– 2011 – April | தன்னம்பிக்கை

Home » 2011 » April (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  பிறப்பு தடையல்ல

  நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளால் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அடிமைப்பட்டு வாழ்ந்த போதிருந்த சுதந்திரம், இன்று இந்திய நாட்டில், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையாக அனுபவிக்க இயலவில்லை.
  வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, வீடு (குடிநீர், கல்வி, மருத்துவம்) உட்பட, அந்தந்தக் காலத்தே தடையின்றி அனைவருக்கும் கிடைப்பதே நமது அடிப்படை உரிமை. அவ்வாறு கிடைப்பதை உறுதி செய்வதும், இயற்கைச் சீற்றத்தாலோ, குழுக்களாலோ அல்லது தனிமனிதர்களாலோ தடை ஏற்படுமானால், அதைச் சரிசெய்து வழங்குவதுமே சுதந்திரம் ஆகும்.
  ஆனால், இன்றைய நிலை என்ன? இயற்கைச் சீற்றங்களைக் கூட முன்கூட்டியே அறிந்துகொண்டு, அதன் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், ஜனநாயகம் என்ற போர்வையில் அரசியல் கட்சிக்காரர்கள். குழுக்களாக, மாறிமாறி, மக்களை மயக்கநிலையில் வைத்துக்கொண்டே ஆட்சியைக் கைப்பற்றி பலப்பல தலைமுறைகட்கு சொத்து சோர்ப்பதையும், தனி நபர்கள் அதிகாரம், பணம், பதவி, பேட்டைத் தலைவர் என்ற போர்வையில், ஏதுமறியாத அல்லது அறிந்தும் ஒன்றும் செய்யக் கையாலாகாத பொதுமக்களை, மிரட்டி, அநியாயங்களை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மையை உருவாக்கிவிட்டதையும் நினைத்து வருந்துவதைவிட, இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.
  மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 1925ம் ஆண்டு சிறையிலிருந்து எழுதியதாக, ஒரு செய்தியை ஈரோடு தேசிய விழிப்புணர்வு இயக்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதன் சாரம்:
  “நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிவிட்டால், உடனே சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. நீண்ட காலத்துக்கு கிடைக்காது என்றே நினைக்கிறேன். தேர்தல், ஊழல், அநியாயம், பணக்காரர் பலம் மற்றும் ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை எல்லாம் சேர்ந்து சுதந்திர இந்தியாவில் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.
  அடிமை இந்தியாவில் இருந்த நீதி, அமைதி, திறமை, நேர்மையான நிர்வாகம் ஆகியன சுதந்திர இந்தியாவில் இல்லையே என்று எண்ணிப்பலர் வருந்தும் நிலை ஏற்படும். அடிமைத்தனம் ஒன்றிலிருந்து காப்பாற்றப் பட்டதான லாபம் மட்டுமே கிடைக்கும்.
  நமது நம்பிக்கை, ஒழுக்கம், இறைபக்தி, அன்பு இவைகளைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்விமுறைதான் தேவை. இதில் வெற்றியடைந்தால், சுதந்திரம் மகிழ்ச்சியைத் தரும் இல்லாவிட்டால், சுதந்திரம் பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும், அக்கிரமத்துக்கும் தான் நம்மை அழைத்துச் செல்லும்.
  என்னேÐ ஒரு தீர்க்க தரிசனம். சுதந்திர இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய, சுயநலமில்லாத, நாட்டு நலனையே மூச்சாய் கொண்டு செயல்பட்டவர்களைத்தான் காணமுடிகிறது.
  திரும்பத்திரும்ப தன்னம்பிக்கை உரைகளைக் கேட்டாலும், படித்தாலும், பொதுவான நாட்டு நிலைமை, மக்களின் மனோபாவம் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியையே இன்றைய இளைஞர்கள் மத்தியில் உண்டாக்கி வருகிறது. ஒருசமயம் ஏராளமான தன்னம்பிக்கையுடன் என்னால் கட்டாயம் முன்னேறமுடியும் என்று கூறும் மனம், பலசமயம் பத்திரிக்கை, டி.வி. செய்திகள் மூலம் என்னால் இந்த ஊழல் மலிந்த சமுதாயத்தில் எப்படிக் காலம் தள்ள முடியும்.
  இப்படித்தான் என்றவரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல், எப்படி வேண்டுமானாலும் வாழும் மன நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
  உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
  கல்லா அறிவிலா தார் – குறள் 140
  உலகத்தோடு ஒத்து வாழ்வதாய் எண்ணிக்கொண்டு, கனவுக்கதாநாயகர்களாக, குறுகிய காலத்தில் பெரும் பணக்காரர்களாகி விட்டவர்களை ரோல்மாடல்களாக வைத்துக்கொண்டு வீதியில் வலம்வரும் வாலிபப் பட்டாளம் ஒருபுறம்.
  நான் பிறந்தது ஏழை வீடு; என்னால் எப்படி நன்கு படித்து முன்னேறமுடியும் என்று மனதுக்குள் தன்னம்பிக்கையின்றி ஏங்கித் தவிக்கும் சிறார் மற்றும் பள்ளி மாணவர் சமுதாயம் மறுபுறம்.
  வேலைக்கு ஆட்கள் தேவையென்ற போர்டுகள் பெரும்பாலும் எல்லா நகரங்களிலுமே உள்ள அதே நேரம், வேலைக்குச் செல்ல சோம்பேறித்தனப்பட்டு, வேலை செய்யத்தகுதியான உடல்வலு இருந்தும், அரசின் சலுகைகளை, அனுபவித்து வாழ்ந்துவரும் குடும்பங்கள் இன்னொரு புறம் – எனப்பல வகையிலும் தடைகள் இருந்தாலும், முக்காலஞானி திருவள்ளுவர் பொய்யாசொல்லியிருப்பர் என மீண்டும் மேலுள்ள குறளுக்கு அர்த்தம் பார்த்தேன். வள்ளுவர் கூறியது ஒழுக்க நெறியாகும். ஒழுக்கமில்லாமல், என்ன தான் படித்திருந்தாலும் அவர் அறிவில்லாதவரே என்றார்.
  இவ்வளவு சிக்கலான நிலையிலிருந்து மீள முடியுமா? என்ற இமாலயக் கேள்வி எழுகிறது. மீள முடியும், சிறிதுகாலம் கூடுதலாகத் தேவை.
  ஒரு பாத்திரத்தை உபயோகிக்கிறோம்; உடனே சுத்தம் செய்வது சுலபம். ஆனால், தொடர்ந்து சுத்தம் செய்யாமலேயே பலமுறைஉபயோகித்து அதன்பின் சுத்தம் செய்வது எவ்வளவு கடினமோ அது போன்றதுதான் இது.
  ஒரு வாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்து கொள்வது இலகுவாக உபயோகிக்க உதவும். ஆனால், நீண்ட இடைவெளிக்குப்பின் சர்வீஸ் செய்தால் செலவும் அதிகம். நாளும் கூடும்.
  இதுபோன்றது தான் இன்றைய சமுதாய நிலை. வயதானவர்களிடம் விரைவில் மாற்றம் கொண்டுவர முடியாது. வந்தாலும் பெரிய அளவில் உபயோகமிராது. நடுத்தர வயதுள்ளவர்கள் இப்போது ஒரு வாழ்க்கை முறையில் இருப்பதால் அவ்வளவு எளிதில் மாறமாட்டார்கள்.
  எளிதில் மாறும் தகுதியுள்ளவர்கள், மாற்றவேண்டிய நிலையில் உள்ளவர்கள் 10 வயது, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், மாணவர்களும் தான். இதை நம்மால் செய்ய முடியுமா?
  கட்டாயம் செய்ய முடியும். இனி தொடருங்கள்.
  ஓர் அப்பா, அம்மா, 10 வயது மகள், 6 வயது மகன் அடங்கிய குடும்பம். குடும்பத் தலைவரின் மாதவருமானம் அவர்களது அத்தியாவசியச் செலவுகளைச் சரிக்கட்டிவிடுகிறது. குடும்பத் தலைவியும் தன்னால் முடிந்த சிறுதொழில்களைச் செய்து மாதம் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
  ஒருநாள் வீதியில் நால்வரும் நடந்து பூங்கா ஒன்றுக்குச் செல்கின்றனர். அங்கு நின்றிருந்த கார் ஒன்றைப் பார்க்கின்றார்.
  மகன்: அப்பா, இந்தமாதிரி நாம ஒரு கார் வாங்கலாமா?
  அப்பா :அடப்பயலேÐ இந்தக் கார் வாங்கறதை நாம நெனச்சுக் கூடப் பார்க்க முடியாதுடாÐ
  மகன்: சரிÐ கார் தான் வாங்க முடியாது. ஒரு நல்ல மெத்தை வீடாவது கட்ட முடியுமா?
  அம்மா : எங்கண்ணுÐ அதுக்கெல்லாம் லட்சக்கணக்குலே பணம் வேணும்டாÐ அவ்வளவு பணம் நமக்கு ஏதுப்பா?
  மகன் : அக்காÐ நீ பெரிசாகி நல்ல வேலைக்குப் போய் எனக்கு ஒரு மோட்டார் பைக் வாங்கித் தருவியா?
  அக்கா: தம்பிÐ கவலைப்படாதே. கட்டாயம் வாங்கித் தர்றேன். நீயும் நல்லாப் படிக்கணும்.
  இவன் பலமுறைசாலையில் செல்லும் கார்களைப் பார்த்து, இவர்களெல்லாம் காரில் போகிறார்களேÐ ஏன் நான் போக முடியாதா? என்னால் கார் வைத்துக் கொள்ள முடியாதா? என நினைப்பதுண்டு. அதன் வெளிப்பாடுதான் மேலே கண்ட உரையாடல்.
  நல்ல, விலை உயர்ந்த உடை அணிந்து, போட்டு, டை கட்டி செல்லும் பலரையும் பார்த்து மலைப்பான். ஒருநாள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் தன் பெற்றோரிடம் கேட்கிறான்.
  “இந்த வருஷம் எம் பொறந்த நாளுக்கு நல்லதா டிரஸ், ஷு, டை எல்லாம் வாங்கித் தருவீங்களா?”
  அம்மா : கட்டாயம் வாங்கித் தர்றோம்டா கண்ணு.
  அப்பா : ஏய்Ð கிறுக்குப்புள்ளே… இவன் கேக்கறதை வாங்கணும்னா கொறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது வேணும். அந்தப் பணம் இருந்தா 10 நாள் பொழப்பையே முடிச்சிரலாம். கொழந்தைங்க மனசுலே அளவுக்கு அதிகமாக ஆசையை உண்டாக்கக் கூடாது.
  மகன் : ஏம்மாÐ நீ ஒருமுறைசொன்னியே, ஞாபகமிருக்கா? நீ துண்டு முடிஞ்சு கொடுக்கறபணக்காரங்க வீட்டுப்பொண்ணுக்கும் நான் பொறந்த அன்னிக்குத்தானே என்ன மாதிரியே ராசாவாட்டம் ஒரு பையன் பொறந்தான்னுÐ
  அம்மா : ஆமாம்பா
  மகன் : அப்படீன்னா. கொழந்தைகளை இங்கே போய் வசதியான குடும்பத்திலோ பொறங்க, வசதியில்லாத எடத்துலே போய் பொறங்க அப்படீன்னு யார் பிரிச்சு அனுப்பறாங்க?
  அப்பா : அடப்பயபுள்ளேÐ இதென்ன? இவ்வளவு பெரிய கேள்வி கேக்கறே? இதெல்லாம் நாங்க நெனச்சிக்கூடப் பாத்ததில்லேÐ
  அம்மா : நீங்க நெனைக்கலேÐ உங்க அப்பா மாதிரி கூலி வேலைக்குப் போறீங்க. இவனாவது நெனைக்கட்டும். நல்லாப் படிக்கவைச்சு, அவன் வேலைக்குப் போய் சம்பாதிச்சா நாமளும் பணக்காரங்களாகலாமேÐ
  அப்பா : அட்றா சக்கைÐ ஆசையைப் பார்றா ஆசைÐ அம்மாவும் மவனும் சேர்ந்து ஏதோ திட்டம் போடறீங்க. போடுங்கÐ போடுங்கÐ என்னாலே தான் அதிகமா படிக்க முடியலே, இவனாவது நல்ல படிச்சு பெரிய வேலைக்குப் போயி நெறைய சம்பாதிக்கட்டும்.
  அக்கா : ஆமாப்பாÐ இப்ப அரசாங்கத்துலோ ஏழைங்க, வசதியில்லாதவங்க படிக்கறதுக்கு நெறைய உதவி செய்யறாங்கனு எங்க டீச்சர் அடிக்கடி சொல்லுவாங்க, தம்பியை ஒருநாள் என் டீச்சர்கிட்டே கூட்டிட்டுப் போறேன்.
  மகன் : அக்காÐ ஒருநாள் அந்த டீச்சர் கிட்டே என்னைக் கூட்டிட்டுப் போக்காÐ அவங்க கிட்டே நான் நெறைய விசாரிச்சுத் தெரிஞ்சுக்கறேன். அந்த நாளுக்காகக் காத்திருப்போம்

  பெண் இன்றி அமையாது வாழ்வு

  நாம் வாழும் பூமியைப் பெண்ணாக (பூமித் தாயாக) நாம் ஏன் உருவகப்படுத்துகிறோம் என்று தெரியுமா? அது புரிய ஒரு எளிய விளக்கம் இதோ. நாம் அமர்ந்து கொண்டிருக்கும் நாற்காலியானது நம் எடையைத் தாங்கும் அளவுக்கு வலிமையானதாக இருப்பதால்தான் நாம் கீழே விழாமல் அமர்ந்து இருக்கின்றோம். அதேபோல், நம் நாற்காலியைத் தாங்கி நிற்கும் தரையானது வலிமையாக இருப்பதால்தான் நம் நாற்காலி கவிழாமல் இருக்கிறது. அது போலவே, தரையைத் தாங்கும் இந்த பூமி மிகவும் வல்லமையாக இருப்பதால்தான் தரை நொருங்காமல் இருக்கிறது. அப்புறம், இந்த பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்று சர்வ வல்லமை படைத்ததாக இருப்பதால்தான் நிலைத்திருக்கிறது. ஆக, அந்த ஏதோ ஒன்று தான் ஆகாச இருப்பு நிலை. இந்த இருப்புதான் நம் பூமியைத் தாங்கிப் பிடித்தும், சூழ்ந்து இருந்தும், சக்தியளித்து நிலைபெற வைக்கிறது. ஆக, பூமியின் பிரமாண்டம் நமக்குத் தெரியும். அந்த பிரமாண்டத்தையே தாங்கிக் கொண்டிருக்கும் வான் உண்மையில் சக்தி மிக்கதாகத்தானே இருக்க முடியும்? ஆக, இந்த அண்ட சராசரத்தில் வான் காந்தம் (இருப்பு) ஆண் தன்மையின் வெளிப்பாடாக திகழ்கிறது. இந்த இருப்பின் அசைவாக, இயக்க நிலையாக, சக்தியாக, பெண்தன்மையாக பருப்பொருளாக விளங்குகிறது. இங்கு வான் காந்தம் கொடுக்கும் தன்மையிலும், இயக்கப் பொருளாக இருக்கும் பூமி உள் வாங்கிக் கொள்ளும் தன்மையிலும் இருப்பதை கவனிக்க வேண்டும். ஆக, கொடுப்பது ஆண் தன்மையாகவும் (இருப்பு நிலை), உள் வாங்கிக் கொள்வது பெண் தன்மையாகவும் (சக்தியாக) அண்டத்தில் விளங்குவது புரிகிறதா?.
  நண்பர்களே! இதே இருப்பும் சக்தியும் ஆகிய இறை நிலையின் இரண்டு தன்மைகளும் இந்த அண்டசராசரத்தில் உள்ள அனைத்து பருப்பொருளிலும் வெளிப்படுகின்றன. சான்றாக, ஒரு அணுவை எடுத்துக் கொண்டால், அதில் அணுக்கரு (Nucleus) இருப்பாகவும் (Positive Charged) அதனைச் சுற்றும் மின் அணுக்கள் (Electrons) சக்தியாகவும் (Negative Charge) விளங்குகின்றன. இந்த அணுக்கள் இணைந்து மூலக்கூறாக (Molecules) ஆகும் போதும் இரு கூறு (Bipolar) அமைப்பைக் கொண்டுள்ளாதாகவே இருக்கிறது. பல்வேறு மூலக்கூறுகள் பல வரிசைக் கட்டி உருவாகும் பல்கூறானதும் (Polymer) இரு துருவத் தன்மையைக் கொண்டதாகவே விளங்குகின்றன. இந்தப் பல்கூறுகள் இணைந்து மரபுக் கூறாக (DNA) உருவெடுக்கும் போதும் இரு நிலைப் பிரிகளாக (Positive and Negative Strands), ஒன்று ஆண் மற்றது பெண் வழி வந்த தன்மைகளாக வெளிப்படுகின்றன. மரபுக்கூறில் உள்ள இரு நிலைத் தன்மையே, உயிர் சுழற்சியால், நம் வலது ஆண் பகுதியாகவும், இடது பெண் பகுதியாகவும்; தலை தென் துருவமாகவும் பாதம் வட துருவமாகவும் வெளிப்படுகின்றன. இந்த விதமாகத்தான் ஆண், பெண் என்ற இரு பிரிவுகள் மனிதர்களிடத்திலேயும் உயிர்களிடத்திலேயும் இயங்குகின்றன. ஆக, இந்த அசைவற்று இருக்கும் (சிவனே என்று இருக்கும்) இருப்பை சிவன் என்றும், அசையும் இயக்கத்தை சக்தி என்றும் (அசைவதால் இருப்பின் சக்தி வெளிப்படும்) குறிப்பிடுகின்றனர். இதைத்தான் சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்றும், சிவனில்லையேல் சக்தி இல்லை என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இது புரியாமல், ஆணும் பெண்ணும் தனித்து இயங்க முனைவது சாதனையில் அல்ல வேதனையில்தான் முடியும்.
  நம்மில் சில பேர்கள், பொருளீட்டு வதற்காக அயல் நாடுகளில் வேலை செய்து தனியாளாக இருக்க முனைகிறார்கள். கணவனும் மனைவியும் பல மாதங்கள் (ஒன்று முதல் இரண்டு வருடங்கள்) பிரிந்திருந்து, பின் சேர்ந்தாற்போல் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கலவியில் கலக்கும் வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதில் உள்ள சாதகமான விஷயங்கள் என்னவென்றால், நம் நாட்டில் கிடைக்காத அதிகப்பணம் கிடைக்கும்தான். குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிக்க முடியும். வாழ்க்கைத் துணைவிக்கு நகைகள் வாங்க முடியும். கொஞ்சம் பணத்தை சேமிக்க முடியும்தான்.
  அடுத்து பாதகமான விஷயங்களைப் பார்ப்போம். பிரிந்திருக்கும் காலங்களில் இல்லறத்தால் நிகழ வேண்டிய ஆண் பெண் சமன்பாடு, ஹார்மோனல் சமன்பாடு, வாத, பித்த மற்றும் கபச் சமன்பாடு, உயிர் உடல் இணக்க நிலை, பஞ்ச பூத சமநிலை, ஏழு தாது சமநிலை, அறுசுவை சமன்பாடு, குளிர் வெப்ப சமநிலை மற்றும் கற்பொழுக்க சமநிலை ஆகியன கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் சவாலாக இருக்கும். இந்தச் சவாலைச் சமாளிக்க யோக நிலையில் தவம் புரிந்தால், மேலே குறிப்பிட்ட சமநிலைகளை நிர்வகிக்க முடியும். ஆனால், தவம் புரிய உட்கார்ந்தால், துணை பிரிந்திருப்பதுதான் முன் வந்து நிற்கும். மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்று சொன்ன பிறகுதான் குரங்கு நினைப்பு வருவதுபோல், தவம் புரிய உட்கார்ந்தால் துணை நினைப்புதானே வரும்?. அப்படியில்லாமல் கட்டுப்பாடோடு இருக்க முனைவதால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் நம் உயிர் உடல் சமன்பாடு தொடங்கி எல்லா சமன்பாட்டையும் குளைத்துவிடும். நண்பர்களே! எப்படியாவது கட்டுக்கோப்புடன் இருந்து, கனிசமான பணத்துடன் நாடு திரும்பியதும், ஆகா! இனிமேல் சந்தோஷமாக வாழலாம் என்று முடிவெடுக்கும் போது நீண்டகால நோய்கள் (Chronic Diseases) முன் வந்து நிற்கும். அப்போது சேமித்த பணம் மற்றும் சேர்த்த சொத்து ஆகியவற்றை ஈடாக கொடுத்தாலும் இழந்த ஆரோக்கியத்தை முழுவதுமாக மீட்டெடுக்க முடியாது. ஆக இல்லறத்தை இழந்து ஈட்டிய பொருளானது செல்லரித்து போவதுபோல் வீணாகிவிடும். இது புரிய நமக்கு விழிப்புணர்வு இல்லை என்றால், காலத்தால் அனுபவம் பெற்று, ஞானம் உண்டாகித்தான் உணர்வோம். அதுவரை, பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்போம். போதிக்கும் போது உணராது சிரிப்பவர்கள் பாதிக்கும் போது உணர்ந்து அழுவார்கள். இது தேவையா என்று யோசியுங்கள்.
  நண்பர்களே! குடும்பம் ஓரிடம், குடும்பத் தலைவன் வேறிடம் என்று வாழ்பவர்களின் பிள்ளைகள், தாயின் அன்பு மட்டுமே கிடைக்கப் பெற்று, தந்தையின் அறிவும், ஒழுக்க நெறியும் கிடைக்கப் பெறாமல் இருப்பர். இத்தகையவர்கள், வெறும் உணர்ச்சி பிழம்பாகவே வாழ்ந்து தானும் நிம்மதியாக, அமைதியாக வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் குடும்பத்திலும் சமுதாயத்திலும் வேண்டாத அதிர்வுகளை ஏற்படுத்துவர். “இப்படிப்பட்ட வாழ்க்கைத் தேவையா?” என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டால் போதும். அறிவையும் உணர்வையும் சமமாக பார்க்கும் இல்லற வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வோம்.
  நம்மில் சிலபேர், தமது தன் முனைப்பு மற்றும் அகங்காரங்களை விட்டொழிக்காமல், வாழ்நாள் முழுமைக்கும் வாழ்க்கைத் துணைவருடன் மல்லுக்கட்டும் நிலைக்குத் தயாராக இருக்கிறார்கள். இன்னும் சிலர், வாழ்க்கைத் துணையினை மாற்றிக்கொண்டே இருப்பதே வாடிக்கையாக வைத்துக் கொள்கிறார்கள். இவர்களின் சண்டையால் மற்றவர்கள் சம்பாதிக்கிறார்கள். மற்றும் சிலர் பொருளியலில் வெற்றி பெற்ற பின் இனிதாக இல்லறம் காணலாம் என்று மிகத் தாமதமாக இல்லறத்தில் அடி எடுத்து வைக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஹார்மோன் சமன்கெடுதல் உள்ளிட்ட பல்வேறு உயிர், உடல் மற்றும் மன வேறுபாடுகளுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை விட்ட இடத்தில் விட்டு, வாழும் காலம் வரை எங்கெங்கோ தேடிக் கொண்டிருப்பார்கள்.
  இதற்கெல்லாம் காரணம், நாம் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் முறையே ஆகும். நமது வலது கைக்கு ஏற்ற பொருத்தமான கை என்பது இதற்கு எதிர் வசமாக இருக்கும் இடது கைதானே. அப்படியில்லாமல் இடது கை இருக்கும் வசமாகவே இயற்கையானது (கடவுள்) வலது கையையும் அமைத்திருந்தால் வசதியாக இருக்குமா? ஆகவே, அன்பர்களே! நம் வாழ்க்கைத் துணையானவர் நம்மைப் போல் அல்லாமல் நம் தன்மைக்கு எதிர் தன்மையில் இருப்பதே நல்ல இல்லறத்திற்கு ஏற்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். இதுவே இல்லறத் துணை தெரிவு செய்வதில் உள்ள இரகசியமாகும். இது புரியாத நாம், நம்மைப் போலவே இருக்கும் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து வாழ முற்படும்போது வாழ்க்கை போர்க்களமாகிறது.
  இல்வாழ்க்கைத் துணைவர் நம்மில் இருந்து மாறுபட்டவராக இருப்பதே நன்று! அதனால் நல்வாழ்க்கை அமையப்பெற்று, அறிவும் உணர்வும் சமன்பட்டு, இன்புற்று வாழ்வோம்!

  மனம் விட்டு கேளுங்கள்

  குடும்ப உறவுகள், நேர்மறை எதிர்மறைச் சிந்தனைகள், தாழ்வு மனப்பான்மை,
  மனச்சோர்வு, அச்சவுணர்வு, குற்ற உணர்வு, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல்,
  பணியிட உராய்வு, இளமை முதுமைப் பருவப் பிரச்சனைகளுக்கு பதில் தருகிறார்
  பிரபல மனநல ஆலோசர் திரு. நாச்சியப்பன் தமிழ்வாணன்.

  எனது மூத்த மகன் கல்லூரியில் படிக்கிறான். இளையவள் பள்ளி இறுதியாண்டு… இருவரோடும் போராட வேண்டியிருக்கிறது. இப்பொழுது நான் என்ன செய்வது?
  – எஸ். கவிதா, மேச்சேரி
  உங்கள் போராட்டம் நியாயமானதேÐ அதற்காக அளவுக்கு மிஞ்சிய அச்ச உணர்வும், மன அழுத்தம், மன உளைச்சலும் வேண்டாமேÐ தேர்வுப்பற்றி, அவர்கள் எதிர்காலம் பற்றி கவலை வேண்டும். ஆனால் அந்தக் கவலையிலேயே மூழ்கிவிடக் கூடாது. அதற்கு அனுமதியும் தரக்கூடாது. தேர்வின் முக்கியத்துவம், அதோடு பின்னியுள்ள அவர்களுடைய எதிர்காலம், நாட்டு நடப்பு, வீட்டு நிலைமை, எதார்த்தமான கல்வி, வேலைவாய்ப்பு நிலைமைகளைப் பற்றி அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டியது உங்களது கடமை. இதை உங்களது குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
  இதைப்படி, அதைப்படி என்று எந்நேரமும் அவர்களை ‘நச்சரிக்காமல்’, அவர்களுடைய மனநிலையைப் புரிந்து கொண்டு பக்குவமாய்ச் சொல்லுங்கள். ‘நன்றாகச் செய்தாய், கவலைப்படாதே, உன்னால் நன்றாக செய்ய முடியும்’ என்கிற’நம்பிக்கையை’ ஊட்டுங்கள். நேசமான, அன்பான, இனிமையான குரலில், முகபாவத்தில், தட்டிக்கொடுங்கள்; தோளைத் தொடுங்கள்; அப்புறம் பாருங்கள் அது நிகழ்த்திக் காட்டும் அற்புதத்தை.
  ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு; பலம் உண்டு; பலவீனம் உண்டு. பலத்தைப் பாராட்டுங்கள்; பலவீனத்தை எப்படிப் பலமாக்குவது என்று பாதை காட்டுங்கள். எந்த நிலையிலும் தயவு செய்து மற்றவரோடு ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்த்துப் பாருங்கள். பலன் கைமேல் கிடைக்கும்.
  உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஊக்கப்படுத்துங்கள்; அரவணைத்து முதுகில் தட்டிக்கொடுங்கள்; வாய்ப்பு இருப்பின் பரிசுப்பொருட்களை வாங்கித் தாருங்கள். “உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசு, உற்சாகமும், ஊக்கமும் தான்” என்கிறார் புரூஸ்பர்டன் (உளவியல் வல்லுநர்). அறிவியல் ஆராய்ச்சியொன்றில், தட்டிக்கொடுத்த எலி, நீண்ட நாள் நலமாக வாழ்கிறது. சூடுபெற்றஎலி முரட்டுத்தனமாக மாறுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அன்பிற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் ஏக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டுமா, என்ன?
  ‘Adolescent Age’ – இளமைப்பருவம் இது ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழற்சியிலும் ஒரு முக்கியமான வளர்ச்சிக்கட்டம். மன அழுத்தம், உளைச்சல் மிகுந்தது; ஆர்வங்கள் மாறக்கூடியது; கல்வி, வேலை பற்றிய பார்வை வேறுபடும்; பால் ஈர்ப்பு ஏற்படும்; அரசியல் பற்றி பர்ôவை, நண்பர்கள் (Peer group) பற்றிய உணர்வு. தாக்கம் ஏற்படக்கூடிய பருவம். எனவே சற்று உற்று கவனியுங்கள்; பக்குவமாய் எடுத்துச் சொல்லுங்கள். Group study சேர்ந்து படித்தலில் ஆர்வம் இருந்தால், ஒத்த மனநிலை உடையவரா எனப்பார்த்து ஊக்கப்படுத்துங்கள். கண்காணிப்புத்தேவை. ஆனால் அது மிகுந்து விடக்கூடாது.
  சரியான நேரத்திற்கு, சரியான உணவு கொடுப்பதன் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். அதை அப்படியே பின்பற்றுங்கள்.
  படிக்கும்பொழுது அவர்களுக்குத் தேவையானவை அவ்வப்போது சிறிய உடற்பயிற்சிகள், ஓய்வு, மன அமைதி, கேளிக்கை என்பதை உணருங்கள். எந்த நேரத்திலும் படிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? அது எதிர்விளைவையே ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
  வாழ்க்கையே ஒரு போராட்டம் தானேÐ உங்கள் போராட்டம் உங்கள் குழந்தைகளின் நல்லதோர் எதிர்காலத்திற்காகவே. எனவே தேவையற்றஅச்சத்திற்கும், மனஉளைச்சலுக்கும் இடம் கொடுக்கவும் வேண்டுமா என்ன? நடப்பவை யாவும் நல்லபடியாகவே நடக்கும்.

  உனக்குள்ளே உலகம்-11

  ‘தற்கொலை பிரச்சனைக்குத் தீர்வு அல்ல’

  தமிழகத்திலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் “திறன் வளர்க்கும் பயிற்சிப் பட்டறை” (Workshop) நடத்திக் கொண்டிருந்தேன். அது மாணவிகள் மட்டும் படிக்கும் கல்லூரி. அந்தப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் “பகுத்தாய்வு செய்யும் திறன்” (Analytical Skill) வளர்க்கும் முறைகள் பற்றி விவரித்துவிட்டு அவர்களுக்கு ஒரு பயிற்சியை வழங்கினேன்.
  அந்தப் பயிற்சி இதுதான்.
  “இந்த பயிற்சியில் கலந்துகொள்ளும் உங்களில் யார் யாருக்கெல்லாம் தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் உண்டு?” என்று கேட்டேன்.
  எல்லா மாணவிகளுமே செய்தித்தாள் படிக்கும் பழக்கம் தங்களுக்கு இருப்பதை தெரிவித்தார்கள்.
  “இன்று நீங்கள் செய்தித்தாளில் வாசித்த செய்திகளில் உங்கள் மனதைப் பாதித்த செய்து எது?” என்று மீண்டும் கேட்டேன்.
  மாணவிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பதில்களைச் சொன்னார்கள். ஒருசில மாணவிகள் அன்றைய செய்தித்தாளில் வெளிவந்த ஒரு மாணவியின் தற்கொலையைப்பற்றிய செய்திதான் தங்களைப் பாதித்த செய்தி என்பதை அழுத்தமாகச் சொன்னார்கள்.
  அந்த செய்தி இதுதான்.
  சென்னையைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று வந்தாள். அவளுக்கு வயது 13. சுமார் 10 நாட்களாக அம்மை நோயினால் பாதிக்கப்பட்டாள். ‘மருத்துவ விடுப்பு’ எடுத்த பின்னர் நோயிலிருந்து குணமான பின்பு மீண்டும் வகுப்புக்கு வந்தாள். அப்போதுதான் தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளை அந்த மாணவியால் சிறப்பாக எழுத இயலவில்லை.
  இதனால் – தேர்வு நேரத்தில் “கையேடு” (Guide) ஒன்றைப் பார்த்து தேர்வு எழுதினாள். அப்போது ஆசிரியை தேன்மொழியை கையோடு பிடித்தார். புகார் செய்தார். மற்றமாணவ, மாணவிகள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானாள் அந்த மாணவி.
  தேர்வில் தான் பார்த்து எழுதியபோது தனது ஆசிரியை கண்டுபிடித்து விட்டதை தனது அக்காவிடம் கூறியிருக்கிறாள். அதற்கு அவளின் அக்கா “இதற்கு நீ கவலைப்படாதே. உனது உடல்நலக் குறைவு காரணமாகத்தானே நீ தேர்வில் காப்பிடியத்தாய். இந்த விஷயத்தையும் பெரிதுபடுத்தாமல் நீ நல்லப்படியாக நடந்துகொள்” என்று அவளது அக்கா ஆறுதல் சொன்னாள். இந்த சம்பவம் பற்றி எதையும் தனது பெற்றோரிடம் அந்த மாணவி தெரிவிக்கவில்லை.
  மனதில்போட்டு அழுத்திக்கொண்டு மறுநாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயாரின் சேலையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டாள், அந்த மாணவி. இதனால் அவளின் ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேன்மொழியைக் காப்பி அடித்ததாக புகார் கூறிய ஆசிரியை பணி நீக்கம் (Suspend) செய்யவேண்டும் என்றும், உடனே கைதுசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
  13 வயது நிரம்பிய அந்த மாணவியின் தாய் நிலைகுலைந்து போனாள்.
  இதுதான் அந்த மாணவிகளைப் பாதித்த சம்பவம்.
  “இந்த சம்பவத்தை செய்தியாகப் படித்த பல மாணவிகள் தங்கள் மனதில் இந்த சம்பவம் நீங்காத இடம் பெற்றுவிட்டது” என்று சொன்னார்கள். “இந்தச் செய்தியிலிருந்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அந்த மாணவிகளிடம் கேட்டேன்.
  அதற்கு விதவிதமான பதில்களை மாணவிகள் தந்தார்கள்.
  அந்த பதில்கள் இவைதான்.
  தேர்வை எப்படி நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு விதிமுறைகளைப் பள்ளி நிர்வாகம் வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளின்படிதான் ஆசிரியர்கள் செயல்பட முடியும். பள்ளி விதிமுறைகளை மீறும் மாணவ, மாணவிகளை இனம்கண்டு அவர்களைப்பற்றி தலைமை ஆசிரியரிடம் தகவல் அளிக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. அந்தக் கடமையைத்தான் இந்த ஆசிரியை செய்திருக்கிறார். இதில் ஆசிரியர் மீது எந்தத் தவறும் இல்லை.
  வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்று வழக்கமாக முதலிடத்தில் தேர்ச்சி பெறும் மாணவிக்கு இந்த ‘விபரீத ஆசை’ தேவையில்லை. ஏதோ தவறு நடந்துவிட்டது என்று எண்ணி, தான் செய்த தவறை உணர்ந்து திருந்த முயற்சி செய்திருக்கலாம். தனக்கு தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள்தான் கிடைக்கும் என்று எண்ணியதால் அடுத்துவரும் தேர்வுகளில் காப்பியடித்துதான் மதிப்பெண்களை உயர்த்த வேண்டும் என்பது அவசியமில்லை. இங்கு தான் தவறு நடத்திருக்கிறது.
  “தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால்தான் படிக்கவில்லை. கையேட்டைப்பார்த்து எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது” என்று விளக்கம் கொடுத்து ஆசிரியர் அல்லது பொறுப்பாளர்களிடம் தனது நிலையை விளக்கி அந்த மாணவி மன்னிப்பு கேட்டிருக்கலாம்.
  தற்கொலைதான் முடிவு என்றநிலைக்கு எந்த பெண்ணும் வரவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எத்தனையோ மாற்று வழிகள் இருக்கிறது. தலைமை ஆசிரியரிடம் முறையிடலாம் பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தைகூறி, ஆலோசனை கேட்கலாம். தன்னுடன் படிக்கும் தோழிகளிடம் கூறி பிரச்சனையைத் தீர்க்க வழிகள் கேட்கலாம்.
  இந்த சம்பவம் மன அழுத்தத்தால் (Stress) ஏற்பட்ட பிரச்சனையாகும். மன அழுத்தத்தை நீக்குவதற்கு பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடலாம். உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற சின்னஞ்சிறு பயிற்சிகள்கூட மிகப்பெரிய மன நிறைவை நிச்சயம் வழங்கும்.
  – இப்படி பல்வேறு கருத்துக்களை மாணவிகள் அந்தப் பயிற்சியில் பகிர்ந்துகொண்டார்கள்.
  ஒரு மாணவியின் “திடீர் மரணம்” ஈடுகட்ட முடியாத ஒரு இழப்பாக ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர்களுக்கும் தோன்றினாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனிமேல் தோன்றாமல் இருக்கவேண்டும் என அந்தக் கல்லூரி மாணவிகள் தெளிவாக விளக்கிப்பேசினார்கள்.
  கல்லூரி மாணவிகளில் சிலர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? என்பதை உடனே தெரிந்துகொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் பெற்றிருப்பார்கள். அதனால் சரியான தீர்வுகளை அந்தக் கல்லூரி மாணவிகள் தெரிவித்தார்கள்.
  ஆனால் பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் எதிர்பாராத பிரச்சனைகள் வந்ததும் திக்குமுக்காடிப் போகிறார்கள். அந்தப் பிரச்சனைகளை சரியான முறையில் எதிர்நோக்கும் திறனை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். பின்னர் உயிரை மாய்த்துக்கொள்ளும் விபரீத முடிவை எடுத்து விடுகிறார்கள். “விபரீத முடிவுகளினால் பிரச்சனை தீர்ந்துவிடும்” என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
  இப்படிப்பட்ட விபரீத முடிவுகளால் அவர்களுக்கு வேண்டுமானால் பிரச்சனை முடிந்திருக்கலாம், ஆனால் அதற்குப்பின்னால் அடுக்கடுக்காய் எத்தனையோ பிரச்சனைகள் உருவாகி விடுகின்றன. மாணவியின் தற்கொலை சம்பவத்தால் ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி ஊர்மக்கள் சாலை மறியல் செய்தார்கள். கண்ணாக எண்ணி வளர்த்த பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் உருவாகிவிட்டது. பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். இத்தனை சிக்கல்களும் அந்த மாணவியின் மரணத்திற்குப்பின் உருவான பிரச்சனைகள் அல்லவா?
  இன்று எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வுகாண முடியும். தீவிரமாக ஆலோசனை செய்தால் நல்ல முடிவு கிடைக்கும். தனக்குப் பிரச்சனை தீர்க்க மரணம் ஒன்றுதான் வழி என்று எண்ணி தற்கொலை முடிவு மேற்கொள்பவர்கள் – இதனால் ஏற்படும் சோகங்களையும், பிரச்சனைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வுகாண விரும்புபவர்கள் அந்தப் பிரச்சினையை முறைப்படி அணுக வேண்டும்.
  அந்த அணுகுமுறைகள் இவைதான்.
  1. பிரச்சனை என்ன? என்பதை முதலில் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.
  2. பிரச்சனையின் வடிவங்களையும், அந்தப் பிரச்சினை ஏற்படுத்தி பாதிப்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
  3. பிரச்சனைக்கு காரணமானவர்கள் யார்யார்? அதோடு தொடர்புடையவர்கள் யார்யார்? என்பதை இனம் கண்டுகொள்ள வேண்டும்.
  4. பிரச்சனை எங்கு? எப்போது? நிகழ்ந்தது என்பதையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  5. பிரச்சனையின் மூலகாரணத்தையும், இதர காரணங்களையும் இனம்கண்டு கொள்ள வேண்டும்.
  6. பிரச்சனையின் காரணங்களைக் கண்டுபிடித்தபின் அந்த காரணங்களின் அம்சங்களை அலசி ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.
  7. பிரச்சனையை எந்தெந்த வழிகளில் தீர்க்கலாம்? என தீர்வுகளைப் பட்டியலிட வேண்டும்.
  8. எத்தனை மாற்று வழித் தீர்வுகள் இருக்கிறதோ அத்தனை தீர்வுகளையும் (Alternative causes of actions) கண்டுபிடிக்க வேண்டும்.
  9. தீர்வுகளினுடைய நன்மை, தீமைகளை (Merits and Demerits) கண்டறிதல் வேண்டும்.
  10. எந்தத் தீர்வை (Solution) தேர்ந்தெடுத்தால் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்குமோ அந்தத் தீர்வை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
  இதுதான் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிமுறை என்பதை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைய உள்ளங்கள் தெரிந்துகொண்டால் விபரீத முடிவுகளிலிருந்து விலகிக் கொள்ளலாம். விருப்பமான மகிழ்வான வாழ்வை வாழ பழகிக்கொள்ளலாம்.

  முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்

  நம்மால் முடியாத காரியம் இந்த உலகத்தில் ஏதாவது உண்டா? எதுவும் இல்லை. விண்ணிலும், மண்ணிலும் ஆய்வுகள் செய்து எண்ணற்ற உண்மைகளைக் கண்டறிந்த நாம், எதைத்தான் செய்ய முடியாது? தன்னம்பிக்கை மிகுந்த ஒருவன் எந்தச் செயலைச் செய்ய நினைத்தாலும் அதில் குறிக்கோளாக இருந்து இடைவிடாத முயற்சிகள் செய்து அந்தக் குறிக்கோளில் கருமமே கண்ணாக இருந்து இறுதியில் அந்தச் செயலில் வெற்றியைப் பெறுவான். முடியாது என்கிற சொல் அவனுக்குப் பிடிக்காத சொல்லாகும். “என்னால் முடியும். என்னால் முடியும்Д என்றே வீர முழக்கமிடுவான். அவனிடம் அளவு கடந்த தன்னம்பிக்கை இருப்பதால்தான், முழு முயற்சியெடுத்து அவனால் பல அற்புதமான காரியங்களைச் செய்ய முடிகிறது.
  “தன்னம்பிக்கையுடன் என் இலட்சியத்தை அடைவேன்Д என்று மன உறுதி கொண்டு, தன்னை அவன் முழுமையாக நம்பினான். அந்த நம்பிக்கையில் அவன் செயல்பட்டதால் தான் அவனுக்கு அந்த வெற்றி கிடைத்தது.
  நீங்கள் எப்போதும் குறிக்கோளில் குறியாக இருக்க, நீங்கள் ஏறும் முதல் படிக்கட்டு உங்களின் தனித்தன்மை தான்Ð ஒரு காரியத்தை நீங்கள் மிகுந்த தைரியத்துடன் தொடங்க வேண்டும். இடையில் உங்களுக்குச் சோர்வு ஏற்பட்டால் அதற்காகக் கொஞ்சமும் கலங்காமல் மனோதிடத்துடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால் மாமலையும் உங்களுடைய பார்வையில் சிறிய கடுகாகத்தான் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால் அலைகளை எழுப்பி ஆர்ப்பரிக்கும் கடல்கூட உங்களுக்கு இரண்டு (வயல்) வரப்புகளுக்கு இடையே ஓடும் மிகச் சிறிய வாய்க்கால் போலத்தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால் சுட்டெரிக்கும் சூரியன் கூட சிவப்பு நிறக் கால்பந்து போலத் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால், உலகினர் அனைவரையும் இரவு நேரத்தில் கிறங்கடித்து மயங்க வைக்கும் வெண்ணிலா கூட உங்களுக்குச் சிறிய வெள்ளிப்பந்தாகத் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால், வானத்தில் தோன்றும் நட்சத்திரக் கூட்டங்கள் ஓடையிலே காணப்படுகின்ற வெண்ணிறக் கூழாங்கற்களைப் போலத் தோன்றும். உங்களுக்கு மன உறுதி இருக்குமானால், இந்த உலகமே உங்கள் காலடியில் பணிந்து நிற்கும். நீங்கள் நினைக்கின்ற எதையும் சாதித்துக் காட்டலாம். நீங்கள் முழுமையாக உங்களை நம்புகின்றபோது குறிக்கோளில் கவனமும், நீங்கள் செய்கின்ற முயற்சிகளில் கடுமையான தீவிரமும் இருக்கும்.
  ஒரு செயலில் நீங்கள் இறங்கிவிட்டால் “முடியாது” என்ற வார்த்தையே உங்களுடைய வாழ்க்கை அகராதியில் இருக்கக் கூடாது.
  சர்.சி.வி. இராமன், தன்னம்பிக்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டு மிகவும் கடுமையாக உழைத்தார். ‘ஒளி விலகல்’ என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்தார். அதற்காக நோபல் பரிசு பெற்றார். “என்னால் ‘ஒளி விலகல்’ என்ற தத்துவத்தைக் கண்டுபிடிக்க முடியும்” என்ற மன உறுதியோடு இருந்தார். உலகினர் அனைவரையும் வியப்படைய வைத்த இந்த மன உறுதி அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.
  “வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவுவதே என் லட்சியம்Д என்று கூறி “அன்பின் தூதுவர்கள்” என்ற அமைப்பை அன்னை தெரஸா தொடங்கினார். இந்தியாவிற்கு வந்து ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று மிகவும் விரும்பினார். அப்போது அவர் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை. அன்னை தெரஸாவின் நண்பர்களும், உறவினர்களும் “எவராலும் செய்ய முடியாத காரியத்தை நீ ஏன் செய்கிறாய்?” என்று கேட்டார்கள். “முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்Д என்று கூறினார், அன்னை தெரஸா. தான் கொண்ட கொள்கையில் தீவிரம் காட்டினார். கையில் பணமே இல்லாமலிருந்த அவருக்குப் பல பேருடைய ஆதரவும், பணமும் கிடைத்தது. இந்தியாவிற்கு வந்து ஏழைகளுக்குச் சேவை புரிந்தார். முடியாது என்ற சொல்லை தன்னுடைய வாழ்க்கை அகராதியிலிருந்தே நீக்கிவிட்டார்.
  குத்துச்சண்டை போட்டியில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற முகம்மது அலியின் மகள் லைலா, தானும் தன் தந்தையைப் போல குத்துச் சண்டை வீராங்கனை ஆக வேண்டும் என்று நினைத்தார். உறவினர்களும், நண்பர்களும் சிரித்தார்கள். கேலி பேசினார்கள். கிண்டல் செய்தார்கள். “உன்னால் குத்துச் சண்டை வீராங்கனை ஆக முடியாது. ஆண்களுக்கே உரித்தான குத்துச் சண்டைப் போட்டியில் பெண்கள் பங்கேற்பதா? இது நடக்க இயலாத காரியம்” என்றார்கள். ஆனால் லைலாவிற்குக் குத்துச் சண்டையின் மேல் உள்ள மோகம் அவரை ஊக்கத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. “லைலா உன்னுடைய கனவை நீ பின் தொடர்ந்து செல் சும்மா இருக்காதே” என்று சொன்னார் முகம்மது அலி. தந்தையின் அறிவுரைப்படி சென்ற லைலா, பெண்களில் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் குத்துச்சண்டை வீராங்கனையாகத் திகழ்ந்தார். இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண்மணி அவரே,
  முடியாது என்ற சொல்லுக்கு லைலா முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்
  “நான் நினைத்த லட்சியத்தை அடைந்தே தீருவேன்Д என்ற நம்பிக்கையுடன் நீங்கள் முழு முயற்சி எடுத்து உழைத்தால் முடியாது என்ற சொல் அகராதியிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். எப்பொழுதும் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உலகத்தில் நீங்கள் பலபேரை நம்பாமலிருக்கலாம். ஆனால் உங்களை நம்பாமல் இருக்கலாமா? உங்களை முழுக்க முழுக்க நம்புங்கள்Ð தன்னையே நம்பாதவன் இந்த உலகில் எதையும் சாதிப்பதற்கு லாயக்கற்றவன் ஆவான்.
  எனவே முதலில் உங்களை நம்புங்கள். உங்களுடைய லட்சியத்தில் குறியாக இருங்கள். நீங்கள் ஒரு காரியத்தைத் தொடங்கும்போது தொய்வு ஏற்பட்டாலோ, தடங்கலோ, சோர்வோ ஏற்பட்டாலோ நீங்கள் மன உறுதியுடன் செயல்பட வேண்டும்.
  நம்முடைய வாழ்வு நலமாக அமைய தன்னம்பிக்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டு, கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும், கண்ணியமான நெறியையும் மனதில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் அமைதியுடன் வாழ முடியும். கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்கள் மனநிறைவுடன் என்றைக்கும் வாழவே முடியாது. எனவே நேர்மையுடன் கூடிய உழைப்பு நம்மை உயர்ந்த மனிதனாக்குவது மட்டுமின்றி, மனநிறைவையும் வாழ்நாள் முழுவதும் தந்து கொண்டே இருக்கும்.
  நாம் தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும். இயன்றவரைக் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றி பெற முழு முயற்சி செய்ய வேண்டும். எந்தச் செயலிலும் ஆர்வத்தோடு செயலாற்ற வேண்டும். உயர்ந்த லட்சியத்தைப் பின்பற்றி மன உறுதியோடு வாழ வேண்டும். “என்னால் முடியாது” என்று எப்பொழுதும் சொல்லவே கூடாது. எனவே முடியாது என்ற சொல்லை, அகராதியிலிருந்தே நீக்கி விடுவோம்Ð
  நாம் தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும். இயன்றவரைக் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு காரியம் வெற்றி பெற முழு முயற்சி செய்ய வேண்டும். எந்தச் செயலிலும் ஆர்வத்தோடு செயலாற்ற வேண்டும். உயர்ந்த லட்சியத்தைப் பின்பற்றி மன உறுதியோடு வாழ வேண்டும். “என்னால் முடியாது” என்று எப்பொழுதும் சொல்லவே கூடாது. எனவே முடியாது என்ற சொல்லை, அகராதியிலிருந்தே நீக்கி விடுவோம்.

  உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!

  டாக்டர் எஸ்.கே. சுந்தரமூர்த்தி, M.S., FRCS (Edin., UK), DORCS (Eng)
  நிறுவனர், லோட்டஸ் கண் மருத்துவமனை
  நேர்முகம் : என். செல்வராஜ்
  டாக்டர் எஸ்.கே. சுந்தரமூர்த்தி, உலகப் புகழ்பெற்ற கண் அறுவை சிகிச்சை நிபுணர், லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிறுவனர்,

  Continue Reading »

  அச்சீவர்ஸ் அவென்யூ

  இன்டெல். கம்ப்யூட்டர் உலகின் மிகப்பிரபலமான நிறுவனங்களில் ஒன்று. இதை நிறுவியர்தான் ஆண்ட்ரூ ஸ்டீவன் குரோவ்.
  மிகச்சிறிய நாடாகிய ஹங்கேரியில் பிறந்தவர். நாஜிக்களின் கொடுமை, சோவியத் ராணுவத்தின் கெடுபிடி இப்படி பல சிக்கல்களுக்குப் பயந்து ஆஸ்திரியா நோக்கி ஓடியவர். அங்கும் நிலைத்து வாழ முடியாமல் அமெரிக்காவில் அடியெடுத்து வைத்தார்.
  ஆங்கிலம் இவருக்கு அன்னியமொழி. ஆனாலும். அதைக் கரைத்துக் குடித்தார். பிறகு பொறியியலும் படித்துத் தேறினார். அப்போதுதான் கம்ப்யூட்டர் என்ற புதிய சகாப்தம் உலகில் பிறந்தது.
  இவருடைய மூளை முழுவதும் அறிவியல் செல்களாலேயே ஆனது என்று சொல்லும் அளவுக்கு விஞ்ஞானத்தில் வித்தகராக இருந்ததால், கம்ப்யூட்டருக்கே மூளை என்று கருதப்படும் மைக்ரோசிப்களை உயர்ந்த தரத்தில் வடிவமைப்பதில் கவனம் செலுத்தினார். பென்டியம் சிப்களை உருவாக்கினார். கம்ப்யூட்டர் உலகுக்கு வழங்கினார்.
  உலகில் உள்ள பர்சனல் கம்ப்யூட்டர்களில் முக்காலே மூணுவீசத்தை இன்டெல் சிப்தான் இயக்குகிறது.
  பல ஆயிரம் கோடிகளுக்கு இன்று இவர் அதிபதி. ஆனால் இவர் வாழ்க்கை ஆரம்பித்தது, ப்ரூக்ளின் நகரின் ஒரு பாழடைந்த கட்டிடத்தில்தான்.
  97ம் ஆண்டு ‘Man of the Year’ ஆக இவரைத் தேர்ந்தெடுத்தது “பஐஙஉ” பத்திரிக்கை.
  சரி. இவரிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?

  • சூழல் சரியில்லை என்று சுருண்டு கிடக்கக்கூடாது.
  • ஆங்கிலம் தெரியவில்லையே என்று அஞ்சக்கூடாது.
  • பிறந்த ஊரில் பிழைக்க வழியில்லையே என்று பிதற்றிக் கொண்டிருக்கக் கூடாது.
  • கடுமையாக உழைக்கவும், புலம்பாமல் போராடவும் புறப்பட்டுவிட்டால் வெற்றி வெகுதூரமில்லை.

  உடலினை உறுதிசெய்

  தண்ணீரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால்
  கடலைத் தாண்டிவிட முடியாது
  -இரவீந்தரநாத் தாகூர்

  உங்களது உடலினை நீங்களே உறுதி செய்ய இந்நூலில் பல அறிவியல் பூர்வமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். இப்புத்தகத்தைப் படித்து முடித்திருக்கும் உங்களை என் மனதாரப் பாராட்டுகிறேன். இதன் மூலம் நீங்கள் பெற்றபயனை அனுபவிக்க வேண்டுமானால், இன்றிலிருந்து செயலில் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் விலைமதிப்பற்ற, நீங்கள் ஈட்டிய பொருட்களுக்கெல்லாம் தலையான நலமிக்க உங்கள் உடல் நேரத்திற்குத் தகுந்த பலன் கிடைத்திருக்கிறது என்று நாம் இருவரும் மகிழ்ச்சி அடையலாம்.
  உடல்நலம் காக்கும் செயல்களில் இறங்க வேண்டும்; அதுவும் இப்போதே இறங்க வேண்டும். ஊட்டச்சத்து உணவை அளவோடு உண்டு, உடற்பயிற்சியையும் செய்து நன்றாக உறங்கவும் வேண்டும்.
  சுருங்கச் சொன்னால் அளவாக உண்டு, அதிகமாக நடக்க வேண்டும்.
  உங்களுக்காக தண்டால் செய்ய இன்னொருவரை நியமிக்க முடியாது என்றார் ஜிப்ரோகன் என்றஅறிஞர். நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியை நீங்கள்தான் செய்ய வேண்டும். மற்றவர்கள் உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், உடற்பயிற்சியை மட்டும் செய்ய முடியாது.
  சென்னை மாநகரக் காவலர்களுக்குப் பயிற்சி வழங்க ஒரு பேராசிரியை வந்திருந்தார். ஆரோக்கியமான உணவு வகைகளைப் பற்றியும், உணவுகளில் அடங்கியுள்ள கலோரியைப் பற்றியும், உடல் எடையைக் குறைக்க உதவும் உணவு வகைகளைப் பற்றியும் அவர் விளக்கினார். அப்போது ஒரு காவலர், நாங்கள் மசாஜ் செய்து கொண்டால் உடல்எடை குறையுமா? என்று ஒரு கேள்வியைக் கேட்டார். பேராசிரியைக்கு என்ன சொல்வதென்றேதெரியவில்லை. நான் குறுக்கிட்டு மசாஜ் செய்தால் உடல் எடை குறையும்; உனக்கல்ல, உனக்கு மசாஜ் செய்தவனுக்கு என்றேன். அனைவரும் சிரித்தனர். பேராசிரியையும் சிரித்து விட்டார். அது தான் உண்மை. உங்களுக்காக மற்றவர்கள் உடற்பயிற்சியைச் செய்ய முடியாது. அதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.
  நான் சொல்லப்போகும் இந்த வார்த்தைகளை மனப்பாடம் செய்யுங்கள். உடல்நலம் காப்பதில் குறுக்கு வழி என்று ஒன்றில்லை. உலகில் பெரிய அரிய சாதனைகள் படைப்பதற்கு முயற்சி அவசியம். உடல் நலம் காப்பதும் ஒரு பெரிய அரிய சாதனை தானே.
  எதற்குமே ஒரு விலை உண்டு. அதுவும் உடல்நலம் என்றால் நாம் சம்பாதிக்கும் எந்த செல்வத்தினும் மிகச் சிறந்தது அது. உலகில் ஏதாவது ஒன்று புனிதமானது என்றால், அது நமது உடல்தான் என்றார் வாட் ஒயிட்மேன் என்றஅறிஞர். எனவே அதற்கு உண்டான விலையை கொடுக்க முன் வாருங்கள். உடலின் மற்றஉறுப்புகளுக்கு மதிப்பளித்து நாவைக் கட்டுப்படுத்துவதும், தினமும் அரைமணிநேரம் நடக்க செலவிடுவதும் தான் அந்த விலை.
  ஒருவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றால் எதை வாங்குகிறோம்? ஒருவருடைய இல்லத்திற்கு செல்லும்போது கையில் எதை எடுத்துச் செல்கிறோம்? பொதுவாக, ஒரு கிலோ இனிப்போ அல்லது ஏதாவது ஒரு பொருளோ வாங்கிக் கொண்டு செல்வது வாடிக்கை. உங்களது நண்பர் அல்லது உறவினரை நீங்கள் மிகவும் நேசிப்பதாக இருந்தால் நிச்சயமாக அவருக்கு ஒரு கிலோ இனிப்பு வாங்கித் தராதீர்கள். இனிப்பு அவரது உடல் நலத்தைக் கெடுக்கும். அதற்குப் பதிலாக இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசளியுங்கள். இதனால் அவரது வீட்டில் உள்ள அனைவரது உடல்நலமும் பாதுகாக்கப்படும்.
  இந்நூலைப் படித்து முடித்துவிடாதீர்கள். அதாவது கடைசிப் பக்கம் முடிந்ததும் முதல் பக்கத்தை படியுங்கள். தினமும் ஒரு அத்தியாயம் என்று படித்துக் கொண்டே இருங்கள். இந்தப் புத்தகத்தின் உரிமையாளர் நீங்கள். இப்புத்தகத்தை நீங்கள் மீண்டும் பலமுறைபடிக்க வேண்டும். எனவே இதனைப் பத்திரப்படுத்துங்கள்.
  நீங்கள் இந்த நூலைப் படித்து முடித்ததால், உங்களை நீங்களே பாராட்டி மகிழுங்கள்.
  நான் எனது உடலை திருத்தி அமைக்கப்போகிறேன் என்றஒப்பந்தத்தை உங்களுடன் இப்போதே செய்து கொள்ளுங்கள். அந்த ஒப்பந்தத்தை மதித்து இன்றேஅதற்கான செயலிலும் இறங்குங்கள்.
  எதற்கும் ஒரு விலை என்று சொன்னேன். ஆனால், அதற்கும் ஒரு விதி விலக்கு உண்டு. எந்த விலையும் கொடுக்காமல் இந்த அற்புத உடல் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இலவசமாக கிடைத்தது என்பதற்காக இந்த உடலை கெடுக்கவோ, புறக்கணிக்கவோ உங்களுக்கு உரிமையில்லை. ஏனென்றால், இவ்வுடல் உங்களது பெற்றோரால் கொடுக்கப்பெற்றமிகப் பெரிய சொத்தாகும். நீங்கள் மற்றசெல்வங்களை ஈட்ட தேவைப்படும் அடிப்படையான மூலப்பொருள் உங்களது உடல். எனவே, அதைக் கட்டிக்காப்பது உங்களது கடமையாகிறது.
  உங்கள் உடலை முழுமையாக நேசியுங்கள்.
  உடலே கோயில்! உணவே மருந்து! உடற்பயிற்சியே திருவிழா!
  நீங்கள் இப்பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும் திருவிழாவாக அமையட்டும்.
  (முற்றும்)

  உள்ளத்தோடு உள்ளம்

  வாழ்க்கை என்பது என்ன? அது நமக்கும் அப்பாற்பட்டு தனியே இயங்கிக்கொண்டு இருப்பது அல்ல. வாழ்க்கை நம்மோடு நிழல்போல் தொடர்ந்து வருவது.

  Continue Reading »

  சேலம் பயிலரங்கம் 17.04.2011

  நாள் : 17.4.2011 ஞாயிற்றுக்கிழமை,காலை 10.00 மணி
  இடம்: சங்கக்கட்டிடம் மாடி
  மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம் அருகில்,சேலம்.

  தலைப்பு: தங்கப்புதையல்
  பயிற்சியளிப்பவர் சசிபிரபா, கோபி.