Home » Articles » முயன்றேன்… வென்றேன்…

 
முயன்றேன்… வென்றேன்…


admin
Author:

தன்னம்பிக்கை இதழ் நிறுவனர் அமரர் இல. செ. கந்தசாமி அவர்களது பேச்சைக் கேட்ட பின்பே, பள்ளியில் ஒன்பதாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்ட தன்னால் நிச்சயம் முன்னேற முடியும் என்று முயன்று இன்று ‘இநஆ சேம்பர் பிரிக்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தக்காரராய் இருப்பவர் கோவை தடாகம் திரு. ப.ய. செல்வராஜன். சுமார் 200 தொழிலாளர்களுக்கு வேலை தருவதுடன் சேம்பர் பிரிக்ஸ் தயாரிப்பாளர் சங்கச் செயலாளராகவும் சேவை செய்து வருகிறார்.
“சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தேன். 9ம் வகுப்பின் பாதியில் நின்றுவிட்டு வேலைக்குச் சென்றேன். எலக்ட்ரிக்கல் பிட்டர், உரம் விற்பனைக் கடை, விஸ்கோஸ் கான்ட்ராக்டரிடம் வேலை, இன்ஜினியரிங் ஒர்க்ஸ் எனப் பல இடங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றேன்.
தன்னம்பிக்கை இதழ் நிறுவனர் அய்யா இல.செ.க. அவர்கள் பேச்சால் ஊக்கம் பெற்றேன். வாடகை சைக்கிள் கடை, பேக்கரி, மெடிக்கல் ஷாப், நாட்டு செங்கல் சூலை எனப் படிப்படியாக முன்னேறி இன்று சேம்பர் பிரிக்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனராக உயர்ந்துள்ளேன்.
சுமார் 200 பேர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து பணிபுரிகின்றனர். அவர்கட்கு அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர், மருத்துவக்காப்பீடு, சிறுவர்கள் கல்விக்கு தேவையான வசதிகள் செய்துள்ளேன். ஆண்டுக்கு ஒருமுறை இலவச சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்துள்ளேன். மேலும், எனது ஊரான தடாகத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த, சொந்தமாக ரூ. 2 லட்சம் பொதுமக்கள் சார்பில் வழங்கினேன். ரோட்டரி சங்கத் தலைவராக இருந்தபோது, உண்டு உறைவிடப்பள்ளி கட்டிடப் பணிக்கு ரூ.1.75 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளேன்.
இது தவிர வசதியற்ற படிப்பாளிகளுக்குக் கல்விக் கட்டணம், மருத்துவ நிதி உதவி, விளையாட்டுப் போட்டிகள், திருவிழாக்கள் என இயன்ற அளவு வருமானத்தில் ஒரு பகுதியை வழங்கி வருகிறேன்.
இதற்கும் மேலாக வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு, அவர்கள் விரும்பும் தொழில் தொடர்பாக சரியான முறையில் ஆர்வத்துடன் வழிகாட்டியும் வருகிறேன். எனது படிப்பு 9ம் வகுப்பு வரை தான். எனது குடும்பத்தில் மனைவி பிளஸ் டூ வரை. மகன் இன்ஜினியரிங் படித்து வருகிறார்; மகள் டாக்டருக்கு படித்து வருகிறார். எனது இந்த முன்னேற்றம் மற்றும் சேவைகளுக்கு என் குடும்பத்தாரும், உடன் பிறந்தவர்களும் உற்ற துணையாக இருக்கின்றனர்.
சரியான முறையில் சிந்தித்து முடிவெடுத்து திறமையாகச் செயல்பட்டால், நாம் கட்டாயம் வாழ்க்கையில் முன்னேறமுடியும்” என்று தன் வெற்றி வாழ்க்கை குறித்த பதிவுகளை நம்மோடு திரு. ப.ய. செல்வராஜன் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
தொழில் தொடங்குவது, நஷ்டம் தவிர்ப்பது போன்ற பலவித சந்தேகங்களுக்குத் தெளிவு பெறதன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றதெரிவித்திருக்கிறார். அவருடைய தொலைபேசி எண்கள்: 9363261644, 9360313445. தொடர்பு கொள்ளுங்கள்! நீங்களும் எல்லாத் தடைகளையும் தாண்டி தொழிலதிபராக மாறுங்கள் !!
-Jc.S.M. பன்னீர்செல்வம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2011

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பிக்மாலியன்
முயன்றேன்… வென்றேன்…
மேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்
எல்லாம் எவன் செயல்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
நிலைத்திருக்கும் நினைவுகள்
இங்கிலீஸ் ரொம்ப ஈஸி
திருநங்கையர் தினம்
நிதானித்து நட
பிறப்பு தடையல்ல
பெண் இன்றி அமையாது வாழ்வு
மனம் விட்டு கேளுங்கள்
உனக்குள்ளே உலகம்-11
முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்
உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!
அச்சீவர்ஸ் அவென்யூ
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்