– 2011 – May | தன்னம்பிக்கை

Home » 2011 » May (Page 2)

 • Categories

 • Archives

  Follow us on

  ஈரோடு வாசகர்வட்டம்

  ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பாலா சில்க்ஸ், பாலபிரதீப் இணைந்து நடத்தும்சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் :26.6.2011, ஞாயிற்றுக்கிழமை

  நேரம் :மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

  இடம் : மாயா பஜார் A/C ஹால்,
  Opp. E.B. அலுவலகம் எதிரில்,
  E.V.N. ரோடு,
  ஈரோடு.

  தலைப்பு : இனிது இனிது புரிதல் இனிது
  “Inter Personal Skills”

  பயிற்சி அளிப்பவர் :பேராசிரியர் Jc. K.A. அகல்யா, M.A., M.Phil.
  ஆங்கிலத்துறை தலைமை பேராசிரியர்
  வாசவி கல்லூரி மற்றும்
  அகில இந்தியா Jc-ஸ் பயிற்சியாளர்

  தொடர்புக்கு

  Jc. A.K. குப்புசாமி (தலைவர்) – 98432 69931
  நூர்முகம்மது (செயலாளர்) – 99945 00575
  Jc. S. சையது ஜைனலாபுதீன் (பொருளாளர்) – 99942 29080

  உன் கண்ணால் நான் பார்க்கிறேன்-கவிஞர் மு. மேத்தா

  விளக்கேற்றுங்கள்
  வெளிச்சத்தை அறியாத
  என் விழிகளில்

  பார்வையற்ற எனக்குப்
  பரிசளியுங்கள்
  பகலை

  மரணம்
  உங்களுக்குத்தான்
  உங்கள்
  கண்களுக்கல்ல

  பிறருக்குக்
  கண்ணாடியாய் இருப்பதே
  பெருமைக்குரியது.
  நீங்கள் என்
  கண்ணாகவே இருங்களேன்…

  நீங்கள்
  கண் மூடிய பிறகும்
  உங்கள் கண்கள்
  திறந்து கொள்ளட்டும்
  என் முகத்தில்
  இந்த உலகை
  எத்தனைக் காலம் நீங்கள்
  பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்…

  இறந்தபின் கண்களை
  இரவல் தாருங்களேன்…
  நானும் பார்த்து
  நனைகிறேன் இதயம்.

  செத்தும் கொடுத்தவன்
  சீதக்காதி மட்டும் தானா?

  உங்களுக்கும் அந்த
  கௌரவம் தருமே
  கண்தானம்

  நிறுவனர் நினைவுகள்…

  வாக்குகளை விற்காதீர் என்று சொன்ன வாக்காளர் டாக்டர் இல.செ.க.

  அது ஒரு தேர்தல் காலம். சுமார் 25 ஆண்டுகளுக்கு முந்தையது. கோயமுத்தூர் அவினாசி சாலையில் பாப்பம்பட்டி பிரிவுக்கு அருகே ஒரு இலக்கியக் கூட்டத்துக்கு, அய்யாவுடன் நானும் போயிருக்கேன். கூட்டம் தொடங்கும் முன், அங்கிருந்த பொதுமக்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, தேர்தல் நிலவரம் பற்றி, ஏழை மக்களின் கருத்தை அறிய அய்யா விரும்பினார். அன்றாடக் கூலித் தொழிலுக்குச் செல்லும் ஒருவர், “அய்யா, எலக்சன் வந்துச்சுன்னா, எங்களுக்கு நல்ல வருமானமுங்க” என்றார்.

  “அதெப்படி?” என்றார் அய்யா. அவர் அதற்கு, “வேலைக்குப் போறதையே விட்டுருவோம். டெய்லியும் கட்சிப் பிரச்சாரத்துக்குப் போயிருவோமுங்க. வேலைக்குப் போனா கிடைக்கிறகூலியை விட, டபுள்மடங்கு கூலி கெடைக்குமுங்க. சோத்துக்கு வெசனமில்லீங்க. மூனு நேரமும் கறியுஞ்சோறும் போட்டுருவாங்க. பிரியாணி, கூடத் தண்ணியும குடுப்பாங்க. இதுபோக, கூலியை விட ரண்டு பங்கு பணம் குடுத்துருவாங்க. பணம் அப்பிடியே நம்மளுக்கு மிச்சமுங்க. ஊட்டுக்குக் கொண்டு போயிடலாம்” என்றார்.

  அருகிலிருந்த இன்னொரு பெண்மணி, “பொம்பளைகளுக்கு சீலை ஜாக்கெட்டெல்லாம் எடுத்துக் குடுத்துருவாங்க. எங்க கிட்டே, எல்லாக் கட்சிகளோட சீலையும் இருக்குதுங்க. அவுங்க கட்சிக்குப் போனா அந்தக் கலர்ச்சீலை கட்டிக்குவோம். இவுங்க கட்சிக்குப் போனா இந்தக் கலர்ச்சீலை கட்டிக்குவோம். தெனம் ஒரு கட்சிப் பிரச்சாரத்துக்குப் போயிருவோமுங்க. யாரு நெறையப் பணம் குடுக்குறாங்களோ, அவுங்க கட்சிக்குத்தான் ஊர்வலம் போவமுங்க. ஓட்டுப் போடுவமுங்க” என்றார்.

  அய்யா மிகுந்த வருத்தத்தோடு “ஏம்மா உங்களுக்கு ஓட்டுடைய மதிப்பே தெரியலையே. ஒரு ஓட்டு, ஒரு ஆட்சியையே மாத்தும். நமக்கு யாரு நன்மை செய்வாங்களோ, அங்களைத் தேர்ந்தெடுக்கத்தான் ஓட்டு. அது காசுக்கு விக்கறதுக்கில்லே, தெரிஞ்சுக்குங்க” என்றார்.

  அதற்கு அந்தப் பெண்மணி, “அட ஏனுங்க நீங்க? எந்தக் கட்சி ஜெயிச்சு வந்தாலும் நம்மளுக்கு ஒன்னும் செய்யப் போறதில்லே. அவுங்கவுங்க நல்லாச் சம்பாரிச்சுக்கிறாங்க. யாரு வந்தாலும், போனாலும், நம்மளுக்கு வேலைக்குப் போயி, பாடுபட்டாத் தான் சோறு. அதுக்கு, இப்போ குடுக்கறதை வாங்கிக்குபோமே. கெடைச்ச வரைக்கும் லாபந்தானுங்க” என்று நியாயப்படுத்த ஆரம்பித்தார்.

  அதற்குள், இலக்கியக் கூட்டம் தொடங்கும் நேரம் வரவே, ஏற்பாடு செய்திருந்த இளைஞர் மன்றச் செயலாளர் அழைத்தார். அந்தப் பாமர மக்களின் அறியாமை, அய்யாவை வெகுவாகப் பாதித்து விட்டது. தனது உரையின்போது, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது பற்றி, மிகுந்த ஆவேசத்தோடு பேசினார்.

  “இன்றைய அரசியல் தலைவர்கள், சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருப்பது உலகறிந்த உண்மை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்றநோக்கம் இவர்களுக்கு இம்மியளவும் இல்லை. இவர்கள் சிற்சில சமயங்களில் நன்மைகளும் செய்கிறார்களே. அதன் ரகசியம் என்னவென்றால், தாங்கள் பதவியில் நீடித்து இருக்க வேண்டும் என்பதே. தேர்தல் காலங்களில் ஊதிய உயர்வு கொடுப்பது, சாலை வசதி செய்வது, தண்ணீர்க்குழாய் போடுவது, இலவச வேட்டி சேலை தருவது போன்றவை எல்லாம் அழுகின்றகுழந்தைகளுக்கு வாழைப்பழம் தருவது போலவே. இதன் உள்நோக்கம் ஆடுகள் வாழ வேண்டும் என்பதல்ல. ஓநாய்களுக்கு இரை வேண்டும் என்பதுதான். இந்த வகையில், அவர்கள் நம் மக்களை ஆடுகள் நிலையிலேயே வைத்திருக்கிறார்கள்” என்று பொரிந்து தள்ளினார்.

  “மக்கள் அறியாமையிலும் வறுமையிலும் இருந்து மீளவே முடியவில்லை. தங்கள் ‘வாக்கு’ விலைமதிப்பற்றது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஐந்து ரூபாயை விட பத்து ரூபாயாக யார் அதிகம் கொடுக்கிறார்களோ, அவர்கள் பக்கம் சாய்கிறார்கள். இடைத்தேர்தல் என்றால் பணம் மூன்று லக்கத்தில் கூட கிடைப்பது உண்டு. இதுதான் இன்றைய மக்கள் நிலை”.

  “இதற்கெல்லாம் நாட்டுப் பற்றுள்ள இளைஞர்கள் தான் தீர்வு காண முடியும். சிலராவது, தங்கள் சுகதுக்கங்களை உதறி எறிந்துவிட்டு, நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முன் வர வேண்டும். நாட்டு நலம் நாடும் பெற்றோர், வீட்டுக்கு ஒரு பிள்ளையை நாட்டுக்கு நல்க வேண்டும்” என்று இளைஞர்களுக்கு அழைப்பும் விடுத்தார்.

  கூட்டத்தை முடித்துக் கொண்ட பிறகு, பெரும்பாலான மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, தங்களுடைய ஆமோதிப்பை வெளிக்காட்டினர். அதற்கு அய்யா, “இப்பவே அஞ்சுக்கும், பத்துக்கும் ஓட்டை விக்கிறோம். இன்னும் பத்து வருசம் போனா, ஆயிரம் ரண்டாயிரம்னு இதுக்கும் ஏவலை ஏறிப்போகுமுங்க. ஜனநாயக நாட்டுலே, இப்புடி நடக்குதுங்களே என்று ஆதங்கத்தைக் காட்டினார்.

  “அறியாமையும், வறுமையும் இருக்கிறவரைக்கும், இது நடந்து கொண்டே இருக்கும். கடும் சட்டங்களால் தான் இதைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார் அய்யா.

  வீட்டுக்குத் திரும்பினோம். மறுநாள் காலையில், தான் பேசியதை அப்படியே ஒரு கட்டுரையாக எழுதிவிட்டார் அய்யா. அதற்கு, “ஓநாய்களால் வளர்க்கப்படுகின்றன ஆடுகள்” என்று தலைப்பு கொடுத்தார். ‘ஏர் உழவன்’ இதழில் வெளிவந்த இக்கட்டுரை, பின்னாளில் ஏப்ரல் 1987ல் பதிக்கப்பட்ட, ‘சிந்தனை மலடுகள்’ என்றஅவரது நூலில், இரண்டாம் அத்தியாயமாக இடம்பெற்றது. தயவு செய்து வாசகர்கள் அதைப்படித்துப் பார்க்க வேண்டும்.

  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, விலை மதிப்பற்றவாக்குகளை, விலைக்கு விற்கும் போக்கினை எண்ணி, அய்யா அவர்கள் எழுதியதை இன்று நினைவு கூர்கிறேன். இந்திய தேர்தல் கமிசன், கடுமையான சட்டங்களால், அந்த முறைகேட்டைத் தடுப்பதையும் பார்க்கிறோம். இதைப் பார்க்கும்போது,

  “ஆங்கு அமைபு எய்திய கண்ணும் பயமின்றே
  வேந்து அமைவு இல்லாத நாடு”
  – குறள் 740

  பொருள்

  நல்ல ஆட்சித் தலைவன் அமையவில்லையானால், நாடு எல்லா வளங்களும் பெற்றிருந்தாலும் பயன் இல்லை என்றதிருக்குறள் தான் நினைவுக்கு வருகிறது. நம் நாட்டு மக்களின் அறியாமை என்று அகலுமோ? அவர்களை வாட்டும் வறுமை என்று விலகுமோ? பணத்திற்காக, நமது விலைமதிப்பற்றவாக்குகளை விலை பேசும் இழிநிலை என்று ஒழியுமோ? … முடிவு இதுதான். அய்யா அவர்கள் சொன்னதைப் போல, நாட்டுப்பற்றுமிக்க இளைஞர்களும், பெற்றோர்களும், பெண்களும், பொதுமக்களும் துணிவுடன் முன்வந்து, நமது ஜனநாயகத்தைத் தூய்மைப்படுத்துவோம். வாருங்கள்Ð

  இரகசியங்களைக் கசியவிடும் 'விக்கிலீக்ஸ்'

  – ஒரு பார்வை –
  விக்கிலீக்ஸ் (Wikileaks) என்றபெயர் நாடு நகரங்களில் மட்டுமல்லாது பட்டி தொட்டி கிராமங்களிலும் கூட பிரபலமாகி விட்டது, 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம், இலங்கை முள்வேலி முகாமில் தமிழ் மக்களின் அவலம் போன்றவை பற்றி கிராமப்புற மக்களும் பேசுவதற்கு ‘விக்கிலீக்ஸ்’ ஒரு முக்கிய காரணம், ஊடக வரலாற்றில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பது விக்கிலீக்ஸ்.
  விக்கிலீக்ஸ் என்றால் என்ன? என்று கேட்டால் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களைப் போல இதுவும் ஒரு ஊடகம் என்று சொல்லலாம். முக்கிய செய்திகளையும், தகவல்களையும் சாதாரண மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற இன்டர்நெட் ஊடகம் இது. பல்வேறு நாடுகளின் அரசாங்க அமைப்புகள் பல்வேறு விஷயங்களை மூடி மறைக்க எடுக்கும் முயற்சியை முறியடிக்க வந்துள்ள ஒரு இணையதளம். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைத் தன்னகத்தே கொண்டு பல நாடுகளை படாத பாடுபடுத்தி வருவது விக்கிலீக்ஸ்.
  அரசின் ராணுவ ரகசியங்கள், உளவு, புலனாய்வு, போர்கள், தடுப்பு காவல், வர்த்தகம் போன்றபல விஷயங்கள் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. ஏதோ ஒரு காரணத்துக்காக வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட பல தகவல்கள் இதில் இருக்கும். ரகசிய தகவல்களை ரகசியமாக கசிய விடுபவர்கள் பற்றிய எந்தவொரு விபரமும் விக்கிலீக்ஸ் இணையதளமே கூட கண்டுபிடிக்க முடியாத வகையில் தகவல்கள் பெறப்படுகின்றன. அத்தகைய ஒரு கட்டுமானத்தைக் கொண்டது இந்த இணையதளம்.
  அந்த வகையில் உலகை வியப்படையச் செய்த முதல் செய்தி சில ஆண்டுகளுக்கு முன் ‘பென்டகன்’-லிருந்து வந்தது. அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய பாதுகாப்பான பகுதி பென்டகன். ஆனால் அமெரிக்கா வியட்நாமில் நடத்திய அக்கிரமங்கள், அட்டுழியங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தன. அதிர்ச்சியில் உறைந்து போனது அமெரிக்கா.
  அதேபோல இலங்கை முள்வேலி முகாமில் தமிழ் இனமக்கள் இலங்கை ராணுவத்தால் வெறித்தனத்தோடு குத்திக் குதறப்பட்ட கொடுமையான காட்சிகள் உலகின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. இப்படி ஆயிரக்கணக்கான ரகசிய தகவல்களின் கருவூலமாக விளங்குவது இந்த இணையதளம்.
  ஒரு தேசத்தின் நலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டிய பல ரகசியங்கள் அந்த நாட்டு அரசிடம் இருக்கும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அரசின் தவறான மற்றும் சுயநலத்தின் அடிப்படையில் பாமர மக்களை ஏமாற்றும் வகையில் ஆவணங்களை மறைக்கும் போக்கு ஜனநாயக அமைப்புக்கு உகந்தது அல்ல.
  அரசின் ரகசிய ஆவணங்களாகக் கருதப்படும் பல தகவல்கள் விக்கிலீக்ஸ் வலைத்தளத்தில் எப்படி கடுமையான பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி கசிகின்றன என்பது புதிராகவே உள்ளது. இதில் வெளியாகும் தகவல்களின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு தகவலும் அதற்கான உண்மையான ஆதாரத்துடன் அல்லது மூல ஆவணத்துடன் வெளியிடப்படுகின்றது என்பதுதான்.
  இதன் இணையதளத்தின் தொழில் நுட்பத்தை கறுப்புப்பெட்டி தொழில்நுட்பம் என்கிறார்கள். தங்களைப் பற்றிய விவரம் ஒருபோதும் வெளியாகாது என்றஅசைக்க முடியாத நம்பிக்கையில் அரசாங்கத்தாலும், உயர் அதிகாரிகளாலும் மக்களிடமிருந்து மறைக்கப்படும் பல ரகசியங்களையும், ஊழல் குறித்த ஆவணங்களையும் விக்கிலீக்ஸ்-க்கு அளிக்க பலபேர் தாங்களாகவே முன்வருகின்றனர். இவர்களை ‘விசில் ஊதுபவர்கள்’ (Whistle Blowers) என்று அழைக்கிறார்கள்.
  இந்த வலைத்தளத்திற்கு தகவலொன்று கிடைத்ததும் வலையமைப்பில் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் செயல்படத் தொடங்குவர். முதலில் தகவலை ஆராய்ந்து உண்மைத் தன்மையை உறுதி செய்வர். பின்னர் அத்தகவலின் முக்கியத்துவத்தை சமுதாயத்திற்கு உணர்த்தும் வகையில் செய்திக் குறிப்பையும் அதன் உண்மை ஆதாரத்தையும் இணைத்து வெளியிடுவர்.
  விக்கிலீக்ஸ் வலைதளத்திற்கு வருகின்ற மற்றும் வெளியாகின்ற தகவல்கள் உலகெங்கும் இருபதுக்கும் அதிகமான ‘சர்வர்களில்’ பராமரிக்கப்படுவதாலும், நூற்றுக்கணக்கான இணைய முகவரிகளில் செயல்படுவதாலும் வெளியாகும் ரகசிய தகவல்களை சம்பந்தப்பட்ட வர்கள் முயற்சித்தாலும் வலைத்தளத்திலிருந்து அகற்றமுடியாது. ஒட்டு மொத்த இண்டர்நெட் உலகத்தை முடக்கினால் மட்டுமே இது சாத்தியம்.
  விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அஸாஞ் (Julian Assange). ஊடக முன் அனுபவமும், பெரும் துணிச்சலும், சவால்களை சமாளிக்கும் சாமர்த்தியமும் கொண்ட 39 வயதுடைய ஆஸ்திரேலிய நாட்டு குடிமகன் இவர். விக்கிலீக்ஸ்-ன் விதை, வேர், விழுது எல்லாம் இவர்தான். சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் ‘ஒவ்வொரு மனிதனுக்கும் தனது அபிப்ராயத்தையும், கருத்துக்களையும் பதிவு செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும்’ என்று ஒரு வாசகம் இருக்கிறது, அந்த வாசகத்திற்கு விக்கிலீக்ஸ் இணையதளத்தின் வாயிலாக உயிர் கொடுத்திருப்பவர் ஜுலியன் அஸாஞ்.
  சில நேரங்களில் கற்பனைகளை விட உண்மைகள் அதிசயமானதாக இருக்கும். அதுபோல விக்கிலீக்ஸ் வலைதளத்தின் நிறுவனரும் ஒரு அதிசய மனிதர். ஜுலியன் அஸாஞ் சொந்த வீடு கூட இல்லாதவர். நாடுகள்தோறும் சுற்றிக் கொண்டிருப்பவர். நண்பர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் ஆகியோரது வீடுகளில் தங்கிக் கொள்வார். மின்னஞ்சல் முகவரிகளையும், செல்போன் எண்களையும் மாற்றிக்கொண்டே இருப்பார். இவர் எந்த நாட்டில் இருக்கிறார், எங்கு தங்கியிருக்கிறார் என்பது நெருக்கமான வர்களுக்கே கூடத் தெரியாது. இவரை ‘புதிரான மனிதர்’ என்று பத்திரிகைகள் அழைப்பதுண்டு.
  பல நாடுகளின் அரசுகளுக்கு பெரும் தலைவலியாகவும், குடைச்சலாகவும் இருக்கும் இந்த வலைத்தளத்திற்கு நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. ஆனால் பல நாடுகளில் பகுதி நேர ஊழியர்களாக, தன்னார்வ தொண்டர்களாக இருப்பவர்கள் அதிகம். இவர்களில் பெரும்பாலானோர் ஒருவரைப்பற்றி ஒருவர் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாக இருப்பவர் ஜுலியன் அஸாஞ். கம்ப்யூட்டரில் சங்கேத மொழிகளை எழுதுவதிலும், அவிழ்ப்பதிலும் அவர் நிபுணராக இருக்கின்றகாரணத்தால் இத்தகைய வலைத்தளத்தை உருவாக்க முடிந்தது. எல்லாத் தகவல்களும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த வலைத்தளத்தின் கோட்பாடு.

  விக்கிலீக்ஸ் பற்றி சொல்லும் போது ‘விக்கிபீடியா’ என்றபெயரும் நினைவுக்கு வரும், விக்கிபீடியா என்பது ‘என்சைக்ளோபீடியா’ போன்றதொரு இணையதள கலைக்களஞ்சியம். விக்கிபீடியாவை ஒத்த தொழில்நுட்ப முறையைத்தான் விக்கிலீக்ஸ் இணையதளமும் பின்பற்றுகிறது. இது தவிர இந்த இரண்டு இணைய தளத்திற்கும் இடையே வேறு எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் விக்கிபீடியா இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் தகவல்களை மற்றும் மூல ஆவணங்களை மாற்றி அமைக்க முடியும். ஆனால் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அவ்வாறு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
  இந்த இணையதளத்தின் செயல்வேகமும், அது கிளப்பும் புயலும் சர்வாதிகார போக்கு கொண்ட ஜனநாயகவாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. கேட்பாரும், மேய்ப்பாரும் இல்லாமல் சுதந்திரமாக உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தவர்களுக்கு இப்படியொரு கூர்வாள் புறப்பட்டு வந்து தங்கள் வயிற்றைக் கிழிக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
  2008ம் ஆண்டு அமெரிக்க புலனாய்வுத் துறையினர் விக்கிலீக்ஸ் இணைய தளத்தை முற்றிலும் செயலிழக்கச் செய்ய திட்டமிட்டு 32 பக்க புலனாய்வு அறிக்கை ஒன்றை தயாரித்தனர். ஆனால் அந்த அறிக்கையும் விக்கிலீக்ஸ் இணைய தளத்திடம் சிக்கிவிட்டது.
  தகவல் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மனித உயிர், மனித உரிமை, தேசத்தின் சொத்து, நாட்டின் பொருளாதாரம் போன்றவற்றை மனதில் கொண்டு பார்த்தால் இதன் பெருமதிப்பு தெரியும்.
  ஊடகங்களின் வரலாற்றில் புதியோர் அத்தியாயம் படைக்க புயலென புறப்பட்டிருக்கும் இணைதளம் விக்கிலீக்ஸ். கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்தில் எடுத்துக் கூறி சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் நோக்கில் இத்தகைய தகவல்கள் வெளியிடப்படுவதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.
  இதில் வெளியிடப்படும் ஆவணங்களைச் சான்றுகளாக நீதிமன்றத்தில் சமர்பிக்க முடியுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதற்கு இவை துணை நிற்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
  தகவல் பாதுகாப்பு தொழில்நுட்பத்துக்கு விக்கிலீக்ஸ் ஒரு சவாலாக முளைத்துள்ளது, இந்த இணைய தளத்திற்கு தகவல்கள் கசிவதைத் தடுக்க பல புதிய நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. எனினும் சுவையும், சுவாரஸ்யமும் ரகசியமான விஷயங்களில் சற்று அதிகமாகவே இருக்கின்றகாரணத்தால் அவை கசிந்து வருவதை தெரிந்து கொள்வதில் மக்களிடையே வரவேற்பும் மிகுதியாகவே இருக்கின்றது. இந்தப் புதிய ஊடகம் உலகை எங்கே கொண்டு போய் நிறுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  இரகசியங்களைக் கசியவிடும் ‘விக்கிலீக்ஸ்’

  மனம் விட்டுக் கேளுங்கள்

  நாச்சியப்பன் தமிழ்வாணன்

  என்னுடைய பள்ளித்தோழி ஒருத்தி எப்பொழுதுமே தனித்து இருக்க விரும்புகிறாள். சரியாகப் படிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் பயம். இதற்கு என்ன காரணம்? என்ன செய்ய வேண்டும்?
  என். செல்வி, அன்னூர்.
  செல்வி நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அறிகுறிகளை வைத்துப் பார்க்கும் பொழுது, உங்கள் தோழி தாழ்வுமனப்பான்மையால் (Inferiority Complex) பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.
  ‘தாழ்வு மனப்பான்மை’ என்பது தன்னைப் பற்றிய நம்பிக்கையின்மை. ‘தன்னை அறியாத’ நம்பிக்கையற்றவரா உங்கள் தோழி? எதற்கெடுத்தாலும் அச்சம் கொள்பவரா? அடுத்தவரைப் பார்த்து பொறாமைப் படக்கூடியவரா? எப்படியாவது பழி வாங்கிவிட வேண்டும் என்றஎண்ணம் மேலோங்கியவரா? தோல்வியைக் கண்டு துவள்பவரா? ஆம் எனில், உங்கள் தோழியின் உள்ளத்தில் ‘தாழ்வு மனப்பான்மை’ குடிகொண்டு விட்டது என்று உறுதியாகச் சொல்லலாம்.
  சரி, இந்தத் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படையாக எப்படித் தெரிந்து கொள்வது? என்ன அறிகுறிகள்? ஒருவர் பேசும்பொழுது நேரடியாகக் கண்களைப் பார்க்காமல் பேசுகிறாரா? மெதுவாகப் பேசுகிறாரா? பின் இருக்கையில் அமர விரும்புகிறாரா? வேலை எதுவும் செய்யாமல், வேலை செய்பவரைப் பார்த்து ஏக்கப்படுகிறாரா? (பின்னால் நின்று கொண்டு) எந்தவிதமான கேளிக்கையிலும் ஆர்வமின்றி தனிமையை விரும்புகிறாரா?… இவையனைத்தும் ‘தாழ்வு மனப்பான்மை’ என்று நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம் இல்லையா?
  உங்கள் தோழியின் தாழ்வு மனப்பான்மைக்கு அடித்தளமிட்டது குழந்தைப்பருவமாகத்தான் இருக்கும். சரி, இப்பொழுது தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி? “உன்னை நீ அறிந்து கொள்” என்கிறார் உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி பித்தாகோரஸ். இதுவே ஒரு தொடக்கம்; ஒரு விதை. நம்பிக்கை என்ற நல்ல மண்ணில் இதை விதைக்க வேண்டும்; அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, அமைதியான மனநிலை, தன் திறமை அறிதல், இயல்பான மனநிலைக்கு ஒவ்வாத ஆசையை, ஏக்கத்தைத் தவிர்த்தல், குறைகளை அறிதல், சுற்றி எழுப்பப்பட்டுள்ளச் சுவற்றை இடித்தல், தோல்வியைக் கண்டு துவளாமை, தோல்வி, புதிய சிகரத்தின் முதல்படி என்றுணர்தல், நம்மைவிட கஷ்டப்படுபவர்களை நினைத்தல், கலைகளில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளல் எனத் தாழ்வு மனப்பான்மையைப் போக்க பல வழிகள் உண்டு. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று தோழியிடம் எடுத்துச் சொல். தேவையெனில் ஒரு (நல்ல) மன நல ஆலோசகரிடம் சென்று மனம் விட்டுப் பேசலாம். முடிவு உன் தோழியின் கையில்.

  உணவும் உடல் நலனும்

  டாக்டர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி
  முன்னாள் முதல்வர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
  தலைவர், இயற்கை வழி வேளாண்மைச் சான்றிதழ் வழங்கும் இந்தியச்சங்கம்

  இப்பூவுலகில் வாழ்கின்றகோடானு கோடி மக்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் இனம், மதம், சாதி, நிறம், மொழி, உணவு, உடை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் வளமுடனும் நலமுடனும் நோய், நொடியில்லாமல் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றஒரு கோட்பாட்டிலும் கொள்கையாலும் ஒருமித்து உள்ளனர்.
  மக்கள் நலமாக வாழ அவர்கள் சத்துள்ள, சமச்சீர் உணவினை உட்கொள்ள வேண்டும். சமச்சீர் உணவென்பது சரியான விகிதத்தில் மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), புரதச்சத்து (புரோட்டீன்), கொழுப்புச்சத்து (ஃபேட்), தாதுப்பொருட்கள் (மினரல்ஸ்), உயிர்ச்சத்து (வைட்டமின்கள்), நொதிப்பொருட்கள் (என்ஸைம்ஸ்), நார்பொருட்கள் (ஃவைபர்ஸ்) ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். உணவிலுள்ள கலோரி அளவும் சரியான அளவில் இருக்க வேண்டும். அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகிவிடும். “ஒரு வேளை உண்பவன் யோகி; இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி” என்று நம் மூதாதையர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நான்கு வேளைகள் கூட உண்கிறார்கள். அவர்களை “துரோகிகள்” என்று சொன்னால் அது மிகையாது. ஏனென்றால் அவர்கள் மற்றவர்களின் உணவையும் அபகரித்து உண்பவர்களாகிறார்கள்.
  “உணவை மருந்தாக எண்ணி உட்கொள்ளாதவர்கள் மருந்தை உணவாக உட்கொள்ள நேரிடும்”.
  தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நலமாக நோயின்றி வாழ அவர்கள் எவ்வாறு உண்ண வேண்டும் என்பதைப்பற்றி “மருந்து” என்றஅதிகாரத்தில் பத்துக் குறள்களில் மிக விளக்கமாக கூறியுள்ளார். அவற்றில் சில குறள்களாவன:
  மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
  வளிமுதலா எண்ணிய மூன்று
  மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
  அற்றது போற்றி உணின்
  மாறு பாடில்லாத உண்டி மறுத்துண்ணின்
  ஊறு பாடில்லை உயிர்க்கு
  இழிவறந்துண்பான்கண் இன்பம் போல் நிற்கும்
  கழிபேர் இரையாண்கண் நோய்
  மற்றொரு குறளில்,
  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
  சோகாப்பார் சொல்லிழுக்கப் பட்டு”
  என்று நாவை அடக்க வேண்டும்
  என்று குறிப்பிட்டுள்ளார்.
  நாவைக் கட்டுப்படுத்தினால்
  உணவும் கட்டுப்படும் என்பது
  கண்கூடு “பசிக்குப் புசி, ருசிக்குப்
  புசிக்காதேД “லங்கனம் பரம
  ஒளடதம்” “காலமறிந்து உண்” என்பன நம் ஆன்றோர் பழமொழிகள். பட்டினி அல்லது உண்ணா நோன்பு, அல்லது விரதம் உடலுக்கு வலிமை தருபவை. நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்கு உதவி புரியும் ஆற்றல் பெற்றவை.
  காலை உணவை அரச குமாரனைப் போலவும், மதிய உணவை பிரபுவைப் போலவும், இரவு உணவை வறியவனைப் போலவும் உண்ண வேண்டும். எப்பொழுதும் குறித்த நேரத்தில் உணவு உண்ண வேண்டும். காலந்தவறி, நேரந்தவறி உணவு உண்பவர்களுக்குப் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக வயிற்றில் அமிலத்தன்மை, ஈரல் நோய் (Cirrhosis of liver) ஏற்படுவதற்காகக் கண்டறிந்திருக்கிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. மாலையில் 6 அல்லது 7 மணிக்கு உண்கின்றஉணவு செரித்துவிட்ட பின் சுமார் 12 மணிநேரம் ஆகும்பொழுது ஜீரண நீர் சுரந்து வயிற்றில் நிறைந்துள்ள நிலையில் அதற்கு வேண்டிய உணவு இல்லாத பொழுது ஹைட்ரோ குளோரிக் அமிலம் வயிறு, குடல் ஆகிய பகுதிகளில் உள்ள திசுக்களைப் பாதிக்கத் தொடங்குகிறது. அதனால் வயிற்றில், குடலில் அமில நிலை உண்டாகி, அது தொடர்கின்றபொழுது குடல்புண், வயிற்றுப்புண் ஏற்பட்டு நாளடைவில் அது குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோயாக (Cancer) ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
  தற்காலத்துப் பெண்கள் தங்கள் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றஎண்ணத்துடன் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். இப்பழக்கம் மிகவும் ஆபத்தானது. குறிப்பாகப் பெண்கள் தங்களுடைய இளம்வயதில் சரியான அளவில் சத்துணவு உண்ணாத பட்சத்தில் அவர்களுடைய முதுமையில் மிகவும் சிரமப்பட நேரிடும். பெண்களுக்கு மாதாமாதம் ஏற்படுகின்றமாதவிலக்கின் மூலமாகவும், குழந்தைப்பேறு, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துப் பராமரித்தல் போன்றவற்றாலும் உடலிலிருந்து கணிசமான அளவில், புரதம், இரும்புசத்து, கால்சியம், ஆகியவை வெளியேறுகின்றன. இவற்றைநல்ல உணவு உண்பதால் சரி செய்யாவிடில் கால்சியப் பற்றாக்குறைஏற்பட்டு ஞள்ற்ர்ம்ஹப்ஹஸ்ரீண்ஹ, ஞள்ற்ங்ர்ல்ர்ழ்ர்ள்ண்ள் ஆகிய நோய்கள் ஏற்பட்டு எலும்புச் சிதைவு, எலும்பு முறிவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  உணவு உண்பதற்கு முன்பு இறைவனுக்குப் பிரார்த்தனை செய்துவிட்டு, இந்த உணவை அளித்தமைக்காக இறைவனுக்கு மனமார்ந்த நன்றியைச் செலுத்திவிட்டு அதன் பிறகே உணவை உட்கொள்ள வேண்டும். உணவை நமக்காகத் தயாரித்துக் கொடுத்தவர்களுக்கும் நன்றி செலுத்துவது அவசியமாகும். இதனுடைய பலன் என்னவென்றால் உணவு சரியாகச் செரிக்கவும், உணவில் ஏதேனும் பற்றாக்குறைஇருந்தாலும் அதனால் பிரச்சனை எதுவும் ஏற்படாமலும் இருக்க இப்பிரார்த்தனை உதவும். நமக்குத் தெரியாமல் ஐந்து விஷயங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது பிரசவம் ஏற்படும், என்ன குழந்தை பிறக்கும், எப்பொழுது சிறப்பு நேரிடும், அடுத்த வேளை உணவு நமக்கு எங்கே வைத்திருக்கப்படுகிறது என்பவை அவையாகும். நம்முடைய அடுத்த வேளை உணவு எங்கே என்பது ஆண்டவனால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மை.
  உலகில் உள்ள உணவுகளைப்பற்றி ஒரு ஆய்வு செய்த பொழுது வெளிப்படுகின்றஉண்மை என்னவெனில் சமச்சீரான, சத்து மிகுந்த, எளிதில் செரிக்கக்கூடிய உணவு இந்திய உணவு. அதிலும் தென்னிந்திய உணவு. அதிலும் குறிப்பாக தமிழக உணவு என்பதாகும். நமது தமிழகம் பாரம்பரிய உணவு வகைகளை நமக்கு அளித்துள்ள நம்முடைய முன்னோர்களுக்கு நாம் மிக்க நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
  இட்லி ஒரு மிகச்சிறந்த உணவு. அதில் கார்போஹைட்டிற்காக அரிசியும், புரதத்திற்காக உளுத்தம் பருப்பும் சேர்க்கப்பட்டு மாவாக அரைக்கப்பட்டு, இரவோடு இரவாக புளிக்க வைக்கப்படுகிறது. ஈஸ்டும் வேறு சில நொதிப்பொருட்களும் கொண்ட இட்லி ஆவியில் வேக வைக்கப்படுகிறது. இட்லிக்குத் தொட்டுக் கொள்ளப்படும் சட்னியில் பொட்டுக்கடலையும், தேங்காயும், கொத்தமல்லி, மிளகாய் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. தேங்காயிலிருந்து கொஞ்சம் கொழுப்புச் சத்தும், பொட்டுக்கடலையிலிருந்து சிறந்த புரதமும் கிடைக்கின்றன. நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் எதிலும் அயோடின் சத்து இல்லை. தேங்காயில் மட்டும் தான் அயோடின் சத்து உள்ளது. எனவே இட்லியுடன் சட்னி சேர்த்து அல்லது சாம்பார் (அதிலும் பருப்பு உள்ளது – புரதம் சேர்க்கப்படுகிறது) சேர்த்துச் சாப்பிடும்பொழுது அது ஒரு மிகச்சிறந்த சமச்சீர் உணவாகிறது. இட்லி மிக எளிதில் ஜீரணமாகக் கூடியதாகும். உடல் நலக் குறைவானவர்களுக்குக் கூட மருத்துவர்கள் இட்லியைக் கொடுக்கச் சொல்கின்றனர். ஆவியில் வேகவைக்கப்பட்ட புட்டு, கொழுக்கட்டை, சேவை ஆகியவையும் சிறந்த உணவுகளாகும்.
  உடலில் வளர்சிதை மாற்றங்கள் மெடபாலிஸம் (Metabolism) ஏற்படும்பொழுது ஃப்ரீ ரேடிகல்ஸ் (Free radicals) என்றபொருட்கள் உண்டாகின்றன. இவை உடல்நலத்திற்கு மிகுந்த கேடுகளை விளைவிக்கின்றன. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதற்கும் கேன்சர் முதலிய நோய்கள் உண்டாவதற்கும் இவை காரணமாக உள்ளன. இத்தகைய ஃப்ரீ ரேடிகல்ஸ் போவதற்கு அவை வராமல் தடுப்பதற்கு ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் (Antioxidants) என்றகாரணிகள் தேவைப்படுகின்றன.
  அந்தக் காரணிகள் எந்தெந்த உணவுகளில் உள்ளது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்…

  கவிதை

  காற்றும் இங்கே…
  புதுக்காற்று சுவாசித்து நாளாகிவிட்டது
  சுவாசித்தல் கூட சுமையாகிவிட்டது
  சுவாசங்களையே சுவாசித்து சுவாசித்து மனித
  நேசங்கள் கரைந்து போகின்றன.

  சாலைகளை புகைகளின் சாம்ராஜ்ஜியம்
  சொந்தப் படுத்திக் கொண்டது இன்ப
  வேளைகளை இந்த சுயராஜ்ஜியம்
  சேதப்படுத்திக் கொண்டது

  புகையின் நடுவே
  மானுடம் பரிதவிக்கின்றது
  மனிதம் மாசுறுகின்றது

  வாழ்க்கை இங்கே மாறிவிட்டது
  வானம் கூட ஓட்டை விட்டது (ஓசோன்)
  விற்பனை யுகமாய் விரிந்துவிட்டது சொந்தக்
  கற்பனை கூட களவு போனது

  தண்ணீரும் இங்கே தவிக்கின்றது
  குவளைக்குள் அடைபட்டு விலைபோனதே
  இயற்கையும் உள்ளே அடைக்கப்படும் ஒருநாள்
  காற்றும் இங்கே விற்கப்படும்.
  – கோ. மீனாகுமாரி

  வெளியே வா

  உன்னை உனக்குள் தேடு…
  கவிஞர் ஞானசித்தன்
  முட்டைக்குள் அடங்கும்
  குஞ்சுக்கு
  வெளியுலகம் தெரியாது

  கூட்டுக்குள் முடங்கும்
  பறவைக்கு
  உணவு கிடைக்காது

  சிப்பிக்குள் இருக்கும்
  முத்துக்கு
  தன் மதிப்பு தெரியாது
  அதன் சிறப்பை அறியாது

  உறங்கிக் கொண்டே இருந்தால்
  உன்னை உனக்கே பிடிக்காது
  உழைத்துக் கொண்டேயிரு
  உலகிற்கே உன்னை பிடிக்கும்

  இதுவரை
  குடத்திலிட்ட விளக்காய்
  இருந்தது போதும்
  இனியாவது
  குன்றின் மேலிட்ட விளக்காக மாறு.

  எஸ்.டி. சாம், தூத்துக்குடி

  கல்விக்கடன் என்பது என்ன?

  இந்தியாவின் மிகப் பெரிய தேசிய வளம், அதன் இளைஞர்களும் அவர்களுடைய மூளைத் திறனும்தான். ஆகவே, நன்கு படிக்கிறமாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதில் பணப் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக நமது மத்திய அரசாங்கம் ஒரு நல்ல ஏற்பாட்டைச் செய்துள்ளது. 27 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வழியே அவர்கள் கல்விக்கடன் பெற்றுக் கொள்ளலாம்.
  இதற்கென்று நம் அரசாங்கம் வகுத்திருக்கும் நெறிமுறைகள், வழிகாட்டுதலின்படி நிதி நிறுவனங்கள் கல்விக் கடன்களை வழங்குகின்றன. இதுதவிர, ஒவ்வொரு வங்கியும் கடன் பெறுவதற்குச் சில தகுதிகளை வகுத்திருக்கிறது. வட்டி விகிதம், அதனைத் திருப்பிச் செலுத்தும் விதம் போன்றவையும் மாறுபடலாம்.
  எந்த வகைப் படிப்புக்கும் நீங்கள் கல்விக்கடன் பெறலாம். உதாரணமாக, பள்ளி, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, முனைவர் (டாக்டர்) பட்டப்படிப்பு. இந்தியாவில் படிக்கிறவர்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கிறவர்கள் எல்லோருக்கும் கல்விக் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஒரே நிபந்தனை, அந்த மாணவர் நன்கு படிக்கிறவராக இருக்கவேண்டும். அவருடைய குடும்ப நிதி நிலைமை காரணமாகப் படிப்பைத் தொடர்வதற்குக் கடன் தேவைப்படுகிறவராக இருக்க வேண்டும்.
  கல்விக்கடன் உறுதி (அப்ரூவ்) செய்யப்பட்டவுடன், உங்களுடைய நிதி நிறுவனம் உங்களது படிப்பை உறுதி செய்யும். ஆனால் அதன்பிறகு நீங்கள் கஷ்டப்பட்டுப் படிக்கவும், வேலை செய்யவும், கடனைத் திருப்பிச் செலுத்தவும் தயாராக இருக்க வேண்டும்.
  யாருக்கெல்லாம் கல்விக்கடன் வழங்கப்படுகிறது?
  1. நீங்கள் இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும்.
  2. இந்தியாவிலோ வெளிநாட்டிலோ நடைபெறும் ஒரு நுழைவுத்தேர்வு அல்லது அதேபோன்றமுறையின்மூலம் ஒரு குறிப்பிட்ட படிப்பைப் படிக்கத் தேர்வாகி இருக்க வேண்டும்.
  3. நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மதிப்பெண் வாங்கியிருக்க வேண்டும் மற்றும் உதாரணமாக நஇ/நப வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50%, மற்றவர்கள் 60%.
  4. சில வங்கிகளில் வயது வரம்பும் இருக்கலாம். உதாரணமாக, 16 முதல் 28.
  5. சில வங்கிகள் முழு நேரப் படிப்புக்கு மட்டுமே கடன் வழங்குகின்றன. அல்லது சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டுமே கடன் வழங்குகின்றன. உதாரணமாக, கம்ப்யூட்டர் கோர்ஸ்கள்!
  இதற்கு என்ன வயது வரம்பு?
  30 வயது
  நமது கல்விக்கடன் அப்ரூவ் செய்வதற்கு முன்னால் அவர்கள் எந்தெந்த விஷயங்களைக் கவனிக்கிறார்கள்?
  1. நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு
  2. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனம்
  3. உங்களுக்குத் தேவைப்படும் தொகை
  4. இதுவரையிலான உங்களுடைய கல்வித் திறமை
  5. நீங்கள் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி கொண்டவரா? (இதைக் கண்டறிவதற்காக அவர்கள் உங்களிடமும் உங்களுடைய குடும்பத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்)
  6. குடும்பத்தின் வருடாந்திர வருமானம்
  7. குடும்பச் சொத்துகள் போன்றவை
  எந்தெந்தப் படிப்புகளுக்குக் கல்விக்கடன் கிடைக்கும்?
  இந்தியப் படிப்புகள்:
  பள்ளிப் படிப்பு (+2 வரை)
  · பட்டப் படிப்பு: B.A., B.Com. B. Sc., போன்றவை
  · முதுநிலைப் படிப்புகள்: மாஸ்டர் டிகிரி மற்றும் பி.ஹெச்.டி (டாக்டர் / முனைவர்).
  · தொழில்துறைப் படிப்புகள்: பொறியியல் (எஞ்சினியரிங்), விவசாயம், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், பல் மருத்துவம், மேலாண்மை, கணினித்துறை.
  · பல்கலைக்கழகங்கள் அல்லது எலக்ட்ரானிக்ஸ் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நிறுவனங்களில் வழங்கப்படும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்புகள்.
  · IIT, IIM, XLRI, IISc போன்றநிறுவனங்களால் வழங்கப்படும் CA, ICWA, CFA போன்றபடிப்புகள்.
  · தேசிய நிறுவனங்கள் மற்றும் பிறமுக்கியமான தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் படிப்புகள்.
  · சிறந்த வெளிநாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் வழங்கப்படும் படிப்புகள்.
  · அங்கீகாரம் பெற்றகல்வி நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் மாலை நேரப் படிப்புகள்.
  · UGC, AICTE, AIBMS, ICMR போன்றஅரசு சார்ந்த நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் வழங்கும் மற்றபட்டம் அல்லது பட்டயப் படிப்புகள்.
  வெளிநாட்டுப் படிப்புகள்:
  1. லண்டனில் உள்ள CIMA, அமெரிக்காவில் உள்ள CPA போன்றவை வழங்கும் படிப்புகள்.
  2. இளநிலை: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பணி சார்ந்த தொழில்முறை/ தொழில்நுட்பப் படிப்புகள்.
  3. முதுநிலை: MCA, MBA, MS போன்றவை.
  எவ்வளவு கல்விக்கடன் கிடைக்கும்?
  பொதுவாக இந்தியப் படிப்புகளுக்கு ரூ.15 லட்சம் வரையும், வெளிநாட்டுப் படிப்புகளுக்கு ரூ.25 லட்சம் வரையும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
  தபால்வழி / பகுதி நேரப் படிப்புக்குக் கடன் கிடைக்குமா?

  பெரும்பாலான வங்கிகள் பகுதி நேர / தபால்வழிப் படிப்புகளுக்குக் கல்விக்கடன் வழங்குவதில்லை. சில வங்கிகள், சில குறிப்பிட்ட தொழில்முறைப் படிப்புகளுக்குக் கடன் வழங்குகின்றன. ஆனால் உங்களுடைய கல்லூரி, படிப்பு இரண்டும் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய படிப்பு எது என்று தேர்ந்தெடுத்தவுடன் உள்ளூர் வங்கியைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்.
  இந்தக் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்துவது எப்படி, எப்போது?
  நீங்கள் படிப்பை முடிக்கும் வரையில் கல்விக் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை. படிப்பை முடித்த பின்னர் நீங்கள் ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொள்வதற்காக 6 முதல் 12 மாதம் வரை கால அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு கடனைத் திரும்பச் செலுத்தினால் போதுமானது.
  ஒருவேளை நான் என்னுடைய படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டால்? அல்லது குறிப்பிட்ட கால அவகாசத்தில் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காவிட்டால்? அப்போது என்னுடைய கல்விக்கடன் என்ன ஆகும்?
  இந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் உடனடியாகக் கடனைத் திரும்பச் செலுத்தத் தொடங்க வேண்டும். சில நிதி நிறுவனங்கள் நீங்கள் படிப்பை முடிக்கும் வரை காத்திருப்பார்கள். ஆனால் அது மிக அபூர்வமாகவே நடக்கும்.
  படிக்கும்போது என்னுடைய கடன் எந்த வட்டி விகிதத்தில் அதிகரிக்கும்?
  நீங்கள் படிப்பை முடிக்கும் வரை சாதாரண வட்டி விகிதம் தான் கணக்கிடப்படும். அது ஒரு தனிக் கணக்கில் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் விரும்பினால் அந்த வட்டியை மட்டும் திரும்பச் செலுத்தலாம். அல்லது செலுத்தாமலும் இருக்கலாம். உங்களுக்கு வேலை தேடிக்கொள்ள வழங்கப்படும் கால அவகாசம் முடிந்தபிறகு, அந்த வட்டி முழுவதும் அசல் கணக்கில் மாற்றப்படும். அப்போது இந்த மொத்தத் தொகைக்கும் கூட்டு வட்டி கணக்கிடத் தொடங்குவார்கள்.
  சில மாணவர்களுடைய பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.4.5 லட்சத்தைவிடக் குறைவாக இருக்கலாம். அப்போது அவர்கள் பெற்றகடனுக்கு Pause Period (Moratorium) எனப்படும் காலகட்டத்தில் முழு வட்டிச் சலுகை வழங்கப்படும். இந்தத் திட்டம் 2009 & 10ம் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள் இதற்கென்றேமாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைப்புகளிடம் வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டும். அரசாங்கம் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு இதுபற்றித் தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் ஒவ்வொரு மாவட்டம் அல்லது அதற்குக் கீழே உள்ள நிலைகளில் இதற்கான அமைப்புகளை நியமிப்பார்கள். IBAவைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர் வங்கிகளும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருக் கிறார்கள். கல்விக் கடனுக்குக் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்ட வட்டித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான IBA உறுப்பினர் வங்கிகளில் கனரா வங்கி முக்கியப் பங்கு வகிக்கிறது. தகுதி உள்ள மாணவர்கள் அவர்கள் கடன் பெற்றவங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு முறைப்படி விண்ணப்பிக்கலாம். பலன் பெறலாம்.
  வட்டி விகிதம் எவ்வளவு? இதற்கு வருமான வரிச் சலுகை உண்டா? அதை நான் எப்படிப் பெறுவது?
  இது போன்றபல கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்………

  கவிதை

  இமயம் எட்டுந்தூரமேÐ
  துடிப்பை இலட்சியமாய்
  துணிவின் இதயத்துடிப்பில்
  எழுச்சியின் சுவாசத்தை
  எத்திசைக்கும் பரவவிடு

  புலம்பலின் சுவடுகளை
  புரட்டிப் போட்டுவிட்டு
  பூபாளத் தூரிகையால்
  பூமியை ஓவியந்தீட்டு

  அவமானங்களைப் புதைத்து
  வெகுமானங்களின் கல(ச)மாய்
  நம்பிக்கை அகல்விளக்கை
  நாளுமே ஏற்றிடு

  வீழ்ச்சிகளை வீழ்த்தி
  வீறுநடைக் கொடியேந்தி
  விந்தைகளின் வணக்கமுடன்
  விடியல்களின் வளமாக்கு

  சுறுசுறுப்பு சதுரத்தை
  சுகமான முக்கோணமாக்கி
  வசந்த நாற்கரத்தை
  வலிமையின் தோற்றமாக்கு

  உறுதியின் சூத்திரத்தை
  உன்னுள் ஒளியேற்றிடின்
  பாலைவன மணல்கூட
  பசுமையின் ஓவியமே

  – கவிநிலா அருணா