Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

தன்னம்பிக்கை 2010 ஜூலை இதழ் கண்டேன்.          மாண்புமிகு அவினாசிலிங்கம் அய்யா அவர்களைப் பற்றி வேந்தர் திரு. தி.க. சண்முகானந்தம் அவர்கள் கணித்தெடுத்த மொழிகள் கனிச்சுவைபோல் இனித்தன!

அன்னைத் தமிழுக்கு அவினாசிலிங்கம் அய்யா அவர்கள் ஆற்றிய சேவையை (செம்மொழி மாநாட்டில் தான் அவரை நினைத்தாரில்லை) தன்னம்பிக்கை இதழ் தனக்கேயுரிய பாணியில் தடம் பதித்துக் காட்டிய பாங்கு பாராட்டற்பாலது!

தமிழில் கலைக்களஞ்சியம் வர ஆற்றிய பாங்கினை அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அய்யா அவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  இன்று திரு. தி.க. சண்முகானந்தம் அவர்கள் கூறியதுடன் அதனை ஒப்பிட்டு மிகவும் மகிழ்ந்தோம்.

பல கோணங்களில் அவினாசிலிங்கம் அய்யா அவர்களின் பெருமை பேசத்தக்க வகையில் திரு. தி.க. ச. வுடலான நேர்காணல் அமைந்திருந்தது.  பழைய கடல் புதிய அலை வீச்சாக அப்பேட்டி எங்களுக்கு.

முனைவர் செ. சைலேந்திர பாபுவை இதுவரை ஒரு காவல்துறை அதிகாரியாவே கண்டுவந்த எங்களுக்கு ‘உடலினை உறுதி செய்’ எனும் பகுதியில் அவர் தந்த கருத்துக்களைப் படித்தவுடன் ‘காக்கிச்சட்டைக்குள்ளும் கனிந்த தேன்துளிகள்’ துளிக்கும் அது இலக்கியமாக மிளிரும் என்பதையும் உணர்ந்து கொண்டோம்.

திரு.கே. ரஜனிகாந்த் அவர்களின் சிந்தனைத் தொடரை மாதா மாதம் வாசிக்கத் தவறாத வாசகர்களில் நானும் ஒருவன். அவர் ஒரு கைதேர்ந்த கதை சொல்லி யாக விளங்குவதுடன் நல்லதோர் தன்னம்பிக்கைப் பயிற்சியாளராகவும் திகழ்வதை அவர் கட்டுரைகள் கலங்கரை விளக்கமாகக் காட்டுகின்றன. பல்வேறு கல்லூரிகளில் தன்னம்பிக்கைப் பயிலரங்குகள் நடத்தியுள்ள அவர், அவரின் அனுபவங்களை ஒரு நூலாகக் கொணர வேண்டும் தருவாரா.

தாழ்வு தான் நம்மைப் பாதாளத்திற்குள் தள்ளுகிறது எனவே அந்தத் தாழ்வையே தள்ளிவிட்டால் நமக்கு வாழ்வு நிச்சயம் என்பதை ‘மெர்வின்’ கட்டுரை மிக மேன்மையுடன் விளக்கியது.  சக்தி, புகழ், பொருள் அவை அடக்கத்தின் மூலமே கிட்டும். உயர்ந்த நோக்குடன் செயல்படும் எவருக்கும் வெற்றி நிச்சயம் என்பதை மிக அற்புதமாகப் படம் பிடித்திருந்தார் மெர்வின்.
– ப. முருகேச பாண்டியன்
தலைவர், நேயர் பேரவை,
கரப்பாடி, பொள்ளாச்சி

‘முயன்றேன் – வென்றேன்’ – உஷாராணி வாழ்க்கைக் கதையைப் படித்தேன். கண்ணீர் விட்டேன். நானும் எனது 25 வயது மகளை இழந்து 5 ஆண்டுகளில் சென்ற ஆண்டு என் கணவரையும் இழந்து தனி மரமாகவே நிற்கிறேன். ஆனால் இனி நானும் மற்ற குழந்தைகளின் சிரிப்பில் எனது மகளைக் காணுமாறு டியூசன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.
– பொ. முத்துலட்சுமி
சேரன் மகாதேவி, திருநெல்வேலி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு