Home » Articles » பன்றிக் காய்ச்சல் பற்றி…

 
பன்றிக் காய்ச்சல் பற்றி…


இராமநாதன் கோ
Author:

– டாக்டா கோ. இராமநாதன்

இருமல் மூலமாகக்கூட பரவக்கூடிய இந்த வைரஸ் மெக்ஸிகோவில் தலைகாட்டிய வேகத்தில் எங்கும் பரவத் தொடங்கியது.

உண்மையில் மனிதர்களிடம் இருந்துதான் மனிதர்களுக்குப் பரவுகிறது. ஆனாலும் நாடெங் கிலும் இருக்கும் பல மாநகராட்சி ஊழியர்கள் பன்றிகளைக் கொல்வதாக பத்திரிகை செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

பன்றி காய்ச்சல் நிஜமாகவே பன்றியிருந்துதான் ஆரம்பித்ததா?

சாப்பிடக்கூடிய பக்குவத்துக்கு சமைக்கப் பட்ட எந்த இறைச்சியிலுமே இது போன்ற வைரஸ்கள் உயிர் வாழ முடியாது.

இந்தியாவில் தற்போது இந்தக் காய்ச்சல் அபாயம் சில இடங்களில் உள்ளன.

பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் இரண்டில் எது ஆபத்தானது?

பறவைக் காய்ச்சல்தான் ரொம்ப ஆபத் தானது. பறவைக் காய்ச்சல் தாக்கிய மிருகமோ மனிதனோ மேற் கொண்டு நடமாட முடியாதபடி இருக்கிற இடத்திலேயே முடங்கிவிடுவதால் அந்த வைரஸ் அதிகம் பரவாமல் போய்விடுகிறது.

பன்றிக் காய்ச்சலுக்கு தற்காப்பு முறைகள்

இந்த நோய் தாக்கினால் ஆரம்பத்தில் ஜுரம், தொண்டைக் கட்டுதல், காய்ச்சல், சோர்வு, இருமல், உடம்புவலி போன்றவை அறிகுறிகள்.

  • அலுவலகத்திலோ அக்கம் பக்கத்திலோ எவரேனும் வெளிநாட்டுக்காரர் புதிதாக வந்திருந்து அவருக்கு மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவரை மருத்துவரிடம் பரிசோதிக்கவும்.
  • தும்மினாலும் இருமினாலும் பேப்பர் நேப்கினால் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். அந்த நேப்கினைக் குப்பையிலே வீசிவிட்டுக் கையைக் கழுவவேண்டும்.
  • காய்ச்சல், இருமல், தலைவ, உடல்வ, தொண்டை வ-, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்சனை இருந்தால் பயம் அடையாமல் மூக்கு, வாயை நன்றாக மூடும்படி முகமூடி அணிந்து கொள்ளுதல் நல்லது.
  • சளித்தொல்லை இருக்கும் போது மூக்கைச் சிந்தினால் அந்தத் துணியை உடனே கொதிக்கும் நீரில் அலசி வெயில் காய வைக்க வேண்டும்.
  • தண்ணீர், ஜுஸ் போன்ற திரவ மற்றும் சத்தான உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
  • நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றவர்களும் கிருமி நாசினி சோப் போட்டுக் கை கழுவ வேண்டும்.
  • நோய் பாதித்தவர்கள், மக்கள் அதிகமாகப் புழங்கும் இடத்தில் நடமாடக் கூடாது. காற்றோட்டமான இடத்தில் இருக்கலாம்.
  • நோய் பாதிக்கும் முன்னரே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. பின்னர் நோய் பாதிக்கும் போது, மாத்திரையின் சக்தி செயல்படாமல் போய்விடும்.
  • அரசு மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்நோய் தொற்றிய அனை வருக்கும் உயிர் ஆபத்து என்ற எண்ணம் தவறானது.
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்