Home » Articles » கவிதை

 
கவிதை


admin
Author:

புதுமை காண்பாய்

–    பாவலர். கருமலைத்தமிழாழன்,
ஓசூர்

கைகளுக் கெட்டும் பூவைக்
காண்பதில் பெருமை என்ன
கைகளுக் கெட்டா உச்சிக்
கனியினைப் பறிக்கும் போதே
கைகளின் முயற்சி தன்னைக்
கண்டிடும் உலகம் போற்றும்
கைகளில் உழைப்பைச் சேர்த்தே
கவின்நலம் பெறுவோம் வாழ்வில்

இன்றைய வாழ்வில் இன்பம்
இயற்றலில் பெருமை என்ன
நன்றென உலகம் போற்றும்
நாளைய இலக்கைக் கண்டு
வென்றிடும் முயற்சி யொன்றே
விளைத்திடும் புகழை யிங்கே
நன்றிதை நெஞ்சில் ஏற்று
நடந்திடு என்றும் இன்பம்

கதிரென அறிவுக் கீற்றால்
கால்களைப் பரப்பிடு எங்கும்
நதியென ஓடி நன்றாய்
நாற்புறம் செயலை நாட்டு
மதிதனில் முழுமை போன்று
மனத்தினில் வலிமை கூட்டு
புதிதென ஆக்கு ஞாலம்
புதுமையைக் கண்டுனை ஏத்தும்

சாதனையாளன் ஆக வேண்டுமா?

–    சிகார் பூங்குன்றன்
தஞ்சாவூர்

நான் –
சாதனையாளன்
ஆக வேண்டும்!
அதற்கு என்ன
செய்ய வேண்டும்?

சாதனையாளர்களின்
சரித்திரத்தை
முதலில் – படிக்க வேண்டும்

எந்தத் துறையில்
சாதனை புரிய
விரும்புகிறோம் – என்பதை
முடிவெடுத்து
முடிச்சுப் போட்டுக்
கொள்ள வேண்டும்!

அந்தத் துறையில்
என்னென்ன
சாதக – பாதகங்கள்
இருக்கின்றன – என்பதை
ஆராய்ந்து பார்த்து
அட்டவணை இடவேண்டும்

சாதகங்களைப்
பயன்படுத்தி,
எதிர்ப்படும் – பாதகங்களை
எப்படி முறியடித்து
முன்னேற்றம் காண்பது – என்று
சிந்திக்க வேண்டும்

சிந்தித்ததை ஒன்றிணைத்து,
செயல்படுத்தத்
திட்டமிடல் வேண்டும்
திட்டமிட்ட படி
செயலாற்றும் பொழுது,
எதிர்ப்படும்
இடர்ப்பாடுகளை
எதிர்த்து நிற்கும்
துணிவு வேண்டும்!

இடையில் வந்து
எவரேனும்
இகழ்ந்துரைப்பின்
அதைத் தாங்கும்
மனவலிமை வேண்டும்;
மறுத்துரைக்கா
பொறுமை வேண்டும்!

வெற்றி என்னும் குறிக்கோளை
விட்டு எட்டி நகராமல்
அயராத உழைப்பை
அதற்களிக்க வேண்டும்!

அப்புறம் என்ன?
வெற்றி உன்னைத் தேடிவரும்!
புகழ் மங்கை மாவையுடன்
புறப்பட்டு வருவாள்
கழுத்தில்
போட்டு உனை வரவேற்க!

பிறகு பார்!
சாதனையாளர் பட்டியலிலே
உன் பெயரும் இடம்பெற்று
ஒளிவீசிக் கொண்டிருக்கும்!

 

No Comments

  1. […] கைகளுக் கெட்டும் பூவைக் காண்பதில் பெருமை என்ன கைகளுக் கெட்டா உச்சிக் கனியினைப் பறிக்கும் போதே கைகளின் முயற்சி தன்னைக் கண்டிடும் உலகம் போற்றும் கைகளில் உழைப்பைச் சேர்த்தே கவின்நலம் பெறுவோம் வாழ்வில் – இன்றைய வாழ்வில் இன்பம் இயற்றலில் பெருமை என்ன நன்றென உலகம் போற்றும் நாளைய இலக்கைக் கண்டு வென்றிடும் முயற்சி யொன்றே விளைத்திடும் புகழை யிங்கே நன்றிதை நெஞ்சில் ஏற்று நடந்திடு என்றும் இன்பம் – கதிரென அறிவுக் கீற்றால் கால்களைப் பரப்பிடு எங்கும் நதியென ஓடி நன்றாய் நாற்புறம் செயலை நாட்டு மதிதனில் முழுமை போன்று மனத்தினில் வலிமை கூட்டு புதிதென ஆக்கு ஞாலம் புதுமையைக் கண்டுனை ஏத்தும் – ————————– பாவலர். கருமலைத்தமிழாழன், ஓசூர் நன்றி:http://thannambikkai.org/2011/01/20/4463/ […]

  2. […] நான் – சாதனையாளன் ஆக வேண்டும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்? – சாதனையாளர்களின் சரித்திரத்தை முதலில் – படிக்க வேண்டும் – எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகிறோம் – என்பதை முடிவெடுத்து முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும்! – அந்தத் துறையில் என்னென்ன சாதக – பாதகங்கள் இருக்கின்றன – என்பதை ஆராய்ந்து பார்த்து அட்டவணை இடவேண்டும் – சாதகங்களைப் பயன்படுத்தி, எதிர்ப்படும் – பாதகங்களை எப்படி முறியடித்து முன்னேற்றம் காண்பது – என்று சிந்திக்க வேண்டும் – சிந்தித்ததை ஒன்றிணைத்து, செயல்படுத்தத் திட்டமிடல் வேண்டும் திட்டமிட்ட படி செயலாற்றும் பொழுது, எதிர்ப்படும் இடர்ப்பாடுகளை எதிர்த்து நிற்கும் துணிவு வேண்டும்! – இடையில் வந்து எவரேனும் இகழ்ந்துரைப்பின் அதைத் தாங்கும் மனவலிமை வேண்டும்; மறுத்துரைக்கா பொறுமை வேண்டும்! – வெற்றி என்னும் குறிக்கோளை விட்டு எட்டி நகராமல் அயராத உழைப்பை அதற்களிக்க வேண்டும்! – அப்புறம் என்ன? வெற்றி உன்னைத் தேடிவரும்! புகழ் மங்கை மாவையுடன் புறப்பட்டு வருவாள் கழுத்தில் போட்டு உனை வரவேற்க! – பிறகு பார்! சாதனையாளர் பட்டியலிலே உன் பெயரும் இடம்பெற்று ஒளிவீசிக் கொண்டிருக்கும்! – ————————— சிகார் பூங்குன்றன் தஞ்சாவூர் நன்றி:http://thannambikkai.org/2011/01/20/4463/ […]

Post a Comment


 

 


January 2011

மனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து
என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்
காலத்தை வென்று வாழும் மகாகவி பாரதி
என் பதில்களுக்கான கேள்விகள் எங்கே?
கவிதை
நலந்தானா
கணினி தொழில்நுட்பம்
இருளிலும் விடியல்
நம்பிக்கை
நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
உனக்குள்ளே உலகம்-8 நேரந்தான் இல்லையே!
உடலினை உறுதி செய்
நூற்றுக்கு நூறு மார்க்
உள்ளத்தால் உள்ளலும் தீதே
வெற்றி நிச்சயம்
முயற்சி தரும் வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்