Home » Articles » மனமே மனமே மாறிவிடு!

 
மனமே மனமே மாறிவிடு!


இரத்தினசாமி ஆ
Author:

– பேரா. ஆ. இரத்தினசாமி

வெற்றிப் படிக்கட்டுகளில் வீறு நடைபோட்டோர்
அன்பிற்குரிய ‘தன்னம்பிக்கை’ வாசக நெஞ்சங்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

ஸ்    தேர்வுகளில் சிறப்பான வெற்றி – பயிற்சி முறைகள்

ஸ்    பிள்ளைகளைச் சான்றோனாக்குவதில் பெற்றோர் பங்கு

ஸ்    மாணவப் பருவ பிரச்சனைகளும் தீர்வுகளும்

ஸ்    தேர்வுகள் இனி தேர்ச்சிகளே.

தன்னம்பிக்கை இதழில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூறிய தொடர்கள்  மூலம் நாம் தொடர்பு கொண்டிருந்தோம் சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘மனமே மனமே நீ மாறி விடு’ தொடர் மூலம் மனம் விட்டு பேச உள்ளோம்.  பயில உள்ளோம். பயிற்சிகள் பல பெற உள்ளோம்.
மனதைப் பற்றிய ஆய்வுகள்

ஸ்    36 ஆண்டுகால கல்லூரிப் பேராசிரியர் பணியில் மாணவர்களுடன் கொண்ட தொடர்பால் பெற்ற அனுபவங்கள்.

ஸ்    நாம் இயக்கிய நூற்றுக்கணக்கான பயிலரங் கங்களின் வாயிலாக இளைய சமுதாயத் தின் நாடித்துடிப்பறிந்து, அவர்கள் மனதைப் பண்படுத்தி, பக்குவப்படுதியதின் வாயிலாக பெற்ற பலன்கள்.

ஸ்    பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய அவர் களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை களும், பயிற்சிகளும் அளித்து அவர்களை வெற்றிப்பாதையில் பயணிக்க எடுத்த முயற்சிகள்.

ஸ்    இவைகளை ஆதாரமாகக் கொண்டும், மனோதத்துவ பேராசிரியர்கள், மருத்துவ வல்லுநர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் ஆகியோரிடம் பெற்றபயிற்சிகள், ஆலோசனைகள், விளக்கங்கள்.
ஸ்    இந்திய/ மேற்கத்திய நாடுகளின் ஏடுகளில் பெற்ற தகவல்கள்

கடந்த இரண்டு ஆண்டு காலமாக மேற் கூறியவைகளை வைத்து ஆய்விற்கு உட்படுத்தி யதன் விளைவுதான் ‘மனமே மனமே நீ மாறிவிடு’ தொடர்.
பயிலரங்கங்களில் பயிற்சி பெற்றோர் நிலை

பயிலரங்கங்களில் பயிற்சி பெறும் 100 பேரில் 90 பேருக்கு இரண்டு நாள் பயிற்சிகளில் பற நிலைகளில் மனமாற்றம் தெரிந்தது.  மனமலர்ச்சி, தன்னம்பிக்கை, உற்சாகம், நினை வாற்றல், தைரியம் ஆகியன மேலோங்கி இருந்தன.

பயிலரங்கங்களின் வெற்றி பயிற்சிகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தான் உள்ளது.  ஆனால் 100%ல் 15% தான் தொடர்ந்து கடைப்பிடித்து வெற்றிப் படிக்கட்டுகளில்  வீறுநடை போடுகின்றனர். மற்ற 85 பேர் என்னவானார்கள்? ஏன் பின்தங்கினர்?

பயிலரங்குகளில் பெறும் வெற்றி தற்காலிகமாக மனமாற்றத்தால் நிரந்தர மாற்றத்திற்கு அவர்கள் மனம் இடம்தரவில்லை.  அதை மனம் எதிர்க்கிறது.

மனம் மாற்றத்தை எதிர்க்கிறது.

புலன்கள் வயப்பட்ட மனம், அதன் இன்பங்களிலே மூழ்கிய மனம் அதிலிருந்து சற்றே விலகியிருக்க மறுக்கிறது.  பயப்படுகிறது.

இரண்டு நாட்கள் பயிலரங்க இயக்கு னரின் கட்டுக்கோப்பில் இருந்த மனம், பெற்ற தன்னம்பிக்கை, தொடர்ந்த பயிற்சிகள் இன்மை யால் தறி கெட்டுப் போனது.

மாற்றத்தை விரும்பித் தானே வந்தனர்.

ஏற்றம் தரும் எதிர்காலம் என எதிர்பார்த்துத்தானே பயின்றனர்.  ஏன் மீண்டும் பழைய நிலைக்கே சென்றனர்.

வெற்றிப் படிக்கட்டுகளில் முன்னேற…

பரிதவிக்கும் இளைய சமுதாயத்தை வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறவைக்க என்ன வழிகள்?

ஏன் மனம் மாற்றத்தை எதிர்க்கிறது?

மனதை அறியும் வழிமுறைகள் என்னென்ன?

மனதை தன் வழிப்படுத்த என்ன வழிகள்?

இச் சிந்தனைகளின், ஆய்வுகளின் வெளிப் பாடே ‘மனமே மனமே நீ மாறிவிடு’ தொடர்.

நமது உயர்விற்கு காரணம் நம் மனம்.

நமது தாழ்விற்கும் காரணம் நம் மனமே!

நம் ஏற்ற, இறக்கத்திற்கு காரணம் நம் மனமே! என்றறிந்ததும் நாம் மனதை சரியாக அறிய முயலவில்லை.

‘மன மாற்றமே வெற்றி’ என்று அறிந்தும் மனமாற்றத்திற்கான உரிய வழிகளை அறிய வில்லை.

வாருங்கள் வாசகர்களே!

நீங்கள் ‘தன்னம்பிக்கை’ வாசகர்கள்.

தரணி ஆளப் பிறந்தவர்கள்!

முயற்சி கொண்டு

முன்னேறத் துடிப்பவர்கள்!

தளராத மன உறுதி கொண்டு

சாதிக்கப் பிறந்தவர்கள்!

வாருங்கள் வாசகர்களே!

உங்களை அறிவோம்!

உங்கள் மனதை அறிவோம்!

மனதைப் பயில்வோம்!

மனதோடு பழகுவோம்!

மனதை நம் வசப்படுத்துவோம்!

மனம் நம் வசப்பட்டால்,

வானமும் நம் வசப்படும்!

வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவோம்!

வாழ்வை வசந்தமாக்குவோம்!

வாரீர் தோழர்களே!

(வெற்றிப்படி 2-ல் சந்திப்போம்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு