முடியும் என்று நம்புங்கள்
வெற்றி என்பது யார்கையில்
விவேகம் என்பது எத்துறையில்
பற்றித் துணிந்து செய்தாலே
பறந்து வருமே நம்பிக்கை
Continue Reading »
2 comments Posted in Articles
வெற்றி என்பது யார்கையில்
விவேகம் என்பது எத்துறையில்
பற்றித் துணிந்து செய்தாலே
பறந்து வருமே நம்பிக்கை
Continue Reading »
2 comments Posted in Articles
நான் ஒரு டிரைவர். சமீபத்தில் எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருதய மருத்து வரை சந்தித்து பரிசோதனையில் நலமாக இருக்கிறேன் என்று தெரிந்தும், சில நேரங்களில் நெஞ்சு படபடப்பும், சின்ன வலியும் ஏற்படுகிறது. ஒரு கொடூர சாலை விபத்தை பார்த்ததிலிருந்து தான் இதுபோன்று உள்ளது. நான் இனி என்ன
Continue Reading »
0 comments Posted in Articles
– P.S.K. செல்வராஜ்
லட்சிய வீரர்களே!!
கடமை கசந்துவிட்டதா? செயல்பாட்டில் ஈடுபாடில்லையா?
உலகில் எத்தனை கோடி பேர் வந்தார்கள்?
எத்தனை கோடி பேர் வென்றார்கள்.
எத்தனைபேர் வரலாற்றில் உள்ளார்கள்?
வந்தவரெல்லாம் வரலாற்றில் நிலைத்து நின்றிருந்தால் இந்த வரலாறுதான் என்னாவது? இந்த சரித்திரத்திற்கு சக்தி ஏது? மதிப்பேது?
வந்தவரெல்லாம் வென்றிருந்தால் வெற்றிக்கு மதிப்பேது?
உடனடியாக – விரைவில் – எளிதில் கிடைத்துவிடுவது வெற்றியல்ல!
வெற்றி அவ்வளவு எளிதாக இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை.
அறிவும் – தெளிவும் – துணிவும் – தெரிவும் – வீரமும் – விவேகமும் – விழிப்பும் – திறமையும் எந்த ஒரு இளைஞனிடம் ஸ்தம்பிக்கின்றதோ அந்த இளைஞனால் எதையும் சாதிக்க முடியும். அவனிடம் பல வெற்றிகள் காணப்படும். அந்த இளைஞனால் சாதிக்க முடியாதது எதுவும் உலகில் இல்லை – இருக்காது; இருக்கவும் முடியாது.
Continue Reading »
8 comments Posted in Articles
தாராபுரம் சுருணிமகன் on Feb 2010
– தாராபுரம் சுருணிமகன்
வாழ்க்கையில் உயரத் துடிக்கும் உள்ளங்களே! நீங்களும் குறிக் கோளில் உறுதி உள்ளவர்களாகத் திகழ வேண்டும். ஒரு செயலில் முயற்சியுடன் ஈடுபடும் போது, நீங்கள் சோர்வடையாமல் உற்சாகத் துடன் செயலாற்றவேண்டும்.
‘பெரிய பலன்கள் இடையறாத, கடின உழைப்பினாலேயே கிடைக்கின்றன. பலவீன மான உள்ளங்கள் கூடக் கடுமையான உழைப் பினால் பலம் பெற்றுவிடுகின்றன’ என்கிறார் தத்துவஞானி பேக்கன்.
நீங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். இடைவிடாமல் பெய்கின்ற மழையால் சலவைக்கல்கூடத் தேய்ந்து போகும்’ என்று குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.
‘லட்சியத்தை அடைவதில் பெரிய மகத்துவம் எதுவும் இல்லை. அந்த லட்சியத்தை அடைவதற்காக நடத்தும் போராட்டம்
இருக்கிறதே, அதில்தான் எல்லா மகத்துவங்களும் அடங்கி இருக்கின்றன’ என்கிறார் மில்னஸ்.
வாழ்க்கையாக இருந்தாலும் சரி, படைகள் மோதிக்கொள்ளும் போர்க்களமாக இருந்தாலும் சரி, உழைப்பு, உறுதி, விடாமுயற்சி ஆகியவை தாம் இறுதியில் வெற்றியைத் தருகின்றன. நெப்போலியன் மிகப்பெரிய வீரன். போர் என்றால் அவனுக்கு உயிர். அத்தகைய நெப்போலியன், வெலிங்டனிடம் தோற்றான். வெலிங்டன் தன்போர் வீரர்களிடம் சொன்னான்!
‘வீரர்களே! பலமாகத் தாக்குங்கள்! இந்தப் போர்க்களத்தில் யாரால் நீடித்துத் தாக்க முடிகிறதோ அவர்களுக்குத்தான் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கப் போகிறது’ வெலிங்டன் எவ்வளவு பெரிய உண்மையைச் சொன்னான்.!
”ஸ்காட்லாந்து நாட்டு அரசன்
ப்ரூஸ், போரில் தோற்றுப்போய்
நாட்டை இழந்து, காட்டிலே
தலைமறைவாக வாழ்ந்து
கொண்டிருந்தான்.
சோர்வுடன்
அவன் படுத்துக்
கொண்டிருந்த போது,
சுவரின் மீது சிலந்திப்பூச்சி
ஏறிக் கொண்டிருப்பதைப்
பார்த்தான். அது தன்னுடைய
கூட்டை நெருங்கிய போது வழுக்கிக் கீழே விழுந்தது. கீழே விழுவதும், மறுபடியும் ஏறுவதுமாகப் பலமுறை முயன்று
இறுதியில் வெற்றி பெற்றது.
தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய இருப்பிடத்தை அடையும் வரையில் சிலந்தி காட்டிய விடா முயற்சியிலிருந்து ப்ரூஸ் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டான். அவனு டைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளி பிறந்தது. சிதறிக் கிடந்த தன்னுடைய படைகளை மறுபடியும் ஒன்று திரட்டினான். போரில் பகைவர்களை வென்று நாட்டை மீட்டு மீண்டும் அரசனான்.
இடைவிடாத முயற்சியுடையவன் வீட்டுக் கதவைச் செல்வம் என்றமங்கை தட்டு வாள். இதில் ஐயமில்லை. முயற்சிகள் தொடரு மானால் வெற்றியும் உங்கள் வாழ்க்கையில் படரும். மின்சாரத்தைக் கண்டுபிடித்த எடிசன், முயற்சியினால் முன்னுக்கு வந்தவர் அல்லவா?
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்யுங்கள். உழைத்துவிட்டுக் காத்திருங்கள். பலன் கை மேல் கிடைக்கும்.
தச்சுப் பட்டறையில் வாழ்க்கையைத் தொடங்கிய ஆபிரகாம் லிங்கன் விடாமுயற்சி யின் விளைவாக, அமெரிக்க ஜனாதிபதி பதவியை அடைந்தார். கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்றஆர்வத்துடன் புத்தக மூட்டையைத் தலையிலே சுமந்து, ஆற்றைக் கடப்பதற்குத் தினமும் நீந்தி, கடந்து பள்ளிக்குச் சென்று படித்து முன்னுக்கு வந்தார். படிப் படியாக உயர்ந்து ”பாரதப் பிரதமர்” என்ற உன்னதமான பதவியை அடைந்தார் லால்பகதூர் சாஸ்திரி. தன்னுடைய அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிறபெரிய பதவியை அடைந்தார் காமராஜர். ஏழைக் குடும்பத்திலே பிறந்த ஜஸ்டீஸ் முத்துச்சாமி ஐயர் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து முன்னேறி னார். படிப்படியாக உயர்ந்து சென்னை உயர்நீதிமன்றநீதிபதியானார்.
வாழ்க்கையின் பெரிய முட்டுக்கட்டை யாக ஏழ்மை இருக்கிறதே என்று எண்ணி சோர்வு அடையாதீர்கள். உழைப்புக்கு நீங்கள் ஒரு போதும் ஓய்வு கொடுத்துவிடாதீர்கள். முயன்றால் முடியாதது இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். உழைப்பு ஒருபோதும் வீண் போவதில்லை. உழைப்பு தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.
எந்த முயற்சியாக இருந்தாலும் அதில் நேர்மை இருக்க வேண்டும். நேர்மையற்ற முயற்சியால் எந்தப் பலனும் இல்லை. எல்லோரையும் நடுங்க வைக்கின்ற கொலை காரனும், பணத்தைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனும் இடைவிடாத முயற்சி யினால் தாங்கள் நினைத்த காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால், இவை களெல்லாம் முயற்சிகள் ஆகுமா? இவைகளை உண்மையான உயர்வு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?
எனவே, முயற்சியுடன் உழைத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் உயர்வது மட்டுமல்ல, உங்களைச் சார்ந்த சமுதாயமும் உயரும். இதில் ஐயமில்லை. முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை
2 comments Posted in Articles
– ஆர். முருகேசன்
ஆங்கில புதுவருடம் பிறந்தது. தமிழ் புத்தாண்டும் பிறந்துள்ளது. நம் மனதிற்குள்ளும் புதிய சிந்தனைகளும் புதிய கோணத்தில் பிறந்து வாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க இருக்கும் வருடமாக தொடர வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி பிறந்து எத்தனை வருடங்களோ?
Continue Reading »
2 comments Posted in Articles
மூர்த்தி செல்வகுமாரன் on Feb 2010
– பேராசிரியர் பி. மூர்த்தி செல்வக்குமரன்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
அதாவது உழவர்களைப் பின்பற்றியே மற்றவர்கள் வாழ்வார்கள் என்பது வள்ளுவன் வாக்கு. அதைப்போலவே உழவும் உழவு சார்ந்த தொழில்களையே பெரிதும் நம்பி இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருகின்றது.
Continue Reading »
– ஆர். வி. பதி
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். அவர் காலத்தில் மனஉளைச்சல் என்ற விஷயமே இல்லை. அப்படி இருந்திருந்தால் ‘ஆசையே துன்பத்திற்கு காரணம். பேராசையே மனஉளைச்சலுக்கு காரணம்’ என்று சொல்லியிருப்பார்.
Continue Reading »
0 comments Posted in Articles
– டாக்டர் அனுராதா கிருஷ்ணன்
நன்மையான நண்பர்களே! உடல் உறுதியின் நான்காம் படி நிலையான கொழுப்பு பற்றி சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சியை இந்த அத்தியாயத்திலும் பார்ப் போம். கொழுப்பு பற்றிய
Continue Reading »
0 comments Posted in Articles
– எம். ஞானதீபன்
இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக் களைச் சந்திக்கின்றோம். ஒருவர் விபத்தினா லேயோ அல்லது வேறு ஏதாவது நோயினா லேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
Continue Reading »
3 comments Posted in Articles