Home » Articles » பயத்தை விரட்டு

 
பயத்தை விரட்டு


பதி ஆர்.வி
Author:

– ஆர்.வி. பதி

நாம் தினம் தினம் நம்மைச் சுற்றி வாழும்     பலவிதமான மனிதர்களைப் பார்க் கிறோம்.  இயல்பாகவே நம்முடைய மனதானது தேவையிருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு வரைப் பற்றியும் எடை போட்டு அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றித் தீர்மானம் செய்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருடைய செய்கை களை வைத்து இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆளாய் வருவார் என்று தீர்மானிக்கும் மனசு வேறு சிலரைப் பார்த்து இவர் எப்படி வாழ்க்கை யில் ஜெயிக்கப் போகிறார் என்று கவலைப் படுகிறது. ஆனால் நாளடைவில் நம்முடைய தீர்மானங்களில் சில தோல்வியைத் தழுவுவதைக் கண்டு ஆச்சரியப்படவும் செய்கிறோம்.

நம்மில் பலருக்கு நம்மிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன என்பதே தெரிவ தில்லை. சிலருக்கு சாதாரண திறமைகள் மட்டுமே இருக்கும். ஆனால் பயஉணர்வு இன்றி செயல்படு பவர்களாக இருப்பார்கள். வாய்ப்புகள் கதவைத் தட்டும் சமயங்களில் துணிச்சலோடு செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பார்கள். சிலருக்கு அசாதாரணமான திறமைகள் இருக்கும்.  கூடவே அதிக அளவில் பய உணர்வும் இருக்கும்.  இதனால் அவர்களின் ஆற்றல் குறுகி வெற்றி பெற இயலாமல் தோல்வியைத் தழுவ நேரிடுகிறது.

நம்முடைய தீர்மானங்கள் தோற்பதற்கான அடிப்படைக் காரணம் இதுதான்.

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்த கார்சியா என்ற தீவில் அஜாகியோ என்ற பகுதியில் வாழ்ந்து வந்த சார்லஸ் போனபார்ட்டி என்பவரின் மகனே மாவீரன் நெப்போலியன் ஆவார். நெப்போலியன் வாழ்க்கையில் பயம் என்ற சொல்லுக்கே இடம் கிடையாது. சிறு வயது முதலே அச்சம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவர்.

நெப்போலியனுக்கு எட்டு வயது நடந்த போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது.  ஒருநாள் இரவு தாயார் கண்விழித்துப் பார்த்தபோது உடன் படுத்திருந்த நெப்போலியனைக் காணவில்லை.  வெளியே வந்து தேடிப் பார்த்தார். அக்கம் பக்கத் தவர் சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு காட்டுப் பகுதிக்குப் போனாள். நெப்போலியன் தனியாக ஒரு குளக் கரையில் அமர்ந்து கொண்டு நிலா வெளிச்சத்தில் குளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

தாயார் நெப்போலியனிடம் “நள்ளிரவில் தனியாக இங்கு வந்து உட்கார்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உனக்கு பயமாக இல்லையா?” என்று கேட்டாள்.

அப்போது நெப்போலியன் தாயாரிடம் கேட்ட ஒரு கேள்வி அனைவரையும் திகைக்க வைத்தது.
“பயமா? அப்படி என்றால் என்னம்மா?”

நெப்போலியன் தன் வாழ்க்கையில், பயம், தோல்வி என்ற மூன்று வார்த்தைகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் இடம் கொடுக்க வில்லை.  நெப்போலியன் வெற்றிகளைக் குவித்து உலகப்புகழ் பெற இதுவே காரணமாக அமைந்தது.

சிலரிடம் வெற்றி பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கும்.  ஆனால் அவர்கள் எந்த வெற்றியினையும் பெறாமல் இருப்பார்கள். இதற்குக் காரணம் அவர்கள் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்களாக இருப்பார்கள்.  துணிவே துணை என்பார்கள்.  எந்த ஒரு விஷயத்தையும் நாம் பயப்படாமல் துணிந்து செய்யும் மனப்பக்குவத்தை பெறவேண்டும்.  தவறு செய்யத்தான் பயப்பட வேண்டுமே தவிர நேர்மையான மற்றும் நல்ல விஷயங்களைச் செய்ய எக்காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் தயங்கக் கூடாது.  மேலும் பயப்படவும் கூடாது.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனதில் தினம் தினம் பயத்தையே ஊட்டி வளர்ப்பதைப் பார்க்கிறோம். உதாரண மாக சைக்கிளில் செல்லாதே.  எக்காரணத்தைக் கொண்டும் வீட்டைவிட்டு தனியாக வெளியே செல்லாதே. கூட்டத்தில் சென்றால் தொலைந்து விடுவாய். வெளியே சென்றால் பிள்ளை பிடிப் பவன் உன்னைப் பிடித்துச் சென்று விடுவான் என்பது போல பல விஷயங்களைச் சொல்ச் சொல் அவர்களின் மனதில் பயத்தை விதைக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது நடந்து விடுமோ என்ற தேவையில்லாத அச்ச உணர்ச்சியே பெற்றோர் களை இதுபோல செய்யத் தூண்டுகிறது.

நம்மைப் போலவே வருங்காலத்தில் நமது பிள்ளைகள் தனித்து செயல்பட்டு வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  அதற்கான முறையான பயிற்சிகளையும் அணுகு முறைகளையும் நாம் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும். உதாரணமாக சைக்கிளில் செல்லாதே என்று சொல்லுவதற்கு பதிலாக சைக்கிளை மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் பாதுகாப்பாகவும் எவ்வாறு ஓட்ட வேண்டும் என்று சொல்லித் தர வேண்டும். தனியே வெளியே செல்ல நேரும் பட்சத்தில் முன்பின் தெரியாதவர் எவரேனும் அழைத்தால் அவருடன் செல்லக்கூடாது என்று மனதில் பதியும்படி எடுத்துரைக்க வேண்டும்.

ஒரு சமயம் நெப்போயனுக்கு ஐரோப் பாவில் ஒரு உபசார விழா விருந்து நடத்தப் பட்டது. அவ்விருந்தில் நெப்போலியனும் அவனுடைய தளபதி முதலானோரும் கலந்து கொண்டார்கள். நெப்போலியனுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதை அறிந்து அவனுடைய தைரியத்தைச் சோதிக்க விரும்பினார்கள்.

விருந்தில் நெப்போலியன் உட்பட அனை வரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள்.  அச்சமயத்தில் வெளியே பீரங்கி வெடிக்கச் செய்யப்பட்டது. எதிர்பாராத அந்த பெரும் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்தோர் திடுக்கிட்டு பயந்து போனார்கள். சிலர் தங்கள் கையில் இருந்த தேநீர் கோப்பைகளை தவறவிட்டு விட்டார்கள்.

நெப்போயன் மட்டும் பயப்படாமல் பதட்டப்படாமல் “வெளியே ஏதோ சத்தம் கேட்டதே. அது என்ன சத்தம்?” என்று கேட்டான்.

நெப்போலியன் எதற்கும் பயப்படாத ஒரு மாவீரன் என்பதை அங்கிருந்தோர் உணர்ந்து கொண்டு அவனுடைய தைரியத்தைப் பாராட்டி னார்கள்.  நெப்போலியன் மாபெரும் வெற்றிக்கு அவனுடைய இந்த துணிச்சலான மனநிலையே காரணமாகும்.

சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் கூட இன்னும் பய உணர்ச்சியோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலையில் யாரேனும் விபத்தில் மாட்டிக் கொண்டால் கூட அவர் களுக்கு உதவ யாரும் முன்வருவதில்லை.  அவ்வாறு உதவி செய்தால் காவல்துறை யினருக்கும் நீதித்துறையினருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்ச உணர்வே இதற்குக் காரணமாக அமைகிறது. இதுபோன்ற விஷயங் களில் இன்று நாம் தைரியமாக செயல்படா விட்டால் நாளை நாம் இதுபோன்றவிபத்தில் மாட்டிக் கொள்ளும் போது யார் நம்மைக் காப்பாற்றுவார் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சிலர் சாதாரண காய்ச்சல் அடித்தால் கூட பயந்து போவார்கள். மருத்துவரிடம் சென்றால் என்ன செய்வாரோ ஏது சொல்வாரோ என்று பயந்து பின்வாங்குவார்கள். இந்த பய உணர்வே சாதாரண காய்ச்சலைக் கூட பெரிய வியாதியாக மாற்றிவிடும்.

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் தினம் தினம் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக் கிறோம். எந்தவிதமான பிரச்சனையானாலும் அதை மனோதிடத்துடன் எதிர்நோக்கியாக வேண்டும்.  மாறாக பயந்து பிரச்சனைகளைச் சந்திக்காமல் பின்வாங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நம்முடைய வெற்றியைத் தீர்மானிக்க பல காரணிகள் உள்ளன.  அவற்றில் துணிச்சலும் ஒரு முக்கியமான காரணியாகும். துணிச்சலோடு எதையும் முறையாக நேர்மையாக அணுகுபவர் களே சாதிக்கிறார்கள். வாழ்க்கையில் ஏராளமான வெற்றிகளைக் குவிக்கிறார்கள். எனவே துணிச் சலை உங்கள் மனதில் விதைத்து பயத்தைத் துரத்துங்கள்.  உங்கள் பிரச்சனைகளை பயமின்றி மனவலிமையோடு எதிர்கொள்ளுங்கள்.  வெற்றியைக் குவியுங்கள்.

 

6 Comments

 1. ponmudi says:

  குட் article

 2. ponmudi says:

  அர்டிச்லேரியல்லி appriciable

 3. mariselvam says:

  very nice and useful article

 4. balamurugan says:

  nice article thanks

 5. prabaharan says:

  It will be good article. Each and every one should read this
  article.

 6. Sri.vignesh says:

  Thunichal ullavarkaluku ithu sirantha tonic… Thanks for ur article.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு