Home » Articles » வரவு எட்டணா… செலவு பத்தனா..

 
வரவு எட்டணா… செலவு பத்தனா..


ரஜினிகாந்த் கே
Author:

– கே. ரஜனிகாந்த்

சிந்தனை செய் நண்பனே

தொடர்….

வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான         பள்ளிக்கூடம் அதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஏராளம்.  சென்ற இதழில் ‘நான்’ என்ற எண்ணம் மனிதனை எந்த அளவிற்கு ஆட்டுவிக்கிறது என்பதைப் பார்த் தோம்.  இந்த இதழில் சேமிப்பு என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன, வாழ்க்கையில் சேமிப்பின் பங்கு எத்தனை அவசியம் என்பதைப் பார்ப்போம்.

விஜய் ஒரு கணினி பொறியாளர்.  பெங்களூரில் ஒரு நல்ல ஸ்தாபனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது.  முதல் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். ஒரு பைக் வாங்கினார்.  அடுத்த மாதம் ஒரு விலையுயர்ந்த மொபைல் போன் வாங்கினார்.

ஒரு வருடத்திற்குப் பிறகு அவருடைய சம்பளம், இருபத்து ஐந்து ஆயிரமாக உயர்ந்தது.

ஒரு அறை கொண்ட அவருடைய வீடு வசதியாக இல்லை என்று ஒரு பெரிய வீட்டிற்கு வாடகைக்குச் சென்றார். வருடாவருடம் அவருடைய சம்பளம் ஏற, ஏற அவர் வசதிகளை அதிகரித்துக் கொண்டார்.

ஃபிரிட்ஜ் வாங்கினார்.  வாஷிங்மெஷின் வாங்கினார்.  முதல் ஒரு சிறியகார் வாங்கினார். பிறகு ஒரு வீடு வாங்கினார். சம்பளம் ஏறிய உடன் சிறிய காரைக் கொடுத்துவிட்டு ஒரு பெரிய கார் வாங்கினார்.  மீண்டும் சம்பளம் ஏறிய உடன், இன்னொரு வீட்டை வாங்கினார்.

இப்படியே அவர் சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க வசதிகளும் ஏறிக்கொண்டே சென்றது.  எட்டு வருடங்கள் இப்படியே கழிந்தது.  கணினி உலகில் வீழ்ச்சி ஏற்பட்டதால், விஜய் வேலையை இழக்க நேர்ந்தது. அவருடைய சேமிப்பு போதுமானதாக இல்லாததால், சேமிப்பை வைத்து செலவுகளை விஜய்யினால் சமாளிக்க முடியவில்லை.  இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல், காரையும் வீட்டையும் விற்க நேரிட்டது.

இந்த  சமயத்தில்  அவருடைய  சொந்த ஊருக்குச் சென்றார்.  அங்கு அவருடைய உற்றார் உறவினர்கள் அனைவரும், அவரை கேவலாமாக விமர்சனம் செய்தனர்.  “ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய விஜய், இப்ப கடன் கட்ட முடியாமல் திரும்பி வந்துட்டானே” என்று கூறினார்.

இதனை எல்லாம் கேட்ட விஜய், மிகவும் மனவருத்தம் அடைந்தார். அவர் இது போன்ற சூழ்நிலை எப்பொழுது ஏற்பட்டாலும், அவருடைய குரு ஒருவரிடம் சென்று ஆலோசனை கேட்பார்.  அது போல இந்த முறையும் அவரைச் சென்று சந்திக்க முடிவு செய்தார் விஜய்.

குருவிடம் சென்று, தன் மன வேதனையை கூறினார் விஜய்.  தான் இத்தனை சம்பாதித்தும், ஒன்றும் செய்ய இயலாமல் இருப்பதையும், இதனால் பலரும் அவரை அவதூறு கூறுவதையும் குருவிடம் சொல்கிறார்.  அதற்கு அவருடைய குரு “நீ மாத வருமானத்தில் எவ்வளவு செலவு செய்தாய், எவ்வளவு சேமித்தாய்?” என்று கேட்டார்.  அதற்கு விஜய்.

வரவு – செலவு ‘ சேமிப்பு

அதாவது வரும் வருமானத்தில், செலவு போக மிச்சமாவதை சேமித்ததாக கூறினார்.

இதனை கேட்ட குரு, “தப்பு செய்து விட்டாய் விஜய்.  சேமிப்பு என்றால், வருமானம் போக மிச்சமாவது கிடையாது.

வரவு – சேமிப்பு ‘ செலவு

அதாவது வரும் வருமானத்தில், சேமிப்பு போக மிச்சம் இருப்பதை செலவு செய்ய வேண்டும்” என்ற தாரக மந்திரத்தை கூறினார்.

விஜய்க்கு தான் செய்த தவறு என்ன என்று  புரிந்தது.  இனிமேல்  தன்  குரு  கூறியது போல, சேமிப்பு போக மிச்சம் இருப்பதை செலவு செய்ய வேண்டும்.  என்று தீர்மானித்துக் கொண்டார்.

பதினைந்து நாட்கள் கழித்து, விஜய்க்கு சுமாரான சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது.  ஆனால் அவர் முதலில் செய்தது போல, அளவுக்கு மீறி செலவு செய்து அவஸ்தைப் படாமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அவருடைய குரு கூறியது போல வந்த சம்பளத்தில், முதல் ஒரு பகுதியை சேமிப்பிற்கு என்று எடுத்து வைத்தார், மீதி உள்ளதை செலவு செய்தார். சம்பளம் ஏற, ஏற அவருடைய சேமிப்பையும் அதிகம் செய்தார். இதனால் பிற்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.

இதில் இருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன என்றால், வாழ்க்கையில் தேவை என்பதற்கு முடிவே கிடையாது. நம்முடைய வசதி, வாய்ப்புகள் ஏற, ஏற நம்முடைய தேவைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.  ‘வரும் முன் காப்போம்’ என்பதை நினைவில் கொண்டு, எந்த ஒரு மோசமான சூழ்நிலைக்கும் நம்மை நாம் தாயர் படுத்திக் கொள்ளவேண்டும்.  நம்முடைய வசதி, வாய்ப்புகள் அனைத்தும், எப்பொழுதும் நன்றாகவே இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்காமல் வசதி இருக்கும் பொழுதே தேவைகளைக் குறைத்துக் கொண்டு, சேமிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால்,

‘வரவு எட்டனா
செலவு பத்தனா
அதிகம் ரெண்டனா
கடைசியில் துந்தனா’ தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு