Home » Articles » மனிதப்பிறவி பெரும்பேறு

 
மனிதப்பிறவி பெரும்பேறு


துரைபாண்டியன் எஸ்
Author:

மனிதன் ஐந்து அறிவு கொண்ட மிருக நிலையிலிருந்து ஆறறிவு கொண்ட மனிதனாக பரிணாமம் அடைந்துள்ளான். மனம் தான் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் பெரியோர்களால் ‘மனம் போல் வாழ்க’ என்று இன்றும் வாழ்த்துவதை காண்கிறோம், கேட்கிறோம்.. ஒருவருடைய வாழ்க்கை அவருடைய எண்ணப்படி தான் அமைகிறது. எண்ணம் தான் வாழ்க்கை. நல்ல எண்ணம் தான் நல்ல சூழ்நிலையை உருவாக்குகிறது. நல்ல எண்ணம் மனதில் இருந்தால் நல்லதே நடக்கும். தவறான எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு, நல்லதே நடக்க வேண்டு மென்று விரும்பினால் நடைபெறாது.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லனவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
என்று பாரதியார் தெளிவாக கூறியுள்ளார்.
மனதை தெளிவுபடுத்த வேண்டும். நெறிமுறைபடுத்த வேண்டும். ஒழுங்கு படுத்த வேண்டும். உரப்படுத்த வேண்டும். வலுப்படுத்த வேண்டும். அதற்குரிய முயற்சியுடன் கூடிய பயிற்சி வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் மனிதனிடம் குடி கொண்டுள்ள தவறான குணங்களாகிய பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சகம் குறைந்து நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சம நோக்கு, மன்னிப்பு என்ற நற்குணங்களாக மாறுகிறது.
எண்ணம், சொல், செயல் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இயங்குகின்றது. தூய்மையான மனமும் நல்ல எண்ணம் கொண்டவர்களிடம் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் நிலை ஏற்படுவதில்லை. உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பாக செயல்புரியும் வேகம் மனதுக்கு ஏற்படுவதில்லை. ஒழுக்கம் கடமை ஈகையுடன் கூடிய அறவாழ்க்கை வாழ விருப்பம் ஏற்படும். அறவாழ்க்கை அமைந்தால் இறையுணர்வு வாழ்க்கை இயல்பாக அமையும். அதனால் தற்காலத்திலோ பிற்காலத்திலோ தனக்கோ பிறருக்கோ தீமை செய்யக்கூடாது என்றஎண்ணம் ஏற்படுகிறது. அறிவுக்கு அறிவு அடிமையாவதை தவிர்த்து தனது நிலையில் தெளிவும் விளிப்பும் ஏற்படுகிறது. எதிர்பார்க்கும் எண்ணம் ஏற்படுவ தில்லை. இந்த மன நிலையையுடைய மனிதன் லஞ்சம் வாங்க மாட்டான். லஞ்சம் வாங்க ஆசைப் பட மாட்டான். லஞ்சத்தை விரும்ப மாட்டான். எதிர்பார்த்தால் ஏமாற்றமே தரும். மனத்தூய்மை யினால் தான் லஞ்சத்தைத் தவிர்க்க முடியும்.
வாழ்க்கையே பிரச்சனை தான். பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வாகம் நடத்தப்படுகிறார்கள். அரசியல் கட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு எண்ணிக்கையில் அடங்காத கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளது. தடி எடுத்தவர் எல்லாம் தண்டல் காரர் என்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்வு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு கௌரவ பிரச்சனையில் தான் ஆட்சிமுறை நடந்து வருகிறது. மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதிகளிடம் மனிதாபி மானம் குறைந்து வருகிறது. சட்டம் போட்டு தடுக்கிறகூட்டம் தடுத்தாலும், திட்டம் போட்டு திருடறகூட்டம் திருடிக் கொண்டு தான் இருக்கிறது. மனிதனாக பார்த்து திருந்தாவிட்டால் லஞ்சத்தை ஒழிப்பது சிரமம்தான். எனவே இளைஞர்களுக்கு மனதை தூய்மைப்படுத்தும் மனபயிற்சி பழக்கத்தை பள்ளிப் பருவத்திலே கொடுத்துதவ வேண்டும். விஞ்ஞான அறிவு வளர்ச்சியடைந்த இந்த கால கட்டத்தில் தத்துவஞான விளக்கத்தை பரவலாக்கி மக்களிடம் அறிவையும் வளர்த்து மனத்தூய்மை செய்து அதன் மூலம் அரசியலை தூய்மை செய்ய வேண்டும். தூய்மையின் மூலம் குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.
நிதி நிர்வாகம் பொருளாதார துறைகளில் நேர்மையும், உண்மையும் ஏற்பட்டால் லஞ்சம் ஊழல் ஒழியும். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னம்பிக்கையுடன் தன்னை உணர்ந்தால் தனி மனிதன் வாழ்க்கையில் அமைதி ஏற்பட்டு குடும்பத்தில் அமைதி ஏற்படும். அதன் மூலம் சமுதாயம் அமைதி பூங்காவாக மாறுகிறது. இந்த அமைதியை விட வேறு என்ன அமைதி வேண்டும். மனித பிறவியெடுத்ததே பெரும்பேறு என்பதை உணர வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2010

வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு
கவலை தாங்கி மரம் – பவளமல்லி
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
என்றும்…
வாழ்க்கை ஒரு வசந்தக் காடு
வெற்றிப்படி 4
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம் !
மானுடத்தை வளர்த்த மகாவீரர்
வருவது தானே வரும்!
கணினி தொழில்நுட்பம்
எது விளையாட்டு?
சிந்தனை செய் நண்பனே- என்னைத் தெரியுமா?
அதெல்லாம் ஒரு காலமுங்க!
விடாமல் முயலுங்கள் விரும்பியதை அடையுங்கள்
அர்த்தமற்ற இலக்குகள்
உடலினை உறுதி செய்
மனிதப்பிறவி பெரும்பேறு
வாழ்க்கைப் பயண வெற்றிக்கு…
தொழிலை நேசி! வெற்றியை சுவாசி!!
அன்பு
உள்ளத்தோடு உள்ளம்
நலந்தானா?
CBSE கல்வி உதவித்தொகை
முயன்றேன் வென்றேன்