Home » Articles » சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்

 
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்


மோகன்குமார் இரா
Author:

–  பேரா. இரா. மோகன்குமார்

17. நன்றி மறப்பது நன்றன்று

நன்றியுணர்வு பற்றிய ஆராய்ச்சிகளில் தலைச்சிறந்த விஞ்ஞானிகளாகிய மைக்கேல் மேக்ளோ மற்றும் ராபர்ட் எம்மன்ஸ் ஆகியோர் நாம் நன்றியுணர்வோடு வாழ்ந்தோமானால்:

1.    சந்தோஷம்
2.    படைப்பாற்றல்
3.    நோய் எதிர்ப்பு சக்தி
4.    உறவு மேம்பாடு
5.    நேர்மறை மனோபாவம்
6.    உடல் மற்றும் மனபலம்
7.    உத்வேகம்
8.    உற்சாகம்

போன்ற எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும் என அறிவியல் பூர்வமாக கண்டு பிடித்துள்ளனர். நாம் நன்றியுணர்வோடு இருக்கும் போது அன்றாடம் விளையும் சின்ன சின்ன நன்மைகளுக்குக் கூட நன்றி செலுத்தி வாழ்வது நல்லது.  எடுத்துக்காட்டாக, இன்று வழிப்போக்கர் ஒருவர் நம்மை ஏறிட்டு பார்த்ததற்காக,

நிம்மதியாக சில நேரம் தூங்கும், ஓய்வு எடுக்கும் வாய்ப்பு கிடைத்தற்காக, ஓட்டுனர் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவி செய்தற்காக நம் கண்கள் சரியாக செயலாற்றுவதற்காக என மிகச்சாதாரணமான நன்மைகளுக்குக் கூட நன்றி உணர்வோடு நன்றி செலுத்தி வாழ்வது நமக்கு நன்மைகளை வழங்குவதாக அறிஞர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நன்றியுணர்வு பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை ஆராயும் போது, நமக்கு அன்றாடம் கிடைக்கும் தீமைகள், துன்பங்கள், சோதனை களுக்கும் கூட நாம் நன்றி செலுத்துவது நன்மை பயக்கும் என்பது புலப்படுகிறது. அதாவது அத்தகைய துன்பங்கள் அல்லது தோல்விகள் அல்லது சோதனைகள் நமக்கு வழங்கும் அனுபவம், பக்குவம், படிப்பினை, வைராக்கிய உணர்வு போன்ற நன்மைகளுக்காக நன்றி செலுத்துவது அவசியம் என்கிறது. ஆராய்ச்சி முடிவுகள்.

ஆகவே நன்மையோ, தீமையோ, நன்றியுணர்வோடு வாழுங்கள்.

உங்கள் வாழ்வில் சந்தோஷம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

சாதனை சாகசங்கள் சாதரண நிகழ்வுகளாக மாறும்.

18. இன்முகத்தோடு முடியாது என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்

திருவாளர் ராஜரத்னம் அவர்கள் உலகளாவிய ஙழ். எஞஞஈ அதாவது யார் எந்த உதவிகள் கேட்டாலும் எந்த உத்தரவுகள் கொடுத்தாலும், நான் பார்த்துக்கொள்கிறேன் கவலையை விடுங்கள் என்று கூறிவிட்டு பணி சுமையை நினைத்து விழி பிதுங்கி நிம்மதி இழந்து பல்வேறு உடல் மற்றும் மனநல கோளாறு களுடன் அல்லல்பட்டு நாட்களை கடத்தி வருபவர் தான், திருவாளர் ராஜரத்தினம்.  இவர் வாழ்வில் எந்த சாதனைகளையும் நிகழ்த்த முடியாது.  இவர் வாழ்வில் மகிழ்ச்சி என்பதை மருந்துக்காகவும் அனுபவித்து இருக்க வாய்ப்பு இல்லை. அதைவிட இவருடைய துக்கம், இவருடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டத்தையும் பாடாய்படுத்தி எடுப்பது தவிர்க்க முடியாதது.

இவ்வாறு நண்பர், மனைவி, தாய், தந்தை, மேலதிகாரி, கணவன் என பலரால் வழங்கப்படும் அளவிற்கதிகமான பணிச்சுமையால் அவதிப்படு பவர்கள் இவ்வாறாக பல்வேறு உளவியல் மற்றும் சமூக காரணங்கள் காணப்படலாம். அவை முக்கியமல்ல. இந்த எதிர்மறையான பழக்கத்தி

லிருந்து எப்படி தப்பித்துக்கொள்வது.

முதல் உங்கள்  ஆழ்மனதிற்கு நீங்கள் ஒரு “ஆமாம் சாமி” என்பதை புரியவையுங்கள்.

இரண்டாவதாக இந்த குணநலனால் உங்கள் உடல்நலன், மனவளர்ச்சி, குடும்ப அமைதி, குழந்தைகளின் முன்னேற்றம் என என்ன என்ன எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை முழுமையாக புரிந்துகொள்ளுங்கள்.  அடுத்ததாக  முடிவு செய்யுங்கள்.  இந்த ஆபத் தான குண நலனிருந்து மீண்டு வெளிப்பட்டு வந்தே ஆக வேண்டுமென்று.

எப்படி “முடியாது” என்று சொல்வது?

நம் மேலதிகாரி அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஏதேனும் ஒரு உதவியை அல்லது பணியை அல்லது செயலை செய்து தர கோரும்போது

(அ)    உங்கள் பொறுப்புகளின் கால அட்ட வணையை, உடல் நலத்தை ஆய்ந்து, அவை ஏற்றுக்கொண்டால், நன்றியுணர்வுடன் அவர்களுக்கு உதவி செய்வதாக வாக்களியுங்கள்.

(ஆ)    உங்களுக்கு நேரமோ, வசதியோ இல்லா விட்டால், மிகவும் உறுதியாக ஆனால் இன்முகத்துடன் மன்னிக்கவும் நான் உங்களுக்கு உதவி செய்ய இயலாத நிலையில் இருக்கின்றேன். என்று பதிலளித்துவிடுங்கள்.

(இ)    மேலும் அந்த நபர் உதவி செய்துதான் ஆக வேண்டும் என்று நச்சரித்தால், விடை யளிக்க கால அவகாசம் கேளுங்கள்.  பின் உங்கள் நேரதிட்ட அட்டவணையை அலசிப் பாருங்கள். அவர் கோரும் உதவியின் முக்கியத்துவத்தை (உங்களுக்கும் அவருக்கும், சமூகத்திற்கும்) நன்மைகளை ஆராய்ந்து பாருங்கள். பலன் திருப்திக ரமாக இருந்தால், ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லாவிடில் அன்பாக “மன்னித்து விடுங்கள், என்னால் முடியாது” என்று மறுத்துவிடுங்கள்.

முடியாததை முடியும் என்று ஏற்றுக் கொண்டு நாமும் துன்புற்று அனைவரையும் அவஸ்தைப்பட வைப்பதை விட, அன்பாக என்னால் முடியாது என்று சொல்வது மேலான முடிவாக இருக்கும். ஆகவே இன்றே முடி வெடுப்போம் “என் சக்திக்கும், நலனுக்கும் உகந்த அளவு பணிச் சுமைகளை ஏற்றுக்கொள்வேன்” என்று ஏற்ற பொறுப்புகளை செயல்திறனுடனும், பொறுப் புடனும் நிறைவேற்றுவேன் என்றும் சூழுரைப்போம். இந்த முடிவு சந்தோஷ, சாதனைகளுக்கு வழிவகுப்பது நிச்சயம்.

19. நாம் நாமாக இருப்போம்

உங்கள் வாழ்வின் இந்த நொடி வரை கிடைத்த அனுபவங்களை முழுமையாக புரட்டி பார்ப்பீர்களானால் எத்தனையோ, மனிதர்கள் இயற்க்கையான மனித ஆளுமையில் கவனம் செலுத்தி, உணர்ந்து பயன்படுத்தி, வெளிப்படுத்தி பயனுள்ள அதீத செயல்களை, சாதனைகளை நிகழ்த்தி நாட்டிற்கும். வீட்டிற்கும் தனக்கும் நன்மை பயக்கும் விதமாக வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.  இவர்கள் கவனமெல்லாம் தங்கள் இயற்கையான மனிதத்தை, மனித மகத்துவத்தை பயன்படுத்தி சமூகத்திற்கு, மனிதகுலத்திற்கு என்ன பங்களிப்பை நல்கலாம் என்பதில் தான் இருக்கும். இவர்களை பிறர் திட்டினாலோ, துன்புறுத்தினாலோ அவமானப் படுத்தினாலோ, பொறுமையிழந்து விட மாட்டார்கள். உணர்ச்சியடைய மாட்டார்கள். தற்காப்பு முயற்சிகளை எடுக்க முனைய மாட்டார் கள். இவர்கள் தனக்கு இறைவன் அல்லது இயற்கை நல்கிய மனிதம் என்ற அடையாளத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொண்டவர்கள்.

ஆகவே இவர்கள் நான் பணக்காரன், நான் முதலாளி, நான் அமைச்சர், நான் ஆண், நான் அதிகாரி என்னை இப்படி சொல்லி விட்டாயா? நான் யார் என்று தெரியுமா? நான் யார் என்று காட்டுகிறúன் பார்! என்று இறு மாப்புடன் செயல்பட்டு தங்களை தற்காத்துக் கொள்ளும் பலவீனர்கள் அல்ல.

இவர்கள் தங்களை தங்கள் புனிதத்தை தங்கள் மகத்துவத்தை முழுமையாக உணர்ந்திலார்கள். வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து, சந்தோஷ சாதனை வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள்.  ஆகவே நான் அவர், இவர் அவருக்கு வேண்டியவர், அவர் மகன், அவர் பேத்தி என்ற மாயையான அடையாளங்களை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு நாம் நாமாக வாழ்வோம்.

வாழ்வில் அமைதி, சாதனை, சந்தோஷம் தொடரும்…..

(அடுத்த இதழில் சந்திப்போம்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு