Home » Articles » சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்

 
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்


மோகன்குமார் இரா
Author:

– பேரா. இரா. மோகன்குமார்

20. குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள்

கடுமையாக உழைத்தேன். தொழிலில் ஜெயித்தேன். இன்று கை நிறைய காசு கிடைக்கிறது. அதனால் ஆடம்பர வசதிகள் சாத்தியமானது. ஆனால் என்னுடைய ஒரே மகனுக்கு தேவையான நேரத்தை செலவிட தவறிவிட்டேன். இன்று வசதிகள் எல்லாம் வசதிகளும் இருந்தும் என் மகனின் கல்வி, ஒழுக்கம், உறவுகளில் காணப்படும் எதிர்மறைதாக்கத்தினை கண்டு நிம்மதியை இழந்து மனம் வெதும்பி நடைபிணமாக வாழ்ந்து வருகின்றேன்.

மகன் கல்லூரிக்கு செல்வதில்லை. மது, போதை, வலைதளம் என பொழுதைக் கழித்து வருகின்றான். கட்டுப்படுத்த நினைத்தால் வீட்டுக்கே வர மறுக்கிறான். தற்கொலை முயற்சி கூட செய்திருக்கிறான்.

இன்று என் எதிர் காலமே, என் வாழ்வின் அர்த்தமே என் மகன் தான் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால் காலம் கடந்த ஞானம் ஆகிவிட்டது என்று அனுபவப்பகிர்வு செய்த என் “வெற்றிகரமான குழந்தை வளர்ப்பு முறைகள்” பயிற்சியின் பங்கேற்பாளர் ஒருவர் தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

மேற்கண்ட அனுபவப் பகிர்வு செய்து கொண்ட நண்பர் மற்றும் அவர் மகனை ஆற்றுப்படுத்துதல் மூலம் மீண்டும் சகஜ நிலைக்கு, சந்தோஷ நிலைக்கு கொண்டு வந்தது ஒரு புறம் இருக்கட்டும்.

பணத்தையும், செல்வத்தையும் ஈட்டியவுடன் வெற்றி முழுமையாக கிடைக்கும் என வெறியாக செயல் பட்ட இந்த நண்பரின் வாழ்விலிருந்து நாம் சில பாடங்கள் கற்றுக்கொள்வது, நம் சந்தோஷ, சாதனை வாழ்விற்கு அடிப் படையாக அமையும்.

நண்பரின் மகன், அவர் எதிர்பார்க்கும் வகையில் இன்று செயல் படாததற்கு, அவருடைய வாழ்வு முறையில், அவர் பயன்படுத்திய குழந்தை வளர்ப்பு முறையில் காணப்பட்ட சில காரணிகள் காரணமாக அமைந்திருக் கின்றது. அவற்றில சில:

ஒன்று

பணத்தையும், செல்வத்தையும் சேர்த்து வைத்தால், குழந்தையின் எதிர் காலத்தை செழிப்பானதாக, சந்தோஷம் மிகுந்ததாக, மதிப்பீடுகளின் அடிப் படையில் உள்ளதாக மாற்றிவிடலாம் என்ற தவறான கணிப்பு.

இரண்டு

செல்வம் சேர்க்கும் அவசர கோலத்தில் குழந்தைகளுக்குத் தேவை யான தரமான நேரத்தை (ணன்ஹப்ண்ற்ஹ் பண்ம்ங்) வழங்கி நேர்மறை மனநிலை கொண்ட மகனாக மாற்றுவதற்குத் தவறிவிட்ட பொறுப்பற்றதன்மை.

மூன்று

பணத்தை ஈட்டி செல்வந்தனாக ஆகிவிட்டால், உலகமே (மனைவி, குழந்தைகள் உட்பட) என்றென்றும் நம் காலடியில் மண்டியிட்டு வாழ்ந்து விடும் என்ற தவறான படிப்பினை.

நான்கு

பெற்றோர் தரமான நேரத்தினை குழந்தைகளுக்காக செலவிட தவறிய தால், அவர்கள் வழிதவறி செல்ல வாய்ப்புகள் அதிகம். அப்போது அவர் களை எளிதாக, வேகமாக நல்வழிப் படுத்துவதற்காக (அறியாமையால்) தவறான எதிர்மறை குழந்தை வளர்ப்பு முறைகளாகிய அடி, உதை, கெட்ட வார்த்தை, சாபம் (எதிர்மறை கருத்தேற்றத்திற்கு வழி வகுக்கும்) போன்றவற்றை பயன்படுத்துவதுதான் நல்லது என்ற முடிவிற்கு வந்து விடுகின்றனர். அங்கு தான் பிரச்சனை உருவாகின்றது.

வாசகர்களே உங்கள் குழந்தைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், கீழக்கண்ட பரிசோதனைகளைச் செய்து பாருங்களேன்.

இரண்டு அரைகுறையாக பழுத்த வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒன்றினை தானாக கனியும் வரை காத்திருந்து புசியுங்கள். மற்றொன்றை அரை குறையாக பழுத்திருக்கும் போதே கையால் அழுத்தி துவம்சம் செய்து புசியுங்கள். எது சுவை அதிகம் என்பதை பாருங்கள்.

நிச்சயமாக தானாக கனியும் கனியின் சுவைதான் சிறப்பாக இருக்கும். இதைத்தான் நம் முன்னோர்கள் “தல்ப் பழுப்பதைவிட தானாக பழுக்கும் பழத்தின் சுவை அதிகம”; என்கின்றனர்.

இதே கருத்தினை குழந்தை வளர்ப்பில் பயன்படுத்தினீர்களானால் குழந்தை வளர்ப்பு இதமானதாக இருக்கும். சுகமானதாக இருக்கும். வெற்றிகரமானதாக இருக்கும். நீங்கள் கொடுப்பதுதான் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். இது இயற்கையின் நியதி.

நீங்கள் அடி, உதை, திட்டு கொடுத்தால் அதையேதான் குழந்தைகளிடமிருந்து நீங்கள் திரும்ப எதிர்பார்க்க முடியும்.

நீங்கள் அவர்களை மிகவும் பயப்படுத்தி மனதை சிதைப்பதில் வெற்றி அடைந்து விட்டால், உங்களுக்கு முழு கட்டுப்பாடான மனநிலை முழுமையாக பாதிக்கப்பட்ட குழந்தையை உருவாக்க முடிந்திருக்கும் (பின்னர் கடவுள் இப்படியொரு சோதனையை கொடுத்து விட்டாரே என்று கடவுள் மீது பழியை போடுவது தனிக்கதை) அப்படி சாதனை செய்திருந்தீர்களானால் திரும்பக் கிடைக்கும் அடி, உதை, திட்டுகளில் இருந்து தப்பித்து விடுவீர்கள்.

ஆனால் இயற்கையின் விதிவிடாது. அந்த மனநிலை பாதித்த (தன்னம்பிக்கை இன்மையாக கூட இருக்கலாம்) குழந்தையை எண்ணி மனம்வருந்தி நடை பிணங்களாய் வாழும் பெற்றோர் பலர். என்னைப் போன்ற ஆற்றுப் படுதல் வல்லுநர்களை தேடி நடையாய் நடந்து வருவது கண்கூடு.

மற்றொரு பயிலரங்கத்தில் ஒரு தாய், மருத்துவ நிபுணர், ஐயா என் மகளை மருத்துவராக உருவாக்க வேண்டும்

என்று அவள் விருப்பத்திற்கு
மாறாக (கணிப்பொறி வல்லுனர்
ஆக விரும்பியிருக்கின்றார்) காசு
கொடுத்து மருத்துவக் கல்வி படிக்க
அனுமதி பெற்றேன். ஆனால் இன்று
அவளை மனநல மருத்துவ மனையில்
சிகிச்சை பெற்று வரும் மன
நோயாளியாக மாற்றிவிட்டேன்.

நான் ஒரு பாவி. இனி என்று நான் என் மகளை ஒரு மனுஷியாக பார்க்க முடியும்? என்று ஏங்கி, ஏங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.

அன்பு வாசகர்களே, மேற்கண்ட நிகழ்வுக்கு முழுக்காரணம் அந்த தாயின்

பிடிவாதம் மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். அந்த தாய்க்கு இந்த உலகம் அதாவது அவர் தாய், தந்தை, ஆசிரியர், சமூகம்,

சமயம் என பலர் வழங்கிய அனுபவங்களின் அடிப்படையிலே, அவர் உருவாக்கப் பட்டிருக்கிறார்.

இன்று நாம் நம் குழந்தைகளுக்கு வழங்கும் தவறான முன்னுதாரணங்கள் அவர்களை மட்டுமல்ல, அவர்களின் அடுத்த தலைமுறை யினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே இந்தத்தொடரை படிக்கும் அன்பு வாசகர்களே, உங்களில் மாற்றத்தை ஏற்படுத்துங் கள். உங்கள் குழந்தைகளை வளர்க்க நேர்மறை குழந்தை வளர்ப்பு முறைகளைப் பயன் படுத்துங்கள். எதிர்கால மனித சமுதாயம் அன்பு, பண்பு, அமைதியுடன் ஆக்கபூர்வமான சமுதாய மாக மாறஉதவிபுரிவோம்.

நண்பர்களே! ஞானிகளின் கூற்றுப்படி நாம் மனித பிறவியை அடைய மாபெரும் தவம் புரிந்திருக்க வேண்டும். நாம் இப்போது அடைந் திருக்கும் மனிதப் பிறவியை அடைய, அத்தகைய அற்புத மனிதப் பிறவியில் மழலை செல்வத்தை அடைவது எவ்வளவு மகத்துவம் என்பதை குழந்தைகள் இல்லாமல் வேதனைகளை அனுபவித்து வரும் தம்பதியரைக் கேட்டுப் பார்த்தால் தெரியும்.

அன்பர்களே கிடைத்த அரிய வாய்ப் பினை சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள்.

நீங்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷ சாதனையாளராக வாழ வேண்டுமா? உங்கள் குழந்தைகளைப் பண்படுத்த தேவையான தரமான நேரத்தை தர (Quality Time) (ஒதுக்கீடு செய்ய) தயாராகுங்கள்.

நீங்கள் வழங்கும் தரமான நேரம் குறைவானதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கண்டிப்பாக குறைந்த அளவாவது தரமான நேரத்தைக் குழந்தைகளின் முன்னேற்றத் திற்காக தர வேண்டுகிறேன். ஆகவே முழு நேரத்தையும் குழந்தைகளுக்காக ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தவில்லை.

ஆனால் தரமான நேரம் தரமானதாக இருக்க வேண்டும்.

அந்த நேரத்தில் கைபேசி ((Mobile), தொலைக்காட்சி (பய) கணினி (Computer) போன்றஅனைத்து காரணிகளையும் ஒதுக்கி வைத்துவிடுங்கள். என்னடா பண்ற, எருமை மாடே என்று மிரட்டுவதை தவிருங்கள். படி படி அல்லது உருப்படமாட்டாய் என சாபம் இட வேண்டாம் என்று உங்கள் ஆழ்மனதைக் கட்டுப்படுத்துங்கள். அடித்து, உதைத்து, வெறியையும், வெறுப்பையும் வெள்ளை உள்ளத்தில் விதைக்காதீர்கள்.

இவற்றிற்கு பதிலாக அன்பு செலுத்துங்கள். உங்கள் குழந்தைகளை உண்மையாக நேசியுங்கள். அவர்களின் உணர்வுகளை, தன்மையை, விருப்பு, வெறுப்புகளை உணரத் தயாராகுங்கள்.

உங்கள் ஆழ்மனது உறுமுவதை உணர முடிகிறது. சத்தியமா? நீங்கள் அதாவது உங்கள் புறமனது உறுமவில்லை. “எனக்குக் கிடைத்த அடி, உதை, திட்டுகளை ஏமாற்றங்களை என்ன செய்ய? திரும்ப கொடுக்க வேண்டாமா? வேறு யாரிடமும் காட்டினால் விட்டு வைப்பார்களா? எங்கள் பிள்ளைகளிடம் தானே (அப்பாவிகள், வேறு வழி தெரியாத / இல்லாத குழந்தைகள்) நாங்கள் எங்களுக்குள் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்று உங்கள் ஆழ்மனது எண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

ஆழ்மனதை அடக்கி வையுங்கள். இந்த சமுதாயத்தில் இனி ஒரு மாற்றம் செய்வோம்.

யாருக்காக? நம் சந்தோஷ சாதனை மிகுந்த எதிர்காலத்துக்காக! நம் அன்பு குழந்தைகளின் சந்தோஷ, சாதனை மிகுந்த எதிர்கால நல்வாழ்விற்காக!

ஆகவே அன்பின் தன்னம்பிக்கை யாளர்களே!

தரமான நேரத்தில் (Quality Time) அன்பு என்னும் ஆயுதத்தால், கொலை, கொள்ளை, காமம், தற்கொலை, போர், தீவிரவாதம் பழிக்குப்பழி அற்ற பண்பு, பாசம், நேரம் மற்றும் சாகசம் நிறைந்த எதிர்கால உலக சரித்திரத்தை உருவாக்குவோம்.

மீண்டும் சிந்தனையாளர்களுக்கான சந்தோஷ வழிமுறைகளுடன் சந்திக்கும் வரை விடை பெறுகின்றேன்.

(சந்தோஷ வழிமுறைகள் தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்