Home » Articles » வாழ்க்கைப் பயண வெற்றிக்கு…

 
வாழ்க்கைப் பயண வெற்றிக்கு…


முருகேசன் ஆர்
Author:

நான் வெளியூர் சென்றிருந்தேன். அங்கே வாக்கிங் சென்று கொண்டு இருக்கும் போது இரண்டு பாதைகள் பிரிந்து சென்றது. எதில் செல்வது என்ற குழப்பத்தில் பிரிவில் இருந்த நின்றிருந்த ஒரு சிறுவனிடம் நான் எந்தப் பாதையில் நடப்பது என கேட்டேன். எங்கே செல்ல வேண்டும் என என்னைக் கேட்டான். குறிப்பிட்ட இடத்திற்கு போக வேண்டியதில்லை. சும்மா நடக்க வேண்டும் ,என்றேன். அப்படியெனில் எந்தப் பாதையில் வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லி ஓடிவிட்டான். கொஞ்சம் நேரம் அவன் சொன்ன பதில் என்னைத் தவறு செய்தவன் போல உணர வைத்தது. எதையாவது ஒரு பாதையைச் சொல்லாமல் அவன் அப்படி செய்திருக்க கூடாது என்று மனதில் ஒரு துளி எண்ணம் எழுந்தது. ஆனால் அதே கணம் ஏன் அப்படி சொன்னான் என யோசித்த போது மனதில் பொறி தட்டியது. முதலில் கேள்வி கேட்டது நான் தான். எங்கே செல்வது என்று எனக்கே தெரியாமல் எங்கே செல்வது எனக் கேள்வி கேட்டால் பதில் நிச்சயம் இப்படித்தான் இருக்கும் என உணர முடிந்தது. இப்படித்தான் வாழ்க்கையில் எங்கே போக வேண்டும் எதை நோக்கி நம் பயணம் என தெரியாமல் சிலர் பல நேரங்களில் மனக்குருடர் களாக பாதை பிரிவில் தவிக்கிறார்கள். தடம் மாறுகிறார்கள்.
உலகில் 3 சதவீதம் மக்கள் மட்டுமே எதை நோக்கி தங்களது வாழ்க்கைப் பயணம் என தீர்மாணித்து நடப்பதாக ஒரு தகவல். ஏன் இவ்வளவு குறைவான சதவீதம்?
மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையின் பொறுப்புகளை முழுமையாக 100 சதவீதம் ஏற்றுக்கொள்வதில்லை. வெற்றியும் புகழும் அதுவாக வருவதாகவும்,அதிர்ஷ்டத்தில் விளைவது என்றும் முட்டாள் தனமாக நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தங்களை விரித்துக் கொள்ளாமல் தங்கள் திறமைகளை குறுக்கிக்கொண்டு ஒருவித சொகுசு நிலையிலேயே(?) இருந்துவிட விருப்பப்படு கிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிபெறாததற்குத் தேவையற்றகாரணங்களைத் தெளிவாக சொல் கிறார்கள். அதிர்ஷ்டம் என்று ஒன்று இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அது ஒரு விளைவு அவ்வளவு தான். காரணம் என்னவோ உங்களது கற்றலும்,விடா முயற்சியும்தான் என்பது தான் உண்மை.
நிறைய வெற்றிக்கான கட்டுரைகளைப் படித்திருப்பீர்கள்,வெற்றியாளர்களின் பேச்சுக்களைக் கேட்டிருப்பீர்கள். ஆனாலும் என்னால் ஏன் வெற்றி பெறமுடியவில்லை என்றநினைப்பு உங்களுக்கு இருக்கிறதா?
எதை நோக்கி உங்கள் வாழ்க்கை என்று தெளிவாக இன்னும் அறிந்திருக்க வில்லை என்று தான் அர்த்தம். பயணத்தின் நோக்கம் தான் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும். வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம் வெற்றி-காந்தம். அது வெற்றிக்கான விசயங்களைத் தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்ளத் தெரியும். நம் மனப்பாங்கை மாற்றிக்கொள்ள பெரும் அளவில் உதவும். மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்க வாழ்க்கைப் பயண நோக்கம் பெருமளவு உதவிகரமாக இருக்கும்.
எனக்கு என் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம் எப்படி அமைத்துக்கொள்வது என்றகுழப்பம் இருக்கிறது என்ன செய்வது என்றவருத்தம் உங்களுக்கு உண்டா?
உங்களது பயணம் நல்லதை நோக்கிய தாகவும் உணர்வு தூண்டுதலாகவும் இருக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் செல்லப் போகிறீர்கள் என்றால் சிங்கப்பூரைப் பற்றிய காட்சிகள் உங்கள் மனதில் நிச்சயமாக விரியும் அதை உங்களால் சிங்கப்பூர் போகமாலேயே ரசிக்க முடியும்;அந்த சந்தோசத்தை உணரமுடியும் .அதைப்போல உங்கள் பயணத்தின் இலக்கு நோக்கம் உங்களால் உணரப்பட வேண்டும். அதற்கு உங்கள் நோக்கத்தில் தெளிவு இருக்க வேண்டும், தகுதி தன்மை மற்றும் அதன்பால் ஈர்ப்பு கலந்த ஈடுபாடு இருக்க வேண்டும்.
வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம் தெளிவாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை நோக்கி என்னால் பயணிக்க முடியுமா என்றபயம் என்னைத் தடுக்கிறது என்ன செய்வது?
பயம் மெய்யென்று தோன்றும் ஒரு பொய்யான சான்று. நம் குழந்தை பருவத்தில் இருந்தே நம் நம்பிக்கையுடன் ஒன்றிப்போன விசயங்களை நாம் மறுபடியும் குறிப்பிட்டு அனுபவ மாக சொல்கிறோம் அல்லது உணருகிறோம். ஆனால் ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு விதமாக உணரப்பட்ட அனுபவம் இருக்கலாம். அதனால் எல்லாவற்றையும் பொதுவான ஒன்றாக கருத தேவையில்லை. அவர் இப்படித்தான் தொடங்கினார், செய்தார், முடிவில் அவர் வெற்றி பெறாமல் போய்விட்டார் என்பதற்காக அவர் முயற்சித்த செயலை யாரும் செய்யக் கூடாது என்பதில்லை. ஒரு வியாபாரத்தை ஒருவர் செய்து தோல்வி கண்டபோது இன்னொருவர் அதே போல செய்து வெற்றிப் பெற்றதை நாம் அறிந்திருக்க முடியும். ஒருவேளை அதில் சிறுமாறுதல்கள் இருக்கலாம் அதுவே அவரின் வெற்றிக்கான அச்சாரமாக அமைந்து விடவும் வாய்ப்பு. ஆனால் அந்தத் தொழிலை முழுமையான பொறுப்புடன் பயம் தவிர்த்து தொடர்ந்தார் என்பது தான் உண்மை.பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் இருந்து நம் கடைவீதிகளில் காய்கறி, பனியன் வியாபாரம் வரை பயம் தவிர்த்த வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.
வாழ்க்கைப் பயண நோக்கம் எதைச் சார்ந்ததாக இருந்தால் சிறப்பாக இருக்கும் ?
வாழ்க்கைப் பயண நோக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றாலும் பொதுவாக சிலவற்றைமையப் படுத்தி பயணத்தை வெற்றிகரமாக பயணிக்கலாம்.
சுய மேன்மைக்கான வளர்ச்சி வணிகம் அல்லது தொழில் சார்ந்த நோக்கம், பொருளாதார சுதந்திரம், உடல் நலம் குடும்ப நலம் மற்றும் முன்னேற்றம்
உறவுகள்
மேற்க்கூறிய பகுதிகளை மையப்படுத்தி உங்கள் வாழ்க்கைப் பயண நோக்கம் அமைந்தால் வெற்றிப் பயணத்தை சந்தோசத்துடன் பயணிக்கலாம். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உச்சமாக இருக்கவேண்டியவற்றைஎழுதி ஒரு இடத்தில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது அழகாக ஃபிரேம் செய்து கடவுள் படத்தை வைத்துக்கொள்வது போல் கூட அமைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கை. தினமும் கடவுள் பிரார்த்தனை செய்வது போல் உங்கள் வாழ்க்கைப் பயண நோக்கத்தைப் படியுங்கள். உங்கள் பயணம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள அது உங்கள் வாழ்க்கைப் பயண வரை படம்.
நண்பர்களே, இந்தப் புத்தகத்தை கையில் வைத்திருக்கும் உங்களுக்குள் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்றஉந்துதல் உணர்வு இருக்கும். அந்த உணர்வோடு உங்கள் வாழ்க்கைப் பயணத்திற்கான வரைபடத்தை தயாரித்துக்கொண்டு தொடங்குங்கள் உங்கள் பயணத்தை! பயணம் வெற்றி பெறபாதையில் மலர் கொத்துக்களோடு என்னைப் போன்றவர்கள் உங்களை வாழ்த்த காத்திருக்கிறோம் ,வாருங்கள்!!


Share
 

1 Comment

  1. matheyu says:

    feeling confidence after read..

Post a Comment


 

 


December 2010

வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு
கவலை தாங்கி மரம் – பவளமல்லி
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
என்றும்…
வாழ்க்கை ஒரு வசந்தக் காடு
வெற்றிப்படி 4
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம் !
மானுடத்தை வளர்த்த மகாவீரர்
வருவது தானே வரும்!
கணினி தொழில்நுட்பம்
எது விளையாட்டு?
சிந்தனை செய் நண்பனே- என்னைத் தெரியுமா?
அதெல்லாம் ஒரு காலமுங்க!
விடாமல் முயலுங்கள் விரும்பியதை அடையுங்கள்
அர்த்தமற்ற இலக்குகள்
உடலினை உறுதி செய்
மனிதப்பிறவி பெரும்பேறு
வாழ்க்கைப் பயண வெற்றிக்கு…
தொழிலை நேசி! வெற்றியை சுவாசி!!
அன்பு
உள்ளத்தோடு உள்ளம்
நலந்தானா?
CBSE கல்வி உதவித்தொகை
முயன்றேன் வென்றேன்