Home » Articles » தாய் மண்ணே வணக்கம்

 
தாய் மண்ணே வணக்கம்


சைலேந்திர பாபு செ
Author:

மாநிலங்கள் 30, 7 யூனியன் பிரதேசங்கள் கொண்ட நாடு. 1618 மொழிகள், 5 பெரிய மதங்கள், 6400 சாதிகள், 29 பெரிய விழாக்கள் – இவற்றுக்குச் சொந்தக்காரர்களாய் விளங்கும் 120 கோடி மக்கள். இந்தப் பன்மையிலும் ஒருமையைப் பேணும் உன்னத நாடுதான் நம் இந்தியத் திருநாடு.
இந்த மண்ணுலகில் சிறந்த பண்பாடும் நாகரிகமும் கொண்ட முதல் மனித இனம் என்னும் பெருமை நம் முன்னோர்களைச் சாரும்.
உலகப் பெரு மதங்களுள் ஒன்றான புத்த மதம் இந்தியாவில் தோன்றியது. நம் நாட்டில் வழிவழி வந்த சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவான புத்த மதம் இன்று சீனா, ஜப்பான் மற்றும் தூரக் கிழக்கு நாடுகளில் இந்தியா தந்த கொடையாக நின்று ஆட்சி செலுத்துகிறது. நம் நாட்டின் இந்து மத மற்றும் ஜைன மதகருத்துகள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் வேறூன்றிக் கிடக்கின்றன. சுருங்கச் சொன்னால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியக் கலாச்சாரம் உலக நாடுகளில் பரவி விட்டது எனலாம்.
போரில் தோற்றவர் அடுத்தடுத்துப் போர் செய்வதில் நாட்டம் கொள்ளாமல் இருப்பது உலக இயைபு. ஆனால், வென்றவர் தொடர்ந்து போர் செய்யவே விரும்புவர். விதி விலக்காக மாவீரன் அசோக மன்னன் கலிங்கத்து போரில் பெற்றமாபெரும் வெற்றிக்குப் பின்னால் போரைத் துறந்தான். கொள்ளாமை விரதம் ஏற்று நல்லாட்சி செய்தான். வட இந்திய மாமன்னன் ஷெர்சா மிகச் சிறந்த நிர்வாகத் திறன் மிக்க வெற்றியாளராகத் திகழ்ந்தான். மகாரானாப் பிரதாப் என்றமாமன்னன் அஞ்சாத சிங்கம் என ஆட்சி செய்தான். உலகப் பணக்கார பேரரசனான ஔரங்கசீப்பை ஆட்டங்காணச் செய்து தன் ஆட்சியை நிலைநிறுத்தினான் மராட்டிய மாமன்னன் வீர சிவாஜி.
கணிதத்திற்கு அடிப்படையாக விளங்கும் பூஜ்யத்தைக் கண்டுபிடித்த கணித மேதை ஆரியபட்டா வாழ்ந்த நாடு நம்நாடு. சஷ்ருத்தர், போகர் போன்றமருத்துவ மேதைகளும், நோபல் பரிசு பெற்றசர்.சி.வி. இராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், அமர்த்தியா சென் ஆகியோரும் தோன்றிய நாடு நம் நாடு.
உலகிலேயே ஒரு விஞ்ஞானியைக் குடியரசுத் தலைவராகப் பெற்றநாடு, ஒரு பொருளாதார மேதையை பிரதமராகப் பெற்றநாடு நம் இந்திய தேசம்தான்.
“எச்செயலையும் மாண்புறச் செய்யும் மகத்துவம் உன்னிடத்தில் உள்ளது. அதை முழுமையாக வெளிப்படுத்துவதே கல்வி” என்று உலகுக்குரைத்தவர் சுவாமி விவேகானந்தர். அமெரிக்க மக்களை இந்தியாவை நோக்கி அன்னாந்து பார்க்கச் செய்தவரும் அவரே. முதன் முதல் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நம் நாட்டின் பெருமைகளை அறிந்து அதன் புகழ்பாடச் செய்த மாமனிதரும் அவர்தான். அவருடைய பிறந்த நாளை (ஜனவரி 12) தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடுகிறோம். ஒரு செயலை மாண்புறச் செய்தல் என்னும் அவரது கருத்துக்கு விளக்க நூலாகத்தான் இந்த நூலை எழுதியுள்ளேன். இந்தியாவின் மற்றுமொரு மாமனிதர் மகாத்மா காந்தியாவார். அவரிடத்தில் படைவீரர் இருந்தார்களா, படைக்கருவி இருந்ததா? இல்லை. சத்தியம், அகிம்சை என்பன மட்டுமே அவரது படைக்கருவிகளாக இருந்தன. அவற்றைவைத்துதான் பிரிட்டிஷ் ஆட்சியை அடியோடு அகற்றினர். பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த ஜான்சி இராணி இலட்சுமிபாய் வரலாற்று ஏடறிந்த, நாடறிந்த வீராங்கனை.
இத்தகைய மாவீரர்களின் வீராங்கனைகளின் அதிகாரப்பூர்வமான வாரிசுகள்தாம் நாம். இதனை நீ உணரவேண்டும்.
இந்த மணித்திரு நாட்டில் மனிதராய்ப் பிறந்தோம் என்பதை பெருமையாக நினைப்போம். ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்டவர்கள் நாம் என்பதை நினைத்துப் பார். மிகப் பழமையான நாகரிகம், பண்பாடு மற்றும் வாழ்வியல் நெறிகளைக் கொண்டவர்கள் நாம்.
அவற்றைஉலகிற்கு கொடையாகத் தந்தவர்களும் நாம். நம்நாட்டை ஒரு வல்லமை வாய்ந்த நாடாக ஆக்குவதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உண்டு. இதனைச் செய்ய நம்மால் முடியும்.
இன்றைக்கு அமெரிக்க நாட்டில் அமெரிக்கரை விட அதிக வருவாய் வளத்தோடு வாழ்வோர் இந்தியர்கள்தாம். நாம் ஒவ்வொருவரும் வெற்றியாளராக மாறி, அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கல்வி, வேளாண்மை விளையாட்டு போன்றதுறைகளில் சாதனைப் படைக்க வேண்டும். நம்மால் முடியும் என்பதை சாதித்துக் காட்டியிருக்கிறோம்.

  • உலகிலேயே பெரிய படைபலம் கொண்ட நான்காவது நாடு.
  •   அதிக அளவில் இரயில்பாதைகளைக் கொண்ட மூன்றாவது நாடு.மு அதிக மனிதவளம் கொண்ட நாடு.
  •   பொருளாதராத் துறையில் வளர்ச்சியடைந்த இரண்டாவது நாடு.
  •   அதிக அளவில் எல்லும், தேயிலையும் விளையும் இரண்டாவது நாடு.
  •   மைக்கா உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு.
  • மக்களாட்சியை நிலைபெறச் செய்த பெரிய நாடு.

உலகளவில் நம் இந்தியர்கள் நிகழ்த்தியுள்ள சாதனைகளைச் சற்று எண்ணிப்பார்.
அமெரிக்காவில் வாழும் மருத்துவர்களில் 38% பேர் இந்தியர்கள்.
அங்கு வாழும் விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.
நாசா வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் 38% பேர் இந்தியர்கள்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 34% பேர் இந்தியர்கள்.
இன்டல் நிறுவனத்தில் 17% பேர் இந்தியர்கள்.
IBM நிறுவனத்தில் 28% பேர் இந்தியர்கள்.
எனவே இந்தியர்கள் எங்கும் எப்போதும் சிறப்புக்குரியவர்கள். நாம் இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம். வல்லரசு நாடாகும் தகுதி நமக்குண்டு. இமயம் போல் என்றென்றும் நிலைத்து நிற்கும் நம் நாட்டை வணங்கி போற்றி பாதுகாப்போம். வாழ்க இந்தியா.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2011

நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
சிந்திக்கத் தூண்டும் இலக்கியச் சிந்தனையாளர்
ஊக்கஉணர்வுடன் வாழுங்கள்!
பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை!!
சாதிக்கலாம் வாங்க
நேனோ டியூப்
கவலைதரும் கலாச்சார மாற்றங்கள்
புகை வண்டி
உலக கழிப்பறை தினம்
மாறிவரும் வேளாண்மை
அத்தனைக்கும் ஆசைப்படு
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை
உங்கள் குழந்தை எப்படி…?
முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!!
தாய் மண்ணே வணக்கம்
உள்ளத்தோடு உள்ளம்