Home » Articles » கவிதை

 
கவிதை


நிலா
Author:

மனம் தளரா தன்னம்பிக்கை
பொன்னி பெ. சித்தையன்
தன்னம் பிக்கைக் கொண்டு என்றும்
தளரா முயற்சி எனும்வழி நடந்தால்
உன்முன் இருக்கும் வெற்றி இலக்கும்
உன்னை நோக்கி வந்திடும் உறுதி

கடந்த பாதையில் கல்லும் முள்ளும்
காயம் செய்ததை எண்ணி மயங்கி
நடக்கும் நடையில் தொய்வும் கொண்டு
நனவைக் கனவாய் மாற்றி விடாதே

சிகரம் தொட்டவன் முதலில் டென்சிங்
சிலிர்ப்பைக் கொடுக்கும் பள்ளம் கண்டும்
நிகரிலா சாதனை செய்தும் முடித்தான்
நிலைத்த மனிதரில் ஒருவனும் ஆனான்

கண்டங் கள்பல கண்டது எப்படி?
கால்தடம் நிலவில் பதித்தது எப்படி?
மாண்டும் மடியினும் மனிதன் துணிவால்
மனதில் கொண்ட தன்னம் பிக்கையால்

உன்னுள் இருக்கும் ஆற்றல் உணர்ந்து
உலகம் பயனுற வெளியில் கொணர்ந்து
என்றும் நிலைக்கும் செயட்கள் செய்து
ஏறு போலும் செல்வாய் நிமிர்ந்து

மனிதநேயம் மலரட்டும்
‘கவிச்சுடர்’ அழகுதாசன்
உழைத்தே வாழ்வது சிகரநிலை அதில்
ஊழல் செய்வது நரக நிலை
களைத்திடும் வரையில் உழைத்திடுக என்றும்
கனிபோல் மனிதம் வளர்த்திடுகÐ
ஏழை என்பதை மாற்றிடுவோம் நாம்
எதிலும் உழைப்பைச் சேர்த்திடுவோம்
மறையாம் திருக்குறள் பரப்பிடுவோம் உண்மை
மக்கள் ஆட்சி வரவழைப்போம்
தமிழா தமிழா ஒன்றுபடு நம்பிக்கைத்
தளரவிடாதே ஒன்றுபடுÐ
‘நாடும் மொழியும் இருகண்கள்’ இவற்றை
நாமே மறந்தால் வெறும்புண்கள்
மேடும் பள்ளமும் இல்லாத நம்முள்
மனிதநேயம் மலரட்டும்

சுவடுகள்….
“கவிஞர் நம்பிக்கை” நாகராஜன்
சொல்லு கின்ற பாதை எல்லாம்
சிறந் திருக்க வேண்டும் நாம்
சொல்லு கின்ற வார்த்தை எல்லாம்
சுகம் கொடுக்க வேண்டும்

பள்ளம் மேடு பார்க்கும் நிலை
நமக்கு மட்டும் அல்ல உலகம்
பயன் பெறவும் நலம் பெறவும்
பாதை தெரிந்து செல்ல

தள்ளு கின்ற எண்ணம் தோன்றும்
தள்ளி ஒதுக்க வேண்டும் அதை
வெல்லு கின்ற நல்ல செயலை
விழிகள் பார்க்க வேண்டும்

நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்து
நோகும் மனதை மாற்று இனி
நேர மில்லை நோ வதற்கு
என்ற நிலையைப் போற்று

அலை அடிக்கும் கடலில் படகு
நிலை இல்லாமல் ஆடும் அதை
அடக்கும் துடுப்பு என்பது போல்
அறிவில் ஞானம் தேடுÐ

வந்து வாழ்ந்து மறைந்து போகும்
வாழ்க்கை வாழ்க்கை அல்ல நாம்
நின்று நிறுத்தும் “சுவடுகள்” தான்
நினைவில் நிறைந்து வெல்லும்Ð

 

1 Comment

  1. sabari says:

    ரொம்ப அருமையான கவிதை.. இது எல்லார் வாழ்க்கைக்கும் ஒரு எடுத்துக்காட்டு … என் மனதை ரொம்பவும் ஆழமாய் பாதித்துவிட்டது … இதை எழுதிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி …..

Post a Comment


 

 


June 2011

மு. மேத்தா கவிதை….
கவிதை
உணவும் உடல் நலனும்
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
குழப்பம் தீர வழி
அலட்சியப்படுத்தாதே… இலட்சியப்படுத்து
உனக்குள்ளே உலகம்
மாணவச் செல்வங்களே…
லோக்பால் மசோதா
கல்விக்கடன் என்பது என்ன?
நகரும் நதிகள்
முயன்றேன் வென்றேன்
மனநிலை மேலாண்மை(ATTITUDE MANAGEMENT)
எனக்குப் பேச வராது…?
பெண்களுக்கான வாழ்வியல் நுட்பங்கள்
வெற்றி பெரும் வித்தை இதோ
அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு
மாணவனே… வெற்றி மீது பற்று வை
உள்ளத்தோடு உள்ளம்