Home » Articles » சிறந்த சாதனைகளை படையுங்கள்

 
சிறந்த சாதனைகளை படையுங்கள்


சௌதாமினி
Author:

– எ. சௌதாமினி

வாழ்க்கையில் சிறந்த சாதனைகளைச்         செய்ய வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்களே! நீங்கள் உங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டு உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? உங்கள் மனதில் உறுதி வேண்டும். உறுதியில்லாத உள்ளங்கள் அஸ்திவாரம் இல்லாத சுவர்களைப் போன்றது.  நீங்கள் மன உறுதியோடு இருந்தால், சுட்டெரிக்கும் கதிரவனும் உங்களைக் கண்டு நெளிந்தோடும். வானத்தில் பளிச்சென்று தெரிகின்ற நட்சத்திரங்கள், உங்களைக் கண்டு, “அச்சச்சோ! இவரா”? என்றெண்ணிப் பயந்து போய்ப் பறந்தோடிவிடும்.  இந்த உலகத்தையே சுருட்டிக் கொண்டு போகத்துடிக்கும் சூறாவளிக்காற்றும், சுனாமி அலைகளும் உங்களைக் கண்டு சுருண்டு வானம் கூட உங்களை வாழ்த்தி மலர் மாரி பொழியும். பொங்கியெழும் கடலும் உங்கள் பாதங்களைப் பணிவோடு வணங்கி முத்தமிடும்.  முன்னேறு வேன், சாதனைகளைப் படைத்தே தீருவேன் என்ற உங்கள் மன உறுதியைக் கண்ட இயற்கை அன்னை மகிழ்வு பொங்கக் கட்டியணைத்துக் கொண்டு முத்த மழை பொழிவாள்.

நீங்கள் முன்னேற்றப்பாதையை நோக்கி நடக்கும் போது, கீழே விழ நேரிடும்.  நீங்கள் கீழே விழுவதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் கீழே விழுந்த பின்பு மீண்டும் ஊக்கத்துடன் எழுந்து நடக்க வேண்டும்

அதில்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது.

உங்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமை யாதது ஊக்கம் தான்! தொய்வில்லாத ஊக்கம் உங்களை உயர்வின் உச்சாணிக் கொம்புக்கே கொண்டு செல்லும்.  ஊக்கம் என்ற வாகனத்தை நீங்கள் இறுதிவரை ஓட்டிச் செல்லுங்கள்.  ஊக்கம் இருந்தால்தான் “வெற்றி” என்ற கனியைப் பறிக்க முடியும்.

இடைவிடாத முயற்சியை நீங்கள் மேற் கொண்டால் இறுதியில் உங்களுக்குக் கிடைக்கப் போவது வெற்றிதான்! பெரிய பெரிய வெற்றி களெல்லாம் இடைவிடாத முயற்சிகளினாலும்  கடுமையான முயற்சிகளினாலும் கிடைத்திருக் கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.!

பயிலாமல் கல்வி இல்லை.  முயலாமல் வெற்றி இல்லை. எனவே வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டுமானால் முயற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டே

இருங்கள்.  இடையில் தோல்வி

வந்தாலும் துவண்டு விடாதீர்கள்.

நீங்கள் ஒவ்வொரு வினாடியும்

முன்னேறிக் கொண்டே

இருங்கள்!

“வாய்மை, பொறுமை, விடா முயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை” என்கிறார் விவேகானந்தர். முயற்சி உடையவர்கள் எந்தக் காலத்திலும் இகழ்ச்சியை அடைய மாட்டார்கள். எனவே நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

முயற்சி செய்பவர்களுக்குச் செல்வம் வந்து சேரும். முயற்சி செய்யாமல் சோம்பேறியாகத் திரிகின்றவர்களுக்கு வறுமை வந்து சேரும் என்பதை வள்ளுவர் அழகாகக் குறிப்பிடுகின்றார்.

நீங்கள் ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி பெற்றிட முயற்சி தேவை.  ஆனால் அந்தச் செயலில் இறங்கலாமா? வேண்டாமா? என்று தயக்கம் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது.  தயக்கம் உங்கள் செயலைச் செய்யவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்து உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்தி நிறுத்திவிடும்.  எனவே நீங்கள் சிறிய செயலோ, அல்லது பெரிய செயலோ எதுவாக இருந்தாலும் அதைச் செய்வதற்குத் தயங்காதீர்கள்.

அற்புதமான சாதனைகளைப் படைத்தவர்கள், முயற்சியினால் முன்னுக்கு வந்தவர்களே! நீங்கள் இடைவிடாது உழைப்பதன் மூலம் உற்சாகம், நற்பண்பு, மன அமைதி, பொருளாதார உயர்வுகள், மகிழ்ச்சி, வெற்றி, புகழ் ஆகியவை உங்களுக்குக் கிடைக்கின்றன.

முயற்சியின் முடிவு முன்னேற்றம் தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்.   பெர்னாட்ஷா ஒரு நாடகக் கொட்டகையில் குதிரைகளைப் பாதுகாக்கும் வேலையில் இருந்தார்.  நாடக ஆசிரியராக, எழுத்தாளராகத் தானும் ஆக வேண்டும் என்று விரும்பினார்.  இடைவிடாமல்  முயற்சி  செய்தார்.  முயற்சிகள் பலனளிக்காமல் போகுமா? இறுதியில் நாடக உலகில் கொடிகட்டிப் பிறந்தார்.  எவரெஸ்ட் சிகரத்தின் மேல் ஏறிச் சாதனை படைத்தார்.  உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பச்சேந்தரிபால் என்ற பெண்.

உழைக்காமல், உயர்ந்த நிலையை எவராலும் அடைய முடியாது.  இடைவிடாத முயற்சியும், கடினமான உழைப்பும் வெற்றிக்கு வழி வகுக்கும் பாதைகளாகும்.

“சுறுசுறுப்பான உழைப்பு, நமக்குப் பல வசதிகளையும், நிம்மதியையும் அளிக்கின்றது” என்கிறார் விவேகானந்தர்.

” நீ முயற்சி செய்யும் வரை உன்னால் என்ன செய்யமுடியும் என்பதை ஒருபோதும் நீ அறிய மாட்டாய்” என்ற ஆங்கிலப் பழ மொழியைக் கவனத்தில் கொள்க! கடினமான உழைப்பு, உங்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையைத் தரும்.  உழைத்துக் கொண்டே இருங்கள்! நீங்கள் மிகவும் உற்சாகத்துடன் இருப்பீர்கள் “எனக்கு உற்சாகத்தைத் தருவது உழைப்பு ஒன்றே!” என்று கூறுகிறார், ஒப்பற்ற சாதனைகளைப் படைத்த தாமஸ் ஆல்வா எடிசன். இளைஞர்களே! நீங்கள் மிகச்சிறந்த சாதனைகளைப் படைக்க முடியும் என்று நான் நம்புகிறேன் நீங்களும் உங்களை நம்புங்கள்! நம்பிக்கை என்ற தும்பிக்கையைக் கொண்டுதான், பேராற்றல் மிகுந்த யானை வெட்டி வீழ்த்தப் பட்ட மரங்களையும், கனமான பொருட்களை யும் அலட்சியமாகத் தூக்குகின்றன. இளைஞர் களே! “உடல் வலிமை நமக்கு இல்லையே”! என்று ஏங்காதீர்கள். மனவலிமையோடு செயல் படுங்கள்! மனவலிமை உங்களுக்கு இருக்கு மானால் மாபெரும் சாதனைகளை நீங்கள் படைக்க முடியும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு