Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

இனியும் அப்படி ஒரு காலம் வருமா? எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிரே வருபவரிடம் எல்லாம் குறைபட்டுக் கொண்டே இன்னும் எத்தனை நாள் இப்படியே வாழ்ந்திடப் போகிறோம் நாம்.
தனிமனித ஒழுக்கம் ஒவ்வொருவரிடமும் உயர்ந்தோங்கும் போது மட்டுமே எதிரே வருபவரிடம் குறைபட்டுக் கொண்டிருப்பது மாறி நிறைகளை எடுத்துச் சொல்லி நிம்மதியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டிய வாழ்க்கை முறைகள் கட்டுப்பாடின்றிப் போனதால் இன்று பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றும் “கவலையோடும் கண்ணீரோடும்” வாழ்தலே ஒவ்வொரு விடியலாகிக் கொண்டிருக்கிறது.
தகும் செயல்களில் மட்டுமே பொருளீட்ட வேண்டும்; அளவு அறிந்து ஆசை கொள்ள வேண்டும்; தகாத செயல்களில் ஈடுபட்டு ஈட்டும் பொருளால் “நிம்மதி” கெட்டு வம்சமே பாதிக்கக்கூடும் என்பதை உணர வேண்டும்; எந்தச் சூழலிலும் நேர்மை தவறாது கண்ணியம் காத்து இப்பிறப்பிற்கு சிறப்பு சேர்க்க வேண்டும்; பெற்ற பதவிக்கு தன்னுடைய செயல் பாட்டால் பெருமை சேர்க்க வேண்டுமே தவிர எத்தனை கோடிகள் அதனைக் கொண்டு சேர்த்திருக்கிறோம் என்பதில் அல்ல.
அதிகார வர்க்கங்கள் ‘மனசாட்சிப்படி’ செயல்பட வேண்டும். இப்படி சிந்தித்து ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக் கொண்டால் மட்டுமே இனி வரும் காலம் இனிக்கும்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2010

வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு
கவலை தாங்கி மரம் – பவளமல்லி
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
என்றும்…
வாழ்க்கை ஒரு வசந்தக் காடு
வெற்றிப்படி 4
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம் !
மானுடத்தை வளர்த்த மகாவீரர்
வருவது தானே வரும்!
கணினி தொழில்நுட்பம்
எது விளையாட்டு?
சிந்தனை செய் நண்பனே- என்னைத் தெரியுமா?
அதெல்லாம் ஒரு காலமுங்க!
விடாமல் முயலுங்கள் விரும்பியதை அடையுங்கள்
அர்த்தமற்ற இலக்குகள்
உடலினை உறுதி செய்
மனிதப்பிறவி பெரும்பேறு
வாழ்க்கைப் பயண வெற்றிக்கு…
தொழிலை நேசி! வெற்றியை சுவாசி!!
அன்பு
உள்ளத்தோடு உள்ளம்
நலந்தானா?
CBSE கல்வி உதவித்தொகை
முயன்றேன் வென்றேன்