Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

எல்லோரும் வாழ வேண்டும் நல்லோர்கள் எண்ணமிது என்பது பாரதியின் வாக்கு.“வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அனைவரின் இலட்சியமுமாகும். அதற்கு நல்ல எண்ணங்கள், நல்ல மனநிலை, நல்ல சூழ்நிலை ஆகியவை தேவை. இவை தாமாக வராது. நாமாகத்தான் தேடிப்பிடித்து அமைத்துக் கொள்ள வேண்டும்.
எந்தத் தொழில் செய்தாலும் அதில் ஒரு ஈடுபாடும், தோல்வியே வரினும் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து செயல்படுகின்ற துணிவும் வேண்டும்.
நம்முள் இருக்கும் காமம், கோபம், சோம்பல் முதலான அப்ப்புறப் பகைகளை நாமே கண்டறிந்து களைந்து எறியும் தெளிவும் துணிவும் மிகுதியாக வேண்டும்.
நம்மோடு வாழும் மனிதர்களை நன்கு புரிந்து கொள்வதும் எல்லோரும் வாழ வேண்டும் என்ற விரிந்த மனத்தை வளர்த்துக் கொள்வதும், வளமான வாய்ப்பை நோக்கிச் செல்லும் படிகளாகும்.
வளமான வாழ்வு பொருளாதாரத்தால் மட்டும் கிடைத்து விடுவதில்லை. பொருளாதாரம் இல்லாமல் எதுவும் இல்லை என்றாலும் நல்ல பண்புகளும் பொது நலநோக்கும் சேர்ந்தால்தான் ஒரு வாழ்வு முழுமை பெறுகிறது” என்கிறார் டாக்டர் இல.செ.க. அவர்களின் சிந்தனையுடன் நமது குறைகளைக் களைந்து நம்மில் நிறைகளை வளர்ப்போம். அனைவருக்கும் இனிய 2011 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2011

மனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து
என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்
காலத்தை வென்று வாழும் மகாகவி பாரதி
என் பதில்களுக்கான கேள்விகள் எங்கே?
கவிதை
நலந்தானா
கணினி தொழில்நுட்பம்
இருளிலும் விடியல்
நம்பிக்கை
நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
உனக்குள்ளே உலகம்-8 நேரந்தான் இல்லையே!
உடலினை உறுதி செய்
நூற்றுக்கு நூறு மார்க்
உள்ளத்தால் உள்ளலும் தீதே
வெற்றி நிச்சயம்
முயற்சி தரும் வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்