Home » Articles » விதை

 
விதை


மாதவன்
Author:

– மன்னை மாதவன்

ஆடி பட்டம் தேடி விதை” நெற் பயிர்கள்     மண்ணில் விதைக்கப்படும் காலத்தை இந்த வரிகள் நமக்கு கூறினாலும் விதைத்தது முதல் அறுவடை வரை உழைப்பும் முயற்சியும் தொடர்ச்சியாக விதைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நம் முன்னோர்களின் இந்த வரிகள் நமக்கு உணர்த்துகிறது. பயிர்கள் விளையும் களம் நிலம் மனித வாழ்க்கையில் எண்ணங்கள் எனும் பயிர் விதைக்கப்படும் விளையும் களம். மனித மனம் என்றால் என்ன? காலம் காலமாக நமக்குள் தொடர்கிறது இந்தக் கேள்வி? நாம் கண்களால் காணும் இந்த உடல் பரு உடல் (நம் உடல்) இதன் பெயர் அண்ண மயகோசம். நம் உடல்களுக்குள் உடல்களாக பிரயாண மயகோசம், மனோன்மய கோசம், ஞானமயகோசம், விக்ஞானமயகோசம், ஆனந்த மயகோசம் இப்படி ஆறு உடல்கள் உள்ளது என்றும் இவைகள் கண்களால் காண முடியாத சூட்சம் உடல்கள் என்றும் மனோன் மயகோசம் என்ற இந்த உடல்தான் மனம். மனிதனின் எண்ணங்கள் பிறக்கும் குடம். வாழும் இடம் இது என்று சித்தர்களும், ஞானிகளும் கூறுகின்றனர்.

கண்ணுக்கு தெரியாதது மனம். இந்த உலகத்தோடு தொடர்பு கொண்டு மனிதனை இயக்க மனதிற்கு உதவும் கருவியே மூளை. இது மனோதத்துவ மருத்துவர்கள் கூறும் கருத்து. விஞ்ஞானம், மெய்ஞானம் இந்த இரண்டிலும் பொதுவான விஷயம் நம் மனம் கண்களுக்குப் புலப்படாதது.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களும் நம் செயல்கள் மூலமாக கண்டறியப்படுகின்றன. கண்ணுக்கு புலனாகாத இந்த இரண்டு கருவிகளி-ருந்தும் நாம் பார்க்கும் இந்த உலகத்தில் செயல்கள் நிகழ்கின்றன. என்னே இயற்கையின் விந்தை !!

மனிதனின் வாழ்க்கை சிறக்க மனோ பாவம் மிக முக்கியமானதாக திகழ்கிறது. மனோ பாவம் (Attitude) என்பது மனம் ஒரு நிகழ்வை அல்லது ஒரு பொருளை எப்படி பாவிக்கிறது பார்க்கிறது என்பதை பொருத்தது. 1093 கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் தன்னுடைய இரு செவிகளிலும் கேட்கும் திறனை இழந்தவர்.

அவர் ஒலி தட்டுகளை (கிராமபோன்) கண்டுபிடித்து அதில் தன் குரலை தானே பதிவு செய்தர். அப்படி அவர் பதிவு செய்த அவர் குரலையே அவரால் கேட்க முடியவில்லை!! ஒரு மெல்லிய கம்பியை கிராமபோனோடு இணைத்து அந்த கம்பியை தன் பல்லால் கடித்து அவர் குரலின் அதிர்வுகளை அவர் உணர்ந்தார்.

நமக்கு தான் காது கேட்கவில்லையே நாம் ஏன்? ஒலிப்பதிவு இயந்திரத்தை கண்டறிய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. இது அவருடைய மனோபாவம். அன்று அவர் விதைத்த விதை இன்று நாம் பலன் காண்கிறோம்.

நம் மனதிற்கு பிடித்த பாடல்களை சி.டி.யில் நாம் கேட்கும் நேரம் நாம் நம் மனதிற்குள்  தாமஸ்  ஆல்வா  எடிசனுக்கு நன்றி கூறுவோம். இப்படி ஓர் மனோபாவத்தை நாம் உருவாக்கிக் கொள்வோம்.

மனிதனின் வாழ்க்கையில் என்றுமே இன்றியமையாத ஒலி, ஒளி இவைகளை கண்டறியும்போது எடிசன் கண்ட தோல்விகளில் இருந்து வெற்றி வழி வகுத்தது அவருடைய சிறந்த மனோபாவமும், விடாமுயற்சியும். இதற்கு சான்றாக ஒன்று கூறுவேன். இதிகாசங்களில் இறைவனை ஆயிரம் பாடல்களால் அர்ச்சனை செய்தவர்கள் உண்டு.

தான் வாழ்ந்த நாட்களில் ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு மேல் கண்டறிந்து தன்னை படைத்த இறைவனுக்கு பெருமை சேர்த்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

இவை எல்லாம் அவரே விதைத்துக் கொண்ட நல்ல எண்ணம் நம்பிக்கை முயற்சி என்ற விதைகளே. மனோபாவத்திற்கும், முயற்சிக்கும் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக் கும் மனிதர்களை அடையாளம் காட்டுவது நம் மனத்திற்கு மிக நெருக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மாணவப் பருவம் மிக ஆழமான பருவம் எதையும் கற்கும் பருவம் இந்த பருவத்தில் பெற்றோருக்கு தெரியாமல் செய்யும் செயல்கள் பெரும்பாலும் நல்ல செயல்களாக இருக்காது. ஆனால் இந்த மாணவரின் மனோபாவம் மிக வித்தியாசமானது. பெற்றோர்க்கு தெரியாமல் தான் வாழ்ந்த கொண்டலாம்பட்டி பேருந்து நிலையத்தில் அமர்ந்து அங்கு வந்து போகும் பேருந்துகளை (பலமணி நேரங்களாக)  கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்பார். அந்த காட்சிகள் அவருக்குள் பிரமிப்பையும், அந்த இடத்தை விட்டுச் சென்ற பிறகு கனவுகளை உண்டாக்கும். ஏழாம் வகுப்பு வரையே படித்த அவர் காண்பது கனவா? நினைவா? என்று எல்லோரும்  பிரமிக்கும் வகையில் வாழ்க்கையில் உயர்ந்து இருக்கிறார்.

அவர் ஓ.ட.ச. உரிமையாளர் உயர்திரு. கே.பி.நடராஜன் அவர்கள். ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனின் மனோபாவம் எப்படி இருக்கும்? நன்றாக கல்வி கற்று, நல்ல வேலையில் அமர்ந்து, பதவி உயர்வுகளை வகிப்பது இது ஒரு சராசரி மனோபாவம். இந்த மனோபாவத்தில் அலுவலகங்கள் நகராது. நாம் தினமும் (நகர்ந்து) அலுவலகம் சென்று வருவோம். திரு.கே.பி.என். அவர்களின் மனோபாவம் நகராமல் இருந்து ஒரே இடத்தில் அமர்ந்து நகரும் பேருந்து களையே அவர் கவனித்தது அவருக்குள் அதுவே கனவாக மலர்ந்தது. பேருந்துகள் முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும். இந்த மனோபாவம் இவருக்குள் விதைக்கப்ட்டதால்தான் வாழ்க்கை யில் இந்த அளவுக்கு அவர் முன்னேறியிருக் கிறாரோ என்று எனக்கு தோன்றுகிறது.

அனுபவ கல்வி கற்றவர்கள் வாழ்க்கையில் தோற்பதே இல்லை. அதற்கு இவர் வாழ்வே சான்றாகும்.

முயற்சியின் அருமையை ருசியை

எந்த  அளவுக்கு  இவர்  உணர்ந்து  இருந்தால்

“முடியாதது என்பது முயலாதது மட்டுமே”
இந்த வரிகளை அவர் அலுவலகத்தில் எழுதி இருப்பார். படித்தவர்கள், பாமரர்கள், ஏழை, பணக்காரர்கள் என்று எல்லோராலும் எப்பொழுதும் விதைக்கப்பட வேண்டிய விதை “தெய்வந்தான் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்வருத்த கூலி தரும்” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த விதையை விதைத்த வள்ளுவர்க்கு நன்றி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு