Home » Cover Story » உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!

 
உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!


ராமசாமி R.K
Author:

‘தேசிய நல்லாசிரியர்’ திரு. R.K. ராமசாமி
நிறுவனர், RKR கல்வி நிறுவனங்கள், உடுமலைப்பேட்டை.

நேர்முகம்: என். செல்வராஜ்

முயற்சி என்பது வேள்வி
உழைப்பு என்பது தவம்
சாதனை என்பது வரம்
இருபத்தி மூன்றாவது வயதில் தலைமையாசிரியர் பணி ஏற்று கல்விச் சேவையில் 40ஆண்டுகளுக்கும் மேல் அனுபவமும், 43 ஆவது வயதில் மாநில நல்லாசிரியர் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதும், 49வது வயதில் இந்திய ஜனாதிபதி விருதும் பெற்றவர்.
ஒழுக்கத்திற்கும், கண்டிப்பிற்கும் பெயர் பெற்றவர்.
10ஆம் வகுப்பு அரசுத்தேர்வில் தொடர்ந்து 39 ஆண்டுகளாக உயர்ந்த மதிப்பெண்ணுடன் கூடிய 100க்கு 100 சதவிகிதம் வெற்றியும், பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வில் தொடர்ந்து 28 ஆண்டுகளாக மாநிலத் தகுதிகளுடன் கூடிய 100க்கு 100 சதவிகிதம் தேர்ச்சியும் தந்துவரக்கூடிய கல்வியாளர்.
உடுமலைப்பேட்டை தஓத மேல்நிலைப் பள்ளியில் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து 10ஆம் வகுப்பு அரசுத்தேர்விலும் 15 ஆண்டுகளாக தொடர்ந்து 12ஆம் வகுப்பு அரசுத் தேர்விலும் 100க்கு 100 சதவிகிதம் தேர்ச்சியைத் தந்து வருபவர்.
உடுமலைப்பேட்டை த ஓ த கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் கடந்த 5 ஆண்டுகள் 100க்கு 100 சதவிகிதம் தேர்ச்சியையும் உயர்ந்த மாநில தகுதிகளுக்கான மதிப்பெண்களையும் பெறவைக்கும் சாதனையாளர்.
குறைந்த நடுநிலையான மதிப்பெண்கள் பெற்றமாணவ மாணவியர்களைப் பள்ளியில் சேர்த்து அதிக மதிப்பெண்கள் பெறும் அளவு அவர்களை உயர்த்தி காலம் முழுவதும் மறக்க முடியாத கல்விப் பணியைச் செய்து வருபவர்.
மருத்துவம், இன்ஜினியரிங், விவசாயம் IAS, IPS போன்றஉயர்ந்த துறைகளுக்கு மாணவர்களை உருவாக்கித்தரும் மாபெரும் கல்விப் பணியைத் தலையாய பணியாகக் கருதி சாதனை மாணவ மாணவிகளை உருவாக்கி வருபவர்.
புகழ் பெற்றபள்ளிகள் /கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / பொது அமைப்புகள் / அறக்கட்டளைகளில் உறுப்பினராகவும், ஆலோசகராகவும், பொறுப்பாளராகவும் செயல்பட்டு பல விருதுகளைப் பெற்றிருப்பவர். மேலும், RKR கல்வியியல் கல்லூரி, RKR ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, RKR மேல்நிலைப்பள்ளி, தஓத கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி இவைகளைத் தொடங்கி நடத்திவரும் பெருமைக்குரியவர்.
ஏ. நாகூர் அறக்கட்டளையின் சார்பில் 1993 – 94ம் ஆண்டு ஆர் கே ஆர் மேல்நிலைப் பள்ளியைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தொடங்கி இன்று 2000 மாணவ மாணவியர்களுடன் தமிழகத்தில் ஒரு தலைசிறந்த பள்ளியை உருவாக்கிய சிறப்பிற்குரியவர்.
இவைகளைத் தவிர RKR பப்ளிகேஷன்ஸ், RKR டிரான்ஸ்போர்ட்ஸ், RKR கல்வி ஆராய்ச்சிமையம், RKR பார்ம்ஸ் மற்றும் பிளான்டேஷன் (Plantations) ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும் இருந்துவரும் திரு. R.K. ராமசாமி M.A., M.Ed. அவர்களை டாக்டர் செந்தில் நடேசன் மற்றும் உடுமலை P.S.K. செல்வராஜ் அவர்களுடன் நாம் சந்தித்தோம். “”நாளைய சாதனையாளர்களை அதிகம் உருவாக்கி வரும் இன்றைய சாதனை நல்லாசிரியரான திரு. த.ஓ.த அவர்களுடனான சந்திப்பு ஒவ்வொருவரையும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ வைத்து விடும் என நம்மால் நன்கு உணர முடிந்தது.” இனி அவரோடு நாம்…

உங்களைப் பற்றி…

உடுமலைப்பேட்டை தாலூக்கா புதுப்பாளையம் எனது சொந்த ஊர். என் தந்தை ஆர், குமாரசாமிக் கவுண்டர், தாய் பெரிய நாயகி அம்மாள். அப்பா உடுமலைப்பேட்டை தாலுகாவில் நல்ல செல்வாக்குடன் வாழ்ந்தவர். எனக்கு மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். அப்பா முன்னால் நின்று பேசவே அச்சப்படுவோம். அந்தளவு கம்பீரமாக தேசியப்பற்றுடன் வாழ்ந்தவர். 1945ல் என் தந்தை ஏ. நாகூரில் உயர்நிலைப்பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். அந்தப் பள்ளியில் தான் நானும் என் பள்ளிப்படிப்பை முடித்தேன். சிறு வயதில் இருந்தே விளையாட்டு, மேடைப் பேச்சுகளில் ஆர்வம் மிகுந்தவனாக வளர்ந்தேன்.

ஆசிரியப்பணிக்கு வரக்காரணம்?

P.U.C. முடித்தவுடன் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்று விருப்பப்பட்டு முயற்சித்தேன். இடம் கிடைக்கவில்லை. ட.ந.எ. கல்லூரியில் அந்த ஆண்டு அறிமுகப்பாடமாக இடம்பெற்ற B.A. (Economics) தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். கல்லூரியில் சேர்ந்த ஆறுமாதத்திற்குப் பின் தந்தை தமிழ்வழிக் கல்வியில் படிக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டார். ஆங்கில வழிக்கல்விக்கு மாறும்படி அறிவுறுத்தினார். எதிர்காலத்தில் நீ ஆசிரியராகப் பணியாற்றும்போது பிறமொழி அறிவு அவசியம் தேவைப்படும் என்றார். அப்போது என் விருப்பம் எல்லாம் இராணுவப் பணியில் அல்லது காவல் துறை பணியில் சேர வேண்டும் என்பது தான். ஆனாலும் தந்தை சொல்படி ஆங்கிலக் கல்விக்கு மாற முடிவு செய்தேன். அரை ஆண்டு முடிந்த நிலையில் B.Sc. பாடப்பிரிவில் அந்த ஆண்டு மாணவர் சேர்க்கை P.S.G. கல்லூரியில் முழுமை அடைந்திருந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் அரசு கலைக்கல்லூரியில் B.Sc. Zoology ஆங்கில வழிக் கல்வியை எடுத்து முடித்தேன். அப்போது சொந்தப் பள்ளியில் ஆசிரியராக நான் இணைந்து பணியாற்றியே ஆகவேண்டும் என்ற சூழலில் தந்தையின் விருப்பம் நினைவுக்கு வந்தது. அவரின் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று கருதினேன். ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவில் B.Ed. முடித்தவுடன் ஏ. நாகூர் பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

ஏ. நாகூர் பள்ளியில் தலைமையாசிரியர் பணி குறித்து?

ஏ. நாகூர் பள்ளியில் நான் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற போது என் தந்தையார் காலமாகியிருந்தார். பள்ளியின் செயல்பாடு முழுமையாகத் தொய்வடைந்து இருந்தது. அரசு உதவி பெறும் அப்பள்ளியில் 110 மாணவ மாணவிகள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தனர். சோதனையான காலகட்டத்தில் பள்ளியின் அத்தனை நடைமுறைகளையும் முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டியிருந்தது. கண்டிப்புடன் கடும் முயற்சிகள் மேற்கொண்டேன். பொறுப்பேற்றமுதல் ஆண்டிலேயே பள்ளியின் தேர்ச்சி விகிதம் 100 சதவிகிதமாக உயர்ந்தது. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 100 சதவிகித தேர்ச்சி என்பது நீடித்தது. ஒழுக்கமும், கண்டிப்பும் நிறைந்த பள்ளி ஏ. நாகூர் பள்ளி என கோவை மாவட்ட அளவில் என்றில்லாமல் தமிழகம் எங்கும் பேச்சு எழுந்தது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் மாணவர்களை ஆர்வத்தோடு பெற்றோர் சேர்த்து படிக்க வைத்தார்கள்.
நாளுக்கு நாள் ஆண்டுக்கு ஆண்டு பள்ளி நல்ல வளர்ச்சியை அடைந்து வந்தது. 1996ல் தலைமையாசிரியர் பணியில் இருந்து முழுமையாக வெளிவந்து விட்டேன். உடுமலைப்பேட்டையில் தஓத பெயரில் பள்ளிகள் தாடங்கப்பட்டன.

RKR பள்ளியின் தோற்றம் மற்றும் R K R கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, RKR கல்வியியல் கல்லூரி, RKR ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தோற்றம் குறித்து…

1993 – 94ல் உடுமலைப்பேட்டையில் RKR மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பில் 16 ஆண்டுகளாகவும், 12 ஆம் வகுப்பில் 15 ஆண்டுகளும் தொடர்ந்து 100 சதிவிகித தேர்ச்சியைத் தந்துவருகிறோம். மதிப்பெண்ணில் மட்டும் கவனம் என்றில்லாமல், கலை இலக்கியங்களில், விளையாட்டில் சாதிக்கக் கூடியவர்களாக ஒவ்வொரு மாணவரையும் உருவாக்கி வருகிறோம்.
இப்பள்ளியில் மாணவர் விடுதியில் சுமார் 450 மாணவர்களும், மாணவியர் விடுதியில் 300 மாணவிகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர். தொடக்க காலம் முதல் பொறியியல் வல்லுநர்களையும், மருத்துவர்களையும், பல்துறை நிபுணர்களையும் உருவாக்கித்தரும் பள்ளியாக இன்று வளர்ந்து இருக்கிறோம்.
1994-95ம் ஆண்டு RKR கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு சுமார் 1800 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியும் 10ஆம் வகுப்பு மெட்ரிக் அரசு பொதுத்தேர்வுகளிலும், 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளிலும் பள்ளி தொடங்கிய ஆண்டிலிருந்து தொடர்ந்து 100க்கு 100 சதவிகிதம் சாதனைப் பெற்று தமிழகத்தில் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது. மிகச்சிறந்த நவீனமான எல்லா வசதிகளையும் கொண்ட மாணவ – மாணவியர் விடுதியையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இப்பள்ளியில் மாணவர் விடுதியில் சுமார் 1300 மாணவர்களும், மாணவியர் விடுதியில் 450 மாணவிகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர், பல்லாயிரம் பொறியியல் வல்லுநர்களையும், மருத்துவர்களையும், பல்துறை நிபுணர்களையும் உருவாக்கித்தந்து பெருமை படைத்த பள்ளியாக இன்று சிறந்து விளங்கி வருகிறது.
2005-2006ம் கல்வியாண்டு தஓத கல்வியியல் கல்லூரி தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதே போலவே 2006-2007ம் கல்வியாண்டு ஆர் கே ஆர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு மிகச்சிறந்த முறையில் நடைபெற்று பல உன்னதமான ஆசிரியர்களை உருவாக்கிக் கொண்டுவருகிறது.பெற்றோர்களின் பார்வையில் RKR மேல்நிலைப் பள்ளி மற்றும் RKR கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்ள்ளி…
எந்தப்பள்ளியிலும் சேர்த்தும் படிக்காத மாணாக்கனா? அந்த மாணாக்கனை RKR பள்ளியில் சேர்த்துவிடுங்கள். 10ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்திருக்கும் மாணாக்கனா? அதிக மதிப்பெண் பெற்று சாதிக்க தஓத பள்ளியில் சேர்த்து விடுங்கள். ஒழுக்கத்தில் எப்போதுமே சிறந்து வாழும் கல்வியைப் பெறவேண்டுமா! R K R பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்று பெற்றோர்கள் சொல்லுமளவு உயர்ந்திருக்கிறோம். இந்தப் பெருமையை காலமும் தக்கவைத்துக் கொள்ள இன்னும் இன்னும் எங்கள் கடின உழைப்பை தந்து கொண்டே இருப்போம். எங்கள் மாணவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது தான் எங்களின் பணிக்கு கிடைக்கிற மிகப்பெரிய வெகுமதி. அந்த வெகுமதி பெருகி கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் அவா.
அதிகப்படியான கல்விக்கூடங்களின் வரவு கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்டது என்கிற குற்றச்சாட்டு அங்கங்கே எழுகிறதே?
ஒரு சிலர் செய்யும் வியாபார போக்கு இப்படிப்பட்ட எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி உருவாகி இருப்பது ஒரு நல்ல விசயம்தான். இதனால் எல்லோரும் பரவலாக உயர்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எந்தக் கல்வி நிறுவனம் நல்லது என்பதை உரியவர்கள் கண்டறிய வேண்டும்.
“குணம்நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
குணமும் இருக்கும் (நல்லதும் இருக்கும்), குற்றமும் இருக்கும் (தீயதும் இருக்கும்) இரண்டையும் பட்டியலிட்டு குணம் நன்றாக இருந்தால் எடுத்துக் கொள்ள வேண்டும். குற்றம் நன்றாக இருந்தால் விட்டுவிட வேண்டும்.
இன்று நீங்கள் அடைந்திருக்கும் இந்த இடத்தைப் பெறநீங்கள் இழந்ததாக நினைப்பது…
25 வயதுக்குள் குடும்ப பொறுப்பையும், தலைமையாசிரியர் பதவியையும் ஏற்று எனக்குள் ஒரு கட்டுப்பாட்டினை வளர்த்துக் கொண்டதால், இளமையின் இனிமையான அனுபவங்களை இழந்து இருக்கிறேன். சொல்ல முடியாத கசப்பான அனுபங்களைச் சுமந்து இருக்கிறேன். பலசோதனைகளையும் வேதனைகளையும் கடந்து இருக்கிறேன். ஓய்வில்லாத கடும் உழைப்பினால் என் உடலை வருத்தி இருக்கிறேன். என் உழைப்பையே உண்டு வளர்ந்து நன்றி மறந்து தீது செய்தவர்களோடு ஒன்றாக இருந்த காலங்களை மறந்து இருக்கிறேன். என்மனம் காயப்பட்ட போதெல்லாம் என் உடனிருந்து மருந்திட்ட நெஞ்சங்களை நேசித்து இருக்கிறேன். உழைப்பினால் உயர்ந்த உத்தமர்களின் அனுபவங்களை வியந்து போற்றி பின்பற்றியிருக்கிறேன். கடுமையான போராட்டத்திற்குப் பின்பு தன்னம்பிக்கையினால் வெற்றிகளைச் சுவைத்திருக்கிறேன்.

ஏ. நாகூர் RKR அறக்கட்டளை கல்விக்கு அளித்து வரும் பங்களிப்பு குறித்து…

கடந்த 2005 – 06 கல்வி ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் மெட்ரிக் 470 / 500 மதிப்பெண், ஸ்டேட் போர்டு 480 / 500 மதிப்பெண் பெற்று தஓத கல்வி நிறுவனத்தில் த.ஓ.த. மேல்நிலைப்பள்ளி மற்றும் தஓத எழ்ந்ள். மெட்ரிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும், மற்றவகுப்பு மாணவர்களுக்கும் இலவசமாக பள்ளிக்கட்டணம், விடுதிக் கட்டணம் வழங்குகிறது. ஏழ்மையான கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு முழுபள்ளிக் கட்டணச் சலுகையும், மாணவ விடுதி சலுகையும் சேர்த்து மாணவர்கள் செலவினங்களை ஏற்றுக் கொண்டு அவர்களின் வெற்றிக்கு சேவை புரிந்து வருகிறது.
RKR மேல்நிலைப்பள்ளி 2005-லிருந்து நடப்பாண்டுவரை அளித்த இலவச கல்விச்சேவையில், மாணவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு பள்ளிக்கட்டணமாக ரூ,2,82,000- ம்/ விடுதிக்கட்டணமாக 3,57,000- ம் மொத்தம் 6,40,000ம் இரு ஆண்டுகளுக்கு பள்ளிக்கட்டணம் விடுதிக்கட்டணம் மொத்தம் 13,12,000 ஏ. நாகூர் அறக்கட்டளை இந்தச் செலவினத்தை ஏற்றுக் கொள்கிறது.
அதேபோல்
RKR மெட்ரிக் பள்ளி 2003ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை அளித்த இலவச கல்விச்சேவையில், மாணவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு பள்ளிக் கட்டணமாக ரூ,2,84,000ம் / விடுதிக்கட்டணமாக 1,47,000-ம் மொத்தம் 4,31,000 இரு ஆண்டுகளுக்கு பள்ளிக்கட்டணம் / விடுதிக்கட்டணம் மொத்தம் 8,62,000 ஏ. நாகூர் அறக்கட்டளை இந்தச் செலவினத்தை ஏற்றுக் கொள்கிறது.
ஒட்டு மொத்தமாக எல்லா கல்வி நிறுவனங்களும் இணைந்து இலவசக் கல்விக்காக ஏ. நாகூர் அறக்கட்டளை சார்பாக 55 லட்சம் வழங்கப்படுகிறது.
2005 – 06 முதல் தற்போது வரை 328 மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள். மேலும் LKG. முதல் 10ஆம் வகுப்பு வரை கல்வி மற்றும் தனித்திறமையில் முதன்மை பெற்ற90 மாணவர்களுக்கு இலவசக்கல்வியை ஏ. நாகூர் தஓத அறக்கட்டளை வழங்கி வருகிறது.

தமிழக அளவில் / தேசிய அளவில் உயரிய விருதுகள் பெறகாரணமாக நீங்கள் கருதுவது…

மாநில அளவில் எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடிய ஆசிரியராக உயர்ந்ததற்கு, தமிழக, தேசிய அளவில் விருதுகள் பெற்றதற்கு எனது கடின உழைப்புதான் காரணம். பெரும்பாலும் பணிக்காலம் முடிவதற்கு ஓராண்டுகள் இருக்கும்போதோ, பணி நிறைவு பெறும் போதோ மட்டும் தரப்படுகிற தேசிய விருதை எனது 49வது வயதில் கல்விச் சேவைக்காக பெற்றேன் என்பது எனக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தருகிறது. 450, 460 மதிப்பெண்கள் குவித்த மாணவ மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டு 100 சதவிகிதம் தேர்ச்சி என்று சொல்லிக் கொள்பவர்களாக இல்லாமல் குறைந்த, நடுநிலையான மதிப்பெண்கள் பெற்றமாணவ மாணவியர்களைச் சேர்த்து அவர்களை ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வைப்பதுடன் தொடர்ந்து 25 ஆண்டுகளாக நூறு சதவிகிதம் தேர்ச்சி கொடுக்கக் கூடியவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் எங்களின் கடின உழைப்பின் மேல், ஒழுக்கத்தின் மேல், தன்னம்பிக்கையின் மேல் இருக்கின்ற அசையாத நம்பிக்கை தான் காரணம்.

ஒழுக்கம், கண்டிப்பு உங்களிடையே ஓங்கி நிற்கக் காரணம்?

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது இந்தியா, சீனா போர் நடைபெற்றது . இராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்புக்காக ட.ந.எ. கல்லூரிக்கு வருகை புரிகிறார்கள். எனக்குள் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவேண்டும் என்கிற ஆர்வம் சிறு வயதில் இருந்தே இருந்த காரணத்தினால் அப்பணியில் சேர ஆர்வம் காட்டினேன். தந்தை அனுமதி கொடுத்தாலும், தாயின் பாசம் தடுத்தவிட்டது. அந்த இராணுவப்பணியின் மீது இருந்த ஆர்வத்தின் வெளிப்பாடுதான் ஒழுக்கம், கண்டிப்பு நிறைந்த இராணுவ நடைமுறைபோல் பள்ளியின் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டேன். கூடவே தன்னம்பிக்கை, உழைப்பு, சாதிக்க வேண்டும் என்கிற வெறி என்னை சாதிக்க வைத்தது.
கண்டிப்புக்கு பெயர் பெற்றஆசிரியர் நீங்கள். உங்கள் மீது மாணவர்களின் பார்வை என்பது…
கண்டிப்புடன் இருப்பதால் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு ஒருவேளை பிடிக்காது போகலாம். ஆனால் படித்து முடித்து, நல்ல மதிப்பெண்ணைப் பெற்று பாராட்டுக்களைப் பிறரிடம் பெறும்போது தெய்வமாகவே உங்களைப் பார்க்கிறோம் என்கிறார்கள். தஓத மேல்நிலைப்பள்ளி மற்றும் தஓத கிரிக்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்குள் நுழையும் போதே பள்ளியின் செயல்பாட்டை அறிந்து கொண்டு தான் மாணவ மாணவிகள் வருகிறார்கள். அதனால் ஆரம்பத்திலிருந்தே இங்குள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரையும் முன்னேற்றத்தின் மூலதனமாகவே கருதுகிறார்கள். ஒவ்வொரு ஆசிரியர்களும் கடினமான உழைப்பை இப்பள்ளியில் தந்து வருகிறார்கள். அவர்களின் உழைப்பின் பலனும் மாணவர்களின் சாதிக்கும் ஆர்வமுமே இப்பள்ளியின் சாதிப்பாக மலர்ந்து வருகிறது.

நீங்கள் ஆசிரியர்களை உருவாக்கும் விதம் குறித்து…

இரண்டு வருடங்கள் மாணவர்களைப் போல ஆசிரியர்களும் கடின உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும்.
பாட வகுப்புகள் எடுக்கும் முறை / எப்படி பாடத்தை தயார் செய்து கொண்டு மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் என்பது குறித்த விதிமுறை. மேலும், கேள்விகளைஉருவாக்கிக் கொண்டு அதற்கு பதில் தருவது எப்படி என்பது குறித்து அறிவுறுத்தப்படுவார்கள்.
நேரம் தவறாமை, கடின உழைப்பு, நன்னடத்தையைத் தவறாது கடைபிடித்தாக வேண்டும்.
தஓத பள்ளியின் சிறந்த ஆசிரியர்களாக இருந்த பலர் அரசுப்பள்ளிகளில் மாவட்ட அளவில் இன்று அவரவர் பாடப்பிரிவில் தனித்துவம் மிக்கவர்களாக சிறந்து விளங்கி வருகிறார்கள்.
புதிதாக வரும் ஆசிரியர்களுக்கு நிரம்ப ஊக்கமும் தன்னம்பிக்கையும் தந்து சாதாரண மாணவர்களையும் சாதிக்கக் கூடியவர்களாக மாற்றும் வல்லமையை அவர்களிடையே உருவாக்குகிறோம்.ஒரு காலகட்டத்தில் மாணவர்களை அடித்து ஒழுக்கத்தை கடைபிடிக்க வைத்ததை இப்போது அடியாமல் ஒழுக்கத்தை கடைபிடிக்க வைக்க நீங்கள் மேற்கொண்டு வரும் முயற்சி குறித்து?
எங்கள் பள்ளியைப் பொறுத்த வரை இன்றளவும் ஆசிரியர்களைப் பார்த்து ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து விடுகிறார்கள் மாணவர்கள். காரணம் அன்று மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க நாங்கள் முன்பு எடுத்த கண்டிப்பு முயற்சிக்கான பலன், தண்டனை தாராமலேயே இப்போது கிடைத்துள்ளது. அடித்து படிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது மாணவர்கள் உயர்ந்த ஆளுமைத் திறமையும், அறிவுக்கூர்மையும் உடையவர்களாக உள்ளார்கள்.

ஆசிரியரிடம் அவசியம் இருக்கவேண்டிய குணநலன்களாக நீங்கள் கருதுவது?
1. ஒழுக்கம்
2. வகுப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறமை
3. கற்றுக்கொடுப்பதில் பிரமாதம் என பெயரெடுக்கும் ஆற்றல்
4. சொல்லும் வண்ணம் முதலில் தன்னை மாற்றிக் கொள்ளும் பாங்கு
ஒரு நிறுவனத்தின் / ஒரு நண்பனின் வழி காட்டுதல் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடக் கூடுமா?
நிச்சயமாகக் கூடும். பாரதிராஜா என்கிற மாணவன் ஒன்பதாம் வகுப்பில் இரண்டு முறை தேர்ச்சி பெறாத மாணவனாக எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தான். பத்தாம் வகுப்பில் நடுநிலையான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தான். நானே விருப்பப்பட்டு 11ம் வகுப்பில் பொருளாதாரப் பிரிவில் சேர்த்தேன். 12ம் வகுப்பில் 1100 மதிப்பெண் எடுத்தான். நல்ல கல்லூரியில் சேர்ந்து கொண்டு நல்ல நட்பு வட்டத்தை அமைத்துக் கொள் என்று அறிவுறுத்தினேன். திருச்சி செயின்ட்ஜோசப் கல்லூரியில் மெரிட்டில் இடம் கிடைத்துப் படித்தான். ஐ.அ.ந. தேர்வுக்கு தயார்செய்து கொண்டிருந்த நண்பனை நட்பாக்கிக் கொண்டான். அந்த மாணவனும் பாரதிராஜாவை உயர்த்திப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டு ரிசர்வ் வங்கி தேர்வு எழுதுவதற்கு உதவியிருக்கிறார். நண்பனின் உதவியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று இன்று அம்மாணவர் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
ஒருவரின் வளர்ச்சி It depends upon the Friends, it depends upon the Institution, and It depends upon the School என்று தான் அமைகிறது.
ஒருவருடைய நன்னடத்தை, வாழ்க்கைத்தரம், இலக்கு, தன்னம்பிக்கை, வெற்றி ஆற்றல் உயர்வதற்கு காரணமாவது ஒருவர் படிக்கும் கல்வி நிலையத்தின் தரத்ததை பொறுத்து அமையும் என்பது உண்மை.

மாணவ மாணவிகளுக்கு நீங்கள் தரும் அறிவுரை…

தன்னம்பிக்கை, ஓய்வில்லாத உழைப்பு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து செயல்படும் மாணவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
முயற்சி என்பது வேள்வி உழைப்பு என்பது தவம் சாதனை என்பது வரம்
தவம் இருந்தால் தான் வரம் கிடைக்கும். யாரொருவர் உழைக்கிறாரோ அவர் தான் முன்னே வர முடியும் என்பதை உணர வேண்டும். தியாகம் செய்தவர்கள் மட்டுமே உயர்வடைய முடியும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் தூக்கத்தை, பொழுது போக்கை தியாகம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்,
“Enjoy now suffer later or Suffer now enjoy later”
இப்பொழுது கஷ்டப்பட்டு பலனை பின்னாளில் அனுபவிக்கப் போகிறீர்களா? இப்பொழுது விளையாடி பின்னாளில் கஷ்டப்படப் போகிறீர்களா? எங்கள் பள்ளியின் வகுப்பறை ஒவ்வொன்றிலும் நாங்கள் எழுதியிருக்கும் வாசகம் இதுதான்.

சமச்சீர் கல்வி குறித்து?

காலத்திற்கு ஏற்றமாற்றம் அவசியம் தான். ஆனால் இந்தக் கல்வி முறை பலன்தருமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
தாய்மொழிக்கல்வி சிறந்ததா?
சிறந்தது. தாய்மொழியில் படித்தால் அறிவு அதிகமாகும். செயல்பாடு அதிகமாகும். அயல் மொழியில் படித்தால் புரிந்து கொள்ளுதலில், சிந்திப்பதில் வேகம் குறைவாகும். புரிந்து கொள்ளுதல், சிந்தித்தல், ஆர்வம் காட்டுதல் போன்றவற்றில் தாய்மொழிக்கல்வி 100 சதவிகிதம் வெற்றியையும், அயல்மொழி 60 சதவிகிதம் வெற்றியையும் தரும். வருங்காலங்களில் அயல் மொழிகளில் ஆங்கிலம் அத்தியாவசியமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

உங்களைச் செதுக்கிய நூல்கள்…

பள்ளியில், கல்லூரியில், அனுபவத்தில் கற்றதைவிட நூல்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது அதிகம். சான்றோர்களின் வாழ்வின் சாதனைகள் சுயமுன்னேற்றநூல்கள், கவிதை நூல்கள், ஆன்மீக நூல்கள், தன்னம்பிக்கை வளர்க்கும் நூல்கள் இன்றும் அதிகம் விரும்பி படித்துக் கொண்டே இருக்கிறேன்.

இளைய தலைமுறைக்கு நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புவது?

“உளிபட்டு வலிக்குமென்றால் கல் சிலை ஆவது எப்போது?” சில இடர்பாடுகள், சில சோதனைகள், சில கண்டிப்பு ஆசிரியர்களைப் பெரிய சிற்பி ஆக்குகிறது. ஒரு சிறந்த சிற்பியின் உழைப்பில் கவனிப்பில் அற்புதமான மாணவன் உருவாகிறான். பொதுவாகவே மக்கள் மன நிலையே மாறவேண்டும். எல்லா வசதிகளும் இருக்கிறது. எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இதில் அனுபவிப்பது என்பது 22 வயதிற்குமேல் தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
இளைஞனை முதலில் மனிதனாக (Human Values) உருவாக்க வேண்டும். அதிகமாக மனிதப் பண்புகள் போதிக்கப்பட வேண்டும்.
ஒரு நிர்வாகத்தை திறம்பட நடத்த நீங்கள் தரும் வெற்றிச் சூத்திரம்…
குணம் நாடி குற்றம் நாடி என்கிற திருக்குறள் தான் வெற்றிக்கு தாரக மந்திரம். அந்தக் குறளின் பிரதிபலிப்பான நரஞப (Strength, Weakness, Opportunities and Threats) என்பது தான் இப்போது வெற்றிக்கு வழிகாட்டியாக உள்ளது. ஒரு தொழிலைத் தொடங்குவதற்குத் தேவையான பலம், இத்தொழிலைத் தொடங்குவதற்கு முன்பின் உள்ள பலவீனம், இத்தொழிலால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள், பயமுறுத்தல்கள் பற்றி நன்கு ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்தறிந்து ஒரு தொழிலை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.
உருக்கமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…
தாய் தந்தையின் கஷ்டத்தை உணருங்கள். தான் எப்படி இருந்தாலும் தங்கள் பிள்ளைகள் நன்றாக கல்வி கற்று உயர வேண்டும் என்பதற்காக காலுக்கு செருப்பின்றி சரியான நேரத்திற்கு உணவின்றி கஷ்டப்படும் தாய் தந்தையரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள்.
நீங்கள் குழந்தையாய் இருக்கும் போது சிரித்தால் சிரித்தும், அழுதால் அழுதும், உங்களுக்கு உடல்நிலையில் பாதிப்பென்றால் துடியாய் துடித்து, மருத்துவம் பார்த்து, அதையும் மீறி ஆலயம் சென்று நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றியும் உங்களை வளர்க்க எத்தனை பாடுபடுகிறார்கள் பெற்றவர்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட அவர்களுக்கு நீங்கள் தரும் பரிசு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்று நீங்களே தீர்மானியுங்கள்.
பெற்றதாய் தந்தைக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடனை இந்தத் தலைமுறையில் தீர்க்காமல் எந்தத் தலைமுறையில் தீர்க்கப்போகிறீர்கள். உங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைப் படித்து நல்ல மதிப்பெண் எடுத்து தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
இப்போது நீங்கள் சாதிக்காமல் போனால், எப்போதும் நீங்கள் சாதிக்க முடியாமல் போகலாம். ஆகவே எழுங்கள்Ð எழுச்சியுடன் தேர்வு எழுதுங்கள்Ð சாதிக்கும் வல்லமை உங்களிடம் நிரம்ப இருக்கிறதுÐ நம்பிக்கையுடன் தேர்வை சந்தியுங்கள்! சாதியுங்கள்! வாழ்த்துக்கள்!!

எதிர்கால இலக்கு…

கலை மற்றும் அறிவியல் கல்லூரி / தொழில் நுட்பக்கல்லுட்ரி இஆநஇ பள்ளி / ஒரு Public School இவற்றை ஆரம்பிக்க வேண்டும். மாணவர்களுக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
உங்கள் குடும்பம் குறித்துச் சொல்லுங்களேன்…
மனைவி த. ஞானசௌந்தரி ஆ.அ. மகன் திரு. R.K.R. கார்த்திக்குமார் B.E., M.Sc Mg (UK) RKR GrKS மெட்ரிக் பள்ளியைக் கவனித்து வருகிறார். மேலும் RKR கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவராக இருந்து கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
மருமகள் ஒ.தாரணி, ஆ.Com., M.B.A.
மகள் S. சண்முகபிரியா, B.Sc.
மருமகன் செந்தில் நாச்சிமுத்து B.E., M.S. (US)
பேத்திகள்: R.K. ஸ்ரீ ஷா மீனா, R.K. c வர்ஷா
பேரன்கள்: கவின் N. செந்தில், கதிர் N. செந்தில்
‘தன்னம்பிக்கை இதழ்’ உங்கள் பார்வையில்…
நிறுவனர் டாக்டர் இல.செ.க. அவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர். மக்கள் மனதில் “தன்னம்பிக்கை” கருத்துக்களை விதைக்க தற்பொழுது நிறையப் பேர் வியாபார ரீதியாக வந்திருக்கிறார்கள். ஆனால் இதனை நினைக்காத காலகட்டத்தில் 30 வருடங்களுக்கு முன்னமே தன்னம்பிக்கையை விதைத்தது டாக்டர் இல.செ.க. அவர்கள். நமது ஊரில், நமது பகுதியில் “தன்னம்பிக்கை” என்றவார்த்தையைப் பிரபலப்படுத்தியது இல.செ.க. தான். கல்லூரிப் பருவத்தில் இருந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் இவரது தன்னம்பிக்கை நூல்களை வாசித்து முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அந்த அளவு அவர் இளைஞர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை விதைத்திருக்கிறார். எங்கள் பள்ளியில் சாதிக்கும் குழந்தைகளுக்கு “தன்னம்பிக்கை” இதழைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறோம். மனது தொய்வு அடைகிறபோது இதழை கேட்டு அவர்களே வாங்கிப் படித்து ஓர் உத்வேகத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்.
RKR பள்ளியில் படித்து சாதித்தவர்களின் கருத்து.
திரு. K.M. சுப்பிரமணியன், நிர்வாக இயக்குநர்,
K.M. நிட்வேர், திருப்பூர்.
10ம் வகுப்பில் தேர்ச்சிக்குத் தேவையான மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தேன். படித்தால் RKR பள்ளியில் படிப்பது என்றமுடிவுடன் தஓத அவர்களைச் சந்தித்தேன். கணக்கு, அறிவியல் பிரிவு பாடம் எடுக்க விருப்பம் தெரிவித்தேன். அது கடினமான பாடப்பிரிவு உன்னால் முடியுமா என்றார். கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று உறுதி கூறினேன். என் தன்னம்பிக்கையைப் பாராட்டி அந்தப் பிரிவே தந்தார்.
12ம் வகுப்பில் 1100 மதிப்பெண்கள் எடுத்து சாதித்தேன். மாணவர்களின் மனநிலையை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் தஓதன் தயாரிப்பில் நான் இன்று ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்து பலருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறேன். என் வாழ்வின் வெற்றியில் தஓதன் பங்களிப்பு அதிகம்.
திரு. செந்தில்குமர்ô, I.T.C.

RKR பள்ளியில் படித்தபோது அங்கு தஓத மற்றும் ஆசிரியர்கள் கற்பித்துதந்த தன்னம்பிக்கை, தைரியம், ஒழுக்கம் போன்றவை எனக்கு ஐ.ப.இ. நிறுவனப் பணியில் பயிற்சிக் காலத்தின் போது பெருமளவு பயன்பட்டது. அவர்கள் தந்த படிப்புடன் கூடிய வாழ்க்கைப் பயிற்சிகள் தான் என்னை I.T.C. யில் நிலைக்க வைத்தது.
டாக்டர் M. விமலன், M.B.B.S., சென்னை
நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை நான் எட்டுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது தஓத பள்ளியும் அதன் ஆசிரியர்களும் தான். இன்றைய என் வாழ்வு அவர்கள் தந்தது.
திரு. பூபதி
அதிகக் குறும்புக்கார மாணவனாக, ஒரே வகுப்பில் நான்கு ஆண்டுகள் படிப்பவனாக இருந்த என்னையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டு சமுதாயத்தில் பிறர்போற்றும் மனிதனாக உயர்த்திய பெருமை தஓத பள்ளியையே சாரும். ஏட்டுப் பாடத்தோடு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுத்து காலமெல்லாம் நன்றாக வாழ வழிகாட்டும் ஆலயம் RKR பள்ளி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2011

மு. மேத்தா கவிதை….
கவிதைகள்
முயன்றேன் வென்றேன்
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
உனக்குள்ளே உலகம்-10
வெற்றி விடியல்
நலந்தானா
பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்
வளமான சிந்தனை
மனதினை தெளிவு செய்
மதிப்பு, மரியாதை
தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்! வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!
மருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
விதைகளால் ஓவியம்
ஜெயிப்பது நிஜம்
உங்களால் எதையும் சாதிக்க முடியும்
உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்