Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


ஆசிரியர் குழு
Author:

இனியொரு விதி செய்வோம்
பொருளாதாரத்தைப் பலப்படுத்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் அவசியம் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறொரு ஊருக்கு இடம் பெயர வேண்டியது இன்று தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வந்து சேர்ந்த ஊரில் குழந்தை, பள்ளி என்று வரும்போது உடனிருந்து கவனிக்க முடியாத நிலை. இதுதான் நம் பாரம்பரியம், கலாச்சாரம் இதில் இருந்து மாறுபட்டு வாழ்தல் கூடாது. இப்படி இப்படி வாழ்ந்தால்தான் வாழும் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறும் என்று நீதி போதனைக் கதைகளை எடுத்துச் சொல்ல தாத்தா, பாட்டியை உடனும் வைத்துக் கொள்வதில்லை.
எங்கோ பிறந்து, எங்கோ வாழ்கிற போது தனக்கென தனிக்கொள்கையை வகுத்துக்கொண்டு தார்மாறான வாழ்க்கைக்கு ஒவ்வொருவரும் அஸ்திவாரம் போட்டுக் கொள்வதால் தான் சமுதாயத்திற்கு (ஊருக்கு) பயந்து வாழ்தல் இல்லாமல் போனதுஙு இம்முறை மெல்ல மெல்ல தொலைந்து வருவதால் தான் செய்வது மட்டுமே சரி என்கிற எண்ணம் தலை தூக்கிக்கொண்டு விட்டது.
இன்று சின்னஞ்சிறுவர்களும் பெரிய செயல்களை பள்ளியிலும், பொது இடங்களிலும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சீர்படுத்த வேண்டிய ஆசிரியர்களே ‘பிட்’ கொடுத்து எழுதச் சொல்லும் நிழ்வும் அரங்கேறி வருகிறதுஙு
தாய், தந்தை சொல்லை கேட்கும் பிள்ளை கற்றுக்கொடுக்கும் குருவின் அறிவுரை வழி நடக்கும் மாணவர்கள், தவறு நடக்கிறது என்று தெரிந்தால் பிடித்தவர்களே என்றாலும் சுட்டிக்காட்டும் பொது ஜனங்கள், மக்களின் உண்மை நிலை கண்டு நன்மை பல புரியும் தலை(வர்)கள் இப்படிப்பட்டவர்களை யார் கொண்டு வருவார்?
படைத்த கடவுளா? இல்லை கடவுள் படைத்த நாமேஙு

அன்புடன்,


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2012

உலக சிரிப்பு தினம்
மேடை மாலை கைத்தட்டல்
களவாடப்படும் நேரம்
சமூகப் பணி படிப்பு
பல இரசம் (பலரசம்)
திறமை தான் நமக்குச் செல்வம்
மாறிவரும் வேளாண்மை!
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
நம் மதியே நிம்மதி
பாதை மாறிய பயணங்கள்
உனக்குள்ளே உலகம்-24 படிப்பு – வேலை – சில விவரங்கள்
வளமான வாழ்வின் அஸ்திவாரம்
சலிப்படைந்தால் சாதனை இல்லை!
உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது!
விதையென விழு! விருட்சமென எழு!!
இன்ஸ்டாகிராம்
மேலாண்மை மந்திரங்கள்
உள்ளத்தோடு உள்ளம்