Home » Articles » வளமான வாழ்வின் அஸ்திவாரம்

 
வளமான வாழ்வின் அஸ்திவாரம்


மாரிமுத்துராஜ் A.G
Author:

நமக்கென அமைந்த வாழ்க்கையை வாழ்ந்து, காலப்போக்கில் அது கொடுத்த அனுபவத்தின் ஞானத் தெளிவில், வளமான வாழ்க்கையின் ரகசியத்தைக் கண்டுபிடித்து, மிக சொற்ப காலத்திற்கு மட்டும் வளமான வாழ்வை வாழ்வது என்பது, இன்றைய நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகும்.
வேகம், வேகம், அசுர வேகத்தில், இங்கே அத்தனை பேரும் முண்டியடித்துக் கொண்டு, முன்னேற்றத்தின் மீது முனைப்பைக் காட்டுவதுடன் நின்றுவிடாது, வெற்றியடைந்து, உடனுக்குடன் வெவ்வேறு உலகத்திற்குச் சென்றுவிடவும் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். தனக்கு கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும், தன் சாதனைகளாக்க துடித்துக்கொண்டு இருக்கும்போது, அதற்கேற்றவழிமுறைகளை அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.
அத்தகைய வளமான வாழ்விற்கான அஸ்திவாரம் என்ன என்கின்ற ரகசியத்தை இங்கே போட்டு உடைக்கப் போகின்றேன். அது மிகப்பெரிய வேதாந்த வித்தையல்ல. மிக, மிக எளிமையான முறையானதாகும். அதாவது மூன்று பிரிவுகளாக நம்மை நாம் வகைப்படுத்தி, முறைப்படுத்தி, வளர்த்துக் கொண்டே இருப்போமானால் வளமான வாழ்வு என்பது, ஞானப் பழமாக நமக்கு நிச்சயம் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த வளமான வாழ்வின் அஸ்திவாரம் இதுதான்.
1. சமூகம் சார்ந்த சக்தி (நர்ஸ்ரீண்ஹப் நந்ண்ப்ப்ள்)
2. சிந்தனைத் தொடர்பான ஆற்றல் (பட்ண்ய்ந்ண்ய்ஞ் நந்ண்ப்ப்ள்)
3. சூழலை சமாளிக்கும் திறன் (சங்ஞ்ர்ற்ண்ஹற்ண்ய்ஞ் நந்ண்ப்ப்ள்)
மேற்கண்ட மூன்று பிரிவுகளாக நம்மை நாம் முறைப்படுத்தி, வளர்த்துக் கொண்டே இருப்போமானால் மிகப்பெரிய வெற்றியை அடைவது எளிதாகும்.
1. சமூகம் சார்ந்த சக்தி
க்ஷி தன்னைத் தான் அறிதல்
க்ஷி தன்னைப்போல் பிறரை நினைத்தல்
க்ஷி தொடர்பு கொள்ளும் திறமையைப் பெற்றிருத்தல்
க்ஷி உறவை வளர்க்கும் கலையறிந்திருத்தல்
ஒருவரின் சமூகம் சார்ந்த சக்தி என்பது, மேற்கண்ட அத்தனை சுயவிழிப்புத் தன்மையுடன் தொடர்பு கொண்டு இருப்பதாகும். இத்தகைய சமூகம் சார்ந்த சக்தியின் நிலையைப் பொறுத்தே, ஒருவரின் உன்னதத் தன்மை வெளிப்படும்.
தன்னைத் தான் அறிதல், தன்னைப் போல் பிறரை நினைத்தல்
தன் பலம், பலவீனம் என்ன? தற்போதுள்ள வயதிற்குத் தகுந்தபடி உள்ளோமா? நம் உடல் வலிமை மற்றும் உடல் நலம் எந்த நிலையில் உள்ளது? நம்முடைய கல்வித்தகுதி தேவையான அளவு உள்ளதா? நாம் செய்யும் தொழிலில் நமக்கு குறிப்பிடத்தக்க திறமையுள்ளதா? பொதுவான அறிவு வளர்ச்சி எந்த அளவு உள்ளது? நம்முடைய அதிகார வரம்பு நிலை மற்றும் செல்வ செழிப்பு நிலை எந்த அளவு உள்ளது? இதுபோன்ற எண்ணற்ற சுயஅலசல் அடிக்கடி நமக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றபோது நம் வளர்ச்சி பெருகிக்கொண்டே இருக்கும்.
அதுபோல், தன்னைப்போல் பிறரை நினைத்தல் என்பது, என்னுள் இருக்கும் உயிர்தான், என் எதிரே உள்ளவரிடமும் உள்ளது என்கிறஉணர்வை அடைதல், பிறரை துன்புறுத்துவது என்பது, தன்னைத் தானே துன்புறுத்துவதற்குச் சமம் என்று அறிதல். மற்றவரின் சுயம் பாதிக்கப்படாத அளவிற்கு என்னுடைய செயல் அமைய வேண்டும் என்கிறஎண்ணம் மேலோங்கி இருப்பது. “வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்” என்றாரே வள்ளலார் அது போன்றதே தன்னைப் போல் பிறரையும் நினைத்தல்.
தொடர்பு கொள்ளும் திறமையும், உறவை வளர்க்கும் தன்மையும்
பளிச்சென்றதோற்றத்துடன், சற்றேகவர்ச்சியும், வசீகரமும் கலந்து வெளிப்படும்படி எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தொடர்பு கொள்ளவும், உறவை வளர்க்கவும் பேருதவியாக இருக்கும். எப்பொழுதும் புன்முறுவல் பூத்த முகத்துடன், அன்புடன் வரவேற்று, அன்னியோன்யமாகப் பேசுவதும் மிக முக்கியமானதாகும்.
மனித இயல்பு என்னவென்றால் பிறர் தனக்குக் கௌரவம் தரவேண்டும் என விரும்புவது தான். ஆகையால் இதை மனதில் வைத்துக் கொண்டு மற்றவரிடம் தொடர்பு கொண்டால் பலன் கிடைக்கும். மேலும் செயல்களைச் செய்யும் முறையில், நாம் காலத்தைக் கையாளுவது, மனதிற்குத் திருப்தியுள்ள ஒன்றாக அமைந்தாலும், அவைகளால் நட்புறவு அமைகிறதா என்று ஆராய்வது அவசியமாகும். அதுபோல் நமக்கு நேரும் பொருள் மற்றும் சிறு இழப்புக்களால் ஒரு நன்மை விளையுமானால் நாமாக முன்வந்து விட்டுக் கொடுக்கலாம். அது தொடர்பு கொள்ளுவதிலும், உறவை வளர்ப்பதிலும், நல்ல பலன் அளிக்கும்.
ஒவ்வொரு உறவையும் நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துத்தான், நம்முடைய அன்றாட வாழ்க்கையின் தரம் அமைகின்றது. “சிறு துரும்பும் பல்குத்த உதவும்” என்பது போல ஒவ்வொரு உறவும் ஏதோர் வகையில் பயன்படக்கூடியதே என்பதில் எப்போதும் மனதில் நிலை நிறுத்துவோம்.
2. சிந்தனைத் தொடர்பான ஆற்றல்
பக்குவமாய் கேள்வி கேட்பது
பளிச்சென்று பதில் கண்டுபிடிப்பது
தெளிவாக இயங்குவது
சிக்கலில் தெளிவான முடிவு எடுப்பது
மேற்கண்ட சிந்தனை தொடர்பான ஆற்றல் அனைத்தும் ஒருவரின் படைப்பாற்றல் தன்மையை மேம்படுத்துவதாகும். சிந்தனை தொடர்பான ஆற்றல் ஒருவரிடம் எந்த அளவு வளர்ந்துள்ளதோ, அந்த அளவு அவர் புதிய படைப்பாற்றல் தன்மையுடையவராக இருப்பார்.
பக்குவமாய் கேள்வி கேட்பதும், பளிச்சென்று பதில் கண்டுபிடிப்பதும்
ஏன் என்ற கேள்வியில் இருந்து பிறந்தது தான் நாகரிகம். நாம் பிறந்தது முதல், இறக்கின்ற தருணம் வரையிலும், ஏன் என்ற கேள்வியும் உடன் இருந்து கொண்டே இருக்கும். அது மனிதச் சிந்தனையுடன் தொடர்பு கொண்டதாகும். நாம் ஒரு கால கட்டத்தில் வெளிப்படையாக கேள்விகளைக் கேட்கின்றோம். மற்றொரு காலகட்டத்தில், நமக்குள்ளே நாம் கேள்வியைக் கேட்கின்றோம். இப்படித்தான் நம் வாழ்க்கை முழுவதும், கேள்வியும், பதிலுமாய் நிறைந்துள்ளது.
கேள்வி எழ, எழ அதற்கான பதிலும் வர, வர நாம் உயர்ந்த சிந்தனையுடையவராய் வளர்வோம். ஒரே கேள்வியிலேயே உட்கார்ந்து கொண்டே இருப்போமானால், நாம் தேங்கிக் கிடக்கும் நீராய் நாரிப்போவோம். நம்மில் தேடுதல் இருக்கும் வரைதான் நமக்கு தேவையும் இருக்கும். அதற்கான வாழ்விலும் சுவாரஸ்யம் மிளிரும். நாம் புதியதை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டே இருக்க, தேடுதல் என்பது தேவைப்படுகின்றது. தேடுதல் என்பது நமக்கு, நாம் படிக்கும் புத்தகம், கேட்கும் சொற்பொழிவு மற்றும் பட்டறிவின் மூலம் அமைவதாகும்.
சில கேள்விகளும், அதற்குக் கிடைத்த பதில்களும்
1. கடைகளைத் தேடிப்போய் ஏன் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்க வேண்டும் என்றகேள்விக்கு…
வீடு தேடிச் சென்று அதுவும், தவணை முறையில் அந்தப் பொருளை கொடுப்போம் என்றபதிலுக்குக் கிடைத்த பலன் பன்மடங்காகும்.
2. பாடலை வீட்டில் மட்டும் தான் கேட்க முடியுமா? பார்க்க முடியுமா? டெலிபோனை வீட்டில் மட்டும் தான் பேச முடியுமா? என்றகேள்விக்கு…
போகும் இடமெல்லாம், கேட்கவும், பார்க்கவும், பேசவும் வசதியுள்ள நவீன பொருட்கள் வந்தது. அவைகளால் மற்றவர்க்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் அதை அனுபவிக்கும் வாக்மேன் வந்தது.
3. பேண்ட், சர்ட் போட்டால்தான் கௌரவம் என்று நினைக்கும் மக்கள் மத்தியில், எப்படி வேட்டி சட்டையைப் பிரபலப்படுத்துவது என்றகேள்விக்கு…
வேட்டியே கட்டத் தெரியாத, வேட்டியே கட்டாதவர்களையும் கவரும் வகையில் வெள்ளை பனியன், வெள்ளை கைக்குட்டை, வெள்ளை பெல்ட், வெள்ளை செல்போன் கவர் என்று அனைத்தையும் வெள்ளை நிறத்தில் வடிவமைத்து, விற்பனையைப் பெருக்கிய நிறுவனத்தின் சாமர்த்தியத்தை என்ன என்று சொல்லுவது.
இப்படி எண்ணிலடங்காத கேள்விகளில் இருந்து பிறந்தது தான், நவ நாகரிக உலகின் அத்தனைப் பொருட்களும் என்றால் அது மிகையாகாது.
கேள்வி பிறந்தது அன்று – நல்ல
பதில் கிடைத்தது இன்று
யாவும் நடந்தது நன்று.
-கவிஞர் கண்ணதாசன்
தெளிவாக இயங்குவதும் சிக்கலில் தெளிவான முடிவெடுப்பதும் எப்படி என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்….

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment