– 2011 – November | தன்னம்பிக்கை

Home » 2011 » November

 
 • Categories


 • Archives


  Follow us on

  நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்

  மிகுதியாகிவிட்ட சுண்ணாம்பு சிறுநீர்வழியாக வெளியேறாக் காரணத்தால், குழந்தையின் எலும்புகள் இருக்கவேண்டிய அளவைக்காட்டிலும் அதிகக் கனமாகி, அதன் விளைவாகக் குழந்தையின் மொத்த உடல் எடை மிகுதியாகக் கூடிவிடும். இத்தகைய குழந்தைகளைத் தூக்கும்போது, அவை மிகவும் கனமாக இருப்பதை நம்மால் நன்கு உணரமுடியும்.
  வெளியேறவேண்டிய நீர் உடம்பினுள்ளேயே தங்கிவிடுவதால், அந்நீர், நுரை ஈரலினுள் சென்று அங்குள்ள நுரைப் பகுதிகளில் தண்ணீர்த் துளிகளாகப் படிந்துவிடும். அப்படிப் படிவதால், மூச்சுக் காற்று உள்ளும் புறமும் செல்லும்போது, கறட்டுக் கறட்டென ஒலி எழும்பும். குழந்தை மூச்சுவிடச் சிரமப்படும்.
  மூச்சுக் காற்றுப் பறிமாற்றம் செய்வதற்காக உள்ள “ஆல்வியோலை” எனும் சிறுசிறு துவாரங்கள் தண்ணீர்த் துளிகளால் அடைபட்டுவிடுவதால், குழந்தைக்கு தொடர் இருமல் ஏற்படும். (கக்குவான் போன்ற நோய் ஏற்படுவதற்குங்கூட இந்நிலைமை வழி வகுக்கும்).
  சிறுநீராக வெளிச்செல்லாத நீர், உடம்பை விட்டு எப்படியாவது வெளியேறித்தான் தீரவேண்டும். அதல்லாது, நீர் அழுத்தம் தாங்காது, மூத்திரப்பையை வெடிக்கவைத்து, இந்தச் சிறு குற்றத்திற்காகக் குழந்தையை பெருந்துயரத்திற்கு ஆளாக்கிவிடக் கூடாதல்லவா!
  எனவே, அக்குழந்தையின் மூளை, வெளிச்செல்லாத அந்த நீரை வியர்வையாக மாற்றி, தோலின்வழி வெளியேற்றத் தொடங்கும்.
  நிறைய வியர்வை ஏற்படுமானால், குழந்தையின் வெளிப்புற உடம்பு வெகுவாகக் குளிர்ந்துபோகும். அதிக வியர்வை உடைய குழந்தையின் உடம்பைத் தொட்டுப் பார்த்தீர்களானால், அது எந்நேரம் சில்லிட்டுப்போனதுபோலக் குளிர்ந்து போயிருக்கும்.
  இவ்வாறு உடலின் வெளிப்புறம் குளிர்ந்திருக்குமானால், நுரை ஈரலினுள் நீர்த்துளிகளின் தேக்கம் உண்டாகும்.
  வெயிலடிக்கும் வேளையில், நாம் மகிழ்ந்து ஒன்றினுள் அமர்ந்திருக்கும்போது, திடீரென மழைபெய்து, வெளிப்புறம் குளிர்ந்துபோய்விடுமானால், சாத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளின் உட்புறத்தில் பனிமூட்டம் போல நீர்த்துளிகள் ஏற்படுமல்லவா, அதுபோலத்தான் நுரையீரலிலும் நீர்த்தேக்கம் ஏற்படும்.
  இத்தகைய நீர்த்தேக்கத்தின் காரணமாகக் குழந்தைக்கு இருமல், மூச்சுத்திணறல் உட்பட, “பிரான்கைட்டிஸ்” அல்லது “ஆஸ்த்துமா” எனும் இளைப்புநோய்கள் ஏற்படும்.
  மூக்கு உட்பட முகமெல்லாம் குளிர்ச்சியடைந்துவிட்ட காரணத்தால், காற்றில் உள்ள இயற்கையான ஈரம் (Relative Humidity, RH),குழந்தையின் நாசியில் குளிர்ந்து, நீராக மாறி, அதுவே நாசியில் கசிந்து சுரப்பது போலாகி, குழந்தைக்குத் தொடர் தும்மலையுந் தரும்.
  இது, தடுமனைச் சார்ந்தது அல்ல. மாறாக, “சைனஸ்” (Sinusitis) என்றுகூறப்படும் நோயாகும்.
  இந்த நோயைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு, மிகச்சிறிதளவு நல்லெண்ணையை நாசித்துவாரத்தில் தடவினால், உடனடியாகத் தும்மல் நிற்கும்.
  இதனைத், தொடர் தும்மலுடைய பெரிவர்களும்கூட இவ்வாறு செய்து, தற்காலிகமாக துயரை நீக்கிக் கொள்ளலாம்தான்.
  இந்நோயை, மருந்து மாத்திரைகளில்லாது முற்றிலுமாகக் குணப்படுத்திக் கொள்ளுவதெப்படி என்பதை, ஆங்கிலம் தெரிந்தவர்கள், எனது “Asthma, Bronchitis, Cough, Sneezing and Sweating”என்ற நூலிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
  ஏனையோர், சிலமாதகாலம் பொறுத்திருப்பீர்களானால், நமது “தன்னம்பிகையின்” வழி நான் விவரிப்பதைப் பார்த்துப் பயன்பெறலாம்.
  இவ்வாறாக, சரிவரச் சிறுநீர் கழிக்காத குழந்தைகள் பலவாறான நோய்களுக்குள்ளாக நேரிடும். இதன்காரணமாகத்தான், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு, அது பெண் குழந்தையாக இருந்தாலுங்கூட, மிக இறுக்கமாக, இடுப்பில் / குண்டியில் “டையாபர்ஸ்” போன்றவற்றை அணியக்கூடாது.
  இடுப்பில் துணியேதும் இல்லாது திரியும் ஏழை வீட்டுக் குழந்தைகள், அவ்வப்போது சிறுநீர் கழித்துவிடுவதால், இளைப்பு நோய், தொடர் தும்மல், அதிக வியர்வை, உடல் தடிப்பு போன்ற நோய்களேதும் அவர்களுக்கு ஏற்படுவதில்லை என்பதை நினைவிற் கொண்டு, குழந்தைகளை வளர்ப்பது நல்லது.
  இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
  பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பாலோ, பசும்பாலோ கொடுக்காது, செயற்கையாக, உற்பத்திக் கூடங்களில் தயாரிக்கப்படும் மாவுப்பாலைக் கொடுப்பதால் விளைவுகள் யாதாக இருக்கக்கூடும் என்பதை இனிக் காண்போம்.

  சிந்திக்கத் தூண்டும் இலக்கியச் சிந்தனையாளர்

  இன்றைய சூழ்நிலையில் பல இலக்கியங்கள் நச்சு இலக்கியங்களாகப் புற்றீசல் போலப் பரவி இளைஞர்கள் சமுதாயத்தைக் கெடுத்து வருவதை நாடு நன்கு அறியும். அத்தகைய இளைஞர்களையும் கூட சற்றே நின்று நிதானித்துப் பார்க்கவும், சிந்தனையைத் தூண்டவும், நல்ல வழியில் செயல்பட வைக்கவும், அழகியலும், தன்னம்பிக்கையும் சமவிகிதத்தில் கலந்த வீச்சான பேச்சு, 20 வருடங்களுக்கும் மேலாக ஆய்வுத் துறையில் ஈடுபாடு, இலக்கிய மாமணி, இலக்கியத் தென்றல், திறனாய்வுத் தென்றல் என்று அழைக்கப்படும் முனைவர் கு.அ. ராஜாராம் அவர்கள் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ், பள்ளிக்கூட அகராதியையும் வெளியிட்டுள்ளவர்.
  வாழ்க்கை அரங்கின் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்கி கணிக்கும் வல்லாளராக இருக்கும் முனைவர் கு.அ. ராஜாராம் அவர்களின் ஊர் வேலூர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியப்படிப்பு. திருச்சி தேசியக் கல்லூரியில் முதல் பணி, பின்னர் வேலூர் ஊரிசு கல்லூரியிலும், சித்தூர்-பாலக்காடு மாவட்டம் அரசுக் கல்லூரியிலும் பணிசெய்து பாலக்காடு அரசு விக்டோரிய கல்லூரியில் பேராசிரியராக, தமிழ்த்துறைத் தலைவராகப் பணிநிறைவு பெற்றவர்.
  சிந்தனை விருந்தை நுகர அள்ளிஅள்ளிக் கொடுத்த பேராசிரியர் முனைவர் மு.வ. அவர்களின் மாணவன் என்பது கூடுதல் சிறப்பு. ஒரு இனிமையான காலைப்பொழுதில் தன்னம்பிக்கை அலுவலகத்தில் சந்தித்தபோது மனதைப் பிடித்திழுத்துச் சிந்திக்க வைத்திடும் இலக்கியங்களைப் பற்றிய அவரின் பார்வையைப் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
  குறிக்கோளையும், தன்னம்பிக்கையையும் எடுத்துச் சொல்வதே இலக்கியம் என்பதைப்பற்றிய தங்களின் கருத்து?

  இலக்கு ‘ இயம் ‘ இலக்கியம். இலக்கியம் என்பது குறிக்கோளை எடுத்துச் சொல்வது. அதுவும் தன்னம்பிக்கையுடன் எடுத்துச் சொல்வது. நமது அரும்பெரும் காப்பியமான சிலப்பதிகாரமும், உலகப் பொதுமறையான திருக்குறளும் சொல்லாத தன்னம்பிக்கையை வேறு எந்த இலக்கியமும் சொல்லவில்லை. சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் குணநலன் தன்னம்பிக்கையைப் பறைசாற்றுவதாகவே வடிவமைத்திருந்திருந்தார் இளங்கோவடிகள். கணவனுக்கு ஏற்பட்ட பழிச்சொல்லைத் துடைத்து தெய்வநிலைக்கு உயரக்காரணம் கண்ணகியின் தன்னம்பிக்கைதான். பொதுவாக இலக்கியங்களுக்கு உணர்த்தும் ஆற்றல் இருந்தால் மட்டுமே அது இலக்கியமாகக் கருதப்படும். அத்தகைய தகுதியை சிலப்பதிகாரம் பெற்றுள்ளதை கண்ணகியின் மூலம் அறியலாம்.

  20ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவரான மு.வ. அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டக் காலத்தில் அவர்களைப் பற்றிய தங்களின் கண்ணோட்டம்?
  இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் மட்டுமின்றி சிறுகதைகள், புதினங்கள், பயணக்கட்டுரை, நாடகங்களையும் தமிழுக்குத் தந்தவர். ‘அகல் விளக்கு’ என்றநாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றமு.வ. அவர்களைச் சிந்தனை நாவலாசிரியர் என்றே கூறுவேன். இன்றைய நினைவையும், நாளைய கனவையும் ஒருங்கிணைத்துத் தன்னுடைய கி.பி. 2000 என்ற நாவலில் எழுதியிருக்கின்றார். அவருடைய அல்லி, ‘கள்ளோ காவியமோ’ போன்ற நாவல்களின் மூலம் இளைஞர்களின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பியிருப்பார்.
  புதிய உலகைப் படைப்போம் என்று இளைஞர்களைக் கூவி அழைத்த முண்டாசுக் கவிஞன் பாரதியைப் பற்றி தங்களின் கருத்து?
  பாரதி நவ உலகத்தைக் கூவி அழைத்தார். சமுதாயம் சீர்பட வேண்டும் என்றும், ‘வல்லமை தாராயோ இந்த மானுடம் வெல்ல’ என்று தன்னம்பிக்கையுடன் முழங்கும் பாரதியின் கவிகளில் அடிநாதமாக இருப்பது மனவலிமை. மனவலிமையே தன்னம்பிக்கைக்கு உறுதுணை, ஒரு சிறந்த நூல் என்பது படைப்பாளியின் உயிர்துடிப்பு, உயிர் அனுபவம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கவிதைதான் பாரதியின் வசனக் கவிதகைள். புதுக்கவிதையின் ‘பிதாமகன்’ என்று அழைக்கப்படும் பாரதியின் வசனக் கவிதைகள் கட்டுப்பாட்டை உடைத்து புனையப்பட்டது. மனவலிமையுடன் சமுதாயத்தின் சண்டித்தனத்தை போக்குவதற்கு தன்னுடைய பாட்டைச் சாட்டையாகப் பயன்படுத்தியவன். மின்னல் போன்ற கருத்துக்களையும், தன்னம்பிக்கை ததும்பும் கவிகளையும் உள்ளத்தில் பதிய வைத்தவன் பாரதி.
  தன்னம்பிக்கை உள்ளிருந்து புறப்படும் மாபெரும் சக்தி என்று கூறிய எம்.எஸ். உதயமூர்த்தி அய்யாவைப் பற்றித் தங்களின் கருத்து?
  தன் விதிக்குத் தான்தான் பொறுப்பு என்று நினைப்பவன் தான் தன்னம்பிக்கையுள்ளவன் என்று கூறும் எம்.எஸ். அவர்கள் நம்முள்ளே தோன்றும் எண்ணங்களே நமது வெற்றிக்கு அடிப்படை என்றார். அவர் எழுதிய எண்ணங்கள், நம்மால் முடியும் தம்பி – நம்புÐ, உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள், ஆத்ம தரிசனம் போன்ற நூல்களைப் படிக்கும்போது நமக்குள் நேர்மறை எண்ணங்கள் தோன்றி தன்னம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள்ளும் மனவலிமையைக் கொடுக்கும்.
  வாழ்க்கை என்பது போராட்டம், வேள்வி, கடல் என்று போதித்து தன்னம்பிக்கையாகவே வாழ்ந்த அய்யா இல.செ.க.வைப் பற்றிய தங்களின் கண்ணோட்டம்?
  உயர உயர ஏறுங்கள்… தொடர்ந்து செல்லுங்கள்… வானத்தைத் தொட முடியாவிட்டாலும் நட்சத்திரங்களாவது கிடைக்கும் என்று இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டிய அய்யா இல.செ.க. அவர்களின் “ஓ… அன்றில் பறவைகளே” என்ற நாவல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் பாடமாக இருந்தது.
  மிருகத்தனத்தை நீக்கி – மனித வாழ்க்கையின் மதிப்புகளைக் (Values) கூறும் நூல். தமக்கே உரிய சுயமதிப்பு (Self Values), சமுதாய மதிப்பு (Social Values) அறம் மற்றும் ஆன்மீக மதிப்பு என்று போதித்த அய்யாவின் இழப்பு இளைய சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகும். சிந்தனையும், தோளும் சேர்ந்தது மனிதன் என்றும், மனிதனை மனிதனாக்குவது தன்னம்பிக்கையுடன் கூடிய கல்வியே என்று சிந்தனையைத் தூண்டிவிட்ட அய்யா இல.செ.க.வின் முன்னேற்றத்திற்கு மூன்று படிகள், தனிமனிதச் சிக்கல்களும் தீர்வுகளும் போன்ற நூல்கள் தனிமனித ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.
  தற்கால இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் வாழத் தங்களின் அறிவுரை?
  பிரசன்னா டிரஸ்ட் (Prasanna Trust) என்னும் தன்னம்பிக்கை அமைப்பினை நிறுவி, பாராட்டுதற்குரிய நற்பணிகளை ஆற்றி வரும் சுவாமி சுகபோதானந்தாவின் சிந்தனைகள் காலத்தின் தேவை. “வார்த்தையில்லா ஞானம்”. “ஓ! வாழ்க்கையே ரிலாக்ஸ் பிளீஸ்!” “மனசே! ரிலாக்ஸ் பிளீஸ்”, “உன்னதத்தை நோக்கி உற்சாகத்துடன் செல்லுங்கள்” போன்றஅனைத்து நூல்களையும் இளைஞர்கள் முதல் முதியவர் வரை அனைவரும் படிக்க வேண்டியவை.
  மைன்ட் ஃபோகஸ் (Mind Focus) என்ற நிறுவனத்தை நடத்திவரும் மனவியல் நிபுணர் டாக்டர் சாலினி கூறுவதைப்போல் Mind Control இன்றைய இளைஞர்களுக்குத் தேவை. பள்ளிக்குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்குத் தன்னம்பிக்கை கருத்துக்களைக் கூறி அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க முற்பட வேண்டும்.
  மனம் அமைதியுடன் இருக்கும்போது நாம் எடுக்கும் முடிவுகள் சரியாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்ற கூற்றுக்கு ஏற்ப தன்னம்பிக்கையுடன் கூடிய எண்ணங்களை விதைக்க வேண்டும். அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை அடக்கப் பழக்கிவிட வேண்டும். அதற்கு அய்யா இல.செ.க.வைப் போல் தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய நூல்களைக் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக இந்தியாவில் தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய நூல்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அதைப் போக்குவதற்கு பன்னாட்டுக் கருத்தரங்கம் போன்றவற்றை ஊடகத்துறையுடன் இணைந்து ‘தன்னம்பிக்கை’ மாத இதழ் நடத்தவேண்டும் என்பதே நான் கூறும் கருத்து.
  எந்த ஒரு விசயத்திலும் நம்மால் இது முடியுமா, முடியாதா என்று பார்க்காமல் முழு மனதுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தோம் என்றால் நிச்சயமாக நாம் எடுத்துக்கொண்டுள்ள இலட்சியத்தில் வெற்றியடைய முடியும்

  ஊக்கஉணர்வுடன் வாழுங்கள்!

  உழைப்பின் மூலம் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பணத்தையும், காடு தோட்டங்களையும், அழகான வீட்டையும் உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறார் உங்கள் தந்தை! உங்களுக்கு எல்லா வசதிகளும், வாய்ப்புகளும் இருக்கின்றன. இல்லற வாழ்க்கையை மிக அழகாக அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாமுமே இருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் உங்களுக்கு இல்லை. அதுதான் ஊக்கம். இந்த ஊக்கம் மட்டும் இல்லாவிட்டால், உங்களுக்கு எத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தென்னÐ ஊக்கம் இல்லாவிட்டால் அத்தனையும் வீண்தான்!
  ஊக்கம் மட்டும் உங்களுக்கு இருக்குமானால், உங்களுடைய சொத்துக்களைப் பாதுகாக்க உங்களால் முடியும். இல்லற வாழ்வின் இனிமையை நுகர முடியும். ஊக்கமில்லாவிட்டால் உங்களுடைய சொத்துக்கள் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டே வந்து, இறுதியில் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.
  உங்களுக்கு ஊக்கம் இல்லாவிட்டால், தன்னம்பிக்கை எப்படி உங்களுக்கு வரும்? உங்களிடம் ஊக்கம் இல்லை என்றால் உங்களுக்குச் சரியான குறிக்கோள் இல்லை என்று தானே அர்த்தம்! சிலருக்குத் தன்னம்பிக்கையும், குறிக்கோளும் இருந்தாலும் கூட அவர்களுக்கு ஊக்கம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் அவர்களால் எதையும் சாதிக்க முடியாமல் பயனற்று வீணாகிப் போகிறார்கள். உங்களுடைய வாழ்க்கையும் அவ்வாறு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  உங்களுக்கு உங்கள் மேல், யாராலும் அழிக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது. அருமையான குறிக்கோள் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு ஊக்கம் இல்லாத காரணத்தால் எந்தச் செயலையும் உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால் தான் நீங்கள் எதைக் கைவிட்டாலும் ஊக்கத்தை கைவிட்டு விடாதீர்கள் என்று சான்றோர்கள் சொல்லி வைத்தார்கள். “ஊக்கமது கைவிடேல்” என்ற வாசகத்தைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஊக்க உணர்வு கட்டாயம் பிறக்க வேண்டும்.
  உயர்வைத் தருகின்ற வாசகர்களை நாம் குதர்க்கமான பொருளில் காண்கிறோம். ஊக்கத்தைத் தருகின்ற மதுவைக் கைவிடாதே என்று விளக்கம் தந்து மதுவிற்குப் பெருமையைத் தேடித்தருகிறோம்.
  தளராத ஊக்கம் எவருக்கு இருக்கிறதோ அவரைத் தேடிக்கொண்டு செல்வம் என்ற திருமகள் செல்வாள். “அவர் எங்கே? எங்கே?” என்று வழியைக் கேட்டுக்கொண்டு செல்வாள் என்கிறார் வள்ளுவர். இறுதியில் அவரைக் கண்டுபிடித்து அவரை மார்போடு தழுவிக்கட்டி அணைப்பாள்.
  அமெரிக்காவின் அதிபர் லிங்கன் பார்ப்பதற்கு நன்றாக இருக்கமாட்டார். அவருடைய முகத்தோற்றம் அனைவரும் பார்க்கும் படியாகக் கவர்ச்சிகரமாக இருக்காது. ஆனாலும் லிங்கன் தன்னம்பிக்கையோடு செயல்பட்டார். விடாமுயற்சியை அவர் கைவிடவே இல்லை. பார்ப்பவர்களைக் கவரத் தக்க தோற்றம் நமக்கு இல்லையே! என்று எண்ணாமல் மிகுந்த தைரியத்துடன் வாழ்ந்தார். அவர் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடாமல், ஊக்கத்துடன் செயலாற்றினார். இறுதியில் ஜனாதிபதி பதவி அவரைத்தேடி வந்தது. அவருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது அவர் கொண்டிருந்த ஊக்கம்தான்!
  டச்சு நாட்டுத் தடகள வீராங்கனை பேனி எல்சி பிளாங்கர்ஸ் கோயென்னுக்கு வயது முப்பது. இவர் இரண்டு குழந்தைகளுக்குத்தாய்! தடகளப் போட்டிகளில் நான்கு தங்கப்பதங்களை வென்றார். தடை தாண்டி ஓடும் போட்டியில் சாதனை படைத்தார். 33 வயதுக்குள் 5 முறை ஐரோப்பிய சாம்பியன் பட்டங்களையும், 11 உலக சாதனைப் பட்டங்களையும் வென்றார். 1999ம் ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற துடிப்பு, தன் குழந்தைகளை நல்ல முறையில் பேணிக்காக்க வேண்டும் என்ற பொறுப்பு, ஆகிய உணர்வுகளுடன் “தங்கப்பதக்கம் ஒன்றே குறிக்கோள்” என்று மனதில் சங்கல்பம் கொண்டு ஊக்கத்துடன் அயராமல் பயிற்சி பெற்று இறுதியில் வெற்றி பெற்றார். சிறந்த சாதனைகளைப் படைத்தார். இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாய், ஒலிம்பிக் போட்டிகளில் வென்று (1948, லண்டன்) நான்கு தங்கப்பதக்கங்களைப் பெறுவதற்குக் காரணம் அவரிடமிருந்த ஊக்கமே ஆகும்.
  ‘உலகத்தில் பெறப்பட்டுள்ள அனைத்து வெற்றிகளும் ஊக்கத்தின் சின்னங்களே!’ என்பார், எமர்சன். உங்களுக்கு வரும் தடைகளை உடைத்தெறியும் படைக்கலமாக இருப்பது ஊக்கம் ஒன்றுதான்! ஊக்கத்தை இழந்தவனே ஆக்கத்தை இழந்தவனாகிறான்.
  நீங்கள் ஊக்க உணர்வுடன் வாழ்வதற்கு யோகா, தியானம் ஆகியவைகள் உறுதுணையாக இருக்கின்றன. நீங்கள் ஊக்கமாக வாழ்கின்ற போதுதான், மிகச் சிறந்த வழிகளை உங்களுடைய செயல்களும், முயற்சிகளும் உங்களுக்கு நன்கு அமைத்துத் தருகின்றன.
  உங்களை யார் அவமதித்தாலும் சரி, கேவலமாகப் பேசினாலும் சரி, உங்களைப் பழித்து நையாண்டி செய்தாலும் சரி, அவைகளை எண்ணி வருத்தப்படாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள்!!என்னை அவமதித்தவர்கள் மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கும் அளவுக்கு நான் முன்னுக்கு வருவேன்!! என்று உள்ளத்தில் நினைத்து மிகுந்த ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். முன்னுக்கு வரவேண்டிய முறைகளையும், வழி வகைகளையும் நன்கு ஆராய்ந்து அதில் கவனம் செலுத்தி இடைவிடாமல் உழையுங்கள். ஊக்க உணர்வுடன் நீங்கள் கடுமையாக உழைக்கும்போது உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போகுமா?
  உங்களை “உடையவர்” என்று சிறப்பாகச் சொல்லப்படுவதற்குக் காரணமாக இருப்பது ஊக்கம் ஒன்றே ஆகும். அந்த ஊக்கத்தை நீங்கள் பெறாமல் வேறு எதைப் பெற்றிருந்தாலும் பெற்றிருப்பவராக ஆக மாட்டார்கள்.
  உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார்
  உடையது உடையரோ மற்று
  என்று வள்ளுவரும் ஊக்கத்தின் சிறப்பைப் புகழ்ந்துரைக்கின்றார்.
  2004ம் ஆண்டு ஒலிம்பிக் செல்லும் தகுதிப் போட்டியில் நான்காவதாக வந்த இபான் தோர்ப் என்ற ஆஸ்திரேலிய வீரர், ஊக்கத்தோடு உழைத்து பயிற்சிகளில் ஈடுபட்டு தங்கப்பதங்களை வென்று வந்தார். இவரது உயர்வுக்கு அடிப்படையாக அமைந்ததே ஊக்கமே!
  அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் மிகவும் ஊக்கத்துடன் செயல்பட்டு, உலகத்தையே வியக்கவைத்த தொலைபேசியைக் கண்டுபிடித்தார். ஊக்கமின்றி அவர் வீட்டிலேயே முடங்கி அமர்ந்திருந்தால் இத்தகைய சாதனைகளைச் செய்திருக்க முடியுமா? அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் உயர்வுக்கு அடிப்படையாக அமைந்தது ஊக்கமே!
  டெம்போ ஷேரி என்ற 15 வயதுச் சிறுவன் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி செய்தபோது கடும்பனியினால் அவன் தன்னுடைய இரண்டு விரல்களை இழந்துவிட்டான். விரல்களை இழந்த போதிலும் அவன், தளராத ஊக்கத்தைக் கைவிடவே இல்லை. அடுத்த ஆண்டு கடும் முயற்சி செய்து மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தான். அவனுடைய இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தது, அவன் கொண்ட ஊக்கமும், தன்னம்பிக்கையுமே!
  எழுத்தாளராக வேண்டும் என்ற கொள்கையுடன் விடாப்பிடியாக இருந்து, மிகுந்த ஊக்கத்துடன் உழைத்து மிகச்சிறந்த எழுத்தாளரானார் பெர்னாட்ஷா. பத்து ஆண்டுகளாக எழுதிக்கொண்டே இருந்தார் பெர்னாட்ஷா. நாடகங்கள் எழுத ஆரம்பித்துப் புகழ்பெற்ற நாடக ஆசிரியராக உருவானார். தளராத ஊக்கம் அவருக்கு உலகப் புகழைக் கொடுத்தது.
  உங்களுக்குக் காசு பணம் இல்லையா? எந்த வசதியும் உங்களுக்கு இல்லையா? எவரும் உங்களுக்கு பரிந்துரை செய்து நீங்கள் முன்னேறுவதற்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறார்களா? அவைகளைப் பற்றியெல்லாம் வீணாகக் கவலைப்பட்டு உங்கள் உள்ளத்தை வருத்திக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை. முதலில் உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அதன் பிறகு ஊக்கத்தோடு உழையுங்கள். ஐயோ! அவர் மட்டும் காரும், பங்களாவுமாக நன்றாக வாழ்கிறாரே!! என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மிகுந்த ஊக்கத்தோடு கடுமையாக உழைத்து வாருங்கள். உங்களுக்கு வெற்றி கிட்டாமல் போகுமா? தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்! ஊக்க உணர்வுடன் வாழுங்கள்”ஆக்கம் பெற்று உலகை ஆளுங்கள்”

  ஊக்கஉணர்வுடன் வாழுங்கள்!

  உழைப்பின் மூலம் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பணத்தையும், காடு தோட்டங்களையும், அழகான வீட்டையும் உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறார் உங்கள் தந்தை! உங்களுக்கு எல்லா வசதிகளும், வாய்ப்புகளும் இருக்கின்றன. இல்லற வாழ்க்கையை மிக அழகாக அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாமுமே இருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் உங்களுக்கு இல்லை. அதுதான் ஊக்கம். இந்த ஊக்கம் மட்டும் இல்லாவிட்டால், உங்களுக்கு எத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தென்னÐ ஊக்கம் இல்லாவிட்டால் அத்தனையும் வீண்தான்Ð
  ஊக்கம் மட்டும் உங்களுக்கு இருக்குமானால், உங்களுடைய சொத்துக்களைப் பாதுகாக்க உங்களால் முடியும். இல்லற வாழ்வின் இனிமையை நுகர முடியும். ஊக்கமில்லாவிட்டால் உங்களுடைய சொத்துக்கள் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டே வந்து, இறுதியில் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.
  உங்களுக்கு ஊக்கம் இல்லாவிட்டால், தன்னம்பிக்கை எப்படி உங்களுக்கு வரும்? உங்களிடம் ஊக்கம் இல்லை என்றால் உங்களுக்குச் சரியான குறிக்கோள் இல்லை என்று தானே அர்த்தம்! சிலருக்குத் தன்னம்பிக்கையும், குறிக்கோளும் இருந்தாலும் கூட அவர்களுக்கு ஊக்கம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் அவர்களால் எதையும் சாதிக்க முடியாமல் பயனற்று வீணாகிப் போகிறார்கள். உங்களுடைய வாழ்க்கையும் அவ்வாறு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  உங்களுக்கு உங்கள் மேல், யாராலும் அழிக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது. அருமையான குறிக்கோள் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு ஊக்கம் இல்லாத காரணத்தால் எந்தச் செயலையும் உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால் தான் நீங்கள் எதைக் கைவிட்டாலும் ஊக்கத்தை கைவிட்டு விடாதீர்கள் என்று சான்றோர்கள் சொல்லி வைத்தார்கள். “ஊக்கமது கைவிடேல்” என்ற வாசகத்தைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஊக்க உணர்வு கட்டாயம் பிறக்க வேண்டும்.
  உயர்வைத் தருகின்ற வாசகர்களை நாம் குதர்க்கமான பொருளில் காண்கிறோம். ஊக்கத்தைத் தருகின்ற மதுவைக் கைவிடாதே என்று விளக்கம் தந்து மதுவிற்குப் பெருமையைத் தேடித்தருகிறோம்.
  தளராத ஊக்கம் எவருக்கு இருக்கிறதோ அவரைத் தேடிக்கொண்டு செல்வம் என்ற திருமகள் செல்வாள். “அவர் எங்கே? எங்கே?” என்று வழியைக் கேட்டுக்கொண்டு செல்வாள் என்கிறார் வள்ளுவர். இறுதியில் அவரைக் கண்டுபிடித்து அவரை மார்போடு தழுவிக்கட்டி அணைப்பாள்.
  அமெரிக்காவின் அதிபர் லிங்கன் பார்ப்பதற்கு நன்றாக இருக்கமாட்டார். அவருடைய முகத்தோற்றம் அனைவரும் பார்க்கும் படியாகக் கவர்ச்சிகரமாக இருக்காது. ஆனாலும் லிங்கன் தன்னம்பிக்கையோடு செயல்பட்டார். விடாமுயற்சியை அவர் கைவிடவே இல்லை. பார்ப்பவர்களைக் கவரத் தக்க தோற்றம் நமக்கு இல்லையே! என்று எண்ணாமல் மிகுந்த தைரியத்துடன் வாழ்ந்தார். அவர் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடாமல், ஊக்கத்துடன் செயலாற்றினார். இறுதியில் ஜனாதிபதி பதவி அவரைத்தேடி வந்தது. அவருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது அவர் கொண்டிருந்த ஊக்கம்தான்!
  டச்சு நாட்டுத் தடகள வீராங்கனை பேனி எல்சி பிளாங்கர்ஸ் கோயென்னுக்கு வயது முப்பது. இவர் இரண்டு குழந்தைகளுக்குத்தாய்! தடகளப் போட்டிகளில் நான்கு தங்கப்பதங்களை வென்றார். தடை தாண்டி ஓடும் போட்டியில் சாதனை படைத்தார். 33 வயதுக்குள் 5 முறை ஐரோப்பிய சாம்பியன் பட்டங்களையும், 11 உலக சாதனைப் பட்டங்களையும் வென்றார். 1999ம் ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற துடிப்பு, தன் குழந்தைகளை நல்ல முறையில் பேணிக்காக்க வேண்டும் என்ற பொறுப்பு, ஆகிய உணர்வுகளுடன் “தங்கப்பதக்கம் ஒன்றே குறிக்கோள்” என்று மனதில் சங்கல்பம் கொண்டு ஊக்கத்துடன் அயராமல் பயிற்சி பெற்று இறுதியில் வெற்றி பெற்றார். சிறந்த சாதனைகளைப் படைத்தார். இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாய், ஒலிம்பிக் போட்டிகளில் வென்று (1948, லண்டன்) நான்கு தங்கப்பதக்கங்களைப் பெறுவதற்குக் காரணம் அவரிடமிருந்த ஊக்கமே ஆகும்.
  ‘உலகத்தில் பெறப்பட்டுள்ள அனைத்து வெற்றிகளும் ஊக்கத்தின் சின்னங்களே!’ என்பார், எமர்சன். உங்களுக்கு வரும் தடைகளை உடைத்தெறியும் படைக்கலமாக இருப்பது ஊக்கம் ஒன்றுதான்! ஊக்கத்தை இழந்தவனே ஆக்கத்தை இழந்தவனாகிறான்.
  நீங்கள் ஊக்க உணர்வுடன் வாழ்வதற்கு யோகா, தியானம் ஆகியவைகள் உறுதுணையாக இருக்கின்றன. நீங்கள் ஊக்கமாக வாழ்கின்ற போதுதான், மிகச் சிறந்த வழிகளை உங்களுடைய செயல்களும், முயற்சிகளும் உங்களுக்கு நன்கு அமைத்துத் தருகின்றன.
  உங்களை யார் அவமதித்தாலும் சரி, கேவலமாகப் பேசினாலும் சரி, உங்களைப் பழித்து நையாண்டி செய்தாலும் சரி, அவைகளை எண்ணி வருத்தப்படாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள்!!என்னை அவமதித்தவர்கள் மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கும் அளவுக்கு நான் முன்னுக்கு வருவேன்!! என்று உள்ளத்தில் நினைத்து மிகுந்த ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். முன்னுக்கு வரவேண்டிய முறைகளையும், வழி வகைகளையும் நன்கு ஆராய்ந்து அதில் கவனம் செலுத்தி இடைவிடாமல் உழையுங்கள். ஊக்க உணர்வுடன் நீங்கள் கடுமையாக உழைக்கும்போது உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போகுமா?
  உங்களை “உடையவர்” என்று சிறப்பாகச் சொல்லப்படுவதற்குக் காரணமாக இருப்பது ஊக்கம் ஒன்றே ஆகும். அந்த ஊக்கத்தை நீங்கள் பெறாமல் வேறு எதைப் பெற்றிருந்தாலும் பெற்றிருப்பவராக ஆக மாட்டார்கள்.
  உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார்
  உடையது உடையரோ மற்று
  என்று வள்ளுவரும் ஊக்கத்தின் சிறப்பைப் புகழ்ந்துரைக்கின்றார்.
  2004ம் ஆண்டு ஒலிம்பிக் செல்லும் தகுதிப் போட்டியில் நான்காவதாக வந்த இபான் தோர்ப் என்ற ஆஸ்திரேலிய வீரர், ஊக்கத்தோடு உழைத்து பயிற்சிகளில் ஈடுபட்டு தங்கப்பதங்களை வென்று வந்தார். இவரது உயர்வுக்கு அடிப்படையாக அமைந்ததே ஊக்கமே!
  அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் மிகவும் ஊக்கத்துடன் செயல்பட்டு, உலகத்தையே வியக்கவைத்த தொலைபேசியைக் கண்டுபிடித்தார். ஊக்கமின்றி அவர் வீட்டிலேயே முடங்கி அமர்ந்திருந்தால் இத்தகைய சாதனைகளைச் செய்திருக்க முடியுமா? அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் உயர்வுக்கு அடிப்படையாக அமைந்தது ஊக்கமே!
  டெம்போ ஷேரி என்ற 15 வயதுச் சிறுவன் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி செய்தபோது கடும்பனியினால் அவன் தன்னுடைய இரண்டு விரல்களை இழந்துவிட்டான். விரல்களை இழந்த போதிலும் அவன், தளராத ஊக்கத்தைக் கைவிடவே இல்லை. அடுத்த ஆண்டு கடும் முயற்சி செய்து மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தான். அவனுடைய இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தது, அவன் கொண்ட ஊக்கமும், தன்னம்பிக்கையுமே!
  எழுத்தாளராக வேண்டும் என்ற கொள்கையுடன் விடாப்பிடியாக இருந்து, மிகுந்த ஊக்கத்துடன் உழைத்து மிகச்சிறந்த எழுத்தாளரானார் பெர்னாட்ஷா. பத்து ஆண்டுகளாக எழுதிக்கொண்டே இருந்தார் பெர்னாட்ஷா. நாடகங்கள் எழுத ஆரம்பித்துப் புகழ்பெற்ற நாடக ஆசிரியராக உருவானார். தளராத ஊக்கம் அவருக்கு உலகப் புகழைக் கொடுத்தது.
  உங்களுக்குக் காசு பணம் இல்லையா? எந்த வசதியும் உங்களுக்கு இல்லையா? எவரும் உங்களுக்கு பரிந்துரை செய்து நீங்கள் முன்னேறுவதற்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறார்களா? அவைகளைப் பற்றியெல்லாம் வீணாகக் கவலைப்பட்டு உங்கள் உள்ளத்தை வருத்திக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை. முதலில் உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அதன் பிறகு ஊக்கத்தோடு உழையுங்கள். ஐயோ! அவர் மட்டும் காரும், பங்களாவுமாக நன்றாக வாழ்கிறாரே!! என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மிகுந்த ஊக்கத்தோடு கடுமையாக உழைத்து வாருங்கள். உங்களுக்கு வெற்றி கிட்டாமல் போகுமா? தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்! ஊக்க உணர்வுடன் வாழுங்கள்”ஆக்கம் பெற்று உலகை ஆளுங்கள்”

  பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை!!

  உணவு கூட்டினுள் இல்லை
  “எல்லாப் பறவைகளுக்கும் இறைவன் உணவைக் கொடுத்துள்ளான்; ஆனால், அவற்றின் கூட்டினுள் வைக்கவில்லை”. இந்த வரிகள் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியவை.
  பறவைகளுக்கான உணவு உள்ளது; ஆனால் அவை வசிக்கும் கூட்டினுள் இல்லை. அந்த உணவு இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அங்கு சென்று உண்ணவேண்டும், வேறு பறவைகள் முந்திவிட்டால், உணவைத்தேடி வேறு இடம் செல்ல வேண்டும், உள்ளுணர் அறிவு (Intuition) என்ற துணைகொண்டு தம் வாழ்நாளை மிகவும் இயல்பாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து மறைகின்றன பறவைகள்.
  இந்த உள்ளுணர் அறிவு நமக்கு இல்லையா என்ற கேள்வி எழும். உள்ளது. ஆனால், அது சொல்வதைக் கேட்கப் பொறுமையில்லாமல் பழக்கத்தின் காரணமாக நாம் செயல்படுவதால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன.
  கடின உழைப்பு
  பட்டினியால் பறவை இறந்ததாக இதுவரை தகவல் இல்லை. இடைவிடா முயற்சி நாம் விரும்புவதைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதற்குப் பறவைகள் சிறந்த உதாரணம். உணவுக்காக நம் வீட்டுக்கு வரும் பறவைகள் எந்த அளவு சுறுசுறுப்பாக இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.
  வினாடி நேரம் தாமதித்தாலும், பாதிப்பு வரும் என்பதை நன்கு உணர்ந்து, மிக விரைவாகச் செயல்படுகின்றன பறவைகள். சுறுசுறுப்பு மகிழ்ச்சியைத் தரும்; மகிழ்ச்சி சுறுசுறுப்பைத் தரும். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. சோம்பி இருந்தால் தம் வாழ்க்கையை இழந்து விட நேரும் என்பதை உணர்ந்தே செயல்படுகின்றன.
  இத்தகைய சுறுசுறுப்பும் இடைவிடாமுயற்சியும், செயல்களின் மீது ஈடுபாடும் கொண்டு செயல்படுபவர்களிடம் வெற்றித்தேவதை கை குலுக்கும்.
  நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
  உடல்நலம்
  இந்தப் பிறவியில் நமக்குக் கிடைத்துள்ள மாபெரும் பொக்கிசம் நம் உடல்தான். தினமும் இரவு உறங்கி, மறுநாள் காலை எழும் நாம், அன்றைய பணிகளுக்காக நம் உடலைத் தயார்படுத்துவதைப் பறவைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
  உடற்பயிற்சி, குளியல், உணவுதேடல், பொழுதுபோக்கு (பாட்டுப்பாடுதல்), எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புநிலையில் செயல்படுதல் ஆகியன அவை நமக்குக் கூறுபவை. பெரும்பாலான சிறுவர்கட்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம் சொல்லித்தரப்படவில்லை. காரணம், அவர்களது பெற்றோருக்கும் தெரியாததுதான். எனவே, சூரிய உதயத்துக்கு முன் எழுவதும் குளித்தபின்பே பணிகளைத் துவக்குவதும், ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்வதும், சரியான நேரத்தில் சத்தான எளிமையான உணவு உட்கொள்வதும் உடலை நலத்துடன் பராமரிக்கும்.
  மனமகிழ்ச்சி
  இயற்கையோடு இணைந்து வாழ்வதால் மனமகிழ்ச்சியாகவே பறவைகள் உள்ளன. எவ்வித வறட்சி, வெள்ளம் போன்ற நிலைகளிலும், தனது உள்ளுணர் அறிவால் தேவைப்பட்டால் இடத்தை மாற்றிக்கொண்டு, கிடைத்ததை உண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றன.
  மற்றபறவைகளோடு ஒப்பிடுவதும், அளவுக்கு அதிகமாக சேமிப்பதும், சோம்பி இருப்பதும் பறவைகளுக்கு என்னவென்று தெரியாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியைத் தன் குரல் மூலம் (பாட்டாக) வெளிப்படுத்தி சூழ்நிலையை ரம்மியமாக்குகிறது.
  ஒத்தும் உதவியும் வாழ்தல்
  தம் சுற்றத்துடன் அன்பாக இருப்பதும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஆவண செய்வதும் பறவைகளின் உடன் பிறந்த குணங்கள். சுயநலமே இல்லாமல் வாழ்ந்து வருபவை. பாதுகாப்பு உணர்வுடன் கூட்டமாகப் பயணிப்பவை. பறவைகட்கு விரோதி – வலிமை வாய்ந்த பறவைகள், மிருகங்கள் மற்றும் மனிதர்கள் தான்.
  வலிய பறவை, எளிய பறவையைத் தாக்குவதும், சில மிருகங்கள் தம் உணவுக்குப் பறவைகளைக் கொல்வதும் இயற்கையின் அமைப்பு. ஆனால், பகுத்தறிவு இருந்தும், விஞ்ஞானத்தில் முன்னேறியும், பிரபஞ்ச பரிணாமத்தை நன்கு உணர்ந்து கொண்ட பின்பும் மனிதன், தன் உணவுக்காகப் பறவைகளைக் கொல்வது, வளர்த்து பின் கொல்வது, மகிழ்ச்சிக்காக, அவைகளைச் சிறைப்படுத்தி வைப்பது மிருக குணங்களின் வெளிப்பாடாகவே உள்ளது.
  தனது ஆற்றலை அறியாத காரணத்தால் தான், மனிதன் மிகவும் எளிய பறவைகளைச் சிறைப்படுத்தி (வளர்ப்பது)யும், உணவாக உண்டும் வாழ்கிறான். இதைப் பரிசீலித்து தெளிவு பெறவேண்டும்.
  அன்புக்கு நான் அடிமை
  அம்மா என்றால் அன்பு. அன்புக்கு பாரபட்சம் கிடையாது. சாதி, மத பேதங்களைக் கடந்தது அன்பு. உலகம் முழுவதுமுள்ள பறவைகளில் ஒவ்வோர் பிரிவும் (உதாரணம் கிளி, புறா, கோழி) ஒரே மாதிரியான சப்தம் (மொழி) மூலம் தம் எண்ணங்களை வெளிப்படுத்தி வாழ்கின்றன. தம் உயிர்காத்தல் என்பதுதான் அவற்றின் மிக முக்கியப் பணி.
  ஆடம்பரங்களை என்றுமே விரும்பாத மனநிலையில் வாழ்கின்றன. தன் இனத்தில் ஒன்றுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், குழுவாகக் கூடித் தம் அன்பை வெளிப்படுத்தி தேவைகளைச் சமயோசிதமாய் தெரிவித்து, உதவி பெற்று அன்புடன் வாழ்கின்றன.
  பிறந்தது முதல் இறக்கும் வரை உழைப்பு, உழைப்பு, ஓயா உழைப்பு தான். உழைப்பையே ஓய்வாக நினைத்துக்கொண்டு விருப்பத்தோடு செயல்பட்டு வருகின்றன. எந்தப் பகுதிக்கு, எந்த நேரம் சென்றால் உணவு கிடைக்கும் என்று தெளிந்து அந்த இடம் செல்வதை என்னவென்று சொல்வது?
  சாதாரணப் பறவைகட்கு இவ்வளவு திறமை இருக்கும்போது, நமக்கு இந்தத் திறமைகள் இல்லையா? என யோசியுங்கள். நமக்கு அவைகளை விட ஏராளமான திறமைகள் உள்ளன. அவைகளைத் தெரியவிடாமல் செய்பவை, பொறாமை, பேராசை, ஈகோ (Ego) எனும் ஆணவம்.
  எனவே, இவைகளை நீக்குவோம். வானம் பாடிகளாய், இந்த மனித வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வோம்.

  சாதிக்கலாம் வாங்க

  சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவில் தமிழ்நாட்டில் இருந்து அதுவும் கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல போராட்டங்களையும், சோதனைகளையும் கடந்து வெற்றி என்னும் சிகரத்தை அடைந்த இளைஞர்களில் ஒருவரும் 84வது இடத்தைப் பெற்றவருமான திரு. ரகுநாதனுடன் ஒரு சந்திப்பு.
  என்னுடைய கனவு மெய்ப்படுவதற்காக நான் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடானது. M.Sc. Computer Science பாடத்தில் பல்கலைக்கழக அளவில் இரண்டாமிடம் பெற்றேன். இந்த சமயத்தில் தான் எனது கல்லூரி ஆசிரியர் எல்லோரும் என்னை சிவில் சர்வீஸ் தேர்வை எழுத ஊக்குவித்தார்கள்.
  சிவில் சர்வீஸ் தேர்வு என்பது கல்லூரித் தேர்வு போன்ற சாதாரணத் தேர்வு அல்ல. கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்து கொண்டேன். அதே நேரத்தில் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் 15 மணி நேரம், 18 மணி நேரம் என்று படிப்பது நமக்கு உதவாது என்பதைப் புரிந்து கொண்டு திட்டத்தைத் தீட்டினேன். ஒரு நாளைக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் படித்தால் போதும். அது திட்டமிட்டதாகவும், முறையான பயிற்சியாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி திட்டமிடுதலை மேற்கொண்டேன். ஏனென்றால் சிவில் சர்வீஸ் தேர்வைப் பொறுத்தவரை அந்த விருப்பத்தை மற்றவர் மீது திணிக்க முடியாது. யாரையும் கட்டாயப்படுத்தி இந்தத் தேர்வை எழுத வைக்க முடியாது. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்தால் மட்டுமே, இத்தகைய தேர்வில் வெற்றியைப் பெற முடியும் என்று கூறியவரிடம் “முதல் முயற்சியிலே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இந்த வெற்றி எளிதாகக் கிடைத்ததா? அல்லது மிகுந்த சிரமத்துக்கிடையில் கிடைத்ததா?’ என்றதற்கு, “ரொம்பவும் சிரமப்பட்டேன். மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. எம்.எஸ்.சி. படித்து முடிக்கும் வரையில் நான் செய்தித்தாள்களைப் படித்ததே கிடையாது. கணினி அறிவியல் துறையைத் தவிர மற்ற துறைகளைப் பற்றிய விஷயங்கள் எதுவுமே தெரியாது. இந்த நேரத்தில் புவியியல் மற்றும் அரசியல் அறிவியலை விருப்பப் பாடங்களாக எடுத்தேன். எல்லாவற்றையுமே புதிதாகப் படித்தேன். இந்த நேரத்தில் என் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், நண்பர்களின் வழிகாட்டுதலும், எனக்கு சிறந்த வழிகாட்டிகளாக அமைந்தது.
  பொதுப்பாடங்களுக்கு எனது அண்ணன் நாகராஜ் அவர்களும், அரசியல் அறிவியல் பாடங்களுக்கு என் நண்பர் கோபால கிருஷ்ணன் அவர்களும் எனக்கு வழிகாட்டினார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி நன்கு அனுபவம் பெற்றவர்கள். இத்தனை பேருடைய ஆதரவினால்தான் முதல் முயற்சியிலேயே எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது” என்றார்.
  “இத்தேர்வுக்கு எந்த மாதிரியான நூல்களைப் படித்தீர்கள்?” என்று கேட்டதற்கு, “இந்திய புவியியல் பற்றிய பாடங்களுக்கு NCERT Books-ம், Civil Service Main Exam Geography of India’ என்ற புத்தகத்தையும் படித்தேன். இதைத் தவிர 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளி சமூக அறிவியல் பாடங்களைப் படித்தேன்”.
  “போட்டித் தேர்வுகளில் அறிவியல் பாடங்கள் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளதையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் இத்தகைய அறிவியல் பாடங்களை தவிர்க்க முடியாது. உதாரணமாக, தகவல் தொழில்நுட்பமும் (Information Technology), நுண்பொருள் தொழில்நுட்பமும் (Nano-technology), உயிரியல் தொழில்நுட்பமும் (Bio-technology) முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.
  ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற மனநிலை இத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நிலவுவதைப் பற்றிக் கேட்டபோது, “இத்தகைய மனநிலையை முற்றிலும் மாற்றினால் மட்டும்தான் அவர்களால் எளிதாக சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும். மேலும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் விசாலமான மனநிலையும், நேர்மறையான எண்ணங்களும் இருந்தால் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியும். மேலும் பல்வேறு கட்டமாக நடக்கும் இத்தேர்வுக்குத் தயாராவதற்கு நீங்கள் ஒருகால அட்டவணையை அமைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, முதல்நிலைத் தேர்வில் உள்ள பாடங்களைப் படிக்க ஜுன் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலும், ஏப்ரல் முதல் ஜுன் வரை படித்ததை திருப்பிப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். பல நூல்களை மேலோட்டமாகப் படித்துச் செல்வதைவிட, குறைந்தபட்சம் 5 புத்தகங்களை மிகத் தெளிவாக படித்து பயிற்சி செய்வது நல்லது.

  முதல்நிலைத் தேர்வை முடித்து மெயின் தேர்விற்கு செல்லும் மாணவர்கள் கட்டுரைத்தாள் கேள்விக்கு விடையளிக்க எழுத்துப் பயிற்சியை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். இந்தத் தேர்வை எழுத முடிவு செய்துவிட்டால் அதில் நம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பயிற்சியை மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்றவர், நன்றாகத் திட்டமிடுங்கள். அதைச் செயல்படுத்த கடுமையான முயற்சியை எடுங்கள். முயற்சிக்குத் தக்கபலன் கண்டிப்பாகக் கிடைக்கும் என்றவரிடம் நேர்முகத் தேர்வைப்பற்றிக் கேட்கையில்,
  “நேர்முகத் தேர்வில் உண்மையாக பதிலளிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்து வைக்க வேண்டும். தெரியாத துறையைப் பற்றியோ, தெரியாத விஷயங்களைப் பற்றியோ கேள்விகள் அமைந்தால் உண்மையாக உங்களுக்கு என்ன தெரியுமோ அதைத் தெளிவாகக் கூறுங்கள். எல்லாம் அறிந்தது போன்ற பதில்களைக் கூறி உங்களின் மதிப்பெண்களைக் குறைத்துக்கொள்ளாதீர்கள். ஏனென்றால் இத்தகைய பணிக்கு நேர்மையாக, உண்மையாக உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். மேலும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன் உங்களின் பார்வையை விசாலப்படுத்திக் கொண்டும், திட மனதுடனும் செல்லுங்கள். ஏனெனில் பல நேரங்களில் நம்முடைய நம்பிக்கையை குழைக்கிற மாதிரியான கேள்விகளைக் கூட கேட்பார்கள். எல்லாவற்றையும் உங்களின் ஆளுமைத்திறனாலும், பயிற்சியாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்” என்றார்.
  நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் சிறந்த பயிற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்ற கிராமப்புறத்தைச் சேர்ந்த ரகுநாதன் ஐ.ஏ.எஸ். அவர்களைத் தன்னம்பிக்கை வாழ்த்துவதுடன், கிராமப்புறத்தை மேன்மையடையச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் பதிவு செய்கிறது.

  நேனோ டியூப்

  எதிர்காலத்தில் உருவாக இருக்கும் கணினிகள் அறிவு சார்ந்த கணினிகளாக இருக்கப் போகின்றன! மனித மூளையை விடப் பன் மடங்கு ஆற்றல் பெற்று அதிசயங்களை நிகழ்த்தப் போகின்றன. எப்படி மனித மூளை இயங்குகிறது என்பது புரியாத புதிர்; விளங்காத மர்மம்! ஆகவே மனித மூளை விஞ்ஞானத்திற்கு இன்று ஒரு பெரிய சவால்.
  இந்தச் சவாலை விஞ்ஞானம் ஏற்று, புதிரை விடுவித்து சாதனைகளை நிகழ்த்தப் போகிறது. எப்படி என்பதை விஞ்ஞானி ரேமாண்ட் சி. கர்ஜ்வெய்ல் தனது புத்தகத்தில் நன்கு விளக்கி இருக்கிறார். 1990-இல் பிரசுரிக்கப்பட்ட “தி ஏஜ் ஆஃப் இன்டெலி ஜென்ஸ் மெஷின்ஸ்’ (The age of intelligent machines) என்ற புத்தகத்தில் இந்த விஞ்ஞானி விளக்கி உள்ளவை இன்று நடைமுறைக்கு வர ஆரம்பித்து விட்டன.
  நேனோடியூப் என்னும் சிறிய பாகங்கள் அணு போன்று மிக மிகச் சிறியதாக இருக்கும். ஒரு அங்குல நீளமுள்ள நேனோடியூப் மூளையை விட நூறு கோடி மடங்கு வேகமாகக் கணக்கிடும் ஆற்றலைப் பெற்றிருக்கும்!
  இன்று கணினியில் அதி வேகமாகக் கணக்குகள் போடப்படுவதை அனைவரும் பார்க்கிறோம். இதைப் போல பல கோடி மடங்கு விரைவாக செயல் புரியும் அதிக ஆற்றல் உடைய சிறிய கணினிகள் தோன்றும். ஆனாலும் சிக்கலான மனித மூளையின் ஆற்றலை அறிவதற்கு ஒரு வழி உருவாக்கப்படுகிறது!
  மூளையை ஸ்கேனிங் செய்வது என்பது சர்வ சாதாரண விஷயமாக ஆகி விட்டது. மூளையின் ஆற்றலை முழுவதுமாக அறிவதற்கு ரத்தக் குழாய் வழியே நேனோபோட்கள் செலுத்தப்படும். இந்த நேனோபோட்கள் உண்மையில் சின்னச் சின்ன ஸ்கேனர்கள்!
  பல லட்சக் கணக்கில் இவை மூளைக்குள் செலுத்தப்படும். இப்போதே மூளையை ஸ்கேன் செய்ய எலக்ட்ரானிக் எனப்படும் மின்னணு முறை உள்ளது. மூளையின் ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல்லுக்கு எப்படித் தகவல்கள் செல்கின்றன என்பதை இந்த நேனோபோட்கள் நன்கு அறிந்து விடும். மின்னணு முறையில் நேனோபோட்கள் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும்; தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்!
  இப்படித் தொடர்ந்து இவை செயல்பட்டால் மனித மூளையின் மேப் தயாராகி விடும். பிறகு மூளையைப் போலவே செயலாற்றல் கொண்ட செயற்கை மூளை மெஷின் தயாராக வேண்டியது தான்! இதன் பெயரே ந்யூரல் மெஷின்!
  ஆனால் மெஷின்களிலோ எலக்ட்ரானிக் முறையில் தகவல்கள் அனுப்பப்படுவதால் ஒரே விநாடியில் அது அனைத்தையும் “கற்றதாக” ஆகி விடுகிறது. இந்த மெஷின்களுக்கு மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை, கார் உருவாக்கும் கார் மானுபாக்சரிங் என்று அனைத்துக் கலைகளையும் கற்பிக்க முடியும். எல்லாமே ஒரு விநாடி வேலை தான். ஒரு பொத்தானை அமுக்கினால் அது ஒரு கலையைக் கற்று விடும். அது மட்டுமல்ல அதிசய வேகத்தில் இவை செயலாற்றும்.
  மனித மூளையைப் போலவே செயலாற்ற வடிவமைக்கப்படும் மூளையில் எலக்ட்ரானிக் சர்க்யூட்டுகள் இருக்கும். இவை மூளையை விட ஒரு கோடி மடங்கு துரிதமாக வேலை செய்யும். இந்த மெஷின்களுடைய மெமரி எனப்படும் நினைவாற்றல் சக்தி மிக மிகப் பெரிய அளவில் இருப்பதோடு துல்லியமாகவும் இருக்கும். என்றாலும் கூட, ஒரு மனிதனின் முகத்தைப் பார்த்த உடனேயே அவனை இன்னொருவனிடமிருந்து மனித மூளை வேறுபடுத்தி இனம் காண்கிறது! அது மட்டுமல்ல, முக பாவத்தில் சிறிய மாறுதல் அல்லது முகத்தில் சிறிய அசைவு ஏற்பட்டாலும் கூட மனித உணர்ச்சிகளை மூளை உடனே புரிந்து கொண்டு விடுகிறது! ஆனால் இந்த பேட்டர்ன் எனப்படும் வெவ்வேறு வகைகளையும், மாற்றங்களையும் இயந்திரங்கள் உணராது.
  ஒரு இயந்திரத்திற்கு எதிராளி கோபமாக இருக்கிறான் என்பது தெரியாது. நக்கலாகவோ அல்லது கிண்டலடித்தோ பேசினால் அந்த நகைச்சுவையை ரசிக்க மெஷினுக்குத் தெரியாது.
  காதல் பார்வையையும் ஏக்கப் பார்வையையும் குழந்தைகளின் கொஞ்சல் மொழிகளையும் காதலின் சிணுங்கலையும் அது ரசிக்காது; புரிந்து கொள்ளாது. இந்த நுணுக்கமான விஷயங்களையும் இயந்திரத்தில் ஏற்ற முடிந்தால் அவ்வளவு தான்; இயந்திரங்களின் ஆற்றலுக்கு எல்லையே இருக்காது! முன்பு மிக மிகப் பெரிதாக, ஏன் ஒரு கட்டிடம் அளவு கூட இருந்த மெஷின்கள் இப்போது நாம் காணும் கம்ப்யூட்டர் அளவிற்கு சிறிதாகி வந்து விட்டன. எதிர்காலத்தில் இவை இன்னும் சிறிய அளவில் செய்யப்படும். ஆனால் அதே சமயம் அவற்றின் மூளை அளவு அல்லது மெமரி ஆற்றல் பல ஆயிரம் மடங்கு கூடி இருக்கும்!

  2030ம் ஆண்டு வாக்கில் 1000 மனித மூளையின் திறனை சின்ன ந்யூரல் இயந்திரங்கள் கொண்டிருக்கும்! 2050ம் ஆண்டு வாக்கிலோ மனித மூளையைப் போல நூறு கோடி (ஒரு பில்லியன் நூறு கோடி) அல்லது பில்லியன் மடங்கு திறன் ஆற்றல் கொண்டதாக இருக்கும்! நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது இல்லையா?!
  இப்படிப்பட்ட ந்யூரல் இயந்திரங்கள் வரப்போகிறது என்கின்ற செய்தி வரும் போதே நமக்குள் ஏராளமான கேள்விகள் எழுகின்றன. மனிதர்கள், இவற்றின் பிரம்மாண்டத்தின் முன், நாய்கள், பூனைகள் போல சின்னப் பிராணிகளாக ஆகி விடுவார்களா? இவை நோயற்ற மூளையைக் கொண்டிருக்கும் போது மனிதன் மட்டும் பார்கின்ஸன் வியாதி போன்ற மூளை நோய்களால் பீடிக்கப்படுவானா? இவையெல்லாம் நமக்கு எழும் கேள்விகளில் சில.
  இதற்கு பதில், மனித மூளையின் நினைவாற்றலைப் பெருக்க நேனோபோட்கள் மூளைக்குள் செலுத்தப்படும். இவை எந்தப் பகுதி நினைவாற்றலுக்குப் பொறுப்பாக இருக்கிறதோ அங்கே சென்று மூளை செல்களைத் தூண்டி விடும். ஆகவே நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல இன்று தீர்க்க முடியாமல் இருக்கும் பார்கின்ஸன் நோய் போன்றவற்றிற்கு மூல காரணமாக இருக்கும் செல்களை சரிப்படுத்துவன் மூலம் அறவே ஒழிக்கப்படும். வியாதிகளே இல்லாத ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும்!
  மைக்ரோஸ்கோபிக் நேனோபோட்கள் லட்சக்கணக்கில் மூளைக்குள் செலுத்தப்படும் சாத்தியம் இருப்பதால் மூளை இயலில் நினைத்ததெல்லாம் நம்மால் சாதிக்க முடியும்!
  மனித மூளையைப் போல இன்னொரு ந்யூரல் இயந்திரம் தானாகச் சிந்தித்து ஒரு புதிய சிந்தனா முறையையே தோற்றுவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது! மனித குலம் ஏற்படுத்தி இருக்கும் மனித நாகரிகம் போல ஒரு எலக்ட்ரானிக் நாகரிகத்தை இந்த இயந்திரங்கள் ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது!!
  இப்படி ராட்சஸ வேகத்தில் இவை வளர்ந்து விட்டால் இந்த இயந்திரங்களே மனிதர்களுக்கு எதிரிகளாக மாறி விடுமா? இந்தக் கேள்விக்கு விஞ்ஞானிகளின் பதில் என்ன?
  ராட்சஸ வேகத்தில் வளர்ந்து வரும் இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிரிகளாகி விடும் என்று பயப்படத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.
  இது வரை, மனித உடல் வேறு, இயந்திரங்கள் வேறு என்று தனித் தனியே இருந்தது. இனி அப்படி இருக்காது. மனிதனும் இயந்திரமும் சங்கமமாகி விட்ட நிலையில் மனிதன் – இயந்திரம் ஒன்றாகவே ஆகி விடும்! இந்த இயந்திரங்களே மூளையில் நமது சிந்தனா செல்களைத் தூண்டி விட்டு தக்க முடிவுகளை எடுக்கத் தூண்டும்! இந்த மனிதன்-இயந்திரம் நாகரிகம் நம்மாலேயே உருவாக்கப்படுவதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது.
  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸாவில் அமிஸ் ரிஸர்ச் சென்டர் (Ames Research Centre) என்று ஒரு ஆய்வு மையம் உள்ளது. இதில் பிரபல ஆராய்ச்சியாளரின் பெயர் சக் ஜோர்கென்ஸன். (Chuck Jorgensen) ஜோர்கென்ஸனும் அவரது சகாக்களும் அற்புதமான ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  மனித குரல்வளையில் உள்ள வோகல் கார்ட் எனப்படும் குரல் நாணில் உள்ள நரம்பு செல்களில் உருவாக்கப்படும் சிக்னல்களைப் பிடித்து அதை அப்படியே கம்ப்யூட்டரில் பேச்சாக ஒலிக்கச் செய்யும் முயற்சியே இவர்களது ஆராய்ச்சி! பேச முடியாதவர்களுக்கு இது பெரிதும் துணை செய்யும். அவர்கள் பேச நினைத்ததை கம்ப்யூட்டர் தனது ஸ்பீக்கர் வாயிலாக ஒலிக்கச் செய்து விடும். அது மட்டுமின்றி விண்வெளியில் ஸ்பேஸ் சூட்டுடன் உள்ளவர்களுக்கும், மிக மிக அதிகமான இரைச்சல் உள்ள இடங்களில் பேச வேண்டியவர்களுக்கும் இது நல்ல பயனைத் தரும்.
  மூளை தரும் சிக்னல்கள் மனித குரல்வளையில் உள்ள குரல் நாண்களை என்ன பேச வேண்டுமோ அதைப் பேச இயக்குகின்றன. இந்த சிக்னல்களை கம்ப்யூட்டர்கள் தெரிந்து கொள்ளும், பேசும், அவ்வளவு தான்!
  இந்த விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்ன?
  மனம் மனதோடு தொடர்பு கொண்டு பேசும் டெக்கில்பதி என்பது தான்! இதுவும் எதிர்காலத்தில் சாத்தியமே என்று ஜோர்கென்ஸன் கூறுகிறார்.
  மனித பிரக்ஞையைக் கடந்து தொலைதூரத்தில் உள்ளவர்களோடு மனிதன் பேச முடியும் என்பது ஆச்சரியமான செய்தி! இப்படி ஒரு விஷயத்தை காலம் காலமாக மனித குலம் கனவு கண்டு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட மனம் மனதோடு தொடர்பு கொள்ளும் நாள் வரும்போது மனித நாகரிகமே முற்றிலுமாக மாறி விடும்!

  கவலைதரும் கலாச்சார மாற்றங்கள்

  “ரோம் நகரில் நீ வாழும்போது ரோமானியன் நாட்டைச் சேர்ந்தவர்போல வாழப் பழகு” – என்பது ஒரு புகழ்பெற்றஆங்கிலப் பொன்மொழியின் கருத்தாகும். அதாவது – “ரோம் நகருக்குச் சென்று நீ வாழுகின்றஒரு சூழல் ஏற்பட்டால் அந்த நாட்டவரைப்போலவே உன்னுடைய நடை, உடை, பாவனைகளை மாற்றி அவர்களுடைய வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொண்டு அவர்களின் வாழ்க்கை நெறிகளை பின்பற்றமுயற்சிசெய்ய வேண்டும். அப்போதுதான் உன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்” என்பது அந்த பொன்மொழி நமக்கு உணர்த்தும் பாடமாகும்.
  எந்த ஊருக்கு நாம் செல்லுகிறோமோ அந்த ஊரில் உள்ள சூழ்நிலைக்கேற்ப ஓரளவு மாறுவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்.
  “எங்கள் ஊரில் இப்படி இல்லை”
  “எங்கள் நாட்டின் கலாச்சாரம் வேறு”
  “எங்கள் மாநில பண்பாட்டின்படி நாங்கள் இப்படித்தான் நடப்போம்” – என்று எங்கு சென்றாலும் தங்கள் நாட்டு பழக்கவழக்கங்களை அடுத்த இடத்தில்போய் நடைமுறைப்படுத்துவது சிலவேளைகளில் பிரச்சினையை உருவாக்கிவிடும்.
  பண்பாடு என்றும் கலாச்சாரம் (Culture) என்றும் அழைக்கப்படும் வார்த்தை, மக்களுடைய பழக்கவழக்கத்தின் (Habits) அடிப்படையில் அமைகிறது. மக்களின் பழக்கவழக்கம் தானாக ஒரேநாளில் தோன்றுவதில்லை. தொடர்ந்து வழக்கமாக அதனை செயல்படுத்தி வருவதன்மூலமே அது பழக்கவழக்கமாக மாறுகிறது. அதாவது – பழக்கம் ‘ வழக்கம் ‘ பழக்கவழக்கம் என்றும் பொருள் கொள்ளலாம்.
  இந்தப் பழக்கவழக்கங்களெல்லாம் தொடர்ந்து அனைவராலும் கடைபிடிக்கப்படும்போது அது “பண்பாடு” அல்லது “கலாச்சாரம்” ஆக மாறுகிறது.
  இந்த கலாச்சாரமெல்லாம் ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறாக அமைகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவளர்ந்த நாடுகளின் கலாச்சாரத்தை ‘மேல்நாட்டு கலாச்சாரம்’ என்கிறார்கள். மேல்நாட்டில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்கள்தான். ஆனால் அவை – அனைத்துமே மேன்மை தருகின்றசிறப்புகளை வழங்குகின்றகலாச்சாரங்கள் என நாம் முடிவுசெய்துவிடமுடியாது.
  குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் தங்கள் உடலின் குளிரைப்போக்குவதற்காக மதுவை அருந்தத் தொடங்கினார்கள். அதுவே அவர்களது பழக்கமானது. பின்னர் பழக்கவழக்கமாகி கலாச்சாரமாக மாறிவிட்டது. ஆனால் நமது நாட்டில் வெயில் அதிகம். குளிர்காலம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தான். ஆனால் ‘கத்திரி’ வெயில் அடிக்கும் கடுங்கோடைகாலத்தில்கூட மதுவை குடித்துவிட்டு மதிமயங்கி அலைகின்ற’கலாச்சாரம்’ இங்கு பெருகிவருவது தமிழ் பண்பாட்டுக்கே இழுக்கு அல்லவா!
  வெளிநாட்டில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து படிப்பு செலவுகளுக்காக பணம் வாங்குவதில்லை. பகுதிநேர வேலைகளில் (Part time Jobs) தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அதிலிருந்துவரும் வருமானங்களிலிருந்து அவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். “டீன் ஏஜ்” பருவம் வந்ததும் தனியாக தங்கி, தனக்கு வேண்டிய செலவுகளுக்காக உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். கல்வி நிலையங்களில் படிக்கும் நேரம்தவிர மற்றநேரங்களில் இவர்கள் தினமும் சுமார் 8 மணிநேரம் அதிகமாக உழைக்கிறார்கள். சனிக்கிழமைகளில்கூட பணம் சம்பாதிப்பதற்காக வேலை செய்கிறார்கள். ஞாயிற்றுகிழமைகளில் ஓய்வுநேரம் கிடைக்கும்போது நண்பர்களுடன் சிறிய அளவு மதுவை அருந்துவதற்கு மூன்று அல்லது நான்கு மணிநேரங்கள் செலவிட்டு தங்கள் ‘டென்ஷனை’ குறைத்துக்கொள்கிறார்கள்.
  ஆனால் இங்கு நடப்பது என்ன?
  இங்கு குளிர் அதிகமாக இல்லை. பாடச்சுமைகள் அதிகம் இல்லை. படிப்புக்காக கட்டணம் எதுவும் தான் சம்பாதித்து செலுத்தவேண்டிய அவசியமில்லை. ஆயிரக்கணக்கில் பெற்றோர்களே பணம் செலவிட்டுவிடுகிறார்கள். உடை வாங்குவதற்கும், தங்குவதற்கும் வேளாவேளைக்கு உணவைத் தருவதற்கும் பெற்றோர்கள் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். எந்தக்குறையும் தனது பிள்ளைக்கு வராதவாறு பெற்றோர்கள் காவலாக இருக்கிறார்கள். இந்தச்சூழலில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மதுக்கடைகளில்போய் மயங்கி கிடப்பது எந்த விதத்தில் நியாயம்?
  வெளிநாட்டில் டென்ஷனைக் குறைப்பதற்கு மாணவர்கள் எப்போதாவது மது அருந்துகிறார்கள். நம்நாட்டில் சில மாணவர்கள் மது அருந்திவிட்டு அத்தனைபேருக்கும் டென்ஷனை உருவாக்கிவிடுகிறார்கள். ஆங்கில கலாச்சாரத்தைப்பார்த்து அடிவயிற்றில் சூடுபோட்டுக்கொள்வது நல்லதுதானா! திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்படும் காட்சிகளை அப்படியே உள்வாங்கி அதையே கலாச்சாரம் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு செயல்படுவது சிக்கல் அல்லவா!
  உலகமயமாக்கல் (Globalisation) மூலம் உலகமே ஒரு குடையின்கீழ் வந்துவிட்டது என்று நாமெல்லாம் பெருமைப்படுகிறோம். ஆனால் கலாச்சார மாற்றங்கள் மெதுவாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. வெளிநாட்டு கலாச்சாரங்களெல்லாம் தமிழ்நாட்டில் மெதுவாக வேரூன்றத் தொடங்கிவிட்டன. இருந்தபோதும் மேற்படிப்பிற்காகவும், வேலை செய்வதற்காகவும் அயல்நாட்டிலிருந்து இங்கே வந்தவர்கள் கலாச்சாரம் என்றபெயரில் கண்டபடி நடப்பதை நாம் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?
  கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டிலுள்ள ஒரு பல்கலைக்கழக மாணவ – மாணவிகளால் ஏற்பட்ட ஒரு ‘நிகழ்வு’ பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது.
  அந்தப் பல்கலைக்கழகத்தில் கென்யா, ருவாண்டா, தென் ஆப்பிரிக்கா நாடுகளைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்துவருகிறார்கள். அவர்கள் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியிருந்தனர். நகரின் முக்கிய வீதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் ருவாண்டா நாட்டைச்சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுகூடி, மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். ஆபாச நடனம் ஆடி கூச்சலிட்டார்கள். இதுபற்றி தகவல்தெரிந்த சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவர்களைக் கலைந்துபோகும்படி கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் போலீசாரை மாணவர்கள் தாக்கவும் முயற்சி செய்தார்கள். இந்த நிகழ்வு இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் ஒரு சாதாரணமான நிகழ்வு அல்ல. திட்டமிட்டு நகரின் மையத்திலுள்ள திருமண மண்டபத்தில்கூடும்போதுதான் அங்கு பிரச்சினை உருவாக ஆரம்பித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் மது குடித்து நடனம் ஆடுவதும், அவர்களோடு மாணவிகளும் இணைந்துகொள்வதும் நமது கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல. இந்த சம்பவம் மற்றவர்களின் கவனத்தையும் அவர்கள் பக்கம் திருப்பி ஒழுங்கு நடவடிக்கை ஏற்படுத்துவதற்குக் காரணமாகிவிட்டது.
  வெளிநாட்டில் இருந்து படிக்க வருபவர்களும் தங்கள் நாட்டின் விழாக்களை நம் நாட்டில் கொண்டாடுவது தவறல்ல. மாணவர்களாக இருப்பதால் அவர்கள் நாட்டுக்குச்சென்று விழாக்களைக் கொண்டாட முடியாத நிலையில் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் அருகில் கொண்டாடுவதும் தவறல்ல. ஆனால் அந்த “கொண்டாட்டம்” என்பது அடுத்தவர்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கும் அளவுக்கு இருந்தால் அது நடவடிக்கைக்கு உட்படுத்தவேண்டிய செயல்தானே?
  “இது சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் எப்படியும் நடந்துகொள்ளலாம்” என்று சிலர் பேசித்திரிகிறார்கள்.
  சுதந்திரம் என்பது நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் உரியதுதான். “நான் சுதந்திரமாக இருக்கிறேன்” என்று எண்ணிக்கொண்டு ஒருவர் தனது கையை மேலும், கீழும், பக்கவாட்டிலும் வேகமாக அசைக்கிறார் என வைத்துக்கொள்வோம் அப்போது அவரின் கை அருகில் இருந்த ஒருவரின் முகத்தில்பட்டுவிடுகிறது. அவர் கோபத்துடன் அடிக்க வருகிறார். கையை வீசியவரின் பல் உடைந்துபோகிறது.
  இதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம்.
  “நமது சுதந்திரம் அடுத்தவரைப் பாதிக்காத அளவுக்கு அமையவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது உண்மையான சுதந்திரம் ஆகும். நமது சுதந்திரம் அடுத்தவரைப் பாதித்தால் அது நம்மை பாதிக்கின்ற விளைவுகளை ஏற்படுத்திவிடும்” – என்றபெரியோரின் வாக்கு வெளிநாட்டு மாணவர்களுக்குப் பொருந்தும் அல்லவா!

  புகை வண்டி

  ஒரு மாறுதலுக்காக இம்மாதம் நண்பரொருவர் கூறிய உண்மை மாதிரியே இருக்கின்றகதையை எழுதுவோமா! முக்கியமான அரசுப்பணிக்கான (இந்திய ஆட்சிப்பணிக்கான) தேர்வுக்காக பரெய்லி முதல் டெல்லி நோக்கிய பயணம். மிக மிக கவனமாக முன்பதிவு செய்ய செல்கிறான் நண்பன். பொதுவாகவே கவனம் ஏகத்திற்கும் அதிகமானவன். ரூமை பூட்டிவிட்டு செல்வதனால் கூட இரண்டு மூன்று முறை இழுத்துப்பார்த்துவிட்டு Additional பூட்டு ஒன்றை பூட்டுக்கு பக்கத்திலிருக்கின்றஇன்னொரு தாழ்பாழிலும் போட்டு விட்டு வாசல்வரை சென்று பைக் எடுத்தால் கூட திரும்பி வந்து ஹாஸ்டல் ரூம் பூட்டை சரி பார்த்துச் செல்லுமளவு கவனம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
  இரண்டு பேர் செல்வதாக ஏற்பாடு. ஒருவாரம் முன்பு கஷ்டப்பட்டு காலேஜிலிருந்து பரெய்லி வரை போய் பதிவு செய்ததில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் இல்லாமல் கிடைத்தது. பெரிய சந்தோஷம். தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகிப்போனது.
  நம் நாயகன் டிக்கெட் புக் பண்ணியதிலேயே இண்டர்வியூ முடிந்து சீட் கிடைத்தது போல் கூட்டத்திலிருந்து திணறி வெளியே வந்தான். டிக்கெட் கவுண்டர்கள் எப்பொழுதுமே சுவாரஸ்யமானவை. புது தில்லியில் முன்பு டிக்கெட் பதிவு செய்ய நிற்கின்றகூட்டத்தின் வரிசைகளின் வாலை கண்டுபிடிப்பது பாம்பின் தலையை கண்டுபிடித்து வயல் தோட்டத்தில் சரியாக அடிப்பதை போலவே சிரமமானதுதான். நெளிந்து இரட்டையாகி வளைந்து சீற்றத்திற்கு உட்பட்டு என்று காளைமேகப் புலவரைப்போல இரட்டை அர்த்தம் கொண்ட பாடல் எழுதலாம். ‘ஆடிக் குடத்தடையும், ஆடும்போதே இரையும்’, என்று பாம்பும் எள்ளும் ஒன்று என்கின்றபாட்டை நினைவுபடுத்திக் கொண்டேன்.
  முன்பதிவு மையத்தில் புகைவண்டிகளுக்கான டிக்கெட் பதிவு செய்பவர்களாக பிறப்பதைக்காட்டிலும் (வளர்ந்த பிறகுதானே வேறு வேலை என்று தெரிகின்றது?) அவர்களுடைய சொந்தக்காரர்கள் அல்லது நண்பர்களாக பிறப்பவர்களது வாழ்க்கை பதட்டம் குறைந்தது. அவர்கள் வரிசையில் நிற்கின்றநேரம் பதிவு மையத்தில் இருப்பவர்களோடு பேசிப் பழகுவதில் முடிந்து போகின்றது. சேர்ந்து வாழ்வதில் இருக்கின்றமகிழ்ச்சி ஏராளமானது.
  நாம் பார்த்ததொரு கணிணி முன்பதிவு மையப் பெண்மணி பத்து விரல்களில் ஏழு அல்லது எட்டு விரல்களில் மோதிரம் போட்டு இருந்தார்கள். இதில், ஒவ்வொரு விரல்களிலும் அவ்வளவும் வேறு வேறு நிற கற்கள். ஒன்றில் பச்சை, மற்றொன்றில் மஞ்சள் இராத்திரி நீல நிறக்கல் இன்னொரு விரலில் (இந்த நிறம் சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள் புத்தகத்திலிருந்து கடன் பெறப்பட்டது). ஏதோ அவர்களது கணவர் கல் சுரங்கம் வைத்திருப்பது போல கைகள் டைப்படிக்கும் பொழுது கல் கொட்டிவிடப்போகின்றது! என்கின்றகவலையினால் தான் கீ போடுக்கு வலிக்குமோ? என்பது மாதிரி டைப் பண்ணிக்கொண்டு இருந்தார்.
  இவ்வளவு நிகழ்ச்சிகள் நிறைந்த புகைவண்டி முன்பதிவில் வளவனும் நண்பனும் வெற்றி பெற்றதில் மட்டற்றமகிழ்ச்சியுற்றதை exaggerated reaction என்றெல்லாம் தள்ளிவிட்டுவிட முடியாது.
  பயணம் போக வேண்டிய நாள் வந்தது. கண்கள் முழுக்க கனவுகள் விரிந்து கொண்டது வேலை கிடைத்ததும் உலகம் என்ன சொல்லும் என்று யோசித்துக் கொண்டும் காத்திருக்கின்றபெண்ணை கல்யாணம் செய்து கொள்ளப்போவது குறித்தும் யோசித்துக் கொண்டிருந்த பொழுது இரயில் சரியான நேரத்திற்கு வந்தால் ஆச்சரியம் தாங்க முடியாதே…….
  சரிபார்த்த பொழுது வந்த ட்ரெயின் இரண்டு மணிநேரம் முன்பு வந்திருக்க வேண்டியது என்றும் வரப்போகின்றட்ரெயின் நான்கு மணி நேரம் தாமதமாக வரும் என்றும் தெரியவந்த பொழுது ஆச்சரியம் அநாவசியமனது என்று தெரிந்து மனது சமாதானமானது.
  வளவனின் நண்பன் ட்ரெயின் கம்பார்ட்மென்டை கண்டுபிடித்து பெர்த்தில் சாய்ந்ததும் மனது மீண்டும் கனாக்காண ஆரம்பித்தது.
  புகைவண்டியில் ஏறியவுடன் பழைய கால நிலக்கரிப் புகைபோல பெருமூச்சு கிளம்புவது வழக்கம். எத்தனையோ பெரிய எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் புகையில்தான் தொடங்குகின்றன. கிரகப் பிரவேசம் என்று சொல்கையில் கூட அண்ணா வீட்டில் கண்களைப் பதம் பார்த்துக் கொண்டுதான் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். இரயில் வண்டிக்குப் புகைவண்டி என்கின்றபெயர் புகையாகிப் போய்விட்டது. இரண்டு இடையாகச் செல்கின்றஉயர் அழுத்த மின்கம்பிகளை பட்டும் படாமல் தொடர்ந்து கொண்டே எலக்ட்ரிக் இஞ்சின்களின் இழுவையில்தான் இனிய பயணங்கள் தொடங்குகின்றன. அப்படித்தான் வளவன் நினைத்தான் side upper பெர்த்தில் ஏறியதும் தூக்கம் கண்களைத் தழுவியது.
  இடையிலே, சற்று நேரம் கழித்து யாரோ… உலுக்குவது போல உணர்ந்து விழித்துப் பார்த்தால், நண்பனோடு இரண்டு நடுத்தர வயதுக்கும் கொஞ்சம் கூடிய தோற்றத்தில் கையில் டிக்கட்டோடும் என்னையும் மாறிமாறி பார்த்துக்கொண்டு இருக்க, வளவனும் தன்னுடைய டிக்கெட்டை ஒப்பிட்டுப் பார்த்து குழம்பிப் போயிருப்பது சரியாகப் புரியவே சற்று நேரம் ஆனது. பெர்த் மாறியிருக்கக் கூடும். எந்த கம்பார்ட்மென்ட் என்று கூட கேட்டுப் பாருடா? தன்னுடைய இந்த மீதியிருந்த நம்பிக்கையைக் காட்டிலும் இப்பொழுதிருக்கின்றபிரச்சனையை தீர்ப்பது மட்டும்தான் பெரிதாக இருந்தது. பல நேரங்களில் பேச்சு அமைதியைக் காட்டிலும் மதிப்பு மிகுந்ததாக இருந்தால் மட்டுமே பேசவேண்டும் என்பதும் ஞாபகம் வந்தது. வார்த்தைகளைக் காட்டிலும் பேசினால் விழும் இடைவெளிக்கு பல ஆழமான அர்த்தங்கள் இருக்கின்றன. இடைவிடாமல் பேசும்பொழுது இவை நமக்கு தெரிவதில்லை. மௌனம் என்பதே இடையறா பேச்சு என்று சொல்கின்றார், இரமண மஹரிசி.
  சரியான கம்பார்ட்மென்டில் தான் இரண்டு பயண பார்ட்டியும் ஏறியிருக்கின்றார்கள் என தெரிந்ததும், எந்த ஊர்? ஊர்? க்யா நாம் ? கோன் மிலா ஜஹா? என்று ஊரில் இருக்கிற ‘ள’ கிழே இறங்கி நிற்பது போல கேட்டேன். ஒரு வேளை வேறெங்கோ ஏறவேண்டியவர்கள் இங்கே வந்து ட்ரெயினை பிடித்து விட்டார்களா?
  மறுபடி ஒருமுறை வளவன் சரிபார்த்துக்கொண்டு, மங்கலாக நினைவிருந்த S13 B S12 Bஆ என்னடா சரியாக பார்த்தியா? நீதானே முதல்லே ஏறின? என்று நண்பனைக் கேட்க அவன் மையமாக தலையாட்டி வைத்தான் அர்த்தம்… கொஞ்சம் சரிபார்த்துக்கோயேன். தலையசைத்த கொஞ்ச நேரத்தில், ரெயில் அட்டென்டர் வந்தார். இந்த மாதிரி ரெண்டு டிக்கெட் அச்சு அசலா ஒரே மாதிரி வந்ததை என் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை. என்னமோ பண்ணிக்கோங்க என்றுவிட்டுப் போய்விட, டிக்கெட்டை வைத்து தடுமாறிக்கொண்டு இருந்தோம். சரி வேறெதாவது பர்த் காலியானால் அல்லது காலியாக இருந்தால், பார்க்கலாம், என்றால் இல்லவே… இல்லை.
  இனி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த வளவன்… நண்பனின் ஆச்சரியத்திற்கு எண்ணெய் ஊற்றுவது போல… மன்னிக்க வேண்டும் என்று இறங்கி வந்தான்.
  பிறகு என்ன செய்ய அரைமணி நேரமாக ரெயில்வே டிப்பார்ட்மென்ட் ஆட்கள் கூட பார்த்தும் தெரியாத சின்ன ஆனால் தெரிந்ததற்கு அப்புறம் பெரிய தவறு பார்வைக்கு வந்தது.
  வளவன் அடுத்த மாதம் அதே தேதிக்கு முன்பதிவு செய்திருந்தான். இப்போதுதான், பரவாயில்லையே, ஒருவாரம் முன்பு செய்து கூட வெயிட்டிங் லிஸ்ட் இல்லாமல் சரியாக, கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்கின்றதே என்று ‘லால்லி பாப்’ சந்தோஷம் டிக்கெட் வாங்கும்போது கிடைத்தது ஞாபகம் வந்தது. ஒவ்வொரு குழப்பமும் இடைக்கால பழைய தமிழ் படத்தில் பூவைக்காட்டி முப்பது வருடம் ஓட்டுவது போல சிம்பாலிக்காக வளவன் இறங்க புதுப் பயணி மேலேறி படுத்துக்கொண்டார். பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்தது.
  ஒகே… நாங்கள் இந்த பெட்டியில் கீழே படுத்துக்கொள்ளலாமா? என்று கேட்க சரி என்று ஒப்புதலாகி, தரையில் தூக்கம் தொடர்ந்தது. இதே கனவு காணும் பொழுது உருண்டு விழுந்தால் என்ன வலி வலிக்குமோ? அதைவிட வித்தியாசமான உணர்வாக வந்தது.ற
  வாழ்க்கையிலும் நிறைய சோகங்கள் (புது பயணிகளின் பார்வையில்) உற்றுப்பார்க்கும் பொழுது மறைந்து போகின்றன. பல கோணங்களில் பழகிப்போன கண்கள் பார்க்கப் போவதில்லை. பொறுமையும் செயல் புரியும்பொழுது இருக்கின்றமனநிலையும் காரிய சித்தியைத் தீர்மானிப்பதால், தியானம் செய்கையில் கவனக் கூர்வை அதிகரிக்கின்றது. இது இரயிலில் நிகழ்ந்தது போல சின்ன விபத்திலிருந்து பெரிய பதட்டங்கள் வரை தவிர்க்கலாம்.

  உலக கழிப்பறை தினம்

  ஆண்டுதோறும் பல்வேறு நாட்கள் உலக தினங்களாக கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் கழிப்பறைக்காகவும் ஒரு உலக தினம் கடைபிடிக்கப்படுகிறது என்பது வியப்பாக இருக்கும். கழிப்பறை என்பது அவ்வளவு முக்கியமானதா? என்று நினைக்கலாம். ஆம், கழிப்பறை பிரச்சனை சர்வதேச அளவில் ஒரு பெரிய சவாலாக உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 260 கோடி மக்கள் இந்த நெருக்கடியை நாள்தோறும் சந்தித்து வருவதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.

  கழிப்பறை பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம் (ரர்ழ்ப்க் பர்ண்ப்ங்ற் ஞழ்ஞ்ஹய்ண்ள்ஹற்ண்ர்ய்) என்றசர்வதேச அமைப்பு. சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19ம் தேதி அன்று அனைத்து நாடுகளிலும் ‘உலக கழிப்பறை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும் அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

  கழிப்பறை வசதி என்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. இயற்கையின் அழைப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. விழித்ததிலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை, ஏன்? தூக்கத்திற்கு இடையிலும் கூட இயற்கை உபாதைகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். வீடு, அலுவலகம், பயணம் என்று எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இயற்கையின் அழைப்பு வரலாம். இன்று முடியாது, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட முடியாது. ஆனால் இதைப்பற்றிப் பேசுவதற்குக் கூட யோசிக்கிறோம். அது ஏதோ கூடாத செயல் போல எண்ணுகிறோம். இயற்கை உபாதைகள் ஏற்பட்டால், வெளிப்படையாகச் சொல்ல பலர் கூச்சப்படுகிறார்கள்.

  வீதிக்கு வீதி வகை வகையான உணவகங்கள், கடைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் அல்லது தேவைப்படும் இடத்தில் இருப்பதில்லை. வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பே எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு புறப்பட வேண்டிய கட்டாய நிலை உள்ளது. பல நேரங்களில் அவசரத்துக்கு இடம் கிடைக்காமல் உரிய இடம் தேடி அலைந்து அல்லல்படுகின்றனர். அன்றாடம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை இப்படித்தான் கழிகிறது.

  உலக அளவில் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாத 260 கோடி மக்களில் 180 கோடி மக்கள் தெற்காசிய நாடுகளில் வசிக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 28 சதவிகித மக்கள் மட்டுமே நல்ல கழிப்பறை வசதியோடு வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ, உகாண்டா, தான்சானியா போன்றநாடுகள் இந்தியாவைவிட மேம்பட்ட சுகாதார வசதியோடு இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

  போதிய கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் ஏரிகள், குளங்கள், சாலை ஓரங்கள், வயல்வெளிகள், கண்மாய்கள் போன்றஇடங்களில் காலைக்கடன்களை முடித்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது. இருள் பிரியாத அதிகாலை நேரத்தையும், இருள் கவியும் மாலை நேரத்தையும் மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் அவர்கள் தொற்றுநோய், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

  சரியான கழிப்பறை வசதியில்லாத காரணத்தால் பெண்களின் கல்வி, ஆரோக்கியம், கௌரவம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்கள் படிப்பை தொடராமல் இடைநிறுத்தம் செய்வதற்கு தாங்கள் பயிலும் பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

  உடல் ரீதியான வேறுபாட்டால் பெண்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நேரம் ஆண்களை விட அதிகம். ஆகவேதான் பெண்களுக்கும் ஆண்களுக்குமான கழிப்பிட வசதிகள் 2:1 என்றவிகிதத்தில் இருப்பது நல்லது என்று உலக அளவிலான ஐடஇ IPC (International Plumbing Code) அறிவுறுத்தியுள்ளது. பெரும்பாலான மேலை நாடுகள் ஆண்களுக்கு ஒரு கழிப்பிடம் கட்டினால் அந்த இடத்தில் பெண்களுக்கு இரண்டு கழிப்பிடங்கள் கட்ட வேண்டும் என சட்டம் இயற்றி உள்ளன.

  உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் நிறுவனமும் இணைந்து உலக அளவில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி எவ்வாறு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கழிப்பறை வசதியை நான்கு விதமாக இந்த அறிக்கை பிரித்துக் காட்டுகிறது. அதாவது வெட்டவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறவர்கள், சுகாதாரக் குறைவான கழிப்பிடங்களைப் பயன்படுத்துகிறவர்கள், பொதுக்கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்துகிறவர்கள், தண்ணீர் வசதி நன்றாக உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறவர்கள் என்று அந்த அறிக்கை வகைப்படுத்தி இருக்கிறது.

  உலகில் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவோரில் 58 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும், சீனா, இந்தோனேஷியா போன்றநாடுகளில் வெறும் 5 சதவீதம் மக்கள்தான் திறந்த வெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. வேறு வகையாக சொல்வதானால் உலகில் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
  நவீன கழிப்பறைகள்

  ஆண், பெண் படம் போட்டுப் பிரித்துக் காட்டும் பொதுக்கழிப்பறையை ஒரு காலத்தில் ரயில்நிலையங்களில் மட்டும்தான் பார்க்க முடியும். இன்று ஊருக்குள்ளும், பேருந்து நிலையங்களிலும் கட்டணக் கழிப்பறைகளைப் பார்க்க முடிகிறது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் பயனற்று பாழடைந்து கிடக்கின்றன. சில இடங்களில் பயன்படுத்தும் அளவுக்கு தரமில்லாமல் இருக்கின்றன.

  பிந்தேஸ்வர் பாடக் என்பவர் ‘சுலப் இண்டர்நேஷனல்’ என்றதன்னார்வ சேவை நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் முக்கிய நகரங்களில் சமுதாயக் கழிப்பறைகளை அமைத்துள்ளார். நாள்தோறும் சுமார் 1 கோடிக்கும் மேலான மக்கள் பயன்படுத்தும் வகையில் 5000க்கும் மேற்பட்ட கழிப்பறைகளை இவரது அமைப்பு நிர்வகித்து வருகிறது.

  சக்கரங்கள் பொருத்திய நடமாடும் அல்லது நகரும் நவீன கழிப்பறைகள் மேலை நாடுகளில் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. எங்கெல்லாம் தற்காலிகமாக இந்த வசதி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இத்தகைய கழிப்பறைகளைப் பயன்படுத்தலாம். பத்து ஆண்டு உத்திரவாதத்துடன் பல நிறுவனங்கள் இத்தகைய கழிப்பறைகளை விற்பனை செய்கின்றன.

  இந்த ஆண்டு (2011) மே மாதம் இந்தியாவிலேயே முதன் முதலாக நாணயம் போட்டதும் இயங்கும் ‘நவீன இயந்திரக் கழிப்பறை’ திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையை உபயோகிப்பவர்கள் அதற்கான நாணயத்தை நுழைவாயிலில் உள்ள இயந்திர துவாரத்தில் போட்டதும் கதவு திறக்கும், மின் விளக்கு எரியத் தொடங்கும். அதன் பின்பு உள்ளே சென்று கழிப்பறையை பயன்படுத்திவிட்டு கதவை திறந்து வெளியே வந்தவுடன்; தானாகவே தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும். டெக்னோபார்க் ராம் சைன்டிபிக் சொலுசன்ஸ் என்றநிறுவனம் இந்த கழிவறைகளை வடிவமைத்து, இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு செயல்படுத்தி உள்ளது.

  அரசின் நடவடிக்கைகள்

  சுகாதாரக் கழிப்பிடத் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் மூலம் சுகாதாரமான வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2000மாவது ஆண்டு முதல் ‘முழு சுகாதார இயக்கம்’ (Total Sanitation Campaign) செயல்பட்டு வருகின்றது. நகர்புற, கிராமப்புற பாகுபாடின்றி அனைவருக்கும் இத்திட்டத்தின் பயன் சென்றடைய வேண்டும் என்றநோக்கத்தில் இத்திட்டம் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கழிவறை அமைத்தல், திட, திரவ கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, பள்ளிச் சுகாதாரக் கல்வி போன்றசெயல்களை உள்ளடக்கியது இந்த இயக்கம்.

  இந்த திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவதில் மத்திய மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து அந்தந்த பகுதி மக்களின் ஒத்துழைப்போடு முழு சுகாதார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன. 2012ம் ஆண்டிற்குள் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தருவதற்கு அரசு திட்டமிட்டிருக்கிறது.
  நிறைவாக. . .
  கழிப்பறை வசதி என்பது வீட்டு வசதியோடு தொடர்புடையது. மலம், சிறுநீர் கழிக்க மற்றும் அவற்றை அகற்றதேவையான தண்ணீர் வசதி போன்றவற்றை உள்ளடக்கியதே கழிப்பறை வசதி எனப்படும். சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாது போனால் தனிமனித ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். ஆரோக்கியமற்றகுடிமக்களால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

  சுகாதாரக் குறைவால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. அந்தப் பணத்தை கழிப்பறைகள் கட்டுவது போன்றஆக்கபூர்வமான பணிகளில் செலவழித்தால் நிரந்தர தீர்வு ஏற்படும் என்பது சுகாதாரத்துறை வல்லுநர்களின் கருத்தாகும்.

  திறந்தவெளியில் மலம் கழிப்பதில் சௌகரியச் குறைச்சல் இருந்தாலும், அதில் சுதந்திரமிருப்பதாக பலர் கருதுகின்றனர். ‘சென்றோம், வந்தோம்’ என்றில்லாமல் கழிவறையைக் கட்டிக்கொண்டு அதைக் கழுவிக் கொண்டு என்று சலித்துக் கொள்பவர்களும் உண்டு. ஆனால் இந்த எண்ணம் அண்மைக் காலமாக மாறி வருகிறது. வீட்டோடு இணைந்த கழிப்பறைகளைக் கட்டிக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம், திறந்த வெளியில் மலம் கழிப்பது தவறு என்று உணர்ந்ததால் மட்டும் அல்ல. ‘அவசரத்துக்கு’ ஒதுங்கக் கிடைத்த மறைவிடங்கள் இன்று கிராமங்களில் கூட காணாமல் போய்விட்டதும் ஒரு காரணம். இயற்கை உபாதைகளை வெளியேற்றவிரும்பும் அந்தக் கணத்தில் கழிப்பறை வசதி கிடைப்பது என்பது ஒரு வரப்பிரசாதம். அதனை ஒவ்வொரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

  சுகாதாரம் என்பது மக்கள் வாழ்வின் அடிப்படை உரிமை என்று உலக அளவில் குரல்கள் வலுத்து வருகின்றன. 2025ம் ஆண்டுக்குள் கழிப்பறை பிரச்சனைக்கு தீர்வு காண ஐ.நா. தீர்மானித்துள்ளது. ‘2015ல் அனைவருக்கும் கழிப்பறை வசதி’ என்றஇலக்கை அடைவதற்கான செயல்பாடுகளுக்கு உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 11வது உலக கழிப்பறை உச்சி மாநாடு இம்மாதம் (நவம்பர்) 22 முதல் 25 வரை சீனாவில் நடைபெறஉள்ளது.

  அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் அதை பயன்படுத்துகிற, பராமரிக்கிற பொறுப்பு பொதுமக்களை சார்ந்ததுதான். அரசாங்கம் ஏற்படுத்தித் தருகிற பொதுச் சுகாதார வளாகங்களை மக்கள் எவ்வாறு மோசமாக பராமரிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தண்ணீர் வசதி இல்லாமல் சுகாதார வளாகங்களை உருவாக்குவதால்தான் இப்படியான சிக்கல் எழுகிறது என்று சொல்லப்படுட்டாலும் அது மட்டுமே காரணமல்ல. மக்களிடையே போதிய விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் இல்லாததும் கூட காரணம்.

  நகரங்களை திட்டமிடுபவர்களும், வீடு கட்டுபவர்களும் கழிப்பறைக்கு இடம் ஒதுக்குவதை, பணம் செலவிடுவதை ஒரு வீண் வேலையாக, வீண் செலவாக கருதாமல் அதனை ஒரு பயனுள்ள மூலதனமாக கருத வேண்டும். ‘ஒரு தேசத்தின் வளர்ச்சியை அதன் கழிப்பறை வசதிகள் எளிதாகக் காட்டி விடும்’ என்கிறார்கள் சர்வதேச சுகாதார நிபுணர்கள். கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் சமூகச் சூழலில் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய் என்பது மிகப் பெரிய சமூக முரண்பாடு. கழிப்பறை வசதிகளை மேம்படுத்தாத சமூகம், அடிப்படைச் சுகாதாரக் கேடுகளில் சிக்கி ஆரோக்கியமற்ற தலைமுறையைத்தான் உருவாக்கும். எனவே, கழிப்பறை வசதியை மேம்படுத்தி, அத்துடன் கழிப்பறையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த தினத்தில் உறுதி ஏற்க வேண்டும்.