![]() |
Author: சம்பத்குமார் மா
|
அமைதி நிலவிட, அன்பு பெருகிட
புத்தாண்டே வருக!
ஆவல் கூடிட, ஆண்டவன் அருளிட
புத்தாண்டே வருக!
இயலாமை மாய்ந்திட, இனிமை பெருகிட
புத்தாண்டே வருக!
ஈகை குணம் ஓங்கிட, ஈசனருள் கிட்டிட
புத்தாண்டே வருக!
உண்மைகள் உரைத்திட, உயர்வினை எட்டிட
புத்தாண்டே வருக!
ஊழ்வினை விலகிட, ஊரெல்லாம் செழித்திட
புத்தாண்டே வருக!
எண்ணங்கள் உஸ்ர்ந்திட, எடுத்த காரியம் முடித்திட புத்தாண்டே வருக!
ஏழ்மைநிலை தீர்ந்திட, ஏற்றம்தனைப் பெற்றிட
புத்தாண்டே வருக!
ஐஸ்ங்கள் அன்றிட, ஐஸ்வர்யம் பெருகிட
புத்தாண்டே வருக!
ஒற்றுமையாய் வாழ்ந்திட, ஒருமனதுடன் உழைத்திட புத்தாண்டே வருக!
ஓங்கி உஸ்ர்ந்திட, ஓம்சக்தி துணை இருந்திட
புத்தாண்டே வருக!
ஔவையின் கூற்றைஅனைவúம் பின்பற்றிட
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
– – மா. சம்பத்குமார்
முதுநிலை விரிவுரையாளர் / வேதியியல், நஞ்சையா லிங்கம்மாள்
பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டுப்பாளையம், கோவை.

January 2010
























No comments
Be the first one to leave a comment.