Home » Articles » உணவும் உடல் நலனும்

 
உணவும் உடல் நலனும்


கிருட்டிணமூர்த்தி கே.கே
Author:

டாக்டர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி
முன்னாள் முதல்வர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தலைவர், இயற்கை வழி வேளாண்மைச் சான்றிதழ் வழங்கும் இந்தியச்சங்கம்

இப்பூவுலகில் வாழ்கின்றகோடானு கோடி மக்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் இனம், மதம், சாதி, நிறம், மொழி, உணவு, உடை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் வளமுடனும் நலமுடனும் நோய், நொடியில்லாமல் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றஒரு கோட்பாட்டிலும் கொள்கையாலும் ஒருமித்து உள்ளனர்.
மக்கள் நலமாக வாழ அவர்கள் சத்துள்ள, சமச்சீர் உணவினை உட்கொள்ள வேண்டும். சமச்சீர் உணவென்பது சரியான விகிதத்தில் மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), புரதச்சத்து (புரோட்டீன்), கொழுப்புச்சத்து (ஃபேட்), தாதுப்பொருட்கள் (மினரல்ஸ்), உயிர்ச்சத்து (வைட்டமின்கள்), நொதிப்பொருட்கள் (என்ஸைம்ஸ்), நார்பொருட்கள் (ஃவைபர்ஸ்) ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். உணவிலுள்ள கலோரி அளவும் சரியான அளவில் இருக்க வேண்டும். அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகிவிடும். “ஒரு வேளை உண்பவன் யோகி; இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி” என்று நம் மூதாதையர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நான்கு வேளைகள் கூட உண்கிறார்கள். அவர்களை “துரோகிகள்” என்று சொன்னால் அது மிகையாது. ஏனென்றால் அவர்கள் மற்றவர்களின் உணவையும் அபகரித்து உண்பவர்களாகிறார்கள்.
“உணவை மருந்தாக எண்ணி உட்கொள்ளாதவர்கள் மருந்தை உணவாக உட்கொள்ள நேரிடும்”.
தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நலமாக நோயின்றி வாழ அவர்கள் எவ்வாறு உண்ண வேண்டும் என்பதைப்பற்றி “மருந்து” என்றஅதிகாரத்தில் பத்துக் குறள்களில் மிக விளக்கமாக கூறியுள்ளார். அவற்றில் சில குறள்களாவன:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
மாறு பாடில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறு பாடில்லை உயிர்க்கு
இழிவறந்துண்பான்கண் இன்பம் போல் நிற்கும்
கழிபேர் இரையாண்கண் நோய்
மற்றொரு குறளில்,
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பார் சொல்லிழுக்கப் பட்டு”
என்று நாவை அடக்க வேண்டும்
என்று குறிப்பிட்டுள்ளார்.
நாவைக் கட்டுப்படுத்தினால்
உணவும் கட்டுப்படும் என்பது
கண்கூடு “பசிக்குப் புசி, ருசிக்குப்
புசிக்காதேД “லங்கனம் பரம
ஒளடதம்” “காலமறிந்து உண்” என்பன நம் ஆன்றோர் பழமொழிகள். பட்டினி அல்லது உண்ணா நோன்பு, அல்லது விரதம் உடலுக்கு வலிமை தருபவை. நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்கு உதவி புரியும் ஆற்றல் பெற்றவை.
காலை உணவை அரச குமாரனைப் போலவும், மதிய உணவை பிரபுவைப் போலவும், இரவு உணவை வறியவனைப் போலவும் உண்ண வேண்டும். எப்பொழுதும் குறித்த நேரத்தில் உணவு உண்ண வேண்டும். காலந்தவறி, நேரந்தவறி உணவு உண்பவர்களுக்குப் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக வயிற்றில் அமிலத்தன்மை, ஈரல் நோய் (Cirrhosis of liver) ஏற்படுவதற்காகக் கண்டறிந்திருக்கிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. மாலையில் 6 அல்லது 7 மணிக்கு உண்கின்றஉணவு செரித்துவிட்ட பின் சுமார் 12 மணிநேரம் ஆகும்பொழுது ஜீரண நீர் சுரந்து வயிற்றில் நிறைந்துள்ள நிலையில் அதற்கு வேண்டிய உணவு இல்லாத பொழுது ஹைட்ரோ குளோரிக் அமிலம் வயிறு, குடல் ஆகிய பகுதிகளில் உள்ள திசுக்களைப் பாதிக்கத் தொடங்குகிறது. அதனால் வயிற்றில், குடலில் அமில நிலை உண்டாகி, அது தொடர்கின்றபொழுது குடல்புண், வயிற்றுப்புண் ஏற்பட்டு நாளடைவில் அது குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோயாக (Cancer) ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
தற்காலத்துப் பெண்கள் தங்கள் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றஎண்ணத்துடன் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். இப்பழக்கம் மிகவும் ஆபத்தானது. குறிப்பாகப் பெண்கள் தங்களுடைய இளம்வயதில் சரியான அளவில் சத்துணவு உண்ணாத பட்சத்தில் அவர்களுடைய முதுமையில் மிகவும் சிரமப்பட நேரிடும். பெண்களுக்கு மாதாமாதம் ஏற்படுகின்றமாதவிலக்கின் மூலமாகவும், குழந்தைப்பேறு, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துப் பராமரித்தல் போன்றவற்றாலும் உடலிலிருந்து கணிசமான அளவில், புரதம், இரும்புசத்து, கால்சியம், ஆகியவை வெளியேறுகின்றன. இவற்றைநல்ல உணவு உண்பதால் சரி செய்யாவிடில் கால்சியப் பற்றாக்குறைஏற்பட்டு ஞள்ற்ர்ம்ஹப்ஹஸ்ரீண்ஹ, ஞள்ற்ங்ர்ல்ர்ழ்ர்ள்ண்ள் ஆகிய நோய்கள் ஏற்பட்டு எலும்புச் சிதைவு, எலும்பு முறிவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உணவு உண்பதற்கு முன்பு இறைவனுக்குப் பிரார்த்தனை செய்துவிட்டு, இந்த உணவை அளித்தமைக்காக இறைவனுக்கு மனமார்ந்த நன்றியைச் செலுத்திவிட்டு அதன் பிறகே உணவை உட்கொள்ள வேண்டும். உணவை நமக்காகத் தயாரித்துக் கொடுத்தவர்களுக்கும் நன்றி செலுத்துவது அவசியமாகும். இதனுடைய பலன் என்னவென்றால் உணவு சரியாகச் செரிக்கவும், உணவில் ஏதேனும் பற்றாக்குறைஇருந்தாலும் அதனால் பிரச்சனை எதுவும் ஏற்படாமலும் இருக்க இப்பிரார்த்தனை உதவும். நமக்குத் தெரியாமல் ஐந்து விஷயங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது பிரசவம் ஏற்படும், என்ன குழந்தை பிறக்கும், எப்பொழுது சிறப்பு நேரிடும், அடுத்த வேளை உணவு நமக்கு எங்கே வைத்திருக்கப்படுகிறது என்பவை அவையாகும். நம்முடைய அடுத்த வேளை உணவு எங்கே என்பது ஆண்டவனால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மை.
உலகில் உள்ள உணவுகளைப்பற்றி ஒரு ஆய்வு செய்த பொழுது வெளிப்படுகின்றஉண்மை என்னவெனில் சமச்சீரான, சத்து மிகுந்த, எளிதில் செரிக்கக்கூடிய உணவு இந்திய உணவு. அதிலும் தென்னிந்திய உணவு. அதிலும் குறிப்பாக தமிழக உணவு என்பதாகும். நமது தமிழகம் பாரம்பரிய உணவு வகைகளை நமக்கு அளித்துள்ள நம்முடைய முன்னோர்களுக்கு நாம் மிக்க நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
இட்லி ஒரு மிகச்சிறந்த உணவு. அதில் கார்போஹைட்டிற்காக அரிசியும், புரதத்திற்காக உளுத்தம் பருப்பும் சேர்க்கப்பட்டு மாவாக அரைக்கப்பட்டு, இரவோடு இரவாக புளிக்க வைக்கப்படுகிறது. ஈஸ்டும் வேறு சில நொதிப்பொருட்களும் கொண்ட இட்லி ஆவியில் வேக வைக்கப்படுகிறது. இட்லிக்குத் தொட்டுக் கொள்ளப்படும் சட்னியில் பொட்டுக்கடலையும், தேங்காயும், கொத்தமல்லி, மிளகாய் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. தேங்காயிலிருந்து கொஞ்சம் கொழுப்புச் சத்தும், பொட்டுக்கடலையிலிருந்து சிறந்த புரதமும் கிடைக்கின்றன. நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் எதிலும் அயோடின் சத்து இல்லை. தேங்காயில் மட்டும் தான் அயோடின் சத்து உள்ளது. எனவே இட்லியுடன் சட்னி சேர்த்து அல்லது சாம்பார் (அதிலும் பருப்பு உள்ளது – புரதம் சேர்க்கப்படுகிறது) சேர்த்துச் சாப்பிடும்பொழுது அது ஒரு மிகச்சிறந்த சமச்சீர் உணவாகிறது. இட்லி மிக எளிதில் ஜீரணமாகக் கூடியதாகும். உடல் நலக் குறைவானவர்களுக்குக் கூட மருத்துவர்கள் இட்லியைக் கொடுக்கச் சொல்கின்றனர். ஆவியில் வேகவைக்கப்பட்ட புட்டு, கொழுக்கட்டை, சேவை ஆகியவையும் சிறந்த உணவுகளாகும்.
உடலில் வளர்சிதை மாற்றங்கள் மெடபாலிஸம் (Metabolism) ஏற்படும்பொழுது ஃப்ரீ ரேடிகல்ஸ் (Free radicals) என்றபொருட்கள் உண்டாகின்றன. இவை உடல்நலத்திற்கு மிகுந்த கேடுகளை விளைவிக்கின்றன. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதற்கும் கேன்சர் முதலிய நோய்கள் உண்டாவதற்கும் இவை காரணமாக உள்ளன. இத்தகைய ஃப்ரீ ரேடிகல்ஸ் போவதற்கு அவை வராமல் தடுப்பதற்கு ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் (Antioxidants) என்றகாரணிகள் தேவைப்படுகின்றன.
அந்தக் காரணிகள் எந்தெந்த உணவுகளில் உள்ளது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2011

உன் கண்ணால் நான் பார்க்கிறேன்-கவிஞர் மு. மேத்தா
நிறுவனர் நினைவுகள்…
இரகசியங்களைக் கசியவிடும் ‘விக்கிலீக்ஸ்’
இரகசியங்களைக் கசியவிடும் 'விக்கிலீக்ஸ்'
மனம் விட்டுக் கேளுங்கள்
உணவும் உடல் நலனும்
கவிதை
கல்விக்கடன் என்பது என்ன?
கவிதை
பிறப்பு தடையல்ல
உனக்குள்ளே உலகம்-12
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
உழைத்துக் கொண்டே இருங்கள்
பறக்க வேண்டுமா?
வெற்றிக்கு ஒரு விசா
வசந்த விளிம்புகள்
இந்த நாள் இனிய நாள்
தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு
மாணவனே… வெற்றி மீது பற்று வை
உள்ளத்தோடு உள்ளம்