நான் ஒரு தனியார் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக உள்ளேன். எனது தண்டுவட நுணியில் சில நேரங்களில் தாங்கமுடியாத வலி ஏற்படுகிறது. இது எதனால்?
– சுரேஷ், சித்தாபுதூர்
அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாக வரும். நாம் இருக்கையில் அமரும்போது உடலின் மொத்த எடையையும் தண்டுவட நுனியில்தான் அதிகம் உள்ளது. அதிக நேரம் இருக்கையில் உள்ளவர்களுக்கு இந்த உள்ரணம் தண்டுவடத்தில் ஏற்படுகிறது.
இதற்கு மருந்து மாத்திரைகள் ஒரு அளவிற்கே குணப்படுத்தும். இந்த வேதனையைத் தவிர்க்க உட்காருமிடத்தில் இருக்கையில், தலையணை அல்லது நடுவில் ஓட்டையுள்ள ரப்பர் மெத்தை பயன்படுத்தி உட்காரலாம். மேலும் வெந்நீரில் இடுப்புவரை சில நிமிடங்கள் அமர்வதாலும் வலி குறையும். தொடர்ந்து வலி இருக்கும் பட்சத்தில் தண்டுவட சிகிச்சை நிபுணர் லோக்கல் ஸ்டீராய்டு இன்ஜக்ஸன் தண்டுவடத்தில் செலுத்துவதன் மூலம் வலி முற்றிலும் குணமாகும்.
– ‘X Ray’ ராஜ்குமார்
Dr. S. காளமேகம் MBBS, D. Ortho (DNB) Ortho, தண்டுவட சிகிச்சை நிபுணர்,
சுவானிகா மருத்துவமனை, இடையர்பாளையம், தடாகம் ரோடு, கோவை-25.