Home » Articles » இங்கிலாந்து சுற்றுலா

 
இங்கிலாந்து சுற்றுலா


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

– அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் கௌரவ தலைவர்
கட்டுரை ஆசிரியர் Jc. S.M. பன்னீர் செல்வம் அவர்கள்
சமீபத்தில் இங்கிலாந்து சென்று திரும்பினார்.
அங்கு பார்த்தவைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

பக்கிங்ஹாம் பேலஸ், லண்டன்

இங்கிலாந்து ராணி மற்றும் வேல்ஸ் இளவரசர் இருவரது அலுவலக மற்றும் குடியிருப்பு தான் பக்கிங்ஹாம் அரண்மனை. இதில் மொத்தம் 602 அறைகள் உள்ளன. 19 அறைகளை மட்டும் வெயில் காலத்தில் பார்வையாளர்களுக்கு திறந்து வைத்துள்ளனர். 60 வயதைத் தாண்டியவர்களுக்கு கட்டணம் ஒருவருக்கு சுமார் ரூ.1200 (15 பவுண்டுகள்) மற்றவர்களுக்கு சுமார் ரூ. 1320 (16½ பவுண்டுகள்).

நேரில் சென்று வாங்குவது செலவை மிச்சப்படுத்தும். கணனி மூலம் ஆன்லைனில் வாங்கினால் ரூ.240/- (3 பüண்டுகள்) கூடுதலாக வசூக்கின்றனர். இதற்கும் (VAT) வரி செலுத்து கின்றனர். அறக்கட்டளையாக (Trust) வைத்து பராமரிக்கின்றனர். உலகின் மிக அழகாகப் பரா மரிக்கப்படும் அரண்மனையில் 350 பேர் பணிபுரி கின்றனர். தரை முழுதும் வெல்வெட் போன்ற கம்பளங்கள் தான்.

ஹால், சமையல் அறை, உணவருந்தும் அறை, மியூசிக் அறை, ஓய்வு அறைஎனப் பல அறைகள் உள்ளன. முடிசூடும் ஹால், பரிசுப் பொருட்கள் வைத்துள்ள அறை, டான்ஸ் ரூம் ஆகியவையும் உண்டு. மார்பிள் ஹால் 2 சிலை களை ஒரே கல்ல் செதுக்கி வைத்துள்ளனர்.

ஹெட்போன் மூலம் விபஜ்ங்களை அறிந்து கொள்ளலாம். தனியே கைடு என ஒருவரும் இல்லை. தினமும் காவலர்கள் பணிமாற்றம் விமரிசையாக நடைபெறுகிறது.

பெர்மிங்காம் பாலாஜி கோவில்

இங்கிலாந்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரம் பெர்மிங்காம். உலகப் புகழ்பெற்ற காட்பரீஸ் சாக்லேட் தொழிற்சாலை இங்கு உள்ளது. இந்தியர்கள் கணிசன்ôன அளவில் வசிக் கின்றனர். பல தலை முறைகளாய் உள்ளனர். மிகப்பெரிய இடத்தில் (சுமார் 10 ஏக்கர் இருக்கும்) வெங்கடாஜலபதிக்கு கோவில் கட்டியுள்ளனர். பாலாஜி கோவில் என்று பெயர்.

கோவிலுக்கு முன்புறம் விநாயகருக்கு ஒருபுறமும் முருகனுக்கு மறுபுறமும் கோவில்கள் அமைத்துள்ளனர். புல்வெளிகள் பசுமையாக உள்ளன. மதிய உணவு அனைவருக்கும் வழங்குகின்றனர். நன்றாகவே உள்ளது. திருமண மண்டபமும் ஒன்று வைத்துள் ளனர்; ஞாயிறு காலை முதல் மாலை வரை நம் ஊர் இட், தோசை, பூரி, டீ, காபி முதயன ஒரு ஸ்டால் சுடச்சுட தயாரித்து விற்கின்றனர். கூட்டமாக மக்கள் சென்று உண்டு மகிழ்கின் றனர். இலவச தரிசனம்; நன்கு பராமரித்து வருகின்றனர்.

பிளாக் பூல் பீச்

இங்கிலாந்து என்பது நான்கு நாடுகளுள் ஒன்று. United Kingdom (ஐக்கிய இராச்சியம்) என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வல்க்கு அஸ்ர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் இணைந்தது. வடக்கு அஸ்ர்லாந்து தவிர மீதி மூன்றும் ஒரே தீவாக உள்ளன. எனவே, கடல் நீளம் அதிகம்.

நம்மூர் போல பீச்கள் இல்லை. வருடத்தில் எட்டு மாதங்கள் அதிகமான குளிர் இருக்கும். பிளாக்பூல் பீச் என்பது ஒரு சுற்றுலா தலம். கடற்கரையை ஒட்டிய நீளமான சாலை. சாலை ஓரத்தில் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கடைகள், காசு போட்டு மிஷின் மூலம் விளையாடும் கேசினோக்கள் அதிகம் உள்ளன. சில இல்ங்களில் கடலுக்குள் செயற்கை முறையில் நிலப்பகுதியை நீட்டிவிட்டு, அதன் மீதும் கடைகள், விளையாட்டு சாதனங்கள் வைத்துள்ளனர். கடல்நீர் கருப்பும் செம்மையும் கலந்த நிறத்தில் உள்ளது. அதில் காலை நனைக்கலாம் என்றால் எங்குமே வழியில்லை. கம்பி வே அமைத்துள்ளனர். ஈபிள் டவர் போன்ற மாடல் ஒன்றும் நிறுவியுள்ளனர்.

சென்ட்ரல் லண்டன்

லண்டன் நகரம் இங்கிலாந்திலேயே மிகப்பெரிய நகரம். தேம்ஸ் நதி அந்நகரில் பல பகுதிகளில் வளைந்து வளைந்து ஓடுகிறது. ரோமானியர்கள் காலத்திலேயே நிர்மாணிக்கப் பட்ட நகரம்.

கட்டிடங்கள் பசுமையானவையும், புதுமையானவையும் கலந்து உள்ளன. ஒரு சாலை வளைந்து செல்கிறது; கட்டிடமும் வளைந்து கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் காரில் சென்றால் வார நாட்களில் Congestion Fee (நெருக்கமான பகுதி கட்டணம்) என்று வசூக்கின்றனர்.

இதுபோல் பல ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. தடுப்பு சுவர்கள் அனைத்தும் மரப்பலகைகளால் ஆனவை. குளிருக்காக இதுபோல் கட்டி வருகின்றனர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்