– 2011 – January | தன்னம்பிக்கை

Home » 2011 » January

 
 • Categories


 • Archives


  Follow us on

  மனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து

  K.P.R. மில்ஸ் நிறுவனர் திரு. இராமசாமி

  நேர்முகம் என். செல்வராஜ்

  பிறந்தது… வளர்ந்தது… படித்தது…
  பெருந்துறை விஜயமங்கலத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள கள்ளியம்புதூர் நான் பிறந்த ஊர். மூன்று சகோதரர்கள். விவசாயக் குடும்பம். அப்பா பழனிசாமிக் கவுண்டர், அம்மா செல்லம்மாள். செய்யும் தொழிலில் எப்போதும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பது அம்மாவிடம் கற்றுக்கொண்டது,

  Continue Reading »

  என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்

  தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி சேர்க்கை – 2011
  பேராசிரியர். பி. மூர்த்தி செல்வக்குமரன்
  கல்வி ஆய்வாளர்
  செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம்
  ஈரோடு

  இந்தியாவின் வளர்ச்சி தொழில் துறையை பெரிதும் நம்பி இருப்பதும், தொழில் வளர்ச்சி ஆண்டுக்கு 9% என்ற அளவில் இருப்பதும், தொழில் கல்வியை நாம் இன்னும் பல வகையில் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதனைக் காட்டுகிறது. சிறப்பான அளவில் வளர்ந்துவிடும் இந்தியாவில், தொழிற்கல்வி செல்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. Gross Enrollment Ratio (GER) எனப்படும் உயர்கல்விக்குச் செல்லும் மொத்த மாணவர்களின் தற்போதைய எண்ணிக்கை 11%லிருந்து 2020ம் ஆண்டிற்குள் 15%ஆக உயர்த்த வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். அதன் வழியே பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகின்றது.
  தமிழ்நாட்டில் தொழிற்கல்வியை பொறுத்த வரையில் அதிக அளவில் 446 பல்தொழில்நுட்பக் கல்லூரிகளும், 491 பொறியியல் கல்லூரிகளும், 26 தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. தற்பொழுது அதிக வேலை வாய்ப்புள்ள துறையாக விளங்கிவரும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தாண்டு பொறியில் கல்வியை முடிக்கும் ஒரு மாணவர் சுமார் ஆண்டுக்கு 4.00 இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறும் தகுதி உள்ளனர். அந்த அளவிற்கு தொழில் துறையும் அதில் பணியாற்றும் பொறியாளர்களும் உள்ளனர்.
  ஒவ்வொரு பெற்றோரும் தன்னுடைய மகன் அல்லது மகளை ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆக்க வேண்டும் என்ற எண்ண மிகுதியால் எந்தொரு தெளிவும் இல்லாமல் கல்லூரி அல்லது பாடப்பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பின்விளைவுகளை கண்டு வருத்தப்படுகின்றனர்.
  உயர்கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள பல தகவல்களை அறிந்தபின்பு அவர்கள் தங்களுடைய தேர்வினை உறுதி செய்வது சரியான முறையாகும்.
  ·    மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமை
  ·    மாணவர்களின் தகுதி மற்றும் மதிப்பெண்கள்
  ·    கல்லூரியின் தரம் மற்றும் பாடப்பிரிவுகள்
  ·    தேர்வு செய்த துறையின் வருங்கால வாய்ப்புகள்
  ·    தேர்வு செய்த படிப்பின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்
  மாணவர் ஒருவர் தன்னுடைய சரியான உயர்கல்வி வாய்ப்பினை தேர்வு செய்வதன் மூலம் தன்னுடைய வளமான எதிர்காலத்தை உறுதி செய்கின்றார். தமிழ்நாட்டில் 491 பொறியியல் கல்லூரிகளும், அவற்றில் கற்பிக்கப்படும் சுமார் 50 வகையான பாடப்பிரிவுகளும் அவற்றில் உள்ள சுமார் 1,90,000 இடங்களும் பற்றிய விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
  கடந்த ஆண்டில் (2010) நடந்து முடிந்த பொறியியல் சேர்க்கை முடிவில் சுமார் 31,000 காலி இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.

  கட்டிடப் பொறியியல் (Civil Engineering)
  20 ஆண்டுகளுக்கு முன்பாக பொறியியல் துறை என்றால் அது கட்டிடப் பொறியியலை மட்டுமே குறித்த காலம் மாறி தற்பொழுது 50க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. அந்த அளவிற்கு பழமையான துறையாக கருதப்படும் இத்துறை தற்பொழுது தனக்குரிய முறையில் தனது வளர்ச்சியைக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் தற்பொழுது Civil Engineering படிப்பிற்கு 230 கல்லூரிகளும், அவற்றில் சுமார் 15,000 இடங்களும் உள்ளன.
  தமிழக அரசு தமிழ்வழியாக கட்டிடப் பொறியியல் கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் தமிழில் ஆர்வம் கொண்ட மாணவர்களும் தங்களுடைய படிப்பை தொடர்கின்றனர். அதிக அளவில் அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளையும் பெற முடியும். இதன் மூலம் Structural Engineering, Construction Engineering, Environmental Engineering, M. Arch மற்றும் M. Plan போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த முதுகலை பொறியியல் படிப்புக்களையும் படிக்க வாய்ப்புள்ளது.
  தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறை மற்றும் அதன் கட்டிடப்பணிகள் இந்த படிப்பிற்குரிய வேலை வாய்ப்புக்களை எளிதாக்குகின்றன. பல பெரிய நிறுவனங்கள் இத்துறையில் கால்பதித்து இருப்பது, இத்துறை என்றும் வளமை காணும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 2006ம் ஆண்டில் வெறும் 50% மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறையானது, தற்பொழுது 2010ம் ஆண்டில் 91% மேலான இடங்களை நிரம்பப் பெற்றுள்ளது.
  தற்பொழுது ஐ.டி. துறையினரும் கட்டிடப் பொறியியல் வல்லுனர்களை அதிக அளவில் வேலைக்குத் தேர்ந்தெடுப்பது, சுய தொழில் முறை எளிமையாக இருப்பது, கட்டுமான மேலாண்மை தேவைப்பாடு போன்றவற்றால் அதிக அளவில் மாணவிகளும் இத்துறையைத் தேர்வு செய்கின்றனர்.
  சிறப்பான கல்லூரிகள்
  கல்லூரி பெயர்                        துவங்கப்பட்ட ஆண்டு
  1.    அண்ணா பல்கலைக்கழகம், சென்னை            1859
  2.    ஏ.சி. பொறியியல் கல்லூரி, காரைக்குடி            1952
  3.    அரசு பொறியியல் கல்லூரி, சேலம்            1966
  4.    அரசு பொறியியல் கல்லூரி, கோவை            1952
  5.    பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி, கோவை            1953
  6.    தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை        1957
  மெக்கானிக்கல் துறை
  சிவில் படிப்பிற்கு அடுத்தபடியாக விளங்குவது மெக்கானிக்கல் துறை எனப்படும் இயந்திரவியல். தற்பொழுது உள்ள கணிணி வளர்ச்சியின் காரணமாக பழமையான துறைகளும் புத்துணர்வு பெற்று தமக்கென்ற தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன, என்றுமே ஒரே சீரான வளர்ச்சியைக் கொண்ட துறையாக விளங்குவதனால் மாணவர்கள் இதன்மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.
  தமிழ்நாட்டில் 2009ம் ஆண்டு சேர்க்கை கழந்தாய்வில் 133 மாணவிகள் மெக்கானிக்கல் துறையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இத்துறையில் எவரும் சாதிக்கலாம் என்பதைக் காட்டுகிறது. பொதுவாக ஆண்களால் அதிகம் தேர்வு செய்யப்படும் துறையாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் இதற்காக சுமார் 380 கல்லூரிகளும், அதில் சுமார் 25,600 இடங்களும் இருப்பது இதன் வலிமையை மாணவர்களிடம் உணர்த்துகின்றது. 2008ம் ஆண்டில் வெறும் 51% மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்த துறையானது தற்பொழுது 2010ம் ஆண்டில் 99% இடங்களும் நிறம்பப்பெற்றன. இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் இத்துறை என்றுமே இளமையாக காட்சியளிக்கின்றது.
  Engineering Design, Energy Engineering, Product Design, Machatronics, CAD / CAM, Manufacturing மற்றும் Aeronautical போன்ற வளமையான முதுகலைப் பொறியியல் படிப்புக்களைப் பெற்றிருப்பதும், சுயதொழில் தொடங்குவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதும், ஐ.டி. துறை வாய்ப்புக்களும் இத்துறை மாணவர்களுக்கு மங்காத ஒளி விளக்காக இத்துறை திகழ்கின்றது.
  சிறப்பான கல்லூரிகள்
  கல்லூரி பெயர்                        துவங்கப்பட்ட ஆண்டு
  1.    அண்ணா பல்கலைக்கழகம், சென்னை            1895
  2.    ஏ.சி. பொறியியல் கல்லூரி, காரைக்குடி            1952
  3.    அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை            1952
  4.    பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி, கோவை            1951
  5.    தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை            1957
  மேலே குறிப்பிட்ட துறைகள் மாணவர்களின் ஆர்வத்தினால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது ஆசை. மேலும் பல துறை பற்றிய விபரங்களுடன் அடுத்த இதழில் கல்வி ஆய்வாளர் பேரா. பி. மூர்த்தி செல்வக்குமரன், ஈரோடு. Mobile: 94444 34118

  காலத்தை வென்று வாழும் மகாகவி பாரதி

  இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் மகாகவி பாரதி,  இனி எந்த நூற்றாண்டுக்கும் அவனே இமய பாரதி,  மனிதன் மனிதனாக, மாமனிதனாக வாழ, தன் வாழ்நாளெல்லாம் பாடிய மக்கள் கவிஞன்,  அந்த இணையிலாக் கவிஞனின் கவிதைகள் காலத்தை வென்று நிற்கும் கவிதைகள்,

  ‘பாட்டுக்கொரு புலவன்’ என்று கவிமணி போற்றிய பாரதி நாட்டுக்கொரு புலவனாக விளங்கியவன்,  உலகம் போற்றும் ஒப்பற்ற கவிஞன் பாரதி,  பாரதியின் பாடல்கள் காலக்கண்ணாடி,  பாரத சமுதாயம் நிலைத்து வாழ அவன் பாடிய பாடல்கள் ஏராளம்,  தேசத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடிப் பறந்த தேசியக் குயில் மகாகவி பாரதி,

  நெல்லைச் சீமை எட்டயபுரத்தில் சின்னசாமி அய்யர், லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1882ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11ம் நாள் பிள்ளையாகப் பிறந்தார் சுப்பிரமணிய பாரதி,  ‘சுப்பையா’ என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு,  எட்டயபுரம் சமஸ்தானம் 11 வயது பாரதியின் கவிதையைப் பாராட்டி வழங்கியதே ‘பாரதி’ என்ற பட்டம்,

  ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே!’ என்று நாம் நாட்டின் பழம் பெருமையை உணர்த்திய கவிஞன் பாரதி,   இந்திய நாட்டை “வந்தனை கூறி மனதில் இருத்தி, என் வாயுற வாழ்த்தேனோ – இதை ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்று வணங்கேனோ!” என்று தாய் நாட்டை வணங்குகிறார்,  இந்த ‘வந்தே மாதரம்’ என்னும வீர முழக்கம் தான் வௌ;ளையரை விரட்டி அடித்தது,

  ‘சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’, என்று பிஞ்சு நெஞ்சிலும் சாதி சமய வேறுபாடுகளை களைந்தவர்,  இந்திய தேசத்தின் அடிமைத் தளையை அகற்ற ‘தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்’ என்று அறைக்கூவல் விடுத்தவர்,  ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று நெஞ்சம் நிமிர்ந்து முழங்கி வாழும் தமிழுக்கு வளம் சேர்த்தவர்,

  அடிமை மோகம் விலகிட, ஆனந்த சுதந்திரம் அடைந்திட ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்று கண்ணீர் விட்டவர்,  எதற்கெடுத்தாலும் பயந்து சாகிறவர்களைப் பார்த்து ‘அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ என்று வேதனைப்பட்டு அத்தகையவர்களைப் பார்த்து ‘நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்’ என்று மனம் நொந்து ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று வீர முழக்கம் செய்தவர்,

  “நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ – கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி” என்று இந்தச் சமுதாய மக்களில் சிலரை அடையாளம் காட்டி, விழிப்புணர்வு கொள்ளச் செய்தான் பாரதி,  “ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?” என்று அறிவுறுத்தி ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘ என்று ஒரே வரியில் சாதிச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த கவிஞன்,

  “சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேரநன் நாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகளோட்டி விளையாடி வருவோம்” என்று ஒருமைப்பாட்டு ஓவியம் வரைந்து, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று தமிழ் மொழியின் சிறப்பை சித்திரம் தீட்டிக் காட்டிய தேசிய கவி பாரதி,

  “ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்: ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்” என்று தொழில்கள் மேம்படவும், கல்வி வளரவும் தன் ஆசைகளை வௌல்ப்படுத்தி “பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என்று நாட்டுப்பற்றை நம் மனதில் விதைத்த கவிஞன்,

  பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், அநீதிகளையும் பார்த்து ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று பாடினார்,  ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமென்பதை ‘எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி’ என்று பாடினார்,  சுதந்திர இந்தியாவில் அடிமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை ‘ஏழையென்றும், அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் – இழிவு கொண்ட மனிதரென்ப திந்தியாவில் இல்லையே’ என்று இறுமாந்து பாடினார் பாரதி,

  பாரதி குழந்தைகளுக்கும் பாடினார்,  தன் மகள் சகுந்தலா பாரதிக்காக எழுதியது குழந்தைச் சமுதாயத்திற்கே அறிவுரை கூறும் பாடலாக விளங்குகிறது,  ஒற்றுமையை வலியுறுத்தி தொடக்கத்திலேயே ‘கூடி விளையாடு பாப்பா – ஒரு குழந்தையை வையாதே பாப்பா’ என்று கூறுகிறார்,  வாழும் முறைக்கு இலக்கணம் வகுக்கும் முறையில் ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும், தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும், வயிரமுடைய நெஞ்சு வேணும், இது வாழும் முறைமையடி பாப்பா’ என்று பாடினார்,

  ‘கற்றது ஒழுகு, கூடித் தொழில் செய், கைத்தொழில் போற்று, செய்வது துணிந்து செய், தையலை உயர்வு செய், நீதி தவறேல்’ போன்ற இவருடைய அறிவுரைகள் நம் வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டுக் கொள்ள பெரிதும் உதவும்,  அவருடைய அறிவுரை, அறவுரை எல்லாம் மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான்,  ‘மனதிலுறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும்’ என்று கூறும் பாரதி நம்பிக்கைதான் வாழ்க்கை என்று நயமாகக் கூறுகிறார்,

  பாரதியின் பாடல்கள் வெறும் கற்பனையால் எழுந்தது அன்று,  அவர் ஊனோடும் உயிரோடும் கலந்து உள்ளத்திலிருந்து ஊறித் தெறித்த சத்திய வரிகள்,  39 வயது கூட நிரம்பாத நிலையில் 1921 செப்டம்பர் 11ம் தேதி மரணம் எய்தினார்,   எனினும் “பார் மீது நான் சாகாதிருக்கக் கண்டீர்” என்ற பாரதியின் வாக்கு பொய்க்கவில்லை,  ஆம், அவர் அமரராகி 86 ஆண்டுகள் ஆன பின்பும் அவர் புகழ் இமயம் போல் ஓங்கி நிற்கிறது,

  குழந்தைகளுக்கான பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்று பல்வேறு பாடல்களை அவர் பாடியிருந்தாலும் அவர் இயற்றிய பாடல்களில் எல்லாம் ஒற்றுமை உயர்வு, வீரம், பரிவு, உயிர்களிடத்தில் அன்பு, பெண் விடுதலை, மூடநம்பிக்கைகளை அகற்றுதல் போன்ற பல்வேறு அம்சங்கள் பரவியிருக்கும்,  பாரதியின் பாடல்கள் அனைத்திலும் நாட்டுப்பற்று, தாய்மொழிப்பற்று, விடுதலைப்பற்று மேலோங்கி இருக்கும்,

  இக்கால இளைஞர்கள் தேசத்தின் பெருமை, விடுதலையின் அருமை குறித்து அறிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள உதவும் கருவூலங்கள் பாரதியின் பாடல்கள்,  பாரத சமுதாயம் நன்றாக வாழ வேண்டும் என்பதிலேயே பாரதிக்கு மிகுந்த அக்கறை இருந்தது,  பாரதியின் பரந்த மனம், விசால பார்வை, பொதுநோக்கு ஆகியவற்றை சிந்தையில் கொண்டு அவரின் கனவை முழுமையாக நனவாக்க சூளுரை ஏற்போம்,

  என் பதில்களுக்கான கேள்விகள் எங்கே?

  பார்க்கும் இடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி என பாரதி சொன்னான்!
  பார்க்கின்ற இடத்திலெல்லாம் பதில்கள் நிறைந்திருக்கக் காண்கிறான். கேள்விகளை உற்பத்தி செய்கின்ற முயற்சியில் வெற்றிபெற முடியுமானால் பாஞக்கின்ற பார்வையிலும், அதில் படுகின்ற பொருள்களிலும் பல பரிமாணங்கள் உற்பத்தி ஆகிவிடக்கூடும்.
  முன்பே பார்த்த பொருளினைக் கூட புதிய புரிந்து கொள்ளலோடு கேள்விகள் மாற்றப்பர்ட நிலையிலும் பாஞத்தால் புது புது அர்த்தங்கள் மனதை நிர்க்கின்றது
  தன் இந்தக் காரியத்தை செய்தே ஆக வேண்டும்? என்கின்ற கேள்வி பிறக்குமானால்? கைவிடப்பர்டு ‘சும்மா இருத்தலே சுகம்” என்கின்ற ஆழ்ந்த அமைதிக்கும் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதெக்காலம்? என்கின்ற இரமண மகரிசியின் கேள்விக்கும் பதில்கள் காற்றில் விரவிக்கிடப்பதைக் கண்டுபிடிக்க முடியும் அமைதி தவழும்.
  கேள்வி சிந்தனையில் பிறக்கின்றது.
  சமீபத்தில் கிறிஸ்டோபஞ நோலன் என்கின்ற தலைசிறந்த இயக்குனரின் இன்செப்சன் குறித்து படித்துப் புரிந்துகொண்டு பாஞக்க முயற்சி செய்தேன்.  ‘உன்னால் அவனுக்குள் சிந்தனையை விதைக்க முடியும்” என்று கதாநாயகன் லியானோடிடொடி கேப்ரியோசின் இடம் நண்பன் சொல்வான்.
  எப்படி என்று கேர்க!
  யானையைப் பற்றி நினைக்காதே! என்று சொல்லிவிர்டு நீ என்ன நினைத்தாய் என்று நினைத்து, நினைத்துப் பாஞ.. என்று அழகாகச் சொல்வான்.
  இன்செப்சனைப் பாஞத்தவஞகளெல்லாம் சரியாகத்தான் புரிந்து கொண்டோமா?
  என்று பதிலைப் பாஞத்துவிர்டு கேள்விகளை மாற்றி மாற்றி சரியான கேள்வி எது என்று தேடிக்கொண்டு இருக்கிறாகள், நோலன். சரியாகத்தான் யோசித்து படத்தை முடித்திருக்கிறாரா? என்பது திருச்சியின் பெர்ரோகெமிக்கல் இன்ஐடனீயரிங் இரண்டாமாண்டு அண்ணா யுனிவர்சிர்டியில் படிக்கிற நண்பனொருவனின் கேள்வி?
  நாம் தொடஞந்து எழுதுகின்ற கர்டுரைகள் ஒரு பதில் என்று வைத்துக்கொண்டால், எழுதும் பொழுது எழுத்தாளரின் உள்ளத்திற்குள் ஊறிய கேள்விகளுக்கான பதிலாய்த்தான் படிப்பவஞகளின்  உள்ளத்தில் உருவாகும் கேள்விகளின் பதிலும் இருக்கும் என்று சொல்ல முடியாது.
  குழப்பமாக இருக்கின்றதல்லவா எனக்கும் தான்.

  குழம்பிய குர்டையில் தான் மீன், மற்றும் மீனிங்(Meaning) பிடிக்க முடியும் என்று சொல்வார்கள்.
  வின்னிங் எனி ஆர்க்யூமென்ர் (How to win any Argument by Rebort Mayer)என்ற புத்தகம். கேர்பவர்களின் உள்ளத்தில் உண்டாகும் வேறு வேறு கேள்விகளுக்கு வரிசை மாற்றி பதில் கிடைக்கின்ற மாதிரியும் நகைச்சுவை, பிரமிப்பு, ஐம்புலன்களின் கலவையான உணர்வு என்றவாறு மாறி மாறி உணர்வுகளை பரவசத்தை பதர்டத்தை உருவாக்குகின்ற மாதிரியான பதில்களை பேச்சுவாக்கில் சிந்துவோமேயானால் பேச்சு சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று  (என்று தானா?) பொருள் படுகின்ற மாதிரி எழுதியிருப்பார்.
  அற்புதமானதொரு சிந்தனை, விவாதத்தில் வெற்றிபெறுவதற்கான சிறந்த வழி அதை தவிர்ப்பதுதான் என்ற பொன்மொழி படித்திருக்கிறான்.  விவாதம் என்கின்ற பதில் கிடைத்த உடன் எப்படி தவிர்ப்பது? என்கின்ற கேள்விக்குப் பதிலாக எப்படி வெல்வது? என்கின்ற கேள்வி மனதிற்குள் வருமானால்? எப்படி மாற்றிக் கொள்வது? என்கின்ற கேள்வியும் உடன் வருகின்ற மாதிரியான ஞானம் நமக்கு இருத்தல் நலம்.  குழப்பமாக இல்லையல்லவா? சரி அடுத்தபடிக்குப் போகலாம்.
  இயற்கையைப் பார்த்து சிந்திப்பது கேள்விகளை ஞராளமாக உற்பத்தி செய்கின்றது.  எனவேதான் ஞானிகளும் முனிவர்களும் அடர்ந்த வனங்களுக்குள் ஞானம் தேடிச் சென்றதாக படித்தோமா? என்பது முதல் கேள்வி தற்காலத்திலும் புறநகர் சென்னையின் சிலிகான் சிற்பிகள் கின பிக்(Guinea Pig)முதற்கொண்டு மாங்ரெல் (mongeral) உர்பட பல வித நாய்களை வளர்க்கத் தொடங்கியிருப்பதாக எனக்கு பகுத்தறிவுப் பர்டை தீர்டிய முன்னாள் கோவை பி.எஸ்.ஜி கல்லூரி பேராசிரியர் சொன்னார்.
  இது ஒரு பதில்தான் கேள்விகள் ?.  இயற்கை, உயிர் இவையெல்லாம் இனிமையானவையோ? கானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? என்று கேள்வி கேர்டே கவிதை பாடிய பாரதியும் இதைத்தான் சொன்னானோ? என்று யோசித்துக் கொண்டேயிருந்த பொழுது, மீண்டும் பதில்களுக்கான பல கேள்விகளை உருவாக்கியிருக்கக் கண்டேன்.
  முன்பெல்லாம் ஓசூர், தளி, தேன்கனிக்கோர்டை, அஞ்செர்டி, நார்ராப்பள்ளி, பாளையம், பெர்ட முகுனாளம் என்று சுற்றி பசுங்காடுகளைப் பார்த்ததும் தளிஞரி மதகு 2006-ல் உடைந்த பொழுது இராப்பகலாய் தங்கியிருந்ததும் இயற்கையோடு இயைந்த வாழ்விற்கு விடையாயிருந்தன.  பஞ்சப் பள்ளிக்கு இந்தப்பக்கமிருந்து 2010ல் போன போது கிடைந்த பதில்களுக்கு கேள்விகள் புதிது புதிதாக முளைத்தன!  தமிழகத்தின் மேற்கொல்லையிலிருக்கின்ற தளி பகுதியை லிர்டில் இங்லாந்து(little England) என்று செல்லமாக அழைப்பார்கள். நான்காண்டுகளுக்கு முன்பு தளி ஞறினால் தெலுங்கு மொழியின் (தெலுங்கு என்றால் தமிழாம்? நண்பன்

  வரூப் சொல்வாஞ) ‘பெரிய அம்மா” என்று பொருள்பட பாது;ததது.  இப்பொழுது அதிலிருந்து பிறந்தோடும் சின்னாற்றின் குறுக்கிலான பஞ்சப்பள்ளி அணைக்கு மாரண்டஹள்ளி (ஹள்ளி என்றால் கன்னட மொழியில் கிராமம்  என்று பொருளாம்?  அப்படியா?) பசுமையின் வழியாக போகும் பொழுது ‘சாஞ நாங்கெல்லாம் தடுக்கி விழுந்தா பஞ்சப்பள்ளிக்குத்தான் சாஞ போவோம்.  இஞ்ச் இஞ்சா எனக்குத் தெரியும் சாஞ என்று நொடிக்கூட விடாமல் சூப்பஞ ஸ்டாஞ மாதிரி வேகமான கவஞச்சியான தமிழில் பேசி பில்டெல் பிரியாவிலிருந்து பிரேக் ஃபாஸ்ர் மெனு கேர்டு பஞ்ச பள்ளியில் பரிமாறச் செய்த நண்பஞ நல்லத்தம்பியின் நல்ல உள்ளத்தை என்ன சொல்வது?  என சாப்பிர்ட பதிலுக்கு கேள்விகள் கிளஞந்தெழுகின்றன.  பின்னஞ பதில் மகிழ்ச்சியா கேள்விகள் மகிழ்ச்சியா?  இத்தனைக்கும் இங்கே இரவு பத்து மணி அங்கே காலை பதினோறு மணி என்ன செய்கின்றீஞகள்? என்றபோது, துணைவியாஞ சென்னை சென்றதால் மகளுக்கு சாக்கஞ (Soccer) பாடத்திற்கான குளிஞபனி மூடாத கடைசி ஓடுகளப் பயிற்சிக்கு காலையிலேயே அழைத்து வந்துவிர்டு, ஆடிய களைப்பில் நூலகத்திற்குள்ளே மகன் நுழைய அப்பா காரின் கதவைத் திறந்து வைத்து புத்தகமானதைப் பாஞத்துக் கொண்டே மானசீகமாக பஞ்சப் பள்ளிக்குள் நினைவலைகளைத் தேக்கிக்கொண்டு இருந்தாஞ.  கர்டாயம்! அவஞ கண்கள் பனித்திரை இர்டிருக்கும்.. மன்ணை கண்ணு மண்ணு தெரியாமல் நேசிக்கினறாரே?  அவஞ கண்களில் ஆனந்த கண்ணீரா?  நல்லாப் பாஞத்துக்கோங்க சாஞ… ரொம்ப பாசமான மக்கள் என்று சொல்லுகின்ற வாஞத்தைகள் ஞதோ பெற்ற குழந்தையை சுற்றுலாவிற்கு ஆசிரியையோடு அனுப்பிவைக்கினற அம்மாவைப் போலப் பதறுகின்றாரே இதுவும் கூடவா தாய் பாசம்?  என்று பதிலுக்கு பதில் கேள்விகள்  சாரங்கர்டிக் கொண்டிருக்கின்றன.
  இப்போதெல்லாம் பதில்கள் எளிதாகக் கிடைத்துவிடுவது போலும் கேள்விகள் தான் தள்ளிப் போவது போலும் ஒரு தோற்றம் பள்ளிப் பருவத்திலெல்லாம் ‘பதில்” அல்லது ‘விடை” என்கின்ற வஸ்துவிற்கு தேவைக்கதிகமாக முக்கியத்துவம் கொடுத்துக் கெடுத்துவிர்டதாகக் கோபமே வருகின்றது.
  வினாக்கள் மூலம் அதிக நன்மையோ? என்ற வினா அடிக்கடி எழுகின்றது என்னவோ? வாஸ்த்தவம். சாக்ரடீஸின் மீது தனிப்பற்று அவர் குறித்து அதிகம்  படிக்கப்படிக்க அவருக்கு விஷம் கொடுத்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது என்ற எழுத்தாளர் எழுதியது ஞாபகம் வருகின்றது.  கேள்விகளை ஆமென்கின்ற பதில் வருகின்ற மாதிரியே கேர்டுக் கேர்டு சாதித்துக் கொள்ளுங்கள் அதையும் சாக்ரடீஸிடம் இருந்தே கற்றுக் கொள்ளுங்கள் என்று டேஸ் கார்னிஜி என்கின்ற அறிஞர் சொல்லியிருக்கின்றார்.
  இப்படிப் பல பேர் பல இடங்களில் சொன்னதையும் கேர்டதையும் பற்றி மர்டுமே எழுதறதும் பேசறதுந்தான் இலக்கியமா?  சொந்தமா நம்ம ஞதாவது எழுதியிருக்கோமா? என்கின்ற கேள்வியைத் தான் இந்தக் கர்டுரை பதிலா இருந்து தேடிக்கிர்டே இருக்குங்க?
  தேடல் தொடரும்..

  கவிதை

  புதுமை காண்பாய்

  –    பாவலர். கருமலைத்தமிழாழன்,
  ஓசூர்

  கைகளுக் கெட்டும் பூவைக்
  காண்பதில் பெருமை என்ன
  கைகளுக் கெட்டா உச்சிக்
  கனியினைப் பறிக்கும் போதே
  கைகளின் முயற்சி தன்னைக்
  கண்டிடும் உலகம் போற்றும்
  கைகளில் உழைப்பைச் சேர்த்தே
  கவின்நலம் பெறுவோம் வாழ்வில்

  இன்றைய வாழ்வில் இன்பம்
  இயற்றலில் பெருமை என்ன
  நன்றென உலகம் போற்றும்
  நாளைய இலக்கைக் கண்டு
  வென்றிடும் முயற்சி யொன்றே
  விளைத்திடும் புகழை யிங்கே
  நன்றிதை நெஞ்சில் ஏற்று
  நடந்திடு என்றும் இன்பம்

  கதிரென அறிவுக் கீற்றால்
  கால்களைப் பரப்பிடு எங்கும்
  நதியென ஓடி நன்றாய்
  நாற்புறம் செயலை நாட்டு
  மதிதனில் முழுமை போன்று
  மனத்தினில் வலிமை கூட்டு
  புதிதென ஆக்கு ஞாலம்
  புதுமையைக் கண்டுனை ஏத்தும்

  சாதனையாளன் ஆக வேண்டுமா?

  –    சிகார் பூங்குன்றன்
  தஞ்சாவூர்

  நான் –
  சாதனையாளன்
  ஆக வேண்டும்!
  அதற்கு என்ன
  செய்ய வேண்டும்?

  சாதனையாளர்களின்
  சரித்திரத்தை
  முதலில் – படிக்க வேண்டும்

  எந்தத் துறையில்
  சாதனை புரிய
  விரும்புகிறோம் – என்பதை
  முடிவெடுத்து
  முடிச்சுப் போட்டுக்
  கொள்ள வேண்டும்!

  அந்தத் துறையில்
  என்னென்ன
  சாதக – பாதகங்கள்
  இருக்கின்றன – என்பதை
  ஆராய்ந்து பார்த்து
  அட்டவணை இடவேண்டும்

  சாதகங்களைப்
  பயன்படுத்தி,
  எதிர்ப்படும் – பாதகங்களை
  எப்படி முறியடித்து
  முன்னேற்றம் காண்பது – என்று
  சிந்திக்க வேண்டும்

  சிந்தித்ததை ஒன்றிணைத்து,
  செயல்படுத்தத்
  திட்டமிடல் வேண்டும்
  திட்டமிட்ட படி
  செயலாற்றும் பொழுது,
  எதிர்ப்படும்
  இடர்ப்பாடுகளை
  எதிர்த்து நிற்கும்
  துணிவு வேண்டும்!

  இடையில் வந்து
  எவரேனும்
  இகழ்ந்துரைப்பின்
  அதைத் தாங்கும்
  மனவலிமை வேண்டும்;
  மறுத்துரைக்கா
  பொறுமை வேண்டும்!

  வெற்றி என்னும் குறிக்கோளை
  விட்டு எட்டி நகராமல்
  அயராத உழைப்பை
  அதற்களிக்க வேண்டும்!

  அப்புறம் என்ன?
  வெற்றி உன்னைத் தேடிவரும்!
  புகழ் மங்கை மாவையுடன்
  புறப்பட்டு வருவாள்
  கழுத்தில்
  போட்டு உனை வரவேற்க!

  பிறகு பார்!
  சாதனையாளர் பட்டியலிலே
  உன் பெயரும் இடம்பெற்று
  ஒளிவீசிக் கொண்டிருக்கும்!

  நலந்தானா

  வணக்கம், எனக்கு 58 வயதாகிறது. 13 வருடமாக சர்க்கரை வியாதி இருக்கிறது. ஆங்கில மருந்துகளால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். கை, கால்களில் மதமதப்பு, எரிச்சல் வருகிறது. சமீப காலமாக சர்க்கரையின் அளவு சிறிது வேறுபடுகிறது. அக்குபிரஷர் செய்து கொள்கிறேன். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இன்சுலின் எடுத்துக் கொள்வது நல்லது என குடும்ப மருத்துவர் கூறுகிறார். இது தொடர்ந்து செய்யக் கூடியதா? (கலையரசன், தூத்துக்குடி)
  சரியான உடற்பயிற்சி ஆரம்பமுதலே இருந்திருந்தால் சர்க்கரையினால் ஆன பக்க விளைவுகளை தடுக்க முடியும். தற்போது பல வருட பிரச்சனையின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாததால் கால், பாத நரம்புகள் நுண்ணிய இழைகளில் இரத்த ஓட்டம், சக்தி ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டதால் இதனை அலட்சியப்படுத்தாமல் இருக்க ஒரே வழி இன்சுலின் தேவையான அளவு தொடர்ந்து ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமானது. இருக்கும்வரை கண், கால், சிறுநீரக பாதிப்புகளை (Neuropathy, Nephropathy) இதன் மூலம் கட்டுப்படுத்தி வைக்க முடியும். துணைமருத்துவமாக அக்குபிரஷர் செய்து கொள்ளலாம். யோகாசனம் சிகிச்சையாக 3 நாள் பயிற்சி போதுமானது. தொடர்ந்து செய்யலாம். பச்சைக் காய்கறிகள், வெள்ளரி அதிகம் சேர்க்கவும். நீண்டநேரம் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. சிறு குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுத்து திறமையை பாராட்டி பேசுங்கள். தர்மப்படி நடந்து கர்மாவை கரையேற்ற ஆண்டவனின் ஆசிகளோடு வாழ்க.
  “மருத்துவச் செம்மல்’
  Dr. C.V. அருணா தருணிகா, M.B.A., D.A.C.
  அக்குபஞ்சர், ஆயுர்வேத இயற்கை மருத்துவர்
  K.G. மருத்துவமனை
  கோவை
  மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 98948 84776

  கணினி தொழில்நுட்பம்

  e-Paper
  புத்தகப்பிரியர்களின் மிகப்பெரிய தலைவலி அவற்றைப்பராமரிப்பது. புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அவற்றை கரையானில் ஆரம்பித்து பொங்கலுக்கு வௌ;ளையடிக்கும் போது பழைய பேப்பர் கடைக்கு போட முயலும் அம்மாவிடம் இருந்தும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
  கணினியும் குறிப்பாக இணையமும் பிரபலமான தொடக்க காலத்தில் e-Book எனப்படும் மின்புத்தகங்கள் இந்த பிரச்சினைக்குத் தீர்வாகும் என்ற எதிர்பார்ப்பு தகர்ந்துபோனது. காரணம் இணையத்தின் மூலம் புத்தகங்களை download செய்துகொள்ளலாம். அவற்றைசேமித்து வைத்துக் கொள்வது எளிதுதான். ஆனால்  கணினித்திரையில் தொடர்ந்து புத்தகங்களை படிப்பது கண்களை வருத்தி நாளடைவில் பார்வைத்திறனையும் பாதிக்கும் என்று தெரிய வர மின் புத்தகங்களின் மகிமை மங்கிப்போனது.
  ஆபத்பாந்தவனாக e-paper என்ற தொழில்நுர்பம் அறிமுகமாக மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது. e-paper ல் எழுதப்பர்டதை சாதாரன பேப்பரில் எழுதியதைப் போலவே படிக்க முடியும். e-paper திரை ஔல்ராது என்பதால் கண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

  படிக்கும் சாதனம் ( Reading Device)
  e-Paper தொழில்நுர்பத்தை பயன்படுத்தி படிக்கும் சாதனம் ( Reading Device)  நிறுவனம் கொண்டுவந்துள்ளது. புத்தகங்களை இந்த சாதனத்தின் மூலம் பதிவேற்றி படித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த சாதனத்தின் மிகப்பெரிய குறைபாடு    e-Paper புத்தகங்களை இந்த சாதனத்தில் பதிவேற்றம் செய்ய கணினி தேவை.
  இதைக் கருத்தில் கொண்டு அமேசான் நிறுவனம் கிண்டில் (www.kindle.com <ottp://www.kindle.com>) சாதனத்தை வௌல்யிர்டது. Kindle – e-paper தொழில் நுர்பத்தை பயன்படுத்துவது மர்டுமல்லாமல் கணினியின் தேவையில்லாமல் இணையத்தில் இணைந்து கொள்ள முடியும். இதைத் தொடர்ந்து சைபுக் , இலியார் என வரிசையாக e-paper சாதனங்கள் வந்திருக்கின்றன.
  குடண்ல் (www.toeflip.com <ottp://www.toeflip.com>) என்பது குர்டி சைஸ் கேமரா. இந்த சாதனத்தின் சிறப்பு இதனுடன் கொடுக்கப்படும் மென்பொருள். இதனை install செய்துகொண்டால் எடுக்கப்படும் வீடியோக்களை எளிதில் யூ-டிய’ப்பிலோ, பேஷ்புக்கிலோ அப்லோர் செய்யலாம். ஆனால் இதையும் இணையத்தில் அணைக்க கணினி கர்டாயம் தேவை. ஆனால் குடண்ல் ன் அடுத்த எநசளழைய் இணைய வசதியுடன் இருக்கும் என அறிவித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
  Logoff…
  உங்களுக்காக…
  தாலார்டு;  www.toalatu.blogspot.com <ottp://www.toalatu.blogspot.com>
  இளைய  தலைமுறையினரிடம் மய்ந்து வரும் தாலார்டுகளை மலரும் நினைவுகளாக இங்கே பதிவு செய்திருக்கிறர்கள். ஒரு குழந்தை முதலில் கேற்கும் இசைவடிவமான தாலார்டினை கிர்டதர்ட தொலைத்துவிர்ட இந்நாளில் ‘சங்கு முழங்க என் கண்ணே! சமுத்திரத்தில் மீன் முழங்க, எங்கே முழங்குதுன்னு சாமி ஞணிவச்சு பார்த்தாராம்’ என்று தமிழ் கொஞ்சி விளையாடும் பதிவுகள் கருப்பர்டி இனிப்பு.

  www.voiew360.in <ottp://www.voiew360.in>

  ஊர்டி பச்சை பசேல் அழகை கண் குளிரக் காண ஆசை. ஆனால் செல்ல நேரம் இல்லையா? இந்த அசத்தல் வெப்சைர்டை கிளிக் பணணுங்கள். செர்டிநாடு மாளிகை, மீனார்சியம்மன் கோவில், டாப் ஸ்லிப் என தமிழ்நார்டின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களாக 360 டிகிரியில் படம் பிடித்து தத்ருபமாக கார்சியளிக்கிறார்கள்.

  இருளிலும் விடியல்

  “இனிமே எழுத மார்டேன் சார்! ஸாரி! என்னை வற்புறுத்தாதீங்க!” என்று வாடிய குரலில் பேசிய படி விறுவிறுவென்று தன் அறையை விர்டு வெளியே வந்தார் அமுதன். கோபம் கலந்தாற்போல் இருக்கும் அவர்தம் முகத்தை பார்த்து இனியும் பேச வேண்டுமா என்ற தயக்கத்தில் உடன் நடந்து வந்து கொண்டிருந்தார் ராமநாதன். “சார்! அதில்ல… உங்க நாவல் ஒன்னு வந்தா நல்லாயிருக்கும்ன்னு எடிர்டர் நினைக்குறார்.” என்று ராமநாதன் கூற, “யாருக்கு சார்! யாருக்காக எழுதணும்? இங்க ரசனை இல்ல! நல்லத படிக்க சனங்களுக்கு தெரியல! தெரிஞ்சாலும் அந்த படைப்புகளின் வழி பயணிக்க அவுங்களுக்கு நேரமும் இல்ல! இதெல்லாம் வேஸ்ர் சார்! என்னால முடியாது, நான் ரொம்ப வருத்தப்பர்டு சொன்னேன்னு சொல்லுங்க! போங்க!” என்றார் அமுதன். அவரை சமாதானப்படுத்துவதா அல்லது அப்படியே ஓடி விடலாமா என்ற தயக்கம் ராமநாதனுக்கு!
  “என்னோட காலம் முடிஞ்சு போச்சாமா! சில அறிவிலிகள் எழுதியிருக்காங்க! என்னோட காலம் முடியும். ஆனா என்னோட எழுத்துக்களும் படைப்புகளும் காலத்தையும் தாண்டி வாழும்! அது அவங்க மறந்துர்டாங்க!” என்று கர்ஜனையுடன் தன் கோபக்கனலை கொர்டினார் அமுதன். அமைதியே உருவாய் ராமநாதன்!
  “இப்போ என்ன சார்? நக்கல், நையாண்டி, அந்தரங்க விஷமங்களை விஷயங்களா எழுதினா… அது தான் சிறந்த படைப்பு! அந்த மாதிரி எழுத என்னால முடியாது! மன்னிசிருங்க! ”அவரது கடுத்த பதில் ராமநாதனை மேலும் பேச விடாமல் தடுத்தது. அமைதியாய் நின்றவரை பார்த்து, “சார்! கிளம்புங்க சார்! என்னை கொஞ்சம் தனியா விடுங்க!” என்று சலித்து கொண்டார்.
  ராமநாதன் அங்கிருந்து வெளியேறி தனது கைபேசி எடுத்து நடந்தவற்றை அவரது புத்தக நிறுவனத் தலைமை ஆசிரியரிடம் கூறினார். ஆசிரியரும் பரவாயில்லை விர்டுவிடுங்கள் என்கிறார்.
  தனியே அந்த வீர்டின் மொர்டை மாடியில் நடந்து கொண்டிருந்தார் அமுதன். சுற்றியும் பார்த்தார். அங்கு கதிரவன் மலைகளுக்கு பின் மறைந்து கொன்டிருந்தான். இரவு எங்கும் சூழ்ந்து கொண்டிருந்தது. அமுதன் மனதிலும் இருள் சூழ்ந்திருப்பதை அவர் உணர்கிறார். அவரது அறையினுள் நுழைந்து, கணினியில் மூழ்கினார். அப்போது அவருக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதை பார்த்தார். அதில் அவருடைய படைப்புகளில் ஒன்று மிக அருமையாக இருந்ததாகவும், சமீபத்தில் அதை படித்து புத்துணர்ச்சி பெற்றதாகவும், ஒருவன் எழுதியிருந்தான். அவன் குறிப்பிர்ட அந்த படைப்பு அமுதன் எழுதி பல வருடங்கள் இருக்கும். அமுதன் பேச்சற்று இருந்தார். அந்த புத்தகத்தில் அவனுக்கு பிடித்த வரிகளையும் எழுதியிருந்தான். உங்கள் படைப்புகள் இனியும் எதிர்ப்பார்த்து ஓர் ரசிகன்! என்று அந்த மெயில் முடிவு பெற்றது.
  அமுதன் அமைதியினுள் மூழ்கினார். அந்த அறையை சுற்றியும் பார்த்தார். சர்டென்று அவர் மேஜை மீது அவர் பார்வை போனது. அங்கே சில காகிதங்களும் அவருடைய பேனாவும் இருந்தது. அவை அமுதனை பார்த்து புன்னகை சிந்துவது போலிருந்தது. சிறு தயக்கத்திற்கு பின், அந்த காகிதங்களையும் பேனாவையும் எடுத்து அந்த அறையை விர்டு வெளியேறினார். அங்கே இருண்ட வானில் ஓர் நிலவு மர்டும் மிளிர்ந்திருந்தது. அதை பார்த்து சிரிப்புடன், “இருளிலும் விடியல்.” என்று தலைப்பிர்டார் அமுதன். அடுத்த முக்கிய வேலையாக ராமநாதனை தொலைபேசி மூலம் அழைத்து, “நாவல் எழுதறேன்னு சொல்லுங்க உங்க ஆசிரியர் கிர்ட! நாளை மதியத்துக்குள்ளே உங்கள வந்து சேரும். என் எழுத்து!” என்று புன்னகையுடன் எழுதலானார்.

  நம்பிக்கை

  நம்பிக்கை தான் நம் வாழ்வின் உயிர்நாடி. அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. நாளை நாம் பிழைத்திருப்போமா என்பதும் தெரியது. ஆனால் நாம் நீண்டகாலம் உயிருடன் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தான் நமது வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது.
  நம்பிக்கையே மனிதனின் ஒழுக்கத்திற்கும், உயர்வுக்கும் காரணம். கடவுளிடம் திடமான நம்பிக்கை வையுங்கள். அவரது திருநாமத்தின் பிரபாவத்திலும், அருட் கருணையிலும் நம்பிக்கை வையுங்கள். ஆண்டவன் நம்மைச் சகல தடைகளிலிருந்தும் விடுவிடுத்து, நம்மைக் காப்பாற்றுவான் என்று உறுதியுடன் நம்புங்கள்.
  நவாஸீ தேவ பக்தாரும் அசுபம் வித்யதே க்வசித. இறைவனை நம்புகிறவன் ஒருபோதும் துன்பத்திற்கு ஆளாவதில்லை என உறுதியுடன் விஷ்ணு சகஸ்ர நாமம் கூறுகிறது.
  அசுரனாகிய ஹிரண்ய கசிபுவின் மகள் பிரஹ்லாதன், நாராயணனிடம்  அவனுக்கு அத்யந்த பக்தி. தந்தையோ ஹரியின் நாமத்தை வெறுத்தவன். தன் மகன் என்றும் பாராமல் பிரஹ்லாதனுக்கு பலவிதத்தில் தொல்லைகள் தந்தான். அத்தனையிலும் பிரஹ்லாதன் ஹரியின் அருளால் மீண்டு வந்தான் என்று பிரஹ்லாத சரிதம் கூறுகிறது.
  அப்பர் சுவாமிகளை கல்லைக் கட்டிக் கடலில் வீழ்த்திய போதும், சுண்ணாம்புக் காளவாயிலில் போட்ட போதும் சிவபக்தராகிய அவரைச் சிவன் காப்பாற்றினார். இவை புராணங்கள் கூறும் உண்மை நிகழ்ச்சிகள். இதற்கு அடிப்படை ஆதரமே நம்பிக்கை தான்.
  ஸம்ஸய ஆத்மாவின் படி, நம்பிக்கையற்றவனுக்கு வாழ்க்கையும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. மேன்மையும் இல்லை. அவன் நாசமடைகிறான் என்று கீதை நம்மை எச்சரிக்கிறது.
  கணவன், மனைவியிடையே இந்த நம்பிக்கை உணர்வுதான் அவர்களது இல்லற வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகும். மனைவியைப் பற்றிக் கணவன் சந்தேகப்பட்டாலோ, கணவனைப்பற்றி மனைவி ஐயுற்றாளோ நல்ல குடும்பம் பல்கலைக் கழகமாகவா இருக்கும்? தாம்பத்ய சீர் குலைந்து போகாதா?
  மாமியார் – மருமகளிடையே இந்த நம்பிக்கையின்மை தான், அவர்களிடையே நல்லுறவு ஏற்படாமல் இருப்பதற்குக் காரணம். மருமகள் தன் பிள்ளையைக் கைக்குள் போட்டுக்கொண்டு விடுவாளோ, தலையணை மந்திரம் சொல்லித் தந்திரமாக அவளை மயக்கி விடுவாளோ, பின் நம்மைப் பிள்ளை கவனிக்காமல் உதாசீனப்படுத்தி விடுவாளோ என்று மாமியார் அஞ்சி கொண்டிருந்தால்.
  பிள்ளைக்குத் திருமணம் செய்து வைத்தபின் இளம் தம்பதியினரது இல்லற வாழ்க்கையில் தலையிடாமல், ஆனால் தக்க சமயத்தில் ஆலோசனை கூறி உதவினால் மாமியாரிடம் மருமகளுக்கு நம்பிக்கை தோன்றும் நல்லுறவு வளரும்.
  ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களிடம் மேலதிகாரி நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போது தான் வேலை சரிவர நடைபெறும். அவர்களை நம்பாமல் அவர்களது வேலையை வேவு பார்த்துக் கொண்டிருந்தா, அதிகாரி மீது ஊழியர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். எப்படி நிறுவன வேலைகள் ஒழுங்காக நடைபெறும்.
  அன்றாடப் பணிகளில் தலையிடாமல், ஆனால் மேலாண்மையுடன் கவனித்து நிர்வாகத்தை நடத்திச் செல்பவரே பொறுப்புள்ள அதிகாரி. அவரால் தொழிலும் வளரும். ஊழியர்களும் கடமை உணர்வுடன் வேலை செய்வார்கள்.
  இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நம்பிக்கை தான் காரணம்.
  நம் வாழ்வில் வெற்றி பெறுவது தான் நமது குறிக்கோள். ஆனால் சில சமயங்களில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். ஆனால் தோல்விகளைக் கண்டு துவண்டு போகக்கூடாது.  தோல்வியில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி இருக்கிறது. அது நமக்கு ஓர் படிப்பினையாகும். நம் தவற்றைத் திருத்திக் கொண்டு அடுத்தமுறை வெற்றி பெற முயற்சி மேற்கொள்பவரே புத்திசாலி.
  ஆகவே, தோல்வி அடைந்ததும் முயற்சிகளைத் தளரவிடாதீர்கள். தெய்வீக சோதியை அப்படியே பிரகாசிக்கச் செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் லட்சியத்தை சமீபித்து விட்டீர்கள். உங்கள் உள்ளத்தில் ஜோதி (நம்பிக்கை) உதயமாகிவிட்டது. உங்களுடைய முகத்தில் பிரம்மதேஜஸ் ஜீவிக்க ஆரம்பித்துவிட்டது. பொறுமையுடனும், சோர்வின்றியும் சாதனை செய்வதன் விளைவாக ஆத்மிகத் துறையில் நீங்கள் பெரும் சாதனை புரிவீர்கள். தாண்ட முடியாத பல சிகரங்களையும் தாண்டிச் செல்வீர்கள். இதற்கு ஆதாரமாக நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சுவாமி சிவானதர் நமக்கு வழிகாட்டுகிறார்.
  முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும். நமது ஆற்றலில், தகுதியில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
  நான் என்னை நம்புகிறேன். என் தொழிலை நம்புகிறேன். என்னுடன் பணி புரியும் சக ஊழியர்களை, நண்பர்களை நம்புகிறேன் என் உறவுகளை நம்புகிறேன். இறைவனை நம்புகிறேன் என்பதே சரியான அணுகுமுறை.
  எனது கடின உழைப்பாலும், தெளிவான திட்டத்தாலும், என்னுடைய குறிக்கோளை அடையத் தேவையான எல்லாவற்றையும், இயற்கை சக்தி எனக்கு அளித்திருக்கிறது என்று நம்புகிறேன். இப்படி எண்ணுகின்றவர்களது வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம்.
  வெற்றி என்பது அதிர்ஷ்டத்தாலோ, குறுக்கு வழியிலோ வருவதில்லை என்பதையும், திறமையாகச் செயல்படுவதால் மட்டுமே வரும் என நம்புகிறேன்.
  மற்றவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேனோ, அதே போல நானும் மற்றவர்களிடம் நடந்து கொள்வேன். ஒரு போதும் குறை சொல்ல மாட்டேன். மற்றவர்கள் தவறு செய்தாலும், நான் என் கடமைகளைச் சரிவரச் செய்வேன். என்ற நம்பிக்கை எனக்குப் பரிபூரணமாக உண்டு.
  என்னிடம் யாரேனும் தவறாக நடந்து கொண்டாலும், அவர்களிடம் கோபம் கொள்ளாமல் எரிச்சல் படாமல் அவர்களை நான் முழுமனதுடன் மன்னிப்பேன்.
  தொடர்ந்து விடாமுயற்சியுடன் உழைத்து என்னுடைய குறிக்கோளை அடைய முடியும் என்று உளமாற நம்புகிறேன்.
  என்னுடைய மனதில் பொறாமை, வெறுப்பு, சுயநலம் போன்றவற்றைப் புறந்தள்ளி, மனிதாபிமானத்துடனும், பிறரிடம் அன்புடனும் செயல்பட்டு, மற்றவர்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெறுவேன் என நம்புகிறேன்.
  என் உடல் நலனைப் பேணுவதிலும், உள நலனைப் பேணுவதிலும் அக்கறை செலுத்துவேன்.
  தவறிழைப்பது மனம். தவறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்துவதும் அதே மனம் தான். ஆகவே, தவறு செய்யாத வழியைத் தேர்ந்தெடுத்து, ஒழுகுவதும் அதே மனம் தான். ஆகவே மன நலத்தைப் பேணுவேன்.
  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என தாயுமானவர் சொன்னதுபோல, உலகோர் அனைவரும், உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ என்னால் முடிந்த அளவு, உதவி புரிவேன் என்று நம்புகிறேன்.
  இப்படி மனநலனை வளர்த்துக் கொண்டால் ஒரு நாளும் நாம் துவண்டு போக மாட்டோம்.
  வெய்யிலில் விழுந்து விட்ட புழு உயிர்வாழவே துடிக்கிறது. அந்தத் துடிப்பு அதன் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆனால் வெயிலின் கடுமை தாங்காமல் அது மடிந்துவிடுவது வேறு விஷயம்.
  அந்தப்புழுவை விட நாம் மோசமானவர்கள் அல்ல. “என்னிடம் 100 இளைஞர்களைக் கொடுங்கள். நான் இந்தியாவின் தலைவிதியையே மாற்றிக் காட்டுகிறேன்” என்று உறுதியுடன் கூறினார் சுவாமி விவேகானந்தர்.
  “ஆடுவோமே…. பள்ளுப் பாடுவோமே… ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே…” என்று பாரதி நம்பிக்கையுடன் பேசினார். சுதந்திரம் அடைவதற்கு முன் அவர் மரணமடைந்து விட்டாலும், அந்தச் சுதந்திரக் காற்றை அவர் சுவாசிக்காவிட்டாலும், ஆனந்த சுதந்திரத்தை அனுபவித்ததாகக் கனவு கண்டார். அவர் நம்பிக்கையுடன் கனவு கண்டது வீண் போகவில்லை. பாரதி மறைந்து சில வருடங்கள் கழித்து, அவர் நம்பிக்கையுடன் கனவு கண்டது போலவே நாம் சுதந்திரம் பெற்றோம்.
  இளைஞர் சக்தியில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் கனவு காணும் இந்த நல்ல, வளம் பெற்ற இந்தியா ஒரு நாள் மலரும் என்று நாமும் நம்பிக்கை கொள்வோமாக.

  நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்

  நீங்கள் ஒரு செயலைச் செய்வதாக இருந்தால் உடனே செய்ய வேண்டும். சோம்பல் காரணமாகப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் எந்தச் செயலையும் தள்ளிப்போடக்கூடாது. “நான் ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று இருந்தேன். சந்தர்ப்பம், சூழ்நிலை என்னைக் கெடுத்துவிட்டது” என்றெல்லாம் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இப்படி இருந்தால் நீங்கள் எப்படி முன்னேறுவது? நீங்கள் எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உழைத்தும் பயன் இல்லாமல் போய்விடும்.
  ஆர்வத்துடன் உங்கள் செயலைத் தொடங்குங்கள்
  உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள். “நான் சிறந்த மருத்துவராகத் திகழ்வேன்” என்ற லட்சியத்தோடு உங்களுடைய செயலைத் தொடங்குங்கள். லட்சியம் இல்லாத செயல் வெற்றி பெற்றதாக வரலாறே கிடையாது. நீங்கள் எதில் ஆர்வத்துடன் இருக்கின்றீர்களோ, அந்தத் துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது உங்களுக்குச் சரியான இலக்கு கிடைத்துவிடுகிறது. அந்தத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டுக் கடுமையாக உழைக்கும்போது உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போகுமா?
  முதன்மையானவற்றிற்கே முன்னுரிமை கொடுங்கள்
  உங்களுக்குப் பல்வேறு கடமைகளும் பொறுப்புகளும் இருந்தாலும், நீங்கள் முதலில் எதைச்செய்ய வேண்டுமோ, அச்செயலை நீங்கள் முடித்திட முன் வர வேண்டும். தேவையற்ற செயல்களில் உங்கள் திறமையைப் பாழடித்துக் கொண்டிருக்கக்கூடாது. மருத்துவத்துறையை நீங்கள் தேர்ந்தெடுத்த பின், அது சம்பந்தப்பட்ட நூல்களில் ஆர்வத்தைச் செலுத்திப் படிக்க வேண்டும். அதற்குமுன், மருத்துவத்துறையிலே எந்தப் பிரிவில் உங்களுக்கு நாட்டம் அதிகமோ, அந்தத் துறையில் மிகச்சிறந்து விளங்கும் நிபுணர்களைச் சந்தித்து, அவர்களுடைய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்க வேண்டும். அது உங்களுடைய முதல் கடமையாகும்.
  வெற்றி ஒன்றை மட்டுமே நினையுங்கள்
  ஒரு செயலில் ஈடுபட்டு நீங்கள் உழைக்கும்போது, “எப்படியும் நான் இச்செயலில் வெற்றி பெற்றே தீருவேன்” என்று நினையுங்கள். வேறு எதையும் நீங்கள் நினைக்கக்கூடாது. வெற்றி ஒன்றையே எண்ணினால் மட்டும் போதுமா? வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். கடுமையான முயற்சிகள் இல்லாவிட்டால் எந்தக்காரியமும் வெற்றி பெறாது.
  தன்னம்பிக்கை இல்லாமல் வெற்றி இல்லை
  நீங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைவது தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை என்ற மாபெரும் சொத்தை நீங்கள் இழந்த பின்பு, ‘வெற்றி வெற்றி’ என்று வெறுமனே முழக்கமிட்டு என்ன பயன்? அது வெற்றுரையாகத்தான் இருக்குமே ஒழிய வெற்றி உரையாக இருக்காது. தன்னை நம்பிச் செயல்படுகின்றவனுக்கு எல்லா பலமும் உண்டாகும். நீங்கள் எந்தப் பலமும் இல்லாமல் வெற்றிக் கனியைப் பறிப்பது எப்படி?
  எனவே, நீங்கள் உங்கள் மேல் மலையளவு நம்பிக்கை கொள்ளுங்கள். அதன் பிறகு பாருங்கள். நீங்கள் எந்த முழக்கமும் இடாமல், வெற்றி என்ற திருமகள் உங்களைத் தேடிவருவாள்.

  நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்
  எந்த நிலையிலும் நீங்கள், உங்கள் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள். யானைக்குத் தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை. நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் கொண்டிருந்தால், நீங்கள் வரலாற்று ஏடுகளில் எழுதப்படுவீர்கள். உலகத்தையே தன் கொற்றக்குடை நிழலின் கீழ்க்கொண்டு வரமுடியும் என்று நம்பினான், கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர். அவன் கொண்ட நம்பிக்கை கடலைவிடப் பெரியது. அதனால் சரித்திரத்தில் இன்றைக்கும் அழியாத புகழோடு விளங்குகின்றான். தன்னுடைய வீரத்தின் மீது அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தன் படை பலத்தின் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தது. அந்த மாவடீரனை எதிர்த்து நின்று தோற்றான், புருஷோத்தமன் என்ற அரசன். “என்னை நீ அரசனைப்போல நடத்த வேண்டும். நான் உனக்கு அடிமை அல்ல…” என்று கம்பீரமாக மிடுக்குடன் சொன்னான். நாட்டை இழந்த பின்னும் அவனுடைய நம்பிக்கை இழக்காத நெஞ்சுரத்தைக் கண்டு மிகவும் வியந்துபோனான், அலெக்சாண்டர். “நீ என்னிடம் இழந்த நாட்டை நீயே ஆண்டு வருவாயாக” என்று சொல்லிவிட்டு, அந்த நாட்டைவிட்டு அகன்றான், அலெக்சாண்டர்.
  நம்பிக்கை என்றைக்கும் தோற்றதில்லை
  நீங்கள் உங்கள் மேல் கொள்ளும் நம்பிக்கையை எவராலும் தகர்க்க முடியாது. தன்னம்பிக்கைக்கு இலக்கணமாக விளங்கும் மாவீரன் நெப்போலியன், வாட்டர்லூ போரில் நெல்சனிடம் தோற்றுப் போனான். நெல்சனின் வீறு கொண்ட நம்பிக்கை, செயிண்ட் எலினாத் தீவில் நெப்போலியனைச் சிறையில் வைக்கச் செய்தது. நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் கொண்ட நெப்போலியனை வென்று சிறையில் வைத்தான் என்றால், நெல்சனின் நெஞ்சுரம், இரும்பு நெஞ்சுரமாகத்தான் இருக்க வேண்டும்.
  கெலம்பள்ளின் நெஞ்சுரம் மட்டும் பஞ்சுபோன்றதா? இல்லை. “எந்தக் கடலையும் கடந்து நான் சாதனை படைப்பேன். புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பேன்” என்று கொலம்பஸ் தன்மேல் கொண்ட நம்பிக்கை அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இறைவனாலும் இவனுடைய நம்பிக்கையை அசைக்க முடியாது. இவனுடன் வந்தவர்கள் இவனை மிகவும் வருந்தி வாட்டமடையச் செய்தனர். நம்பிக்கை இழக்காத வைர நெஞ்சுரம் கொண்டவன், கொலம்பஸ். “நான் தனியாகச் சென்றாவது நான் எண்ணியதை நிறைவேற்றுவேன்” என்று சூளுரைத்தான். நினைத்ததை முடித்தான். அமெரிக்காவைக் கண்டு பிடித்தான். வரலாற்றிலே நிலையான புகழைப் பெற்றுவிட்டான்
  நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் கொண்ட தமிழக மன்னர்கள்
  நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் கொண்டதால், கடாரம் சிங்களம், சாவகம் போன்ற நாடுகளைக் கைப்பற்றி வெற்றி வீரனாக விளங்கினான், கரிகாலன். தமிழ் மன்னர்களைக் கேவலமாகப் பேசிய கனக, விசயரை வெல்வதற்குக் கங்கையைக் கடந்து சென்றான், சேரன் செங்குட்டுவன். கனக விசயரின் கொட்டத்தை அடக்கியதோடு, இமயமலையில் தன்னுடைய நாட்டுக் கொடியைப் பொறித்ததோடு, அங்கேயிருந்து கல் எடுத்துவந்து, கண்ணகிக்குச் சிலை அமைத்துத் தமிழர்களின் புகழை உலகெங்கும் பரப்பினானே, சேரன் செங்குட்டுவன். நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் கொண்டதால் தானே, இவைகளையெல்லாம் சாதிக்க முடிந்தது.
  குறைகளை உடையவர்கள் நெஞ்சுரம் கொண்டு சாதித்தார்கள்
  விறகு வெட்டியின் மகனாகப் பிறந்தவர் ஆபிரகாம் லிங்கன். அருவருக்கத்தக்க உருவத்தைப் பெற்றிருந்த இவர், பல இன்னல்களுக்கிடையே கல்வி கற்றார். “நிறவெறிக் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பேன். அமெரிக்க அரசியலில் முதல் இடம் பெறுவேன்” என்று மனதில் உறுதி கொண்டார். நம்பிக்கை இழக்காத நெஞ்சுரத்தைப் பெற்றதால் தான் அமெரிக்காவின் அதிபராக விளங்கினார், ஆபிரகாம் லிங்கன். ஜனாதிபதி பதவி ஏற்றதும் நிறவெறிக் கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டார்.
  விழிகளை இழந்த ஜான்மில்டன், “மீண்ட சொர்க்கம்” என்ற அழியாத காவியத்தை இயற்றுவதற்குக் காணரமாக இருந்தது, அவருடைய நம்பிக்கை இழக்காத நெஞ்சுரமே.
  “காதலித்துக் காதலில் தோல்வி அடைவது என்பது, காதலிக்காமல் இருப்பதைக் காட்டிலும் சிறந்தது” என்ற வரிகள் அழியாப் புகழ் பெற்றவை. இவ்வரிகளை எழுதிய கவிஞர் லார்டு டென்னிசன், ஆங்கில இலக்கியத்தின் சிறந்த கவிஞராகப் போற்றப்படுகிறார். வலிப்பு நோயால் இவர் வாடிய போதும், உலகப்புகழ்பெற்ற கவிதை நூல்களை எழுதினார். அவருடைய நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம், சிறந்த இலக்கியங்களைப் படைக்க வைத்தது.
  நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் உங்களுக்கும் வேண்டும்
  இவ்வாறு எண்ணற்ற சாதனையாளர்கள் தங்களுக்கிருந்த குறைபாடுகளையும் – ஊனங்களையும் – பிணிகளையும் பொருட்படுத்தாமல் மிகச்சிறந்த சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்குக் காரணம், அவர்களிடத்திலுள்ள நம்பிக்கை இழக்காத நெஞ்சுரமே ஆகும்.
  நீங்களும் இவர்களைப் போல மிகச்சிறந்த சாதனைகளைப் படைக்க முடியாதா? இந்த உலகம் உங்களை ‘உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா’ என்று அழைக்கிறது. ‘நாம் விரும்பும் துறையில் சிறந்த சாதனைகளைப் படைப்பேன்’ என்று நம்பிக்கை இழக்காத நெஞ்சுரத்தோடு நீங்கள் உழைத்தால், இந்த உலகமே உங்களின் பின்னால் வரும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் – கேலி பேசுகிறார்களே – நக்கல் செய்கிறார்களே – பொறாமைத் தீயை என்மேல் உமிழ்கிறார்களே – வசைச் சொற்களால் என்னைத் திட்டுகிறார்களே என்று கொஞ்சமும் வருத்தப்படாமல், நம்பிக்கை இழக்காத நெஞ்சுரத்தோடு முன்னேற்றப் பாதையில் நீங்கள் சென்று கொண்டிருங்கள். சாதனை என்ற காதலி, உங்களை ஆர்வத்தோடு வரவேற்று உங்களை ஆலிங்கனம் செய்யக் காத்துக் கொண்டிருப்பாள்.