– 2011 – October | தன்னம்பிக்கை

Home » 2011 » October

 
 • Categories


 • Archives


  Follow us on

  அடையாளம் அடையலாம் !

  குழந்தைகள் பெற்றோர்களுக்கான ஆசியர்கள் போல … சுட்டி டி.வியில் குழந்தைகளோடு சேர்ந்து ட்டில் ஐன்ஸ்டைன் பார்த்திருக்கிறீர்களா? நாம் செய்து இருக்கின்றோம். நிறைய இரசிக்க முடிகின்றது. அதில் ஒரு எபிஸோடில் இரண்டு மரங்கொத்திப் பறவைகளைக் காட்டினார்கள். நேரில் நாம் பார்த்ததும் இரண்டுதான். காலை முதல் மாலை வரையிலான வாசத்தில், நமது பூங்கா மலர்களின், வாசனையில் குளித்ததை தவிர, ‘Selfish Gene’ என்கின்ற ரிச்சர்ட் டாகின்ஸ்-ன் புத்தகத்திருந்து தீபக் சோப்ராவின் க்னோவிங் (Knowing) எர்க் வழியாக அசோகமித்திரனின், ‘ ஒற்றன் ‘ வரை படித்ததில் இடைச் செருகலாக இரண்டு நாட்கள் இரண்டு உண்மையான மரங்கொத்திப் பறவைகள் காட்சி கொடுத்தன.
  ஆங்கிலக் கவிஞனொருவன், ‘மனிதன், எண்பது வயதில் பிறந்து பிறகு படிப்படியாக வயது குறைந்துகொண்டே வந்து, குழந்தையாகி, மறைந்து போக வேண்டும்.’ அது போல கடவுள் படைத்திருந்தால் நல்லது’ என்று ஆசைப்பட்டது நினைவு வந்தது. பெற்றுக் கொடுப்பதை தவிர குழந்தைகளுக்கான எல்லாக் காரியங்களையும் நாம் இரசித்துச் செய்கின்றோம் என்றபொழுது, ஏன் அதற்கும் முயற்சியுங்களேன் என்று பதில் வந்தது. இதைத் தொடர்ந்து ஒரு கேள்வி . . .
  பூங்காவில் கேட்பாரற்று பாழடைந்து போன இரண்டு மயில் சுடுமண் உருவங்களை தூசி தட்டி தோட்டக்காரரின் உதவியோடு நீராட்டிப் பாராட்டித் துடைத்து நேரோலேக் பெய்ன்ட் வாங்கி அடித்து புதுப்பொவினை உருவாக்கிய பொழுது அழகூட்டும் பணிகள் மனதுக்கு நிறைவூட்டுவதாக நமது தோழி சொன்னார்கள். மயிற்கு புது அடையாளம் கிடைத்திருந்தது. உள்ளம்; வர்ணம் தீட்டுகின்றபொழுதோ? கட்டுரை எழுதுகின்றபொழுதோ? கவனக் கூர்மையை வலுப்படுத்திக் கொள்கின்றது. பன்னிரெண்டாம் வகுப்பு பாட்டனி பாட ரெக்கார்டிருந்து கால்நடை மருத்துவ பேதலாலஜி வகுப்பு பயிற்சி ஏடு உட்பட; பலமுறை; பாட புத்தகங்களில் இருப்பதையே அடையாளம் மாறாமல் மீண்டும் நகலெடுத்து வரைந்தது உண்டு. அதற்கான காரணம் இப்பொழுதுதான் புரிவதாக உணர முடிந்தது. ‘அமைதி’, இரமண மஹரிஷியும், இரவீந்திரநாத் தாகூரும் புத்தபிரானும் மெச்சிப் பேசிய ‘அமைதி’ ஆட்டோமேடிக்காக கிடைப்பதற்கான அரிய வழிகளில் ஒன்று ரெக்காடு நோட்டு எழுதுதல். இதை தவத்திற்கான அடையாளம் என்று சொன்னாலும் மிகையாகாது. சிலைக்கு வண்ணம் தீட்டுதல் மயில் முடிந்து ஒரு வால்லா சிங்க சிலை, தோழி, குழந்தைகள் கைவண்ணத்தால் கலைவண்ணம் பெறதொடங்கி இருந்தது.
  இக்கட்டுரை முழுக்க இராமநாதபுர பூங்கா நிகழ்ச்சிகள் இழையோடியிருக்கின்றன. இக்ஸோரா (ஐஷ்ன்ழ்ஹ) மலர்களைப்பார்த்து இது இட்ப் பூ என்று சொன்னபொழுது, இதை சமைக்க முடியுமா என குழந்தை கேட்டால் அது மாறுபட்ட கோண அடையாளம். அவசியமாக ஆனால் அதிசயமாக கிடைத்த எதிர்பாராத ஓய்வில், ‘தெய்வத்திருமகள்’ பார்த்தது, ஒரு எழுதத்தக்க நிகழ்வு. அப்பாக்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இருக்கும் ஆழமான அன்பின் அடையாளம். பார்த்துவிடுங்கள்.
  ப்ளுமேரியா மலர்மரத்தில் குயில்களின் கூட்டம் ஒன்று சரசரவென தம்முள் வேகமாக பேசிக்கொண்டு சச்சரவிட்டு படபடக்கின்றன. சலீம் அயின் புத்தகத்தில் ஆண்குயில்கள் கறுப்பாகவும், பெண் குயில்கள் புள்ளிப் புள்ளியாக இருஞ்சாம்பல் நிறத்திலும் இருப்பதை டைமார்ப்பிஸம் Sexual Dimorphism அடையாளம் என்று சொல்யிருப்பார். நீண்ட நாட்களாக குயில் என்றால் எல்லாமே கறுப்பாய்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அவற்றின் சத்தத்தில்கூட ஆண் குயில் கூஊ – கூஊ (Koo – ooo) என்றும் பெண்குயிலோ . . . . Kik, Kik, Kik என்றும் சத்தமிட்டு கொஞ்சிக் கொள்ளும் என்று சொல் Wikipedia வில் படித்தேன். இது ஒ அடையாளம். அதை அனுபவிக்க முடிந்தது. சலீம் அ மிகவும் சுவையாக இந்த பறவைகளின் அன்பு விளையாட்டை எழுதியிருப்பார். ரிச்சர்டு டைசின்ஸ் சொல்வது போல ஜீன்கள் தமது அடையாளத்தை பரம்பரைகள் வழியாகப் பரப்புவதற்கான எல்லா முயற்சிகளையும் இயற்கை செய்துவிடுகின்றது.
  ப்ளுமேரியா மலர்களை அடையாளம் கண்டுகொண்டதே (Plumeria) ஒரு தனி கதைதான். வாகன வசதியில்லாத தர்மபுரியின், ஏரிமலை ஏறிய, இறங்கிய ஏழெட்டு செங்குத்தான கிலோ மீட்டர்களில் இம்மலர்களின் அடையாளம் தேடவேண்டும் என்று முதன் முத-ல் தோன்றியது. உள்ளூர் மக்கள், ‘மலை அரளி’, என செல்லமாக அழைக்கொள்ள, ‘சாமிக்கு ரொம்ப பிடிக்கும்’ என இலவச தகவல்களும் சேர்ந்து கொண்டது. வழக்கம்போல “அடையாளத்திற்காக” செல்போனில் மலர் சிறைப்பிடிக்கப்பட்டது. இடையில் ரெயின் ட்ரி Raintree,, தூங்குமூஞ்சி மரம் (Albezia Saman) சாமனியா மரம் குறித்து Google-ல் கண்டது தனி கதை. இது குறித்து உஷா சூர்யமணி என்பவர் சுலேகா. Com blog site-ல் அழகாக எழுதியுள்ளதையும் படிக்க நேர்ந்தது ஒரு நல்ல அனுபவம். White flower with yellow tinge எனக் கொடுத்ததும் பானீசியன் தீவுகளில் (இது இந்தோனேசியாவை சுற்றியுள்ள பற்பல சிறுசிறு தீவுகளின் கூட்டம் என அடையாளம் தெரிந்து கொண்டது இன்னொரு ‘ நெட் ‘ (Net)டை முறிக்கிற தேடல்!) உள்ள பழங்கால சுவாரஸ்யமான பழக்க வழக்கம் ஒன்றை அடையாளம் தெரிந்து கொண்டது; கொசுறாக, முடிந்தது. அங்கிருக்கிற பெண்கள் வலது காதில் ப்ளுமேரியா மலர் சூடினால் சுயம்வரம் வேண்டும் என்கிற முடிவு போல், காத்திருக்கின்றேன், மனமொத்த, மணமகனை மணமுடிக்க சம்மதம் என்று அடையாளமாம்… இடது பக்க காதோரம் ப்ளுமேரியா என்றால்… சம்மதிக்கவில்லை ஏற்கனவே மணமுடிந்தது… என அடையாளமாம்… காதில் பூச்சுத்தராங்க பாருங்க! வலது பக்கம், இடது பக்கம் என குயில்கள் கூவுகையில் குரல்தான் எடுப்பாக இருந்தது என்றால் ஆண் மயிலுக்கு தோகை உண்டு, பெண் யானைக்கு தந்தம் இல்லை என்று எத்தனை இயற்கை அடையாளங்கள்.
  பூங்காவில் கண்ட மற்றொரு காட்சி, Egret ஒன்றின் கூட்டில் குரங்கு, அல்லது காகம் புகுந்ததால் (சரியாக அடையாளம் தெரியாமல் எப்படி குற்றம் சாட்டுவது?) கலவரம் நடந்ததற்கு நானும் சாட்சியானேன். Food pyramid கட்டப்படும் பொழுது கட்டிட வேலையில் குறுக்கே தலையிட கூடாதோ? என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் சூடான இள இரத்தத்தோடு நீலமும் பச்சையும் கலந்த நிற உடைந்த முட்டையொன்று கீழே விழ, . . . பிரச்சனையின் தீவிரம் அடையாளம் புரிந்தது. தெய்வத் திருமகளில் பறவைக் குஞ்சொன்றை திரும்பக் கூட்டில் பூனையிடம் இருந்து காப்பாற்றி விக்ரம் விடுவார். . . அவர் விரல்களை தாயாக தவறாக குஞ்சுகள் புரிந்து கொள்ள Imprinting என்கின்றவிலங்கியல் தத்துவத்தில் இடமிருக்கின்றது என அனிமல் எதாலஜி Ethology படிப்பு மூலம் அடையாளம் தெரிந்து கொண்டது இந்த இடத்தில் எழுதத் தக்கதுதான்.
  நமக்கான அடையாளத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும். இயற்கை ஒவ்வொரு படைப்பிலும் ஒரு தனித்துவத்தை அடையாளமாக்கித்தான் வைத்திருக்கின்றது. அது சரியான காதில்தான் – பூ – வைத்திருக்கின்றது என்பதை நாம்தான் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் போல . .

  ஐக்கிய நாடுகள் தினம்

  ‘ஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. U.N.O. (United Nations Organisation) என்பதன் தமிழாக்கம் ஐக்கிய நாடுகள் சபை என்பதாகும். ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்பார்கள். 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
  ஐ.நா. அமைப்புக்கு முன்னமே இது போன்றபல சர்வதேச அமைப்புகள் உருவாகியிருந்தன. அவற்றுள் முக்கியமானது முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சங்கம் (League of Nations) ஆகும். இந்த அமைப்பும் உலக சமாதானத்தைப் பேணுதல் என்றபிரதான நோக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியே இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது.
  இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலகத் தலைவர்கள் ஒன்று கூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றநோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.
  ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு.
  ஐ.நா.வின் பணிகளை நெறிப்படுத்தும் விதிகளையும் கோட்பாடுகளையும் கொண்ட ஆவணமே ஐக்கிய நாடுகள் சாசனம் (UN Charter) என்றழைக்கப்படுகிறது. உறுப்பு நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் பொது லட்சியங்களை எட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தெரிவிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் அதில் அடங்கி உள்ளன. ஒரு நாடு ஐ.நா.வில் உறுப்பினராக சேரும்போது இச்சாசனத்தின் விதிகளை ஏற்று கையொப்பமிட வேண்டும்.
  1945ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி ஐ.நா.சாசனம் உருவாக்கப்பட்டு 51 நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும். ஐ.நா.வின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு.
  க்ஷி உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துவது,
  க்ஷி நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்பது,
  க்ஷி ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், பசி, பிணி, கல்லாமை ஆகியவற்றை ஒழிக்கவும் கூட்டாக முயற்சி செய்தல்
  க்ஷி இந்தக் குறிக்கோள்களை எய்துவதில் உலக நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு பொது அரங்கமாக செயல்படுதல்.
  ‘ஐக்கிய நாடுகள்’ என்றபெயரை முன்மொழிந்தவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் ஆவார். ஐ.நா. சாசனம் கையெழுத்திடப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக ரூஸ்வெல்ட் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் முன்மொழிந்த ‘ஐக்கிய நாடுகள்’ என்றபெயரையே ஏற்றுக்கொள்ள சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் பங்குபெற்றஅனைத்து நாடுகளும் சம்மதித்தன.
  இதன் தலைமையகம் அமெரிக்கா நாட்டில் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகத்தில் 39 மாடிகளைக் கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்றபொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று மூன்று முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. இந்தத் தலைமையக கட்டிடத் தொகுதி 1949, 1950ம் ஆண்டுகளில் ஜோன் டி, ராக்பெல்லர் ஜுனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது.
  ஐ.நா.சபையின் சின்னத்தில் வெளிர்நீல நிற பின்னணியில் வெள்ளைநிறத்தில் ஐக்கிய நாடுகள் இடம் பெற்றிருக்கும். போரைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்திற்கு எதிராக நீல நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெள்ளையும் நீலமும் ஐ.நா. அமைப்பின் அலுவல்சார் வண்ணங்களாக உள்ளன. ஐ.நா.வின் அலுவலக மொழிகளாக அரபிக், சைனிஸ், ஆங்கிலம், பிரென்ச், ருஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் உள்ளன. தலைமையகத்தில் செயல் மொழிகளாக ஆங்கிலமும், பிரென்ச் மொழியும் உள்ளன. 1945ம் ஆண்டு இந்தியா ஐ.நா.வின் உறுப்பினராக ஆனது. இதன் தற்போதைய பொதுச் செயலர் பான் கி மூன்.
  ஐ.நா.சபை சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது. சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம் (UNICEF)அகதிகளை பராமரிக்கும் UNHCR நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான UNPF நிறுவனம், மசடஊ எனப்படும் மக்கள் தொகை நிதியம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
  ஐ.நா. அமைப்பின் முக்கியமான ஏஜென்சி நிறுவனங்களாக IMF எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம், World Bank எனப்படும் உலக வங்கி, ILO எனப்படும சர்வதேச தொழிலாளர் கழகம், WHO எனப்படும உலக சுகாதார நிறுவனம், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான ‘யுனெஸ்கோ’ நிறுவனம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.
  ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்றசர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் எதுவென்றால் ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்’ ஆகும்.
  ஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதி மன்றம் நீங்கலாக ஏனைய ஐந்து அமைப்புகளும் நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகின்றன.
  (1) ஐ.நா. பொதுச்சபை (General Assembly)
  (2) ஐ.நா. பாதுகாப்பு மன்றம் (Security Council)
  (3) ஐ.நா. பொருளாதார சமூக மன்றம் (Economic and Social Council)
  (4) ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம் (Trusteeship Council)
  (5) ஐ.நா. செயலகம் (Secretariat)
  (6) சர்வதேச நீதி மன்றம் (International Court of Justice)
  1. ஐ.நா. பொதுச்சபை: இது ஐக்கிய நாடுகளின் முக்கியமானதொரு அங்கமாகும். இதில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை அளிக்கப்படும். ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதும், பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.
  2. ஐ.நா. பாதுகாப்பு மன்றம்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பினைப் பராமரிப்பது இதன் முக்கிய கடமையாகும். ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு பொருளாதார தடைகளை விதித்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் எடுத்தல் போன்றஅதிகாரங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ளன.
  3. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை: பொருளாதார மற்றும் சமூக தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்பிலுள்ள ஏஜென்சி நிறுவனங்களுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
  4. ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம்: இது ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். பெரும்பாலான நாடுகள் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில நாடுகள் விடுதலை பெற்றுள்ளன. சில நாடுகள் தன்னாட்சி அடைந்து விட்டன. சில நாடுகள் அண்டை நாடுகளுடன் இணைந்து கொண்டன.
  5. ஐ.நா. செயலகம் : இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐ.நா. நிறுவனத்தின் பிற அமைப்புகள் இடுகின்றபணிகளையும் நிறைவேற்றுகிறது. இதன் ஊழியர்கள் செயல்திறன் மற்றும் நேர்மையின் அடிப்படையில் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இதன் சாசனம் வலியுறுத்துகிறது.
  6. சர்வதேச நீதிமன்றம் : என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மையான அமைப்பாகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான தி ஹேக்கில் உள்ளது. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், அனைத்துலக அமைப்புகள் முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதி மன்றத்தின் முக்கிய பணிகளாகும்.
  இந்த நீதிமன்றத்தில் நாடுகள் மட்டுமே வழக்கு தாக்கல் செய்ய முடியும். தனிப்பட்டவர்கள் வழக்காட முடியாது. ஒரு நாடு இந்த நீதிமன்றத்தை அணுகும்போது இந்த நீதி மன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்குப் பணிந்து நடப்பதாகவும் அந்த நாடு உறுதியளிக்க வேண்டும். 15 நீதிபதிகள் இந்த நீதிமன்றத்தில் இடம் பெறுவார்கள். ஒரே நாட்டைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகள் ஒரே சமயத்தில் இடம்பெறமாட்டார்கள். நீதிபதிகளின் பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.
  ஐ.நா.சபைக்கு வருமானம் என்பது அதன் உறுப்பு நாடுகள் செலுத்தும் தொகைதான். அதற்கு வேறு வருமானம் கிடையாது. அனைத்து உறுப்பு நாடுகளும் தமக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகையின் அளவு அந்த நாட்டின் பொருளாதார பின்னணி, தேசிய வருமானம், மக்கள் தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஐ.நா.வின் ஆண்டு வருமானத்தில் ஐக்கிய அமெரிக்கா 22%, ஜப்பான் 19.6%. ஜெர்மனி 9.8%, பிரான்சு 6.5% தொகையைச் செலுத்துகின்றன.
  ஐக்கிய நாடுகள் சபை தனது உறுப்பு நாடுகளின் ஐக்கியத்தையே முதன்மையாகக் கொண்டது. உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவின்றி எதையும் செய்ய இயலாது. குறிப்பாக பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் எதிர்த்தாலும் அந்த விஷயம் ஐ.நா.வினால் மேற்கொள்ளப்பட மாட்டாது.
  உலகத்தின் சமாதானத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் அளப்பரிய சேவையை யாராலும் மறக்க முடியாது. எனினும் ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவல்லரசு நாடுகளின் விருப்பத்திற்கு உட்பட்டவையாக இருக்கிறதே தவிர அப்பாவி
  மக்களை பாதுகாப்பதாகவோ, சிறிய நாடுகளின் இறையாண்மைக்கு உத்திரவாதம் அளிப்பதாகவோ இல்லை என்றகுற்றச்சாட்டு இருந்து வருகிறது.
  எல்லா நாடுகளின் மக்களையும் சமமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா. சபைக்கு உண்டு. இலங்கையில் முள்கம்பி வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழ் மக்களைப் பாதுகாத்து நல்லதோர் தீர்வை வழங்க வேண்டுமென ஐ.நா. தினத்தில் தமிழ் மக்கள் வேண்டி நிற்கிறார்கள்.

  பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை!!

  இது என்ன? தலைப்பே ஒரு மாதிரியா இருக்குதே! என்ற எண்ணம் வரும். விதைத்து உணவு தானியங்களை விளைவிக்க வேண்டிய மனிதனே, இலவசங்களால் திக்குமுக்காடிப் போய், விதைப்பதை (உழைப்பதை) மறந்துவரும் காலகட்டத்தில் பறவைகளாவது விதைப்பதாவது? என்று என் நண்பர் ஒருவர் கேட்டார்.
  ஒரு புதிருடன் உள்ளே செல்வோம். உங்கள் திறமைக்கு உரைகல்!
  பற்கள் இல்லாத மிருகம் எது?
  முட்டையிடும் மிருகம் எது?
  இருகால்கள் மட்டுமே உள்ள மிருகம் எது?
  இயற்கைப் பேரழிவுகளை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் மிருகம் எது?
  இப்போது யோசியுங்கள்…
  எல்லா உயிரினங்களையும் படைத்த இறைநிலை, அவைகளுக்கான அனைத்து வசதிகளையும், வாழ்வாதாரங்களையும் உண்டாக்கிய பின்பேதான் படைத்துள்ளது.
  “எந்தப் பறவையும் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை” என்ற இந்தச் சொற்கள் பைபிளில் உள்ளவை. இதன்பொருளை நாம் விரிவாய் காண்போம்.
  யோசித்து கண்டுபிடித்திருப்பீர்கள். சபாஷ்! சரியாகவே சிந்திக்கிறீர்கள். மேலே கூறப்பட்ட மிருகம் பறவைகள் தான். பறவைகளைப் பற்றி நமக்குத் தெரியாததா?
  தெரியும் தான். மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்வோமே!
  பறவைகளை முட்டையிடும் மிருகம் என்று தான் உலகம் முழுதும் கூறுகின்றனர். இவற்றுக்கு ஐந்தறிவு உள்ளது. தொடு உணர்வு, சுவையுணர்வு, முகரும் திறமை, பார்க்கும் திறன், கேட்கும் சக்தி ஆகியனதான் இந்த ஐந்தறிவு. ஆனால், மிருகங்களுக்கு நான்கு கால்கள் உள்ள நிலையில், பறவைகட்கு முன் கால்கள் இரண்டும் இறக்கைகளாக மாற்றி அமைக்கப்பட்டுவிட்டன.
  பரிணாம வளர்ச்சியில், உணவு தேடுதல், பாதுகாப்பு, இடமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னங்கால்கள் மறைந்து இறக்கைகள் உண்டாக்கப்பட்டன. இருகால்களிலும், ஒற்றைக்காலில் நின்றுகொண்டு, மற்றொரு காலை மடக்கி, இறகுகளுக்குள் வைத்துக்கொள்ளும் பழக்கமும் கொண்டவை இப்பறவையினம்.
  சுமார் 10,000 வகையான பறவைகள் இந்தப் பூமியில் உள்ளன. ஆர்க்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா வரை எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் உயிர் வாழ்கின்றன. சுமார் 2” முதல் 9′ என்ற அளவு வரையிலான பறவைகள் உள்ளன. பறப்பதால் தான் பறவை என்ற பெயர் பெற்றன.
  ஆனால், பறக்காத ஒரு பறவையும் உள்ளது. நியூசிலாந்தில் மோ (Moa) என்ற பெயருள்ள பறவைக்கு இறக்கைகள் இல்லை; பறக்க முடியாது. இறக்கைகள் உள்ள பெங்குயின் போன்றபறவைகளும் பறப்பதில்லை. இந்தப் பெங்குயின் இனத்தில் பெண் பறவை முட்டையிட, ஆண் பறவை அடைகாக்கும் விசித்திரம் நிகழ்கிறது.
  பறவைகளில் புத்திசாலிப்பறவை கிளிகள். நாம் சொல்வதை கவனமாகக் கேட்டு, அதேபோல் சொல்லும் திறமை உள்ளவை. தற்போது கோவை அருகில் சோமனூரில் மைனா ஒன்று மிக அருமையாகப் பேசுவதாய் நாளிதழில் செய்தி வந்துள்ளது. புறாக்கள் முன்பு செய்திகளை எடுத்துச் சென்றன எனப் படித்துள்ளது நினைவுக்கு வரும். நிலத்தில் நடந்தால் பாதை உண்டாகும்; தெரியும். ஆனால், வானத்தில் பறந்தால், வழியே தெரியாதே.
  சரியான திசையில் பறந்து, இலக்கை அடையும் திறமையுள்ளவைதான் புறாக்கள். பல தலைமுறைகளாக இப்பறவையினங்கள் தமது வாழ்க்கை முறையை, அப்படியே தம் சந்ததியினருக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் கொடுத்துவருகின்றன. இதை ஆங்கிலத்தில் “Cultural Transmission of Knowledge”என்று கூறுகின்றனர்.
  இவைகளின் மொழி சப்தம். சிறிது இழுத்து சப்தம் போட்டால், அது பாட்டு. உணவுக்காகவும், முட்டையிடுவதற்காகவும் சில பறவைகள் தம் இடத்தை மாற்றிக்கொள்கின்றன. வருடம் ஒன்றுக்கு சுமார் 64,000 கி.மீ. தூரம் பறந்துசெல்லும் கடல் பறவைகள், நிறுத்தாமல் சுமார் 2500 கி.மீ. தூரம் பறந்து செல்லும் நிலப்பறைவகள், சுமார் 4000 கி.மீ. தூரம் பறந்து செல்லும் கடற்கரைப் பறவைகள் எனப் பல உள்ளன.
  கழுத்தை 1800 பின்புறம் திருப்பி முகத்தை முதுகுப்பக்கம் கொண்டு செல்லும் தன்மை படைத்தவை பறவைகள். வௌவால் உட்பட பல பறவைகள் தலைகீழாகத் தொங்கும் சாதுர்யம் மிக்கவை. மனிதன் தோன்றிய காலம் முதலே மனிதனுக்கு பறவை இனத்துடனான உறவு இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.
  முயற்சி திருவினையாக்கும்
  “Early Bird Catch the Worm”,அதிகாலை எழுந்து பணிகளைத் துவக்கினால் வெற்றி நம்மைத் தேடிவரும். நேர நிர்வாகம் பறவைகளின் சிறப்புத்தன்மை. ஒவ்வொரு நாளையும் பிரித்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.
  “காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
  அன்ன நீரார்க்கே உள” – குறள் 527
  தனக்குக் கிடைத்த உணவை மறைத்து வைத்துத்தானே உண்ணாமல், தன் சுற்றத்தைக் கூவி அழைத்து, பகிர்ந்து உண்ணும். செல்வம் பெற்றவர்களும் இத்தகைய பண்புடையவர்களாகத் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்தனர். நாளைக்கு வேண்டும் என மறைக்காததால் பறவைகள் கவலையில்லாமல் வாழ்கின்றன.
  பிச்சை எடுப்பதில்லை
  எந்தப் பறவையும் உடல் ஊனம், மனநிலை சரியில்லை, இயற்கை பொய்த்துவிட்டது எனப் பிச்சை எடுப்பதில்லை. உடல் ஊனமுற்ற சில பறவைகள் கூடத் தம் உணவைத்தேடி பல இடங்களுக்குச் செல்வதைப் பார்க்கிறோம்.
  சிறுகுஞ்சுகள் தமக்குத் தேவையான உணவைத் தேடிச்செல்லும் வரை, தாய்ப்பறவை, தன் அலகினுள் அவற்றுக்கு உணவை எடுத்துவந்து அன்புடன் அக்கறையாய் கொடுக்கிறது.
  தொடரும்…..

  சாதிக்கலாம் வாங்க

  உச்சிமீது வானிடிந்து
  வீழுகின்ற போதிலும்
  அச்சமில்லை, அச்சமில்லை
  அச்சமென்பது இல்லையே!
  என்ற கவிராஜனின் கந்தக வரிகளுக்கு ஏற்ப உள்ளத்தில் எந்த அச்சமும், பயமும் இன்றி ஜம்மு காஷ்மீரில் ஐ.பி.எஸ்.ஸாகப் பணியாற்றும் அஜிதா பேகம் சுல்தான் தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண்.
  அஜிதா பேகம் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில் தான். இவருடைய அப்பா சுல்தான் கோவையில் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ளார். அஜிதாபேகம் நிர்மலா பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யில் 78 விழுக்காடு மதிப்பெண்களும், பிளஸ் 2 வில் 94 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். பள்ளிப்படிப்பைப் பற்றி அவர் கூறுகையில் “நான் ஸ்கூல் படிக்கும்போது ஆசிரியர்கள் எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்” என்று கேட்கும்போது ‘டாக்டர், இன்ஜினியர்னு பலரும் என்னன்னெவோ சொல்லுவார்கள். அப்போ எனக்கு மட்டும் என்ன சொல்றதுன்னே தெரியாது அந்த அளவுக்கு சின்ன வயதில் என் எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு கனவும் இல்லாமல் தான் இருந்தேன்” என்றார்.
  பின்னர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கோவை அவினாசிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.காம் மற்றும் பி.பி.எம் (Dual Degree) படித்தபோது பல்கலைக்கழ அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர். அப்போதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பற்றியெல்லாம் எந்தக் கனவும் இல்லை என்றவரிடம், பின்னர் எப்படி ஐ.பி.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றீர்கள் என்று கேட்டதற்கு, “பொதுவாக எங்கள் சமுதாயத்தில் பெண்களுக்கு விரைவாக திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். என் வீட்டிலும் அப்படித்தான் எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது என் அம்மாவின் எண்ணம். ஆனால் எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. இதை என் அப்பாவிடம் கூறினேன். அப்பொழுது என் அப்பாவின் நெருங்கிய நண்பர் பேராசிரியர் முத்துக்குமார் அவர்கள் தான் என்னை ஐ.ஏ.எஸ். படிக்க ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனைக்குப் பின்னர் ஐ.ஏ.எஸ். பயிற்சியளிக்கும் பேராசிரியர் கனகராஜ் அவர்களிடம் சேர்ந்தேன். அவர் கொடுத்த பயிற்சிதான் எனக்கு வாழ்க்கையில் நிறையக் கற்றுத்தந்தது. ஒரு இலட்சியத்தை அடைவதற்கான அனைத்து வழிகளிலும் முயன்று அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றவரிடம் தினமும் எப்படிப் படித்தீர்கள் என்று கேட்டதற்கு, “தினமும் 13 மணிநேரம் படிப்பேன். ஒரு இலட்சியத்தில் மட்டும் கவனம் செலுத்தி அதை நோக்கி ஒட்டுமொத்த உழைப்பையும் செலுத்தினால்தான் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து தொடர்ந்து விடாமுயற்சியுடன் படித்தேன். எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெறமுடியும் என்பதே அப்போது நான் கற்ற பாடம். எனக்கு சீனியரான சக்தி பழனி IPS, அவர்களின் உதவியால் புவியியலும், பேராசிரியர் கனகராஜ் அவர்களின் உதவியால் அரசியல் அறிவியல் பாடமும் நன்கு கற்றேன். அவர்களின் உதவியால் பிரிமினரி தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன் விடாப்பிடி உறுதி, கடின முயற்சியுடன் மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று 169 வது இடத்தைப் பிடித்து தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண் என்ற பெருமையைப் பெற்றேன்” என்றவர், ஜம்மு-காஷ்மீரில் போஸ்டிங் போடப்பட்டதைப் பற்றி நினைவு கூறுகையில், “நான் தேர்வு செய்யப்பட்டது ஜம்மு-காஷ்மீர் கேடர். ஐதராபாத்தில் டிரெய்னிங். அங்கு இயக்குனராக இருந்தவர் விஜயகுமார் IPS, இணை இயக்குனராக இருந்தவர் சாஸ்திரி IPS, இவர்கள் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். டிரெயினிங் முடிந்து பணி ஒதுக்கீடு செய்யும்போது தான் எனக்கு ஜம்மு-காஷ்மீர் என்பதை இயக்குனர் கூறினார். கோவையிருந்து காஷ்மீருக்கு பயணம் என்றவுடன் ஒரு அதிர்ச்சி. பின்னர் நான், ‘மோதுங்கள், பயத்துக்கு எதிராக மோதுங்கள்’ என்ற வரியை நினைத்துக் கொண்டேன். அந்த வரிகள் எனக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது என்றவரிடம், எப்படி பயிற்சி இருந்தது என்று கேட்டதற்கு, “நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றபோது பேஸ்கட் பால் பிளேயர். அதனால் எனக்கு அந்தப் பயிற்சிகள் பெரிய அளவில் கடினத் தன்மையாகத் தோன்றவில்லை. தினமும் 4, 5, 6 கி.மீ. என ஓட்டப் பயிற்சி மேற்கொள்வோம். ஒரு சமயம் ஆறரை கி.மீ. மராத்தான் ஓட்டத்தில் மூன்றாவதாக வந்து பரிசு பெற்றேன். பயிற்சியில் நீச்சல், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், பலவிதமான போர்க் கருவிகளைக் கையாளுவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டது” என்றவரிடம், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் எப்படி தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டதற்கு,
  “எல்லா விசயங்களிலும் அப்டேட்டாக இருங்கள். பிரிமினரி தேர்வுக்கு NCERT Book-ஐ படியுங்கள். பின்னர் உங்களுக்கு பிடித்த பாடங்களை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்யுங்கள். மற்றவரின் கட்டாயத்திற்காகவும், எளிமையாக இருக்கிறது என்பதற்காகவும் தேர்வு செய்யாமல் உங்களுக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே தேர்வு செய்யுங்கள். எதை அடைய வேண்டும் என்பதில் தெளிவாக
  இருங்கள். இல்லையென்றால் நீங்கள் எல்லாப் பாதைகளிலும் பயணிக்க முயலுவீர்கள். அது உங்கள் வெற்றியைத் தாமதப்படுத்தும். நன்றாகத் திட்டமிடுங்கள். சிறிதளவும் அதிருந்து விலகாதீர்கள். உங்கள் லட்சியம், திட்டம், முயற்சி, உழைப்பு எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்துங்கள். நம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமையைக் கடைபிடித்தால் நிச்சயம் நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தான்” நேர்முத் தேர்வை எப்படி அணுக வேண்டும் என்று கூறும்போது, “நேர்முகத் தேர்வில் நாம் எப்போதும் உண்மைத் தன்மையுடன் பதிலளிக்க வேண்டும். தெரியாத விசயத்தைப் பற்றி கேட்டால் தெரியாது என்றே பதிலளிக்கலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. நமக்கு முழுமையாகத் தெரியாத விசயத்தில் தெரிந்ததை வைத்து பதிலளிக்க முட்படும்போது அங்கு இருக்கும் அதிகாரிகள் கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் பத்து கேள்விக்குமே பதில் தெரியவில்லை என்றாலும் தெரியாது, தெரியாது என்றே உண்மையைக் கூறுங்கள். சில பேர் தனக்குத் தெரிந்ததை வைத்து பதிலளிக்க முட்பட்டுதான் தோல்வியடைகின்றனர் என்றவர், தற்போது ஏ.எஸ்.பி.யாக ஜம்மு சிட்டி ஈஸ்ட் ஜோன்-ல் பணிபுரிகிறார்.
  சவால்தான் வாழ்க்கையின் அடிப்படை. பெரிதாகக் கனவு காணுங்கள். அதன்பிறகு அந்தக் கனவை நனவாக்குவது எப்படி எனத்திட்டமிட்டு, விடாமுயற்சியோடு கடுமையாகவும், மன உறுதியுடனும் உழைத்தால் உலகில் முடியாதது எதுவுமில்லை. முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை. மீண்டும் சொல்கிறேன் என்னால் முடிந்தது உங்களாலும் நிச்சயம் முடியும்.
  முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வேண்டும். அதில் தோல்வியுற்று அடுத்த முறை முயற்சி செய்வது கூடாது என ஆரம்பத்திலேயே தீர்மானித்துக் கொண்டு, வேகம், ஆர்வம், துடிதுடிப்பு, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் அஜிதா பேகம் ஐ.பி.எஸ். டிரெயினிங்கில் பெஸ்ட் லேடி அத்தலெட்டாக தேர்வு செய்யப்பட்டவர். 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும், குண்டு எரிதல் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியனாகத் தேர்வு செய்யப்பட்டதுடன் best lady outdoor at passing out parade ஆக தேர்வு செய்யப்பட்டு உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்களிடம் பரிசு பெற்றவர்.
  கடின உழைப்பு, உள்ள உறுதி என்ற இறகுகளைக் கொண்டு சாதித்த அஜிதா பேகம் சுல்தான் மேலும் பல சாதனைகளைப் புரிய தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

  நிறுவனர் நினைவுகள்

  அந்த நாள், அய்யாவின் வாழ்வில் ஒரு பொன்னாள்!
  அது எந்த நாள்? அது… 13.11.1985ம் நாள்!
  அந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு?
  அவருடைய திருமண நாளா? … … அல்ல
  அவருக்கு வேலை உயர்வு கிடைத்த நாளா? … … அல்ல
  அவரது குழந்தைகள் பிறந்த நாளா? … … அல்ல
  அவருக்கு பரிசுச்சீட்டில் பணம் கிடைத்துவிட்டதா? … … அல்ல
  பிறகு, அந்நாள் ஏன் அவருக்கு பொன்னாள்?
  … … அன்றுதான், அவரது வாழ்வில் நீண்டகாலக் கனவாகிய ‘டாக்டர்’ பட்டம் நனவாகிய நாள்! பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் படித்து முடிக்க விரும்பும் ‘டாக்டர் பட்டம்’, அவருக்குக் கிடைப்பதற்கு உறுதியான நாள்! அன்று, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
  டாக்டர் பட்டப் படிப்புக்காக 28.2.1978 அன்று பதிவு செய்தார். பணிச்சுமையின் காரணமாக, தனது ஆராய்ச்சிக்குரிய ஆய்வு ஏட்டை 28.8.1985 (சரியாக ஏழரை ஆண்டுக்குப் பிறகு) அன்று தான் சமர்ப்பித்தார். அதன்பிறகு, சரியாக 75 நாட்களிலேயே 13.11.1985 அன்று, அவருக்கு வாய்மொழித் தேர்வு வைத்து, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு தான், வெறும் இல.செ. கந்தசாமி அவர்கள் ‘டாக்டர் இல.செ. கந்தசாமி’யாக ஆனார். ஆசிரியர்கள், மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் சந்தித்து, அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தோம். அகமும், முகமும் மலர அய்யா நன்றி தெரிவித்துக் கொண்டார். அனைவரையும் அனுப்பிவிட்டு, அன்று மாலை நெருக்கமானவர்களை மட்டும் மீண்டும் வரச்சொல்லியிருந்தார். அதிலே, நானும் ஒருவனாகச் சென்றிருந்தேன்.
  “அய்யா, நீங்கள் டாக்டர் பட்டத்தை முடித்தது மிகப் பெரும் சாதனை” என்று சொன்னேன்.
  “உண்மை தான். ஆனால், அதற்குப் பின்னால் பெரும் வேதனை இருக்கிறது” என்றார்.
  “நிச்சயம் இருக்கும். அதற்கான ஆராய்ச்சித் தலைப்பை முடிவு செய்ய வேண்டும்; பல்வேறு பண்டைய நூல்களை ஆராய வேண்டும்; பிறகு தொகுக்க வேண்டும்; அதைப் பொருத்தமுறப் பல்வகைகளாகப் பகுக்க வேண்டும்; அவற்றினை ஆராய்ந்து, புதுக்கொள்கையினை உருவாக்க வேண்டும். இத்தனைக்கும் மேலாக, அதைப் பல்கலைக்கழகம் திருத்தி, தேர்வு வைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இதெல்லாம் வேதனைதான். இதுகூடச் செய்யாமல், எப்படி டாக்டர் பட்டம் கிடைக்கும்?” என்றார், சக பேராசிரியர் ஒருவர்.
  அய்யா, “அதெல்லாம் வேதனை அல்ல. அது கடமையாகும். கடமைகளையெல்லாம் வேதனை என்று ஒருவன் சொன்னால் அது மடமை. நான் சொல்ல வருவது வேறொன்று” என்றார்.
  “அது என்னன்னு தான் எங்ககிட்டே சொல்லுங்க, நாங்க உங்க வேதனையைப் பகிர்ந்துக்கிறோம்” என்றேன் நான்.
  “தமிழ்நாட்டிலே இருக்கின்ற பல்கலைக்கழகங்கள் எனக்கு டாக்டர் பட்டம் தரவில்லை. ஆந்திராவிலே உள்ள திருவேங்கடவன் பல்கலைக்கழகம் தான் தந்தத” என்றார் அய்யா அவர்கள்.
  “அது ஏனுங்க அய்யா? நீங்க பள்ளிக்கூடத்திலே தமிழாசிரியராக வேலை செஞ்சுகிட்டே, பிரைவேட்டா படிச்சு, எம்.ஏ. தேர்விலே, பல்கலைக்கழகத்திலே முதல் மாணவராக (University First Rank Holder) வந்தவராச்சே” உங்களுக்குத் தமிழ்நாட்டுலே கிடைக்கலையா?” என்றேன் நான்.
  “டாக்டர் பட்டம் வாங்கியதே ஒரு வரலாறு என்று சொல்லலாம். ஆமாம். 1971-லேயே சென்னைப் பல்கலைக் கழகத்திலே டாக்டர் பட்ட ஆய்வு செய்ய இடம் கேட்டேன். இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். சொந்தச் செலவிலேயே செய்ய முன்வந்தேன். அதற்கும் இடம் கிடைக்கவில்லை. அதற்குப்பிறகு, 1974ல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில் இடம் கிடைத்தது. அந்த நிலைய இயக்குனர் டாக்டர் சு.வே. சுப்ரமணியம் அவர்கள் தான், எனது ஆய்வுக்காக, ‘தமிழர் வேளாண்மை மரபுகள்’ என்ற தலைப்பை உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், தன் ஆட்சிக்கு உட்பட்ட கல்லூரியில் தான் பணிபுரிய வேண்டும் என்ற விதியைக் காட்டி, சென்னைப் பல்கலைக்கழகம் மீண்டும் அனுமதியை மறுத்துவிட்டது.
  1976ல் மதுரைப் பல்கலைக்கழகத்திலே, ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தில் ஆய்வு செய்ய இடம் கேட்டேன். அங்கேயும் இடம் கிடைக்கவில்லை. அதற்குப்பிறகு, ஆந்திராவில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்திலே, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தனிப்பட்ட (Self Guide)ஆய்வு செய்யும் திட்டம் இருப்பதாகத் தெரிந்து, எழுதிக் கேட்டேன். அப்போதிருந்த தமிழ்த்துறைத் தலைவர் திரு. கு. தாமோதரன் அவர்கள் அனுமதி கொடுத்தார். அது மட்டுமல்ல, என் மீது அன்புகொண்டு எனக்காக, அவர்களே, பதிவுத் தொகையை கடைசிநாளில் செலுத்தி இருந்தார். எனது டாக்டர் பட்டப்படிப்புக்கு அடித்தளம் போட்டவர் அவர்” என்று நா தழுதழுக்கச் சொன்னார் அய்யா. தொடர்ந்தார்… “அதற்குப் பிறகு, வேலையின் காரணமாக, என்னால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. விருப்பமும் குறைந்திருந்தது. அந்த நேரம், பத்தாம் வகுப்புக்கு ஒரு தமிழ்ப்பாடம் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். 1984ல் வெளியான அந்தப்புத்தகத்தில் டாக்டர் பட்டத்தோடு என் பெயரை வெளியிட்டிருந்தார்கள். எந்தக் கூட்டத்துக்குப் போனாலும், என்னை ‘டாக்டர் கந்தசாமி’ என்றே எல்லோரும் அழைத்தார்கள். அது எனக்கு அவமானமாக இருந்தது. அதற்குப்பிறகுதான், டாக்டர் பட்டத்தை முடிக்க வேண்டும் என்று தீவிரமாக இறங்கினேன்.
  திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் பொன். சவுரிராசன் அவர்களும், எனக்கு உற்சாகமூட்டி, உருக்கமாகக் கடிதம் போட்டிருந்தார். எனது வேளாண் பல்கலைக்கழக அலுவலகப் பணிகளை நண்பர் தூசி. தியாகராஜன், பேராசிரியை விசயலக்குமி போன்றவர்கள் பார்த்துக் கொண்டனர். சக பேராசிரியர்களும், மாணவர்களும், அலுவலக உதவியாளர்களும் உதவினார்கள். முழுக் கவனத்தையும் செலுத்தி, முழு மூச்சோடு டாக்டர் பட்ட ஆய்வு ஏட்டை முடித்து, சமர்ப்பித்தேன்” என்று கண்களில் நீர் மல்கக் கூறி முடித்தார்.
  அனைவரது நெஞ்சமும் கனமாகி இருந்தது. அவரது மனச்சுமை குறைவாக இருந்தது. அந்த இறுக்கத்தைத் தளர்த்தும் நோக்கில், “அய்யா, நீங்க டாக்டர் பட்டம் வாங்கிட்டீங்க, எங்களுக்குச் சர்க்கரைப் பொங்கல் தர வேணும்”, என்று சிரித்தபடியே கேட்டேன். அருகிலிருந்த அவரது துணைவியார் கமலம் அம்மா அவர்கள், “உங்களுக்கு அதுதான் பிடிக்கும். நீங்க அதைத்தான் கேட்பீங்கன்னு, அப்பவே தயார் பண்ணிட்டேன்”என்று சொன்னார்கள். சொன்னதோடு, எடுத்துவந்து, எல்லோருக்கும் பரிமாறினார்கள். அந்தக்காட்சி இன்னும் என் நெஞ்சைவிட்டகலாது இருக்கிறது.
  உணவுக்குப் பிறகு மீண்டும் அய்யா தொடர்ந்து, “பல்கலைக் கழகத்திலே முதன்மை பெற்ற மாணவனுக்கு இடம் தராமல், வெறும் விதிமுறைகளைக் கட்டியழுகின்ற தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் நாணி, இனியேனும் இப்படிச் செய்யாமல், தரத்திற்கும், தகுதிக்கும், வாய்ப்பளிக்க வேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
  அது மட்டுமல்ல, ஒரு சிறிய செயலைக்கூட, பெரிதாகக் காட்டித் தம்பட்டம் அடித்துக் கொள்ளுவோர் இருக்கின்றார்கள். ஆனால் அய்யாவின் “தமிழர் வேளாண்மை மரபுகள்” (Agricultural Heritage of Tamils) என்ற ஆய்வை, பல்வேறு அறிஞர்கள் பெரிதாக பாராட்டியிருந்தும்கூட, அவர் தன்னடக்கத்தோடு இருந்தார். தனது முகப்புரையில், “எல்லோரும் பாராட்டினாலும், எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப எனது ஆராய்ச்சியை எழுத இயலவில்லை என்ற உண்மையை நாணத்தோடு சொல்லிக் கொள்கிறேன். எதிர்கால ஆய்வாளர்கள் இதிலுள்ள குறைபாடுகளைப் போக்குவார்களாக. எனது ஆராய்ச்சியின் பெருமையினை பழமை உரையாசிரியர்களுக்கும், சங்க இலக்கிய நூல்களுக்கு ஆராய்ச்சிப் பதிப்பினை வெளியிட்டுத் தொண்டு செய்த டாக்டர் உ.வே.சா. அவர்களுக்கும் பகிர்ந்தளித்து என்னை நாணயம் மிக்க மனிதனாக்கிக் கொள்ள விரும்புகிறேன்” என்று எழுதியிருந்தார். தம்பட்டம் அடித்துக் கொள்வோர் மத்தியில், தம்-பட்டம் பற்றி அவர் தன்னடக்கம் மிகுந்து சொன்னதைப் படிக்கும் போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்கிறது.
  அன்று, எல்லோரும் வீடு திரும்பினோம். அந்த வாரம் வெளியான (16.11.1985) ‘ஏர் உழவன்’ இதழில், அவர் சொன்னதையெல்லாம் எழுதி, கட்டுரையாக வெளியிட்டிருந்தார். பின்னாளில், செப்டம்பர் 1987ல் அவரது ஆய்வு நூலை தமிழறிஞர் டாக்டர் ம.ரா.போ. குருசாமி அவர்களின் அணிந்துரையோடு, வெளியிட்டிருந்தார் (அந்நூலில் நன்றியுரையில், இராமனுக்கு உதவிய அணிற்பிள்ளை போன்று அவருக்கு உதவிய எனது பெயரையும் குறிப்பிட்டிருந்தார்). என்னே பெருந்தன்மைÐ இவரது ஆய்வு நூலைப்பற்றிய கருத்துக்களை அடுத்த இதழிலும் சொல்லவிருக்கிறேன்.
  (காத்திருங்கள்…)

  இளைய தலைமுறைக்கான புதிய பார்வை

  பிரிட்டீஷ்காரர்கள் எச்சமாய் விட்டுச்சென்ற சட்டங்களையும், நீதித்துறை கட்டமைப்புகளையும் பெருமையோடு கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கும் நாம் நமக்கென, நம் நாட்டின் சூழலுக்கு தகுந்த சட்டங்களையும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் நமக்குத் தகுந்த பாதுகாப்பு அமைப்புகளையும் மேம்படுத்தாமல் வெளிநாட்டவன் தயவில் காலம் தள்ளுவதால், இப்போது மிகப் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளோம்.
  ஒரு நாட்டைப் பிடிக்க வேண்டுமென்றால், முதலில் அந்நாட்டை நோட்டமிட்டு, எங்கெல்லாம் பாதுகாப்பில் ஓட்டைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்து, மெதுவாக ஊடுறுவி பின் தாக்குதலில் இறங்குவார்கள். இதே முறையில்தான் நம் நாட்டை இப்போது அமெரிக்கா சுற்றி வளைத்துவிட்டது. இதற்காக அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம், இன்டர்நெட்.
  இன்றைய சூழலில் உலகை ஆளுவது இன்டர்நெட் தான் என்பது LKG குழந்தைக்கும் தெரியும். நம் நாட்டின் தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் பணப்பரிவர்த்தனைகள், பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி உட்பட அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளும், வர்த்தகங்களும் இப்போது இன்டர்நெட்டில் தான். இவைதவிர, வாக்காளர் விபரத்திலிருந்து, நில சர்வே எண் வரை, அரசின் பல்வேறு துறைகளைப் பற்றிய முக்கிய தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கின்றன. இப்படி அரசின் செயல்பாடுகள் அனைத்தும், இன்டர்நெட் வடிவத்திற்கு மாறுவதற்குப் பெயர்தான் இ-கவர்னன்ஸ். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த தகவல்களைப் பார்க்க முடியும், சேவைகளைப் பயன்படுத்த முடியும். இதுபோதாதா? திருடனுக்கு வசதியாக ஜன்னல் ஓரம் பீரோவை பூட்டாமல் வைப்பதுபோல நாட்டை முடக்கி விடவேண்டும் என்று களத்தில் இறங்கியிருப்பவர்களுக்கு, ஆன்லைனில் நாம் கதவு திறந்து வைத்திருக்கிறோம்.
  நம் நாட்டின் மிக முக்கிய தகவல்கள் பங்குச்சந்தை பரிவர்த்தனை ஆன்லைன் பேங்கிங் உட்பட அனைத்து ஆன்லைன் சேவைகளை, அமெரிக்காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. நீண்ட காலமாகவே உண்ணிப்பாக கண்காணித்து வருகிறது. நம்மிடம் சரியான சைபர் சட்டங்கள், பாதுகாப்பான கட்டுப்பாடுகள் இல்லாததை சாத்தியமாக்கிக் கொண்டு, என்.எஸ்.சி , பி.எஸ்.சி , நாட்டின் அனைத்து வங்கிகளின் ஆன்லைன் பயனாளர்களின் இரகசிய தகவல்கள் (பாஸ்வேர்ட் உட்பட) மத்திய மற்றும் மாநில அரசுகள் உட்பட அனைத்து துறைகள் பற்றிய முக்கிய தகவல்கள், டிவிட்டர், பேஸ்புக், ஆர்குட் மற்றும் அனைத்து மின்னஞ்சல் வலைத்தளங்களிலும் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவரது முக்கிய தகவல்கள் யாவும், இப்போது சி.ஐ.ஏ வின் விரல் நுனியில்!
  அவர்கள் நினைத்தால், நம் பங்குச்சந்தை பரிவர்த்தனைகளை ஆன்லைனில் அப்படியே நிறுத்த முடியும். இந்தியர்கள் அனைவரது வங்கிக் கணக்குகளை ஆன்லைன் மூலம் முடக்க முடியும். அரசின் ஆன்லைன் செயல்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்ய முடியும். சொல்லப்போனால், சில மணி நேரத்தில் இன்டர்நெட்டில் இந்தியாவின் அனைத்து தகவல்களையும் மொத்தமாக அழித்து விட முடியும். பங்குச்சந்தையில் தொடர்ந்து சில நாட்களுக்கு சிறிய சரிவு ஏற்பட்டாலே நம் பொருளாதாரம் ஆட்டம் காணும் சூழலில்… மேலே குறிப்பிட்ட அனைத்தும் நடந்து விட்டால்?…
  இன்டர்நெட் மூலமாகத்தானே ஊடுருவுகிறார்கள்? நிஜ வாழ்க்கையில் நம் பாக்கெட்டிலிருந்து யாரும் பணத்தை பிடுங்கப் போவதில்லையே என்று அலட்சியமாக இருப்பவர்களுக்கு…
  பங்குச்சந்தைகளை முடக்கினால்… ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கையும் ஆன்லைன் மூலம் முடக்கினால்… இந்தியாவின் நிலைமை சீட்டுக் கட்டு போலச் சரியும். சரிந்தால் மீண்டும் எழவே முடியாது. ஆயுதங்களுடன் நாட்டுக்குள் புகுந்து நம்மை சுட்டுத் தள்ளினாலும், சில நிமிடங்களில் துடித்து அடங்கி மரணிப்போம். ஆனால் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து சோற்றுக்கே வழியில்லாமல் செய்து விட்டால்… பசியால் கொஞ்சம் கொஞ்சமாக செத்து, அண்டை நாடுகளிடம் எதை வேண்டுமானாலும் தாரை வார்ப்போம். இது தான் அவர்களது டார்கெட்.
  இது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். நாம் சுற்றிவளைக்கப்பட்டு விட்டோம். சைபர் போருக்கு அந்நியர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். இது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ அலைவரிசை கையாடல்கள், விளையாட்டுத் துறை ஊழல், என, ஆட்சியாளர்கள் படு பிசியாக இருப்பதால் விபரீதத்தை கண்டும் காணாமல் விட்டிருக்கலாம். அல்லது இந்த விபரீதத்தை கண்டும் காணாமல் விடுவதற்காக கவனிக்கப்பட்டு இருக்கலாம்.
  இந்தியாவைப் போலவே, சீனாவும் பல்வேறு துறைகளில் அமெரிக்க மற்றும் பிரிட்டனை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. ஆனாலும் சீனப் பெருஞ்சுவரைப் போலவே, தங்கள் இ-கவர்னன்ஸ் செயல்பாடுகளுக்கும் கடுமையான சட்டங்களை விதித்து பாதுகாப்பு சுவரை பலப்படுத்தி விட்டது.
  2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி சரியாக நான்கு மணி நேரம் ட்விட்டர் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது. சைபர் இரானியன் ஆர்மி என்ற குழு இந்த வேலையைச் செய்ததாக அறிவிக்கப்பட்டது. நான்கே மணி நேரம் தான். ஆனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இழப்பு பல மில்லியன் டாலர்கள். தாக்குதலுக்குக் காரணம் அமெரிக்க உளவுப் பிரிவுதான் என்று ஆணித்தரமாகக் கூறப்படுகிறது. என்னமாதிரியான ரியாக்ஷன் கிளம்புகிறது என்பதை அறியவே இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இந்நிகழ்வுகளுக்குப்பின் உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பல உஷாராகி, தங்கள் நாட்டின் ஆன்லைன் சட்டங்களைக் கடுமையாக்கி, பாதுகாப்பை அதிகரித்து விட்டன.
  உலகமே சுதாரித்துக்கொண்டபோதும் நாம்…
  எப்போதும் ராணுவம் தடாலடியாக புகுந்து தாக்குதல் நடத்துவார்கள் என்று கூறிவிடமுடியாது. தனது சார்பில் சிலரை அனுப்பி நோட்டம் பார்ப்பார்கள், அவர்கள் மூலம் குழப்பத்தை விளைவிப்பார்கள், மக்களிடம் தவறான தகவல்களை பரப்புவார்கள், இது தான் நம் நாட்டில் இப்போது நடக்கிறது. நம்மை குழப்புவது, தவறான தகவல்களை அளித்து திசை மாற்றுவது ஆகிய பணிகளைச் செய்ய, இந்தியர்கள் அதிகம் நம்பும் கூகுள், விக்கிபீடியா ஆகிய சேவைகள் களமிறக்கப் பட்டிருப்பதாகவும் ஆதாரங்களுடன் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  சிறிய உதாரணம்: கூகுளின் இந்தியத் தளத்தில் (www. google.co.in) “How to” என்று கொடுத்துத் தேடிப்பார்க்கவும். “How to remove dress” “How to have sex” என்று படங்களுடன் வலைத்தளங்கள் தோன்றும்.
  இதே சொல்லை பிரிட்டனுக்கான கூகுள் தளத்தில் (www. google.co.uk) தேடினால் “How to repair computer” உள்பட ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்யும் வலைத்தளங்களின் பட்டியல் தோன்றும்.
  இது போல இந்திய வலைத்தளத்தில் எந்த வார்த்தையைப் பாதியாக கொடுத்தாலும், செக்ஸ் தொடர்பான விஷயங்கள் தான் நமக்கு முடிவுகளாகக் கிடைக்கும். அதிகமாகப் பார்க்கப்படும் வலைப்பக்கங்கள் தான் முன்னனியில் வரும் என்று கூறினாலும், நம் இளைஞர்களையும், மாணவர்களையும் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே இது போன்ற தேடல் முடிவுகள் திணிக்கப்படுகின்றன.
  இதுபோல விக்கிபீடியாவில் நம் நாட்டைப் பற்றிய முக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் கட்டுரைகளின் ஒவ்வொரு துணைத்தலைப்புகளுக்கும் அருகில் edit என்ற சொல் கொடுத்திருக்கிறார்கள். விக்கிபீடியாவில் இலவசமாக பதிவு செய்து கொண்ட யார் வேண்டுமானாலும் செய்யலாம், தகவல்களை மாற்றலாம், அது எந்த தகவலானாலும் சரி…!
  இது போன்று மாற்றங்கள் செய்யப்பட்டாலோ, கட்டுரைகளில் உண்மை இல்லையென்றாலோ தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கைவிரிக்கிறது. விக்கிபீடியா கட்டுரைகளை இந்தியாவில் மாணவர்கள் தான் அதிக அளவில் படிக்கிறார்கள். அவர்களுக்குத் தவறான தகவல்கள் சென்று சேரும் என்பது நன்றாகத் தெரிந்தும், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விக்கிபீடியா கைவிரிப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இவை சிறிய உதாரணங்கள் தான். இதுபோல ஆன்லைனில் நம்மை மறைமுகமாக கேவலப்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க உளவு நிறுவனங்கள் அரங்கேற்றி வருகின்றன. ஏன் தெரியுமா? அடிமைப்படுத்துதலின் முதல் படி, மட்டம் தட்டி தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவது தான்.
  இந்தியாவில் 80% பேர் விண்டோஸ் பதிப்பைத் தான் பயன்படுத்துகின்றனர். திடீரென, இன்டர்நெட் இணைப்பு வழியாக ஆன்லைன் அப்டேட்கள் என்ற பெயரில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களும் முடக்கப்பட்டால்…..? உருவாக்கி வைத்திருக்கும் முக்கிய தகவல்களை எதில் திறந்து பார்ப்பது இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தாலே, அனைத்து பிரச்சனைகளுக்கும் விடை கண்டுபிடித்து விடலாம். விண்டோஸிற்கு மாற்று லினக்ஸ். பாதுகாப்பாக, உங்கள் வசதிப்படி லினக்ஸை பயன்படுத்தலாம்.
  பாதுகாப்பான மாற்று வேண்டுமென்றால், நிபுணத்துவம் பெற்றவர்கள் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், நம்மிடமிருக்க வேண்டிய தொழில்நுட்ப அறிவுஜீவிகள் அமெரிக்காவின் பாதங்களைக் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி ஆங்கில அறிவிலும் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்பது உலகறியும். எனவே தான் திறமையான, புத்திசாலியான இந்திய தொழில்நுட்ப நிபுணர்களைக் கொத்திக் கொண்டு போகும் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள், எதிர்பார்க்கும் சம்பளத்தை விட பத்து மடங்கு கொடுத்து ஆடம்பர மாயைக்குள் சிக்க வைத்து அடிமையாக்கிக் கொள்கின்றன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்பட, மைக்ரோசாப்டின் தயாரிப்புகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் 40% இந்திய நிபுணர்களின் பங்களிப்பு இருக்கிறது. விண்டோஸ் மட்டுமின்றி, கூகுளின் அனைத்து ஆன்லைன் சேவைகளை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். இவர்கள் தங்களைத் தாண்டி வேறு எங்கும் செல்லக் கூடாது, சுதந்திரமாக சிந்திக்கக் கூடாது என்பதில் அமெரிக்க நிறுவனங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன.
  அமெரிக்க உளவுப் பிரிவின் இந்த செயல்பாட்டை சைபர் படையெடுப்பு என்றே கூறலாம். மிகக் கச்சிதமாக நாம் அவர்களிடம் சிக்கியிருக்கிறோம். நம் வீட்டின் சாவி கிடைத்தும், அவர்கள் ஏன் இன்னும் உள்ளே வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏதோ மிகப் பெரிய திட்டம் இருப்பதால் தான், நம் ஆன்லைன் செயல்பாடுகளைக் கைப்பற்றிய பின்னரும் அமைதியாக உள்ளனர். அனைத்தும் போன பின் குமுறுவதை விட, பாதுகாப்பு நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும். அவர்களிடம் சிக்கிய ஆன்லைன் சொத்துக்களை மீட்க முடியாது. ஆனால் இப்போதே அனைத்து சேவைகளையும் பேக்-அப் எடுத்து, பாதுகாப்பான அரண்களோடு நமக்கான சேவைகளில் பதிவது நல்லது. இவை எல்லாவற்றையும் விட, சைபர் சட்டங்களை உருவாக்கி கடுமையாக்க வேண்டும். மொத்தத்தில் நமக்கான பாதுகாப்பான மின் அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிரி உளவு விமானங்கள் நம் எல்லைக்குள் வரும்போதே கண்டுபிடித்து அழிக்கும் நம் ராணுவத்தைப் போல, ஆன்லைனில் நம் மின் அரசாங்கத்தை அந்நியர்கள் நெருங்கும் போதே இறுக்கிப் பிடிக்கும் சட்டங்கள் வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்ய, நீதித் துறையும், மின் அரசாங்கமும் கைகோர்க்க வேண்டும்.
  அமெரிக்க சேவைகளுக்கு மாற்றாக, நாம் மிகப் பெரிய பாதுகாப்பு அரண்களை உருவாக்க வேண்டும். உருவாக்குவது மிகப் பெரிய வேலை இல்லை. விண்டோஸ், கூகுளை உருவாக்கிய இந்திய நிபுணர்களுக்கு, நம் நாட்டிற்காக பாதுகாப்பான ஆன்லைன் / ஆஃப்லைன் சேவைகளை உருவாக்குவது கடினமா என்ன? அமெரிக்காவில் சுகவாழ்வு, டாலர்களில் சம்பளம், ஹைடெக் வாழ்க்கையைக் காட்டிலும் நம் நாடு மிக முக்கியம் என்பதை ஒவ்வொரு தொழில்நுட்ப நிபுணரும் உணர வேண்டும். போர்க்காலங்களில் வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் சேர்வது போல, அமெரிக்க அடிமை வாழ்க்கையில் சிக்கியிருக்கும் நிபுணர்கள் அந்த மாய வலையிலிருந்து வெளியேறி, நம் நாட்டுக்காக, தொழில்நுட்பங்களை உருவாக்க முன்வரவேண்டும்.
  படித்தவுடன் அமெரிக்க நிறுவனங்களில் உங்கள் புத்திசாலித்தனத்தை விற்கும் முட்டாள்தனத்தை இனியும் தொடராதீர்கள். நிபுணர்களே….. அந்நியர்கள் நுழையாதபடி, அவர்களுக்கு சவால் விடும் தொழில்நுட்ப சேவைகளை உருவாக்கி அதன் மூலம் நம் ஆன்லைன் உலகை பலப்படுத்துங்கள்! இல்லையேல், ஊசலாடும் தாயின் உயிரை காப்பாற்ற தண்ணீர் தராமல், காதலியின் பாதங்களைக் கழுவிய பாவத்துக்கு ஆளாவீர்கள்!…

  உனக்குள்ளே உலகம்

  மனம்போல் வாழ்வு என்பது பெரியோர் வாக்கு. அதாவது – “நமது மனதில் நாம் என்ன நினைக்கிறோமோ அதைப்போலவே நமது வாழ்க்கை அமையும்” என்பது பெரியோர் அனுபவித்து நமக்கு அருளிய கருத்தாகும். நமது மனம் நல்லதாக இருந்தால் நமக்கு நிகழ்பவையெல்லாம் நல்லவையாகவே இருக்கும். அதே நேரத்தில் நமது மனதில் கெட்ட எண்ணங்கள் நிறைந்து காணப்பட்டால் நமது செயல்பாடுகளும் கெட்டதாகவே உருவெடுக்கும் என்பதை தெளிவாக முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
  ஆனால் – சமீபகாலமாக “மனம்போல் வாழ்வு” என்னும் அமுத வாக்கை சில இளம் வயதினர் குறிப்பாக “டீன்ஏஜ்” பருவத்தினர் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். “மனதில் நினைத்ததையெல்லாம் உடனே செயல்படுத்த வேண்டும்” என்று எண்ணி களம் இறங்குகிறார்கள். மனதில் நினைத்த செயல்களை நடைமுறைப்படுத்தும்போது அவர்கள் திருப்தியடைகிறார்கள். ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். அதேவேளையில் தாங்கள் நினைத்த செயல்கள் நிறைவேறவில்லையென்றால் சோகத்தில் தள்ளாடுகிறார்கள். இந்த உலகமே தனக்கு எதிராக இருப்பதுபோல அவர்கள் உணருகிறார்கள். அந்தச் செயல் நிகழாவிட்டால் தங்களுக்குப் பெரிய அவமானம் நிகழ்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்குக்கூட அவர்கள் தானாக முன்வந்து விடுகிறார்கள்.
  “நாம் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும்” என்றஎண்ணம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த எண்ணம் நிறைவேறுவதற்குச் சுற்றுச்சூழல் (Environment) தடையாகவும் இருக்கலாம் என்பதை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.
  கடந்த (ஆகஸ்ட்) மாதம் நடந்த இரண்டு நிகழ்வுகள் இன்றைய மாணவ – மாணவிகளின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி இசக்கிதேவி. சுதந்திர தின கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
  “கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டதால் வகுப்பு ஆசிரியையும், உதவித் தலைமை ஆசிரியையும் என்னைத் திட்டியதுடன் தகாத வார்த்தைகளால் பேசினார்கள். பள்ளி
  வருகைப்பதிவேட்டில் வருகையைப் பதிவு செய்யாமல் ‘ஆப்சென்ட்’ பதிவு செய்தார்கள். இதுகுறித்து ஆசிரியையிடம் கேட்டதால் எனக்கு எதிராக செயல்பட்டார். நான் இயற்பியல் மாதாந்திர தேர்வில் 18 பக்கம் தேர்வு எழுதினேன். இதில் கடைசி 8 பக்கங்கள் நீக்கிவிட்டு 200க்கு 35 மதிப்பெண்கள் பெற்றதாக தந்தார்கள். நான் விடைத்தாளைச் சரிசெய்வதற்குள் அதைப் பிடுங்கிக்கொண்டார்கள்.
  மேலும், எனது வகுப்பு ஆசிரியர் மற்றும் வேதியியல் பாட ஆசிரியையும் சேர்ந்து தொடர்ந்து திட்டியதுடன், மாணவ – மாணவிகள் முன்பு மிக கேவலமாகப் பேசி முட்டிப்போடவும், தரையில் அமர வைத்து அவமானப்படுத்தினார்கள். நான் கடந்த 20 – ந் தேதி காலை பள்ளி வளாகத்தில் மூட்டைபூச்சி மருந்தை தண்ணீருடன் கலந்து மிக மனவேதனையுடன் குடித்து மயங்கிவிட்டேன். இதைத்தொடர்ந்து என்னை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனவே என்னைத் திட்டியதுடன் அவமானப்படுத்தி என்னை தற்கொலைக்குத் தூண்டிய ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
  இப்படி மாணவி இசக்கிதேவி தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்திருக்கிறார்.
  இந்தச் சம்பவம் எதனால் நிகழ்ந்தது? இதற்கு காரணமானவர்கள் யார்? யார்? என்பதைப்பற்றி சற்று விரிவாகச் சிந்திக்கவேண்டும்.
  “எனக்கு தலைவதான் பெரிய நோயாக இருக்கிறது” என்று ஒரு நோயாளி டாக்டரிடம் போனார். அவரைப் பரிசோதித்த டாக்டர் “உங்களுக்கு ‘பிளட் பிரஷர்’ இருக்கிறது. அதுதான் தலைவக்கு காரணம்” என்றார். இங்கு நோயாளி தனக்கு தலைவத்தவுடன் தனது நோய் “தலைவ” என்று முடிவுக்கு வந்துவிட்டார். தனக்கு தோன்றிய “அறிகுறி”(Symptom)யைப்பார்த்து அதுதான் தனது நோய் எனத் தவறாக முடிவு செய்தார். பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என பல்வேறு பரிசோதனைகளை நடத்தி அந்த நோயாளியின் உண்மையான நோய் “பிளட் பிரஷர்” என்று முடிவுக்கு வந்தார் டாக்டர்.
  நோயைக் கண்டுபிடிக்க நோயாளியும் முயற்சி செய்தார். டாக்டரும் முயற்சி செய்தார். உடல் பிரச்சனைகளைப்பற்றி தெளிவாகத் தெரிந்த டாக்டரின் பார்வை இங்கு
  வித்தியாசமானது. ‘தலைவ’ என்னும் அறிகுறிக்கு அடிப்படை காரணமாக அமைந்த ‘பிளட் பிரஷர்’ நோயைச் சரிசெய்துவிட்டால் நிரந்தரமாக தலைவயைப் போக்க முடியும்.
  இதைப்போலத்தான் உண்மையான பிரச்சனையை ஒழுங்காகப் புரிந்துகொண்டால் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிடலாம்.
  பிளஸ் – 2 படிக்கும் மாணவிகள் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தினால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பது வகுப்பு ஆசிரியையின் நம்பிக்கை. படிக்கும்போது கவனம் சிதறினால் எதிர்காலம் சிறப்பாக அமையாது என்பதை உணர்ந்த அனுபவமிக்க ஆசிரியைகள் மாணவிகளைப் படிப்பில் கவனம் செலுத்தசொல் கண்டிப்புடன் நடந்துகொள்வது இயற்கைதான். ஆனால் அதற்காக ஒரு மாணவி விஷம் குடித்து தனது உயிரை போக்கிக்கொள்ள முயன்றது எந்த விதத்தில் நியாயம்? ஆகும். கண்டிப்புடன் இருக்கும் ஆசிரியைதான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுப்பதும், அதற்கு மற்றவர்கள் உதவியாக அமைவதும் புனிதமான ஆசிரியர் தொழிலுக்கே அவமானம் அல்லவா!.
  “மனம்போல நான் நினைத்ததெல்லாம் நடக்கவேண்டும்” என்று இப்போது டீன் ஏஜ் பருவத்தினரில் சிலர் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். தனது மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கும் எவரையும் அவர்கள் மதிப்பதில்லை. பத்து மாதம் சுமந்துபெற்றதனது தாயையும், வாழ்நாள் எல்லாம் சிறப்பாக வாழ பயன்படும் கல்வியை வழங்கிய தந்தையையும்கூட இவர்கள் சிலநேரங்களில் மனம் வருந்தச் செய்துவிடுகிறார்கள். தங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கும் தனது பெற்றோரையும் நண்பர்களையும், உறவினர்களையும் இவர்கள் ஒதுக்கவும் தயாராக இருக்கிறார்கள். “ஏன்?” என்று தன்னை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
  பெற்றோரும், நண்பர்களும், ஊர்க்காரர்களும் வேண்டுமென்றால் இவர்கள் சொல்வதற்கெல்லாம் “ஆமாம்சாமி” போட்டு அத்தனையையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆசிரியர் தொழில் ஈடுபடுவர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை. பெற்றோருக்கு ஒரு மாணவி ஒரே பிள்ளையாக இருக்கலாம். ஆனால் ஒரு வகுப்பில் சுமார் 40 மாணவிகள் இருப்பதால் அவர்களுக்கு 40 பிள்ளைகள் இருப்பதாகவே அர்த்தம். அவர்கள் எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும். சாதி, மதம், பணம் – ஆகிய ஏற்றத்தாழ்வுகள் பாராமல் எல்லோரையும்
  வழிநடத்த வேண்டிய பொறுப்பு (Responsibility) ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மற்றமாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்கும் மாணவ – மாணவிகளை நல்ல ஆசிரியர்கள் சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை மாணவ – மாணவிகள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
  இந்தச் சம்பவத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தது தவறான செயலாகும். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண எத்தனையோ வழிகள் உள்ளது. அதனை விட்டுவிட்டு இப்படி விபரீத முடிவை எடுப்பதற்குக் காரணம் “என் மனம்போல் வாழ்வேன் என்று இளம் வயதிலேயே தீர்மானிப்பதுதான்.
  “தான் நினைத்தது நடக்கவில்லை யென்றால் எந்த முடிவும் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்பதை மற்றவர்களுக்கு உணர்;த்துவதற்காகத்த்தான் இப்படி செயல்படுகிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?
  இன்னொரு சம்பவம்…
  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த மாணவி புவனேஸ்வரி. தமிழகத்திலுள்ள ஒரு பாடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படித்து வந்தார். புவனேஸ்வரியுடன் படிக்கும் இன்னொரு மாணவி வகுப்புக்கு தாமதமாக வந்தாள். அந்த மாணவியை ஆசிரியை வௌல்யே நிற்கச் சொன்னாராம். அப்போது வகுப்பில்
  உட்கார்ந்திருந்த புவனேஸ்வரி வௌல்யே நின்றமாணவியிடம் ஏதோ சைகை காட்டியதாகவும், இதைக்கவனித்த ஆசிரியை புவனேஸ்வரியையும் வெளியிலேயே நிற்கச் சொன்னாராம். இதற்கு மற்றமாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். இதனால் உருவான வாக்குவாதத்தில் ஆசிரியை பாடம் நடத்தாமல் வௌல்யே சென்றுவிட்டாராம். இதனால் பின்னர் ஆசிரியையிடம் சென்று மன்னிப்பு கேட்டார்களாம் அதற்கு அந்த ஆசிரியை ஒன்றும் சொல்லவில்லையாம். மீண்டும் ஆசிரியையைச் சந்தித்து மன்னிப்பு கேட்டபின்பும் ஆசிரியை ஒன்றும் கூறவில்லையாம். இதனால் அவமானம் அடைந்த புவனேஸ்வரி ‘விறுவிறு’ என்று பாடெக்னிக் கல்லூரியின் மூன்றாவது மாடிக்குச் சென்றார். அங்கே இருந்து அவர் திடீரென்று கீழே குதித்தார். இரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துவந்தார்கள். இதனால் பாடெக்னிக் கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
  மாணவி புவனேஸ்வரியின் இந்த நிலைக்குக் காரணமான ஆசிரியையை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்பது மாணவிகளின் கோரிக்கை. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
  இந்த பாடெக்னிக் மாணவி மாடியிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்ததற்குக் காரணம் என்ன? – “தன்னைக் கட்டுப்படுத்தும்
  எந்தவொரு செயலையும் எப்படியாவது எதிர்ப்பேன். நான் தவறு செய்தாலும் அதை நியாயம் என்று மற்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்வதுதான் அடிப்படைக் காரணமாக அமைகிறது.
  பொதுவாக எதிர்பாராதவைகள் நிகழும்போது வெறுப்பு, அவமானம், எரிச்சல், கோபம் போன்றவைகள் உள்ளத்தில் உருவாகும். இந்த உணர்ச்சிகளையெல்லாம் சிலர் முறையாக வௌல்ப்படுத்தத் தெரியாமல் உள்ளத்திற்குள் அடக்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஒரு பிரஷர் குக்கரில் தேவைக்கு அதிகமான அழுத்தம் தோன்றும்போது அதனை வௌல்ப்படுத்த வால்வு பயன்படுகிறது. இதைப்போலவே அளவுக்கு அதிகமான மன அழுத்தங்கள் உருவாகும்போது அதனை வௌல்ப்படுத்துவதற்கு நல்ல நண்பர்களையும், தோழிகளையும் தேர்ந்தெடுத்து பழக வேண்டும். அதனைத் தவிர்த்துவிட்டு உணர்ச்சிகளை அடக்கி வைத்துக்கொண்டால் இதுபோன்றதற்கொலை முயற்சிகள் தானாகத் தோன்றிவிடும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் இதுபோன்றஎதிர்மறை உணர்வுகளுக்குத் தகுந்த வடிகால்களைத் தேடிக்கொள்வது அவசியம்.
  “கட்டுப்பாடு இல்லாத -ழல் வேண்டும். மனம்போல வாழ வேண்டும்” என எண்ணுவது தவறல்ல. ஆனால் படிக்கின்றகாலத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளெல்லாம் நம்மை நெறிப்படுத்த உதவும் “விதிகள்” என எண்ணவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் நம்மை வீழ்த்தும்”சதிகள்” என எண்ணினால் வேதனைதான் வௌல்ப்படும்.
  ஒரு பூந்தோட்டம் செழிப்பாக இருக்கவேண்டுமென்றால் அதற்கு முறையாக நிலம் கொத்தி, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து, வே அமைத்து கண்காணிக்க வேண்டியது தோட்டக்காரரின் பொறுப்பு அல்லவா! பூந்தோட்டக் காவல் காரர்களாக செயல்படும் ஆசிரியர்கள் சில நேரங்களில் கண்டிப்புடன் கடமைகளை ஆற்றலாம். ஆனால் – அந்தக் கண்டிப்பு பள்ளி, கல்லூரி மாணவிகளை நெறிப்படுத்தவும் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும் செயல் என்பதை மாணவ – மாணவிகள் உணர்ந்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை சிறக்கும்.
  நல்ல மனம் கொண்டவர்களுக்கு நாளும் சிறப்பு உண்டாகும்.

  நினைத்ததை அடைய

  இந்த உலகில் மனிதன் தனது அறிவைக் கொண்டு எவ்வளவு பெரிய விசயங்களை எல்லாம் கண்டு பிடித்து விட்டான். ஆனால் அவனால் அவனை திருப்தி படுத்தி கொள்ளவோ தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவோ முடியவில்லை. உதரணமாக உலகில் எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன. நாடுகள் சண்டையிட்டு கொல்கின்றன. நாடு மக்களை கொல்கிறது. ஏன் தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் பல பேர் உள்ளார்கள். ஏழை மேலும் ஏழை ஆகிக்கொண்டே இருகிறார்கள். வியாதிகள் மேலும் பெருகிகொண்டே இருகின்றன. இவை எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா? இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? நாம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது. ஆனால் நம்மால் நம்மை சரி செய்து கொண்டால் நம் ஒருவர் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை கொடுக்க முடியும். இதே போல் எல்லோரும் நம்மை சரி செய்து கொண்டால் இந்த நாட்டில் அனைவருக்கும் எல்லாம் கிடைத்து விடும்.
  இந்தக் கட்டுரை இந்தியாவை மாற்றுவதற்காக எழுதப்படுவது அல்ல. ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குத் தேவைப் பட்டதை எவ்வாறு அடைவது என்பதை பற்றித்தான். பொதுவாக எல்லா மனிதனுக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கும். உதாரனமாக ஒருவர் ஐ.அ.ந பரிட்சை எழுதி பாஸ் பண்ண வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு பேர் அதை செய்கிறார்கள். ஏன் செய்ய முடியவில்லை? மனித உறவுகளுக்கு உள்ளே எவ்வளவு முரண்பாடுகள்? மொத்தத்தில் இந்தக் கட்டுரை தங்களது ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
  ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பது விதி. அதன் விளைவாக மனப்போக்கு அதை ஒத்த சூழல்களை கண்டிப்பாக தன்பால் ஈர்க்கும்.
  -சார்லஸ் ஹானால்
  நாம் அனைவரும் ஒரே மஹா சக்தியுடன் தான் இணைந்து செயல்படுகிறோம். ஒரே விதிகள் (சக்தி) தான் எல்லாவற்றையும் வழி நடத்துகின்றன. அதாவது ஈர்ப்பு விதி தான் அந்த ரகசியம்!
  நீங்கள் இப்போது மனதில் என்ன என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் இப்போது நீங்கள் ஈர்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!
  இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விதி நீங்கள் தான் என்று இந்த உலகில் வாழ்ந்து மறைந்த மாபெரும் ஆசான்கள் கூறியுள்ளார்கள். வில்லியம் ஷேக்ஸ் பியர், ராபர்ட் பிரௌனிங், வில்லியம் போன்ற கவிதை மூலமாக இதை கூறி உள்ளார்கள். இன்னும் பல பேர் தங்களது இசை மூலமும், ஓவியங்கள் மூலமும் இதை வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்து மதம், புத்த மதம், யூத மதம், கிருத்துவ மதம். இஸ்லாம் போன்ற மதங்களும் மற்றும் பாபிலோனிய மற்றும் எகிப்து நாகரிகங்களும் இதை வெளிப்படுத்தி உள்ளன.
  உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும், ஒவ்வொரு செயலையும் நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்விதி தான் நிர்ணயிக்கிறது. இந்த ஈர்ப்பு விதியை நடைமுறை படுத்துவது நீங்கள்தான். அதை நீங்கள் உங்களது எண்ணங்கள் மூலமாக செய்கிறீர்கள் .
  சுலபமா சொல்றேன் கேளுங்க…
  உங்களுடைய நண்பர்களை எல்லோரையும் பாருங்கள் நீங்கள் எல்லோரும் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பீர்கள். அதே உங்களுடைய எண்ணத்திற்கு எதிரான எண்ணங்கள் உள்ளவர்களுடன் நீங்கள் நெருங்கி பழக மாட்டீர்கள். அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தவடன் எப்படி இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு கை கொடுத்தார்கள். இங்கே பாருங்கள் அன்னா ஹசாரே -வின் எண்ணமும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருந்த காரணத்தால் சுலபமாக அவர்களை அவரால் ஈர்க்க முடிந்தது. உங்களது வாழ்கையிலும் இந்த ஈர்ப்பு விதியின் தாக்கத்தை உணர்ந்து இருக்க கூடும். உங்களுக்கு நடந்த சோகமான நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் எண்ண ஆரம்பித்தவுடன் அது தொடர்பாக மேலும் சோகமான நினைவுகள் உங்களுக்கு வர ஆரம்பித்திருக்கும். நீங்கள் நீடித்து இருக்கும் ஒரு எண்ணங்களை பற்றி எண்ணும்போது, ஈர்ப்பு விதி உடனடியாக அதனுடன் ஒத்த எண்ணங்களை உங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். அதனால் நீங்கள் மேலும் சோகமாக மாறுகிறீர்கள்.
  நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் விடாபிடியாக பிடித்து கொண்டிருப்பதோடு, அவை குறித்த முழுமையான தெளிவையும் நம் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது நீங்கள் எதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுவீர்கள்.
  நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய் – சுவாமி விவேகனந்தர்.
  இன்றைய உங்களது வாழ்க்கை உங்களது கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே. அதில் நல்லவையும் அடங்கும் கெட்டவையும் அடங்கும். நீங்கள் அதிகமாக யோசிக்கும் விசயங்களை உங்களின் பக்கம் ஈர்ப்பதால் உங்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணத்தின் ஆக்கிரமிப்பு அடங்கியுள்ளது என்பதை நீங்களே உணரலாம்.
  உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்.
  -பாப் பிராக்டர்
  உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால், உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால், கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி.
  எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை. நாம்மால் எண்ணத்தை அளவிட முடியும். நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும். நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும். பெரிய வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும். நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும்போது, நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கறீர்கள். எண்ணங்கள் அந்த காந்த சமிக்கைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இணையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன.
  எண்ணங்கள் காந்த சக்தி உடையவை. நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன. அவை அதே அலைவரிசையில் உள்ள அனைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன. பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும் அந்த மூலம் தான் நீங்கள்.
  உதரணமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம். அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது. அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து ஒளிபரப்பபடுகிறது. நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி.
  இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான். அதாவது சிக்னல்களை வெளியே அனுப்பிக்கொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம். நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது. ஏன் என்றால் நம்மிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும்.
  உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே. உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும்.
  எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள்.
  நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது. பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம். இதை பற்றி இன்னும் விரிவாக அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்…

  புதுமைக்கு விருது!

  ஆசிரியர் பணிக்காகவே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். பொது அறிவு, செயல்திறன், சொல்திறன் போன்ற அனைத்திலும் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துபவர் என்று பன்முகத் தன்மை கொண்ட கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. சு. வேலுசாமி ஆசிரியர் அவர்களுக்கு 2010 – 2011ம் கல்வியாண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கிடைத்திருப்பதை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் பெருமையுடன் வாழ்த்திக் கொண்டாடுகின்றனர்.
  1979ம் ஆண்டு தான் பள்ளிப்படிப்பை படித்த அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தது முதல் 24 வருடங்களாக மாணவர்கள் எதிர்கால சவால்களைச் சந்திக்கத் தயாராவதற்கான தன்னம்பிக்கையையும், கல்வியின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வோடும் வலியுறுத்தி வருகிறேன். 2003ம் ஆண்டில் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று நீலகிரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தது முதல் வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ வேண்டியதன் அவசியத்தையும், கடின உழைப்பின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு உணர்த்தி வருகிறேன்.
  2006ம் வருடம் சூலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று வந்தபோது மாணவர்களின் வருகைப் பதிவு சதவிகிதம் மிகக் குறைவாகவே இருந்தது. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். பலர் கல்வியை இடைநிறுத்திக் கொண்டனர். இதனை முதலில் மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தேன். பெற்றோரிடமும், மாணவர்களிடமும் கல்வியின் அவசியத்தை விளக்கிச் சொன்னேன். அதற்கு பலன் வெகு விரைவிலேயே கிடைத்தது. எங்கள் பள்ளிக்கு மாணவர்களின் வருகை சதவிகிதமும் அதிகரித்தது. கல்லாமை என்னும் இருளில் மூழ்கிக்கிடக்கும் பெற்றோரின் குழந்தைகளை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருவது என்று யோசித்தபோது தான் இப்பள்ளியை ஒரு முன்மாதிரிப் பள்ளியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் ஏற்பட்டது. அந்த உந்துதல் தான் என்னைத் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வைத்துக்கொண்டிருக்கிறது என்றார்,
  ஆசிரியரிடம் இருந்து நிறைய அறிவைப் பெற்றோம் என்ற உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து மாணவர்களுக்கு பொது அறிவு விஷயங்களையும், நாட்டு நிகழ்வுகளையும், அடிப்படை ஒழுக்கத்தையும் கற்றுத்தந்து, தான் பெற்ற கல்வியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு பணியைத் தொடருபவரிடம் ‘பொதுவாக அறிவியல் பாடம் சிக்கலான பாடம் என்று பரவலான கருத்து உண்டு. அத்தகைய பாடங்களை எப்படி கற்றுத் தருகிறீர்கள்’ என்று கேட்டதற்கு,
  ‘இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு நல்ல வழி தொழில்நுட்பம். இன்டர்நெட், இணையம் போன்ற தொழில்நுட்பங்களை, நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் சிறந்த தரமான கல்வியை, பள்ளியின் அடிப்படை கட்டமைப்பை கிராமப்புற மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற எங்களின் ஆசையை தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். 6ம் வகுப்பு முதல் கணினிக் கல்வியை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். ஏனென்றால், ஆங்கிலமும், கணினியும் எதிர்கால தலைமுறைக்கு மிகவும் அவசியம். குறிப்பாக ஏழை மாணவர்வகளுக்கு இந்த திறன்கள் இருப்பது எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் இதை செயல்படுத்தி வருகிறோம்.
  விளையாட்டுப் பருவத்தில் உள்ள குழந்தைகளின் மனநிலையை புரிந்து எப்படி அவர்களுக்கு ஏற்றவாறு பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறீர்கள் என்ற வினாவிற்கு, ‘அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தே தீரும்’ என்ற விவேகானந்தரின் கூற்றுக்கு ஏற்ப மாணவர்களுக்கு அன்பின் மூலமாக கற்றுக்கொடுக்கிறோம் என்றவர், 10ம் வகுப்பு தேர்வில் மூன்று முறை தோல்விக்குப் பின்னர் தேர்ச்சிபெற்ற ஒரு மாணவனுக்கு 11ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் இடம் கொடுத்து அவனுக்குத் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி என்பது மிக அருகில் என்பதைக் கற்றுத்தந்ததன் பலன் இப்போது அந்த மாணவன் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுகின்றான் என்றார்.
  மாணவர்கள் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற மாலை வகுப்புகளை தினந்தோறும் நடத்துவதுடன் அவர்களுக்கு காபியும், சிற்றுண்டியும் பள்ளியின் சார்பாக கொடுக்கப்படுகிறது. மாதம் ஒருமுறை மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து மாணவர்களின் முன்னேற்றத்தைப் பற்றி விவாதிக்கிறார்.
  சமுதாயத்திற்கும், இளைய தலைமுறையின் வளர்ச்சிக்கும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் முன்னால் மாணவர்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தி பள்ளியின் ஆய்வகத்தை புதுப்பித்தது, அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் 20 வகுப்பறைகளைப் புதிதாக கட்டியது, 65 லட்சம் ரூபாயில் கோவை மாவட்டத்திலேயே ஆடிட்டோரியம் உள்ள முதல் அரசுப்பள்ளி என்ற சாதனையை ஏற்படுத்தியது போன்றவை இவரின் நிர்வாகத் திறமைக்கும், கூட்டு முயற்சிக்கும் உதாரணமாகத் திகழ்கின்றது. வங்கியில் 10 இலட்சம் ரூபாயை வைப்பு நிதியாக வைத்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை ஒவ்வொரு ஆண்டும், சூலூர் ஒன்றிய அரசுப் பள்ளியில் பயின்று முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பரிசளித்து மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்.
  இயல்பான உதாரணங்களோடு, சரளமான மொழி நடையிலும், செயல்முறையிலும் சொல்லித்தரும் திரு. சு. வேலுசாமி ஆசிரியரின் பணி ஆசிரியர்கள் என்பவர் மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

  போர் தொடு

  உன்னுள்ளே அல்லது வெளியே இருக்கும் எதிரிகளை இனங்கண்ட பின்னரும் சும்மாயிருக்கலாமா? உடனே செயல்படுங்கள்.
  உன் நண்பனே உன் எதிரி
  உன் வகுப்பில் உன்னோடு படிக்கும் சில நண்பர்கள் – உன்னைப் புகைக்க அழைப்பார்கள். இப்போது சொல் அவர்கள் உன் எதிரிகள் தானே?
  இவர்களில் சிலர் மனதளவில் ஆர்வத்தைக் குலைப்பார்கள். இரண்டு மடங்கு ஆர்வத்தோடு படிப்பது தான் நீ இவர்களுக்குக் கொடுக்கும் பதிலடியாகும்.
  சிலர் வகுப்புக்கு அல்லது பள்ளிக்கு வெளியே சண்டைக்கு இழுப்பார்கள். இவரோடு நேரடியாக மோதாதே. பழிக்குப் பழி என்றபோக்குத் தவறானது. என் கண்ணைக் குத்தினான். எனவே அவன் கண்ணைக் குத்தினேன் என்று இருவரும் குருடாகலாமா?
  தாக்க வந்தால் பொறுமையாயிரு. உடனே தலைமையாசிரியரிடம் சொல். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒருபோதும் சட்டத்தை நீ கையில் எடுக்காதே.
  கழுத்தைப் பிடித்து நெருக்கினால் பொறுமையாய் இருக்காதே. திருப்பித்தாக்கு. நமது உயிரை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான உரிமை (Right of Private Defense) நமக்குள்ளளது.
  எனக்கும் இப்படிப் பட்ட நண்பர்கள் இருந்தார்கள். கொஞ்சம் சண்டையும் போட்டேன். பிறகு ஞானோதயம் வந்தது. அவர்களை ஒதுக்கி விட்டு, படிப்பில் இரண்டு மடங்குஆர்வம் காட்டினேன். அவர்கள் இன்றும் சிட்டுக் குருவிகளாக – ஆட்டோ ஓட்டுநராக, ஆட்டோ பழுதுநீக்குபவர்களாக இருக்கிறார்கள். நான் மேகங்களின் மேலே பறக்கும் பருந்தாக – காவல்துறை உயர் அதிகாரியாக வலம் வருகிறேன். இப்போது அவர்கள் என்னிடம் உதவி கேட்டு வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நான்தான் அவர்களுடைய சிறந்த நண்பன் என இப்போது சொல்கிறார்கள்.
  எனவே தீய நண்பர்களோடு சேராதே. அவர்களுடைய சொல்லுக்கு செவி சாய்க்க வேண்டாம். அவர்களைப் பழிதீர்த்துக் கொள்ள ஒரே வழி – இரு மடங்கு வெறித்தனத்தோடு படிப்பது தான். இதுதான் நான் சென்றவழி, உனக்கு சொல்லும் வழி; எதிரிகளை வெல்லும் வழி.
  உனக்குள்ளே எத்தனை எதிரிகள்
  உனக்குள்ளேயே இருக்கும் எதிரியைச் சமாளிப்பது சற்று கடினம்தான். அதற்கு அதீத துணிச்சலும், மிகுந்த கட்டுப்பாடும் வேண்டும். கூடுதலாக நிறைய சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
  உன் நண்பன் உன்னை புகைப்பிடிக்கச் சொல்கிறான். சரி எனத் தலையாட்டும் முன் – கை நீட்டும் முன், ஒரு கேள்வி கேள்.
  நான் புகைப்பதை என் தாய் விரும்புவாளா? நான் புகைப்பதைப் பார்த்தால் ஏற்றுக் கொள்வாளா?
  தாய் விரும்பாத ஒன்றை, நீயும் விரும்பாதே, விட்டொழி. ஒரு எதிரியை வீழ்த்தியாயிற்று.
  முதல் மதிப்பெண் பெறுகிறான் உன் நண்பன். அவனைப் பார்த்து உனக்கேன் பொறாமை? அவன் முதல் மதிப்பெண் பெற விலையாகக் கொடுத்தது அவனது வியர்வை. அதை உணராமல், பொறாமைப்படுவது, அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது காலவிரயம். அவனைப் போல் நானும் உழைப்பேன். மதிப்பெண் பெறுவேன் என்று எண்ணி பொறாமை என்னும் எதிரியை வீழ்த்து.
  உன் செயல்பாட்டுக்கு உன் உடலே தடையாக இருக்கலாமா? கூடுதல் எடையா? கூடுதல் விழிப்புணர்வு தேவை.
  ‘ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கு’ என்று கூறினர் நம் முன்னோர். உண்பதைக் குறை ஆனால் மனதில் உறுதி வேண்டும். வருத்த வேர்க் கடலையைக் கைநிறைய கொடுத்தாலும் ஒன்றை மட்டும் கொரித்து விட்டுப் போதும் எனச் சொல்லும்
  மன உறுதி வேண்டும்.
  பீசா, பர்கர் போன்றவற்றை உண்பதை நீக்கி, காய்களையும் கனிகளையும் உண்டால், பாரதியார் விரும்பியவாறு வாள் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல் கிடைக்குமே.
  தினமும் உடற்பயிற்சி செய்க. அல்லது வாரத்தில் மூன்று நாள்களாவது ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் என்பதை வழக்கப்படுத்திக் கொள். எடை குறைந்து, நடையில் மிடுக்கு ஏற்படும். தோற்றப் பொலிவு உண்டாகும். உனக்குள் நம்பிக்கையும் உற்சாகமும் ஒருசேர ஊற்றெடுக்கும். மிதமான உணவும் முறையான உடற்பயிற்சியும் மருத்துவ செலவைப் பாதியாய் குறைக்கும். ஆம். உடற்பயிற்சி ஒரு தவம். அதன் பயன் உடல் நலம் என்னும் வரம்.
  இந்த நல்ல செய்தியை உன் பெற்றோருக்கும் சொல்.
  நம் அக எதிரிகள் மற்றும் புற எதிரிகளுக்கான போரை நிறுத்தவே கூடாது. வாழும் வரை இப்போரைத் தொடருவோம்.
  சர்.சி.வி. இராமன் (1888 – 1970)
  சர் சந்திரசேகர வெங்கட்ராமன் திருச்சியில் பிறந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வளர்ந்தார். தந்தையார் ஒரு பேராசிரியர் என்பதால், இராமனின் கல்விச்சூழல் நன்றாக இருந்தது.
  சென்னை மாநிலக் கல்லூரியில் 1905-ம் ஆண்டு இயற்பியல் தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டம் பெற்றார். 1907ல் சிறப்புத் தேர்ச்சியுடன் கூடிய முதுநிலைப் பட்டம் வென்றார். சிறிது காலம் அரசுத்துறை நிதிக் கணக்காயராக இருந்து விட்டு, 1917ல் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். கற்பித்தல் பணியோடு ஆய்வுப் பணியையும் மேற்கொண்ட இராமன், 1928ல் ஒளி விலகலை ஆராய்ந்து இராமன் விளைவு என்னும் புதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். தொடர்ந்து ஆய்வு செய்து 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். வெள்ளையரல்லாத ஒருவர் அறிவியல் நோபல் பரிசு பெற்றார் என்னும் பெருமை அவருக்கே உரித்தாயிற்று. பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் ஆனார்.
  இவருடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு கூர்கிறார்.
  26.01.1954 அன்று உங்களுக்கு இந்திய அரசு மிக உயரிய பாரத ரத்னா விருதை வழங்க உள்ளது. முன்னதாகவே வந்து என் விருந்தினராக தங்க வேண்டும் – இப்படி ஒரு மடல் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்களிடமிருந்து வந்தபோது, இராமன் அவர்கள் பணிவோடு மறுமொழி விடுத்தார்.
  மன்னிக்க வேண்டும். என்னுடைய மாணவர் ஒருவர் பிஎச்.டி. ஆய்வேட்டை என் வழிகாட்டல் முடிக்கும் தருவாயில் உள்ளார். உடனிருந்து அவருக்கு உதவ வேண்டிய நிலையில் உள்ளேன். எனவே உங்கள் விருந்தோம்பலை ஏற்க முடியாத நிலை.
  விருது வழங்கும் விழா அன்று தான் டெல் சென்றார். விருது பெற்றகையோடு பெங்களூருக்கு விரைந்தார். குறிப்பிட்ட நாளில் தன் மாணவர் பிஎச்.டி. ஆய்வேட்டை சமர்ப்பிக்க உதவினார்.
  விழா விருந்து முதயவற்றை விட கடமைதான் முக்கியம் என்று கருதினார். இந்த உணர்வுமிக்க ஆசிரியப்படை உருவானால், ஆயிரமாயிரம் அறிவியல் மேதைகளை, கண்டுபிடிப்பாளர்களை இன்றும் நம் நாட்டில் உருவாக்க முடியும்.
  இப்போது புரிகிறதா? இந்தக் கடமை உணர்வு யாருக்கு வரும்? தமக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள எதிரிகளை வென்றவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும் – இது சத்தியமாகும்.
  முனைவர் சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அவர்களின் ஆர்ஹ்ள் ஹய்க் எண்ழ்ப்ள் ” Boys and Girls “Be Ambitions”” ஆங்கில நூலிலிருந்து தமிழாக்கம் முனைவர் “இனியன்’
  திரு. கோவிந்தராஜூ