Home » Articles » மனநிலை மேலாண்மை

 
மனநிலை மேலாண்மை


அருள் க
Author:

டாக்டர் க. அருள் எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி.
முதல்வர், ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை

சுய முன்னேற்றத் திட்டம்:
சுய முன்னேற்றத்துக்காக வகுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நடைமுறையில் சாத்தியமாக இருக்க வேண்டும். அதேபோல், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைக் கொண்டு நிறைவேறும் வகையில் திட்டமிடுதல் அவசியம். சுய முன்னேற்றத் திட்டங்களைத் தீட்டினால் மட்டும் போதாது. அவற்றை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வெற்றியை அடைவதற்குக் கட்டாயம் மன உறுதியுடன் செயல்பட வேண்டும். ஒருவன் தன் மனதைச் சுறுசுறுப்புடன் அனைத்து நேரமும் செயல்படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கால வரம்பைத் தழுவிய நல்ல திட்டங்களைத் தீட்டி கடினமான உழைப்பின் துணைகொண்டு அவைகளைச் செய்து முடிப்பவன் வெற்றி வீரனாக உருவெடுப்பான். ஒருபோதும் தன் மனதைத் தூங்க அனுமதிக்கக்கூடாது.
மனதை ஊக்கப்படுத்துதல்:
ஒவ்வொரு மனிதனும் தனக்கு மகிழ்ச்சியும், வலிமையும் உள்ளது என்று எண்ணி முதலில் மனதைச் சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்திக்கொண்டே இருந்தால் போதும். அவனுக்கு அனைத்தும் நல்லவையாக அமையும். ஒருவருடைய மனநிலை சலிப்பு தன்மைக்கு உட்பட்டதாகும். எப்பொழுதும் ஒரே மாதிரியாக செயல்படாது. சலித்துக்கொள்ளும் மனநிலை நம்மில் நிறையப்பேரிடம் இருக்கிறது. இந்த மனநிலையில் செயல்பட்டால் சிறிதும் முன்னேற முடியாது. வாழ்க்கையும் உப்பு சப்பில்லாமல் போய்விடும். சலிப்பு என்ற பாதாளத்திலிருந்து மீள்வதற்குத்தான் நமது மனநிலையை நாமே ஊக்கப்படுத்தி கொள்ளவேண்டும். அன்ற்ர் நன்ஞ்ஞ்ங்ள்ற்ண்ர்ய் என்ற உத்தியின் (நற்ழ்ஹற்ங்ஞ்ஹ்) மூலம் சலிப்பை விரட்டி அடிக்க நமக்கு நாமே உற்சாகத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். “மனமிருந்தால் மார்க்கமுண்டு”.
முடிவெடுக்கும் மனநிலை:
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பல்வேறு முடிவுகள் எடுக்கவேண்டிருக்கிறது. அவ்வாறு முடிவெடுக்கும்பொழுது அவனது மனமானது தடுமாறுகிறது. எடுக்கின்ற முடிவுகள் வெற்றி அல்லது தோல்வியில் முடிகிறது. அதற்கு அடிப்படையாக அமைவது அவனுடைய மனநிலைதான். கோபத்தில் மனநிலை இருக்கும்பொழுது முக்கிய முடிவுகள் தவிர்க்கப்படவேண்டும். மீறி எடுக்கப்படுமானால் அனைத்து முடிவுகளும் தோல்வியில் முடியும். பொரும்பாலானவர்கள் உள்மனம் (Sub Conscious) என்று ஒன்றிருப்பதை உணராமலே வாழ்ந்து வருகிறார்கள். இந்த உள்மனம் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட விழிப்புடன் செயல்பட்டு வரும். ஆர்வத்துடன் தன் இலட்சியத்தை அடைய மிகவும் பாடுபட்டு உழைத்து வருபவனுடைய உள்மனம், அவன் தூங்கும்போது செயல்பட்டு அவன் கண்டு வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை எடுத்துக்காட்டிவிடும்.
மனக்கட்டுப்பாடு:
மனதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது. “ஆயிரம் போரில் வெற்றிபெற்றவனைவிட தன் மனதை வென்றவன்தான் மாபெரும் வீரன்” என்பார்கள். ஒருவன் தன் மனதுக்கு எஜமானனாக இருந்து, தன் விருப்பப்படி தன் மனதை இயங்கச்செய்வதைத்தான் நாம் ‘மனக்கட்டுப்பாடு’ என்று கூறுகிறோம். ஒருவன் தன் மனதினுடைய அடிமையாகவோ அல்லது வேலைக்காரனாகவோ செயல்படக்கூடாது.
மனநிலையை மாற்றிக்கொள்வதன் மூலம் இந்த உலகையே வெல்லமுடியும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. மாறுதலானச் செயல்களைச் செய்வதன் மூலம் நம்முடைய எதிர்மறை மனநிலையை மாற்றலாம். அதனால் மாறுதலானச் செயல்களைச் செய்யும் முறையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஒருவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க மிகமிகத் தேவையானது எதுவென்று தெரியுமா? பணம் என்று கூறினால் அது நீங்கள் இன்னும் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. பணத்தை விட மிக முக்கியமானது ஒன்று இருக்கின்றது. அதுதான் மனம். மனநிலைதான் ஒருவனுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. வாழ்க்கையில் சக்தி வாய்ந்தது பணமல்ல; மனமே.
ஒரு மனிதனின் சிந்தனை எங்கு செலவிடப்படுகிறதோ? அங்கே அறிவு பிறக்கும். சிந்தனை எங்கு சிக்கனம் செய்யப்படுகிறதோ? அங்கே அறியாமை பிறக்கும்.
உங்களுடைய எண்ணங்களைப் போன்று உங்களுடைய குணங்களும் அமையும். நல்ல எண்ணங்களை நினைத்து வருபவன் நல்லவனாக உருவெடுப்பான். மனிதர்களுடைய உள்ளங்களில் கெட்ட எண்ணங்கள் உருவாவதைத் தடுப்பதுதான் கல்வியின் முக்கியமான நோக்கமாக இருக்கவேண்டும். “எண்ணம்போல் வாழ்வு”.
நீங்கள் விவசாயத்தில்; சாதனை நிகழ்த்தத் துடிக்கலாம். திரைஉலகில் நட்சத்திரமாய் ஜொலிக்க விரும்பலாம், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆசைப்படலாம். பணியாற்றுகின்ற துறையில் மேலதிகாரியாக வர விரும்பலாம், ஒரு சிறந்த மக்கள் தலைவராக வரநினைக்கலாம். இவை எல்லாமே உங்களை முன்னோக்கிச் செலுத்துகிற, வெற்றிக்கான மனநிலை அல்லவா. எண்ணுங்கள், உணருங்கள், முயலுங்கள், தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

 

1 Comment

  1. S.Boopathy says:

    மிக அருமையான தொகுப்பு. நான் பல இடங்களில் படித்த விஷயங்களை
    உங்களின் இந்த ஒரே பக்கத்தில் மிக அருமையாக செதுக்கி கொடுத்துள்ளீர்கள் -நன்றி செ.பூபதி(94430-55401),ஈரோடு

Post a Comment


 

 


July 2011

எழுத்துக்கள்
பலம் படைத்தவர் நீங்கள் நம்புங்கள்
சிறகாகும் சருகுகள் …
உனக்குள்ளே உலகம்
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
தெய்வம் நீ என்றுணர்த்திய தெய்வம்
சுவிஸ் வங்கி கருப்புப் பணம்
முகம் ஒரு சைக்கோகிராப் (Psychograph)
சாதனை வாழ்விற்கான சந்தோச வழிமுறைகள் 50
மனநிலை மேலாண்மை
கடவுளின் பரிசு
சளைக்காத மனமே சாதனைக்குச் சரியான துணை
பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !!
மாணவனே… வெற்றி மீது பற்று வை
உள்ளத்தோடு உள்ளம்