுத்தம் செய்ய டிஷ்வாஷ் (Dish Wash) என்ற கருவியைப் கண்டுபிடித்தனர். பாத்திரங்களையும் அதனுள் போட்டு, சுத்தம் செய்வதற்கான பவுடரையும் போட்டு விட்டால், தேவையான அளவு நீரை எடுத்துக் கொண்டு சுத்தமாக்கி விடும். இவை குளிர் பிரதேச வாழ்க்கைக்கு சரி. ஆனால், வெப்பப்பகுதி, மித வெப்பப் பகுதியான நம் ஊரில் இன்றைக்கு இந்த மிஷின்களின் உபயோகம் நினைக்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
சாதாரண குடிசை வீடுகளில் கூட வாஷிங் மெஷின்கள் உபயோகிக்கப்படுகின்றன. நடுத்தரக் குடும்பங்களில், மேல் தட்டு மக்களின் வீடுகளில் டிஷ்வாஷ் இப்போது அடியெடுத்து வைக்கிறது.
இதனால் என்ன? பொறாமையா? நல்லது தானேஙு எவ்வளவு நேரம் மிச்சம் என்று நொண்டிச் சமாதானங்கள் பல சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நம் உணவு, தட்ப வெப்பம் இவற்றின் அடிப்படையில் இந்தக் கருவிகளின் வரவு, நம் உடலை நோய்களின் இருப்பிடமாக அல்லவா மாற்றிவிட்டதுஙு
டிஷ்வாஷில் நமது சமையல் பாத்திரங்களிலுள்ள எண்ணெய்ப் பசை முழுதும் போகுமா என்றால், சிரமம் தான். நம் ஊர் வழக்கப்படி சாம்பல், தேங்காய் நார் அல்லது பிளாஸ்டிக் வாஷிங்பிரஷ், சோப் போட்டுத் தேய்த்தால் தான் சுத்தமாகும். இதை ஏற்றுக்கொள்ள மனமில்லை.
வாழ்க்கை விதிகள்:
ஒவ்வொரு கணமும் இயற்கை நியதிக்குட்பட்டே நகர்கிறது. பிரபஞ்ச இயக்கத்தை எதிர்த்து நம்மால் நிரந்தரமாக ஏதும் செய்ய முடியாது. தற்காலிகமாக ஏதோ ஒரு சிலவற்றைச் செய்யலாம். அவை கூட இயற்கையின் முன்னால் தவிடு பொடியாகி விடுவதை நாம் காண்கிறோம்.
இயற்கை நியதி தான் நம் வாழ்க்கையின் விதிகள். விதிகளுக்குட்பட்டு விளையாடாவிட்டால், ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவது போல், இயற்கை நியதியை மீறும்போது, நாமும் நம் வாழ்க்கையெனும் நந்தவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறோம். இது தெரிந்தும் கூட, இன்னும் வேண்டும் என்ற பேராசையால் வாழ்க்கையை எங்கேயோ எண்ணிக் கொண்டிருப்பவர் பலர்.
வாழ்க்கைக்கு ஆதாரம் பொருள்வளம். இது அதிகமானால் முதலில் வருவது மகிழ்ச்சி. மிக அதிகமாகும்போது தொடர்ந்து வருவது துன்பம் மட்டும் தான். போதும் என்ற நிறைவு அனைவருக்கும், குறிப்பாக நம் நாட்டு மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேருக்கு வந்தால் கூட, நம் அனைவரது பயணமும் சரியான பாதையில் மகிழ்ச்சியாக அமையும்.
நம் நாட்டு மக்கள்தொகை சுமார் 122 கோடி. இதில் ஒரு சதவீதம் 1.22 கோடி இவர்கள் யார் தெரியுமா?
பெரிய தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், கட்சி நிர்வாகிகள், அரசாங்க அதிகாரிகள், திரையுலகினர், வரிகளை ஏமாற்றுவோர் போன்றோர் தான்.
பாருஙு பாருஙு வெளிநாட்டைப் பாருஙு
நாம் சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் போன்ற பலவற்றை, அங்கு பராமரிக்கப்படும் சுத்தம், சுகாதாரம், போக்குவரத்து முதலிய பலவற்றுக்கு உதாரணமாய் கூறவதை வாடிக்கையாக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், நம் நாட்டில் அதுபோன்ற நிலை வருமா? வராதா? என்று பட்டிமண்டபம் தான் நடத்த வேண்டும். அப்படி வந்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா? ம்ஹீம், நிச்சயமாக முடியாது.
சலுகைகளின் அடிப்படையில் உலா வருவதென்பது தேன் நெல்லியைச் சுவைப்பது போல் விருப்பமானதல்லவா? சட்டம் போட்டவர்களும், அதைக் கண்காணிக்க வேண்டியவர்களும், அந்தச் சட்டங்களுக்கு மேலாகத் தம்மை நினைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், வெளிநாடுகளில் சட்டமானது யாரென்று பாராமல், பாகுபாடில்லாமல், அமைச்சரின் நண்பர் என்பது போன்ற பல வரையறைகளையெல்லாம் புறந்தள்ளி, தன் கடமையைச் செய்து வருகிறது. அதனால் தான் அவை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
இதுபோன்ற நிலை நம் நாட்டில் வரவே வராதா? வரும். எல்லோரும் சேர்ந்து அக்காட்சியை மனோசித்திரமாய் கண்டு சட்டங்களை மதித்து வாழும் போதுஙு
காத்திருங்கள்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment