Home » Articles » சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்

 
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்


மோகன்குமார் இரா
Author:

புகைபிடித்தல், மது அருந்துதல், சோம்பேறித்தனம், ஊதாரித்தனம், பொய் சொல்வது, திருட்டு, தள்ளிப்போடுதல், உணவு கட்டுப்பாடின்மை, பேராசை, எதிர்மறை உடல் மொழிகள், சூதாட்டம், அனுசரணை இல்லா சந்தர்ப்பங்களில் நாம் அடிமையாகி விடுகின்றோம். பின் அவற்றிலிருந்து மீள முடியாமல் நோய், துன்பங்கள், அவமானங்கள், எதிர்ப்புகள், தோல்விகள், நிம்மதியின்மை, உறவு முறிவுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆட்பட்டு துன்புறுகிறோம். பல நேரங்களில் நம்முடைய தீய பழக்கவழக்கங்கள் நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களுக்கும், சமூகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
தீய பழக்கவழக்கங்கள் புற மனதின் விருப்பத்தோடோ, விருப்பமின்றியோ, நம் ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கும் பழக்கவழக்கங்களே. முதல் புறமானது இந்த பழக்கவழக்கங்கள் தன்னால் எப்போது வேண்டுமானாலும் தடுத்து நிறுத்தமுடியும் என்ற எண்ணத்தில் ஆழ்மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளச் செய்கின்றது. ஒரு கட்டத்தில் ஆழ்மனது அந்தக் குணங்களைத் தனதாக்கிக் கொள்கின்றது. எடுத்துக்காட்டாக புகைபிடிக்கும் பழக்கம் நண்பர்களுக்காக சந்தர்ப்ப சூழல் காரணமாக வேண்டா வெறுப்புடன் உருவாக்கப்பட்டு பின் ஆழ்மனதில் மறக்கமுடியாத குணமாக, பிடித்த குணமாக பதிய வைக்கப்படுகின்றது. ஆழ்மன பதிவுகளின் தாக்கத்தால் புகைக்கும் பழக்கத்தை விட்டுவிடலாம் என்று புறமனது நினைத்தலும் ஆழ்மனது அவ்வளவு எளிதாக விட்டுவிட ஒத்துக்கொள்ளாது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அத்தனை தீய செயல்களுக்கும் மூல காரணம் ஆழ்மன பதிவுகளே.
ஆக நாம் தீய பழக்கவழக்கங்களுக்குக் காரணமாக எதிர்மறை பதிவுகளை நம் ஆழ்மனதிலிருந்து வெளியேற்றுவதனால் மட்டுமே நம் தீய பழக்கவழக்கங்களிலிருந்து முழுமையாக விடுபட்டு சிறப்பான சந்தோஷ வாழ்வை நோக்கி பயணகிக் முடியும்.
ஆகவே முதலில் இனி எந்த தீய பழக்கவழக்கங்களும் ஆழ்மனதிற்குள் செல்லாதவாறு புற மனதை மிகவும் கவனமாக கண்காணித்து செயல்படுவது நல்லது.
அடுத்ததாக இதுவரையிலும் நம் ஆழ்மனதில் பதிய வைத்த தீய பழக்கவழக்கங்களின் பதிவுகளை வெளியேற்ற முயற்சி மேற்கொள்வது மிக முக்கியம்.
எப்படி தீய பழக்கவழக்கங்களை விட்டொழிப்பது?
மூச்சில் முழு கவனம் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்தி தியான நிலைக்கு வந்தபின்.
முதலில் நம் ஆழ் மனதிற்கு நம்முடன் இருக்கும் தீய பழக்கவழக்கத்தின் பின் விளைவுகளை பற்றித் தெளிவாக பொறுமையாக அறிவுறுத்த வேண்டும்.
அடுத்ததாக அந்த தீய பழக்கத்தினை விட்டுவிடுவதனால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெளிவாக எடுத்துரையுங்கள்.
இதுவரையிலும் குறிப்பிட்ட தீய பழக்கத்தினால் நன்மை ஏற்படுவதாக ஏற்படுத்தி வைத்திருந்த பதிவுகளை நம்பி வந்த ஆழ்மனது இப்போது உண்மை நிலவரத்தை உணரத் துவங்கும்.
மாற்றம் வலிமிகுந்தது. ஆனால், மன உறுதியுடன் தொடர்ந்து நம் ஆழ்மனதில் இருக்கும் தீய பழக்கத்தின் தீமைகளையும் அதை விட்டு விடுவதானல் வரும் நன்மைகளையும் மனத்திரையில் கொண்டு வாருங்கள்.
மனதில் மாற்றம் தானாக வரும். தீய பழக்கங்கள் வேகமாக அகலும்.
சந்தோஷமும் சாதனைகளும் சாதாரண நிகழ்வுகளாக மாறும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2012

உனக்குள்ளே உலகம்
வளமான வாழ்வுக்கு
ஆடம்பரம் அழிவைத் தரும்
வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…
வாழ்வியல் நுட்பங்கள்
நியூட்ரினோ
நாட்டுக்கு நாமென்ன செய்தோமென கேட்டு கேட்டு கடமைகள் செய்வோம்!
பதிவுகள்
ஸ்டீவ் ஜாப்ஸ்
தாயுமானவர்
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்
கோவையின் வரலாற்று வேர்கள்
மனம் விட்டுப் பேசுங்கள்
எண்ணங்களே பிரம்மாக்கள்
சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!!
உறவுகளைக் காப்போம்!
உள்ளத்தோடு உள்ளம்
கேளுங்கள் கொடுக்கப்படும்