Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

வாழ்க்கை என்பது என்ன? அது நமக்கும் அப்பாற்பட்டு தனியே இயங்கிக்கொண்டு இருப்பது அல்ல. வாழ்க்கை நம்மோடு நிழல்போல் தொடர்ந்து வருவது. நம்மை விட்டுத் தனித்துப்பிரித்துப் பார்க்க முடியாதது. நமது உருவம் பெரிதாக இருந்தால், அதற்கேற்ற நிழல் விழும். நாம் உயரமாக இருந்தால் அல்லது குள்ளமாக இருந்தால் அதற்கேற்ற நிழல் வரும். ஆக நம்மோடு என்றும் இணைந்து நடந்து நம்மை வெளிப்படுத்துவது வாழ்க்கை (Life is like a shadow).
நமது நிழலை நமது உருவத்திற்கு அப்பாற்பட்டு சிறிதாக்கவோ பெரிதாக்கவோ இயலாது. நம் உருவத்தின் பிரதிபலிப்பாகவே அது இருக்கும் (கண்ச்ங் ண்ள் ஹய் ங்ஸ்ரீட்ர்). இந்த எடுத்துக்காட்டு வெளித்தோற்றத்திற்கு மட்டுமல்ல.
அதேபோல் ஒருவரின் பழக்கவழக்கங்களின் பிரதிபலிப்பே, குணநலன்களின் பாதிப்பே, அவனுடைய புகழாகவும், இகழாகவும் மதிப்பீடு செய்யப்படுகின்றது.
“இவர் நல்ல பழக்கவழக்கங்கள் உடையவர்” என்பதை அவரது நீண்டகால வாழ்க்கை முறையைப் பார்த்துச் சொல்கின்றோம். சிலருடைய குணநலன்களைப் பார்த்து இவர் நல்லவர், இவர் நல்லவர் அல்ல என்று குறிப்பிடுகின்றோம்.
ஆக, ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவரவர்களின் செயல்பாடுகளின் விளைவாகவே, செயல்பாடுகளின் பயனாகவே இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டால், வளமான வெற்றியான வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள முடியும் என்பார் டாக்டர் இல.செ.க.
நாம் எதைச் செய்கிறோமோ அதற்கேற்ற பலனையே அனுபவிக்கின்றோம் என்பதை உணர்ந்து நல்லதே செய்வோம்Ð நல்லது அல்லாததை விடுவோம்Ð வாக்களிப்பது ஜனநாயகக் கடமைÐ தவறாமல் வாக்களியுங்கள்Ð
அன்புடன்
ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2011

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பிக்மாலியன்
முயன்றேன்… வென்றேன்…
மேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்
எல்லாம் எவன் செயல்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
நிலைத்திருக்கும் நினைவுகள்
இங்கிலீஸ் ரொம்ப ஈஸி
திருநங்கையர் தினம்
நிதானித்து நட
பிறப்பு தடையல்ல
பெண் இன்றி அமையாது வாழ்வு
மனம் விட்டு கேளுங்கள்
உனக்குள்ளே உலகம்-11
முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்
உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!
அச்சீவர்ஸ் அவென்யூ
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்