Home » Articles » முதல் மார்க் வாங்குவது எப்படி

 
முதல் மார்க் வாங்குவது எப்படி


தங்கவேலு மாரிமுத்து
Author:

– தங்கவேலு மாரிமுத்து

சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பிலும் ப்ளஸ்     டூ விலும், மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலிடத்தைப் பிடித்தவர்கள், தங்கள் வெற்றிப்பாதைக்கான வழிகளாகச் சொன்னது, பத்திரிக்கைகளில் பேட்டியாக வந்தது, இவற்றின் சுருக்கமான சாராம்சம்தான் இது.
முதல் மதிப்பெண் வாங்கத் துடிக்கும் ஒவ்வொரு மாணவரும் இவைகளைப் பின்பற்றி னால் நிச்சயமாக வெற்றிதான்.
ஏனென்றால் இது வென்றவர்கள் சென்ற வழி. பரீட்சித்துப் பார்க்கப்பட்ட, உத்திரவாத முள்ள வழி.
கொஞ்சம் மலைப்பாகத் தோன்றும்.
சிரமமாக இருக்கும். என்ன
செய்வது? பரிசு என்பதும்
பாராட்டு என்பதும்
படுத்துத் தூங்குபவனுக்குக் கொடுக்கப்படுவதில்லையே!
உழைப்பவனுக்குத்தானே
ஊதியம்?
வென்றவர்கள் சென்ற வழி
1.    ஆசிரியர், பெற்றோர்
இவர்களின் சொல்படி
நடத்தாலே போதும்;
நல்ல மதிப்பெண்களை
வாங்கிவிடலாம்.
2.    வகுப்பில், அன்று நடத்திய
பாடங்களை அன்றே வீட்டில் படித்துவிடுவேன்.  நாளைக்குப்
பார்த்துக் கொள்ளலாம் என்று
தள்ளிப் போட மாட்டேன்.
3.    அதிகாலையிலும், இரவிலும் படிப்புக்காக அதிகநேரம் ஒதுக்கிப் படித்தேன்.
4.    வீட்டில் கேபிள் இணைப்பைத் துண்டித்து விட்டார்கள். ஆகவே டி.வி. நேரம் மிச்சம்.
5.    கேபிள் இருந்தது. ஆனாலும் டி.வி. பார்ப்பதைக் குறைத்தேன்.  தவிர்த்தேன்.
6.    படித்தவைகளில், முக்கியமான பகுதிகளை, கடினமான பகுதிகளை எழுதிப் பார்த்தேன்.  பிழைகள் தெரியும். திருத்திக் கொள்வேன். இன்னும் சிறப்பாகவும், விரைவாகவும் எழுதுவதற்கு இந்தப் பழக்கம் மிகவும் உதவியாக இருந்தது.  படித்ததை மனதில் பதிக்கவும் உதவியது.
7.    பெற்றோர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து ஊக்கம் கொடுத்தார்கள். உற்சாகம் கொடுத்தார்கள்.   வழி நடத்தினார்கள்.
8.    படிக்கும்போது ஏற்படும் எந்த சந்தேகத் தையும் உடனுக்குடன், (மறுநாளே) கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்வேன்.
9.    முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள் களையெல்லாம் சேகரித்தேன்.  அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதில்களைத் தயார் செய்தேன்.
10.    எனக்கு நானே மாதிரித் தேர்வுகள் நடத்தி, தவறுகளை திருத்திக் கொள்வேன்.
11.    எந்தப் பாடத்தையும், பாடத்தின் பகுதி களையும், வேண்டாம் என்று ஒதுக்கிவிட மாட்டேன்.
12.    வெறுமனே மனப்பாடம் செய்யாமல், எதையும் புரிந்து படிப்பேன்.
13.    எப்படியும் முதல்மார்க் வாங்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளில் தீவிரம் இருந்தது. ஒரு வெறி இருந்தது.
14.    படிப்பில் முன்னணியில் இருக்கும் எனது வகுப்புத் தோழர்களிடம் நெருக்கம் வைத்திருந்தேன்.
15.    கல்வி தரப்போகும் கௌரவமும், சிறப்பு களும், மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன.  ஒரு உந்துதலைத் தந்தன.
16.    முதல் மார்க் வாங்க வேண்டும் என்பதில் மட்டுமே முழுகவனமும், சிந்தனையும், முயற்சியும் இருந்தது.
17.    அதற்காக உடலைக் கெடுத்துக் கொள்ள வில்லை.  சத்தான உணவு, அளவான உறக்கம், தவறாத, குறைந்தபட்ச உடற் பயிற்சி எதையும் விட்டுவிடவில்லை.
18.    வீட்டிலும், நாட்டிலும் நடக்கும் எந்தச் சம்பவமும் என் படிப்பைப் பாதிக்காத அளவுக்கு சற்றே விலகி இருந்தேன்.
19.    பாடங்களைத் தவிர, ஏதாவது படிக்க வேண்டும் என்று தோன்றினால், தன்னம்பிக்கை தரும் நூல்களை சிறிது நேரம் படிப்பேன். உள்ளத்தில் புத்துணர்ச்சியை ஊற்றிக் கொள்வேன்.
20.    நான் முதல் மார்க் வாங்கினால், என் பெற்றோர்கள் அடையப்போகும் ஆனந் தத்தை, அடிக்கடி மனதில் நினைத்துப் பார்ப்பேன்.

 

1 Comment

  1. parthiban.s says:

    good

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு