Home » Articles » சிற்பி

 
சிற்பி


மாதவன்
Author:

– மன்னை மாதவன்

நாட்டின் வளர்ச்சி அந்நாட்டு மக்கள் வாழ்வதற்கே. விஞ்ஞான முறையில் முதன்மையாகத் திகழும் அமெரிக்க நாட்டில் நான்கில் ஒரு பெண் என்றமுறையில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்பத்துக்கு ஆளாகின்றனர். இதனால் பல பெண்கள் மரணமும் அடைகின்றனர். சட்டமும், அரசாங்கமும் தடுக்க வேண்டிய இந்தச் செயலை தனியே ஒரு பெண் சாதனையாய் செய்கிறார். அவர் பெயர் டாலஸ் ஜெசப் (Dallas Jessup). இவர் தன்னுடைய 13ஆவது வயதிலேயே தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கினார். அமெரிக்க நாட்டில் பெண்கள் கடத்தப்படும் நிலை கண்டு மனம் வருந்திய இவர் தன்னால் இந்த நிலையை மாற்ற முடியும் என்று நம்பிக்கை கொண்டார். Yell Fire என்ற அமைப்பை பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கினார்.

முதலில் தான் படித்த பள்ளியிலேயே சக மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்புக் கலைகளை கற்றுத் தந்தார். இரண்டே மாதங்களில் 100 பெண்கள் இந்த இயக்கத்தில் இவருடன் சேர்ந்து பணியாற்றினார்கள். வாய் வார்த்தைகள் மூலம் இவரை பற்றி கேள்விப்பட்ட செல்வந்தர்களும் இவரது பள்ளி நிர்வாகமும் இவருக்கு உதவி செய்ய 6 மாதங்களில் இவருடைய இயக்கத்தின் சார்பாக பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் தற்காப்பு சம்பந்தப்பட்ட 45 நிமிட குறும்படம் ஒன்றை இவர் தயாரித்தார். அந்தப் படத்தின் குறுந் தகடுகளை அமெரிக்காவில் உள்ள பள்ளி, கல்லூரி பெண்களுக்கு இலவசமாக வழங்கினார். அமெரிக்காவின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள பெண் கூட இந்தக் குறும்படத்தைக் கண்டு பயனடைய வேண்டும் என்று நினைத்த இவர் அவர்களின் மின்னணு அஞ்சலைப் பெற்று இலவச மாக இணையதளத்தில் அனுப்பி வைக்கிறார். அவர் இதை முழுவதுமாக இலவசமாகவே செய்கிறார்.

சுமார் 42 நாடுகளில் பயணம் மேற் கொண்டு பெண்களின் விழிப்புணர்வு பற்றியும் விரிவுரையாற்றி இருக்கிறார். இன்று இவருடைய இயக்கத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 35 இலட்சம். கடந்த ஆண்டு இந்தியாவின் கிராமப்புற பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உரையாற்றி இருக்கிறார். கூடிய விரைவில் சென்னையிலும் இது தொடரும். இன்று அமெரிக்காவில் இவர் எழுதிய புத்தகங்களும் இவருடைய குறுந்தகடுகளும் பெரிய சமுதாய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு தற்போது வயது 18. புத்தகங்கள், குறுந்தகடுகள் மூலம் கிடைக்கும் பணம் இவருக்கு அல்ல! இவருடைய இயக்கத்தைச் சேருகிறது.

The Most Inspired Teen என்னும் விருதை முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதியிடம் பெற்ற பெண் என்றபெருமை இவருக்கு உண்டு. CNN, IBN விருதுகள் உட்பட அமெரிக்காவின் 7 உயரிய விருது களையும் பெற்றிருக்கிறார்.

“முடியும் என்று நாம் நம்பினால் நிச்சயம் முடியும்” என்பது தான் இவருடைய முழக்கம். பத்திரிகையில் கட்டுரைகளாகவும், வானொலியில் உரைகளாகவும், தொலைக்காட்சியில் பேட்டி களாகவும் இவருடைய பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்