Home » Articles » முயன்றேன்! வென்றேன்!!

 
முயன்றேன்! வென்றேன்!!


ராஜ்குமார் x-ray
Author:

வாழ்க்கை எனும் ஆடையில் துன்பம்         என்னும் கிழிசலை தைக்க தன்னம்பிக்கை என்ற ஊசியும், தைரியம் என்ற நூலும் இருந்தால் போதும் என்கிறார் கோவை மாநகரின் தையல்நாயகி பார்வதி.…என் கணவர் நாகராஜ் ஆட்டோ டிரைவர். ஆட்டோ செல்லும் பாதையைப் போலத்தான் எங்களது வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந் திருந்தது.  திருமணமாகி 16 வருடங்களில் சண்டை, சச்சரவுகளின்றி அனுசரித்துபோகும் வாழ்க்கையில் என் இனிப்பான கணவருக்கு, சர்க்கரை நோயும், தொடர்ந்து இருதய நோயும் வந்தது. மாதத்தில் பாதிநாள் மருத்துவமனையில் கழிந்தது. நான் துவண்டுவிடவில்லை. எனது லட்சியம் என் இரு மகன்களையும் பட்டம் படிக்க செய்ய வேண்டும். என்பதே நல்லவேலை நான் கற்ற தையல் தொழில் கைகொடுத்து பெண்களுக்கான ஆடைகளை அவர்களுக்கு பிடித்த டிசைன்களில் தைத்துக் கொடுத்து சம்பாதிக்கிறேன். விழாக்காலங்களில் ரோட்டில் பூமாலை வியாபாரம் செய்யவும் தயங்குவதில்லை.
ஏளனம் செய்பவர்களை பார்த்து தயங்காமல் தைரியமாக எந்தத் தொழில் செய்தாலும் பெண்களால் பிழைத்துக் கொள்ளமுடியும் என்று சொல்லும் பார்வதியை ‘இரண்டு ஆண்களுக்கு சமமானவள்’ என்று சொல்கின்றனர் அப்பகுதியினர்.

– சந்திப்பு : ‘X Ray’ ராஜ்குமார்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு