Home » Articles » தேசம் என் சுவாசம்

 
தேசம் என் சுவாசம்


admin
Author:

– கோபி பயிலரங்கம்

சுயமுன்னேற்றச் சிந்தனைகளை வளர்க்கும்     பொருட்டு தன்னம்பிக்கை மாத இதழால் நடத்தப்படும் சுயமுன்றேற்றப் பயிரலங்குகள் சமுதாய முன்னேற்றத்திற்கு சாவியாக செயலாற்றி வருகிறது.

இவ்வகையில் கோபிசெட்டிபாளையத்தில் தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி, கோபியும் இணைந்து கடந்த ஜுன் மாதம் “தேசம் உன் சுவாசம்” என்ற தலைப்பில் சுயமுன்னேற்றப் பயிலரங்கை சிறப்புடன் நடத்தியது.

பயிலரங்கத்தில் பயிற்சியாளராக கோபி கம்பன் கல்வி நிலைய தாளாளர் திரு. P.P. காளி யண்ணன், கௌரவ விருந்தினராக கோபி, பாரியூர் அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ் (பி) ட் நிர்வாக இயக்குனர் தங்கமணி திரு. P.M.  பழனிச் சாமி, கோபி போக்குவரத்து தலைமைக் காவலர் திரு. E.R. இராமலிங்கசாமி, கல்லூரியின் இணைச்செயலர் திரு. எ.ட.கெட்டிமுத்து, முதல்வர் திரு. P. தங்கவேல் SVHPC முதல்வர் திரு. க.கனக ரத்தினம், தன்னம்பிக்கை மாத இதழின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. M. நம்பிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தனது கனிவுடன் கூடிய சிறப்பான சேவைக்காக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், Y’s Men சங்கம் விருதுகளையும், முதலமைச்சர் பதக்கத்தையும் பெற்ற கோபி போக்குவரத்து தலைமைக் காவலர் திரு.உ.த.இராமலிங்கசாமிக்கு பயிலரங்கத்தில் பாராட்டு வழங்கப்பட்டது.

பயிற்சியாளராக கலந்து கொண்டு சிறப்பித்த திரு. ட.ட. காளியண்ணன் தன் உரையில், “தேசம் என் உயிர், தேசத்துக்காக நான் என்ற உணர்வு ஒவ்வொருவர் உள்ளத்திலும் உருக் கொள்ள வேண்டும்.

நம் நாட்டுப் பண்பாடு, கலாச்சாரம் இவற்றுடன் தேசிய ஒருமைப்பாடு உணர்வையும், இளம் தலைமுறையினர் அனைவரும் போற்றிக் காக்க வேண்டும்.  தற்காலத்தில் குடும்ப உறவு நிலைமை கவலை அளிக்கிறது.  பெற்றோர்கள் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் வாழ்நாளை எண்ணி வருகிறார்கள்.

இதுபோன்ற சுயமுன்னேற்றப் பயிலரங் கம் வாயிலாக தனிமனித வாழ்வை சிறக்க வைக்க வேண்டும். அப்போது குடும்ப உறவு சிறக்கும்.  இதன் மூலம் குடும்ப உறவு மேம்பட்டு அது தேசம் மேன்மையடைய வழி வகுக்கும்.

இன்று பிறரைத் துன்புறுத்தியும், மனம் நோகச் செய்தும் மகிழும் மனப்போக்கு மக்கள் உள்ளங்களில் அதிகரித்து வருகிறது. ஒரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பிறர் துன்பம் காணச்சகியாத சமூகத்தை “நீரிடை உறங்கும் சங்கு நிழடை உறங்கும் மேதாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யான்” எனக் கம்பன் காட்டுவான்.

“தேசம் என் உயிர்”  என்று முழங்கி புதிய பாரதம் உருவாகக் கனவு காணச் சொன்ன அப்துல் கலாம் அவர்கள் கூற்றைப் பின்பற்றி தேசத்தை முன்னேற்ற உறுதி கொள்ளுங்கள்” என்று கூறினார்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு