Home » Articles » ஈரோடு பயிலரங்கச் செய்தி

 
ஈரோடு பயிலரங்கச் செய்தி


admin
Author:

கோவை பவுனம் பதிப்பகம் மற்றும்     ஈரோடு தன்னம்பிக்கை வாசகர் வட்டம் இணைந்து நடத்திய மூன்றாவது சுய முன்னேற்ற பயிரலங்கம் 04.07.2010 ஞாயிறு மாலை 6.00 மணி அளவில் பூமாலை அரங்கத்தில் அ/நி ஆயிரராமு அவர்கள் இறைவணக்க பாடலுடன் துவங்கியது. ஈரோடு வட்டத் தலைவர் அ. குப்புசாமி வரவேற்புரையில் உறுப்பினர் வருகை அதிகரித் திருந்ததை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். பயிற்சியாளரின் எளிமை, இனிமை, நேர்மை ஆகியன அவரது பழக்கவழக்கத்தில் தெரிந்ததை நெகிழ்ச்சி யுடன் கூறி அனைவரையும் வரவேற்றார்.

பயிற்சியாளர் பயிரலங்கத்தில் பணத்தை நாம் எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதை செயல் வடிவமாகவே செய்து காட்டினார். தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றப்பட்ட மிகுந்த பொருளாதார பின்னடைவிலிருந்து மீண்டதற்கு பூனாவைச் சேர்ந்த சுரேஷ் பத்மநாபன் அவர்களின் “அன்பே பணமே ஆருயிரே” பயிலரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந் ததைப் பகிர்ந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற மூவருக்கு பல்வேறு யுக்திகளின் மூலம் பரிசளித்து பரவசப்படுத்தினார். இந்தப் பயிரலங்கம் முழு நாள் அளவில் நடைபெற்றால் பணத்தைப் பற்றிய அக நோக்கு ஆக்கப்பூர்வமான பரிணாமமாக பரிமளிக்கும் என்பதை உறுதியான உற்சாகத்துடன் உரை நிகழ்த்தினார். சுமார் 70 உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றது பயிலரங்கத்தை பிரகாசிக்கச் செய்தது.  பல உறுப்பினர்கள் முழு நாள் பயிலரங்கத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர். செயலர் சையது நசீர் நன்றி கூற கூட்டம் குதுகலமாக நிறைவுபெற்றது.
Jc அ. குப்புசாமி
தலைவர், வாசகர் வட்டம், ஈரோடு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு