Home » Articles » மனமே மனமே மாறிவிடு!

 
மனமே மனமே மாறிவிடு!


இரத்தினசாமி ஆ
Author:

– பேரா. ஆ. இரத்தினசாமி

மனதை அறிவோம் வாரீர் – 2

‘மனம்’ என்றால் என்ன?

மேற்கத்திய நூல்களில் தெளிவான விளக்கம் இல்லை. அதைப்பற்றிய உறுதியான ஆய்வுகள் இல்லை.
ஙண்ய்க்
க்ஷி Recollection, Memory
· The elements in an individual that feels, perceives, thinks, wills, reasons
· The conscious events and capabilities in an organism
· The organized conscious and unconscious adaptive activity of an organism
· Intension, desire
· Opinion, view, mood
· Intellectual ability

மேற்கூறியவாறு தான் மனதைப் பற்றிய விளக்கங்கள் மேலை நாட்டு ஏடுகளில் காணப்படு கின்றன. மனோதத்துவ ஆய்வுகளில் மனதைப் பற்றி அறிந்ததைக் காட்டிலும் அறியாத பகுதிகளே அதிகம். அறிவியலுக்கும் பிடிபடாத பல வினாக் களுக்கு ஆன்மீகமே விரிவான விளக்கம் தருகிறது. நமது மகான்களும், சித்தர்களும், ரிஷிகளும் யோகிகளும் மிகச் சிறப்பாக மனதைப் பற்றியும், மன இயக்கங்கள் பற்றியும், ஆழ்மன நுண்மன இயக்கங்கள் பற்றியும், அதை நமது கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும் விரிவாக, பயிற்சி விளக்கங் களுடன் தெளிவாக கூறியுள்ளார்.

மனதின் செயல்பாடுகள்

மேலோட்டமாக முதலில் மனம் என்றால் என்ன என்பது குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும் முதலில் தெரிந்து கொள்வோம்.

ஸ் மனம் உணர்ச்சிக்கும், எண்ணத்திற்கும் உரிய உறுப்பு.
ஸ் மனம் பல பொருட்களின் தொடர் பினால் எழுகின்றஆசைகளின் குவியல்.
ஸ் எண்ணங்கள் உருவாகின்றஇடம் மனம்.
ஸ் ஐம்புலன்களைக் கொண்டு உணர முடியாதது மனம்.
ஸ் மனமென்பது ‘நான்’ எனும் கொள்கை யுடைய அஹங்காரம்.
ஸ் மனம் பரிணாம் அற்றது. தனக்கென ஒரு இடத்தை அது தேடுவதில்லை.
ஸ் புறமனம், அக மனம், ஆழ் மனம் என வகைப்படுத்தலாம்.
ஸ் புறமனம் புலன்கள் வழியாக இயங்குகிறது.
ஸ் மனம் குறிக்கோளின்றி தானாக செயல்படும்போது எங்கெங்கோ தன் விருப்பப்படி ஓடுகிறது.
ஸ் நாம் மறக்க நினைப்பதை திரும்பத் திரும்ப நினைவிற்கு கொண்டுவருகிறது மனம்.
ஸ் நாம் நினைவிற்கு கொண்டு வர வேண்டி யதை மறக்கிறது.

இப்படி பல நூறு வகைகளாய் மனதைப் பற்றிய செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன.

எண்ணங்கள்

‘எண்ணங்கள் தோன்றுமிடம் மனம்’ எனில் எண்ணங்கள் ஏன் தோன்றுகின்றன?

எண்ணங்களுக்கு அடிப்படை ஆசைகள்

ஆசைகளுக்கு அடிப்படை ஐம்புலன் இன்பங்கள்.

(உதாரணம்)

கண்கள் பலாப்பழத்தைக் காண்கிறது. மூக்கு அதன் மணத்தை நுகர்கிறது. முன்னர் சுவைத்த சுவை உணர்வால் வாயில் உமிழ் நீர் சுரக்கிறது. மனம் அதை சாப்பிட ஆசைப் படுகிறது. சாப்பிடும் எண்ணம் உதிக்கிறது.

மனமும் எண்ணங்களும் ஒன்றிணைந்தது

எண்ணங்களையும், மனதையும் தனித்தனியே பிரிப்பது என்பது எண்ணங்கள் அற்றநிலையில் தான். மனம் அப்போது
ஒடுங்கு கிறது. அந்நிலையில் யோகிகள், சித்தர்களால் எளிதாக அடைய முடியும். ஆன்மீகத்தின் மிக உயர்நிலை. அதைப்பற்றி பின்னர் பார்ப்போம்.

நமது மூளை

மன இயக்கத்தைப் பற்றி தெளிவாக அறியும் முன்னர் அவ்வியக்கத்திற்கு மூல காரண மாக இருக்கின்றமூளையைப் பற்றி சற்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சுமார் 160 செ.மீ உயரமும், 55 கி.கி எடையும் கொண்ட ஒரு சாராசரி மனிதனின் மூளை சுமார் 1.5கி.கி எடையும், 1500 இ.இ. கன அளவும் கொண்டது. மூளையின் எடை, உடலின் எடை என்ற விகிதம் மிருகங்களைக் காட்டிலும் மனிதனுக்குத் தான் அதிகம். எனவேதான் தன்னைக் காட்டிலும் மிகப் பெரிய உருவத் தையும், எடையையும் கொண்ட யானையை சிறு அங்குலத்தால் அடக்கி ஆள முடிகிறது.

பல மடிப்புகளாலான, பழுப்பு நிறம் கொண்ட மூளையின் மேற்பரப்பு, 10,000 கோடி நியூரான்கள் எனும் அடிப்படை துகள்களால் ஆனது. ஒவ்வொரு நியூரானுக்கும் தலைப்பகுதி, சல்லிவேர் போன்ற கிளைப்பகுதிகள், தண்டு போன்றவை உண்டு. ஒவ்வொரு நியூரானும் தனித்தனியே இருந்தால் மனிதன் ஜடம் தான். அறிவாற்றல், நினைவாற்றல், ஆர்வம், தன்னம் பிக்கை, உற்சாகம், கடின உழைப்பு, தளரா முயற்சி, படைப்பாற்றல்திறன், கண்டுபிடிப்புகள் போன்றவை மனிதனிடையே தோன்ற வேண்டு மெனில் நியூரான்கள் ஒன்றோடு ஒன்று இணைய வேண்டும். 1014 அளவிற்கான நியூரான்கள் இணைப்பு சாத்தியம். இவ்வாறு இணைக்கப் பட்ட நியூரான்களை நீட்டினால் அது 500,000 கி.மீ நீளத்திற்கு வரும் இவ்விணைப்புகளில் தான் அனைத்து சூட்சுமங்களும் உள்ளன. நாம் வெற்றிப் படிகளில் முன்னேறவும், வெற்றிகள் பல குவிப்பதற்கும் இவ்விணைப்புகள் தான் பேருதவி புரிகின்றன.

புரியாத புதிர்

நாம் பிறக்கும் போதே அனைத்து நியூரான்களுடன் தான் பிறக்கிறோம். குழந்தை தாயின் வயிற்றில் உருவாகும் போது மூளைதான் மிக துரிதமாக வளர்கிறது. குழந்தைக்கு 5 வயதாகும் போது மூளை 90 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுவிடும். நியூரான்களுக்கான இணைப்புகள் நாம் கற்கும் போது தொடங்குகிறது. இக்கற்றல் சில வேலை களில் கருவறையிலேயே துவங்கும்.

நமது உடலை நன்கு பிரித்தரிந்து உள் உறுப்புகளின் இயக்கத்தை அறிந்த உல மருத்துவர்கள் 90லிருந்து 100 சதவிகிதம் உறுப்பு மாற்று அறுவை சிசிச்சையும் செய்து வெற்றி கண்டுள்ளனர். ஆனால் மூளையைப்பற்றி 10 சதவிகிதம் கூட இன்னும் அதன் தெளிவான இயக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடிய வில்லை. புரியாத புதிராக மூளையின் இயக்கம் உள்ளது. மூளையைச் சார்ந்தே மன இயக்கமும் உள்ளதால் அறிவியலால் மனதை முழுமையாக அறிய முடியவில்லை.

(புதிர் தொடரும் – 3வது வெற்றிப் படிக்கட்டில்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்