Home » Articles » NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு

 
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு


மூர்த்தி செல்வகுமாரன்
Author:

– பேராசிரியர் பி. மூர்த்தி செல்வக்குமரன்

கட்டிடக்கலை (B.Arch) மற்றும் வடிவமைப்பு (B.Des) படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு 2010 ஜுன் 10ம் தேதி நடைபெறுகிறது. இத் தேர்விற்கான விண்ணப்ப பதிவு 2010 மே 26ம் தேதி முதல் ஆன்-லைனில் நடைபெறவுள்ளது.

தேர்வு மையங்கள் :

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி பாண்டிச்சேரி உட்பட ஒன்பது மையங்கள்.

IIT சென்னையில் Biotech, Chemical, Civil, EEE, ECE, Mech, Naval Architecture & Ocean, Aerospace Engg உட்பட முக்கிய பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு செமஸ்டர்க்குரிய படிப்புக்கட்டணம் மட்டும் GE / OBC மாணவர்களுக்கு ரூ.27,850ம், SC/ST மாணவர்களுக்கு ரூ.2,850ம் இருக்கும்.

முதல் கேள்வித்தாளில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவில் தலா 20 கேள்விகளும், இரண்டாம் தாளில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 19 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு கேள்வித்தாளின் மொத்த மதிப்பெண் 240 ஆகும். முதல் தாளில் முதல் பகுதியில் சரியான விடைக்கு 3 மதிப்பெண் அளிக்கப்பட்டு, தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

கோச்சிங் சென்டர்களில் சென்று தேர்விற்கு தயார் செய்ய முடியாத மாணவர்கள் வீடியோ கேசட்டுகள் மூலம் படிக்கலாம். அதனை www.smartlearnwebtv.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சென்னை IIT யின் உதவி அழைப்பு எண் : 044-42925020 / 21 இணையதளம் www.jee.iitm.ac.in.

இன்றைய பொருளாதார மந்த நிலையிலும் சில வகையான உயர் படிப்புகள் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் B. Arch எனப்படும் ஆர்க்சிடெக்சர் (கட்டிட வரைகலை) படிப்பைக் கூறலாம்.

இன்றைய அதிவேக நகர்ப்புற வளர்ச்சி யினால் ஏராளமான மக்கள் கிராமப்புறங்களி லிருந்து நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்து தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள் கின்றார்கள். இதனால் கட்டிடங்களின் தேவையும் அதிகரிக்கின்றது. பொருள் வளம் கொண்ட மக்களிடம் தங்களது வீடுகளை நவீன வடிவங்களில் அமைத்துக்கொள்ளும் ஆசையும், தேவையும் அதிகரிக்கின்றன. இதனால் அவர் களின் தேவையை பூர்த்தி செய்ய திறமை மிகுந்த ஆர்க்கிடெக்கன் தேவைப்படுகின்றனர்.

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையின் முதலீடு மட்டும் ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் என்றால் அத் துறையின் வள்ர்ச்சியை கனித்துக் கொள்ளலாம். வாகனங்களை நிறுத்துவதில் தொடங்கி அத்தியா வசிய தேவைகளுக்கான அனைத்து அம்சங் களையும் ஆர்க்கிடெக்டுகள் கணக்கில் எடுத்துக் கொண்டு தங்களது கட்டிட திட்டத்தை வடிவமைக்கின்றனர்.

வீட்டுவசதி நிதிக்கான முதன்மை நிறுவனமான ஏஈஊஇ யின் மதிப்பீடுகளின் படி இந்தியாவில் 2.5 கோடி வீடுகள் உடனடியாக தேவைப்படுகின்றன. இதனால் ஆர்க்கிடெக்சர் படித்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கள் காத்திருக்கின்றன.

நமது நாட்டில் B. Arch பட்டப்படிப்பில் படிப்பதற்கு NATA எனப்படும் National Aptitute Test in Architecture தேர்வில் கட்டாயம் தகுதி பெற வேண்டும். புனேவிலுள்ள National Institute of Advanced Studies in Architecture (NIASA) இந்த நுழைவுத் தேர்வை நடத்துகின்றது.

B. Arch படிப்பானது 5 ஆண்டுகளாகும். சில நிறுவனங்களில் பகுதிநேர படிப்பாக 7 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.

NATA 2010 தேர்விற்கான அறிவிப்பு 2010 மார்ச் மாதம் வெளியிடப்படும். ஆர்க்கிடெக்சர் படிக்க ‘2ல் ஆங்கிலமும், கணிதத்தில் 50% மதிப்பெண்ணும் தேவை. தேர்விற்கு கட்டணமாக ரூ. 800-யை செலுத்த வேண்டும். தேர்வு மையம் மற்றும் தேர்வு பற்றிய விபரங்களை www.nata.in அல்லது www.niasa.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு National Institute of Advanced Studies in Architecture, CDSA, Bavdhan Khnrd, Pand Road, Pune – 411 021. Ph : 020 – 65731088, Cell : 09049700352

NATA தேர்வானது இரண்டு பிரிவாக இருக்கும். முதல் பிரிவுத் தேர்விற்கு ஒருமணி நேரம் ஒதுக்கப்படும். இதில் Aesthetic Sensitivity குறித்த வினாக்கள் கேட்கப்படும். இரண்டாவது பிரிவுத் தேர்விற்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கப்படும்.

இதில் மாணவர்களின் டிராயிங் திறன் பரிசோதனை செய்யப்படும். இந்த இரண்டு தேர்வுகளுக்கும் தலா 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தமாக உள்ள 200 மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணாகும்.

முதல் தேர்வானது பேப்பர் மூலமாக எழுத்து தேர்வாகவும், இரண்டாவது தேர்வானது கம்ப்யூட்டர் மூலமான தேர்வாகவும் அமையும். தேர்வு நாளானது மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடும் தேர்வு மையத்தை பொறுத்து வேறுபடும். இந்த ஆண்டு தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடுத்த ஆண்டு B. Arch சேர்க்கைக்கும் பயன்படும்.

தேர்வு மையங்கள் :

  • தமிழ்நாடு ஸ்கூல் ஆப் ஆர்க்கி டெக்சர், கோவை.
  • தியாகராஜர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மதுரை.
  • மேசி அகடாமி ஆப் ஆர்க்கி டெக்சர், சென்னை.

தமிழ்நாட்டில் B. Arch சேர்க்கை :

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் B. Arch சேர்க்கைக்கு ‘2 தேர்வில் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் எடுத்த மதிப்பெண்களை 200க்கு (Cut off Mark) மாற்றி அதை NATA தேர்வின் 200 மதிப்பெண்ணுடன் சேர்த்து மொத்தமாக 400க்கு மாற்றப்படுகின்றது. இந்த மொத்த மதிப்பெண் களின் வாயிலாக மாணவர் களின் தரவரிசை பட்டியல் கணக்கிடப்படு கின்றது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகம், சென்னை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி மதுரை உட்பட சுமார்11 கல்லூரிகளில் உள்ள 300 ஆர்க்கி டெக்சர் இடங்களுக்கு சேர்க்கை நடத்தப்படுகின்றது. 2 கல்லூரிகளில் உள்ள உள்வடிவமைப்பு (Interior Design) பிரிவில் 80 இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதை தவிர சில தனியார் பல்கலைக் கழத்திலும் இதை படிக்கலாம்.

கடந்த ஆண்டில் மாணவர்களிடம் ஏற்பட்ட போட்டி காரணமாக அனைத்து இடங்களும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதற் கட்ட சேர்க்கை கலந்தாய்வின் முடிவில் நிறுவப்பட்டன.

இந்த படிப்பின் எதிர்காலத்தை பொறுத்தவரையில், தனியார்துறை சார்ந்த வேலைவாய்ப்பும், சுய வேலைவாய்ப்பும் அதிகமாக உள்ளன.

இந்தியாவில் உள்ள சிறந்த ஆர்ச்சி டெக்சர் கல்வி நிறுவனங்கள் :

School of Planning & Architecture (SAP),

New Delhi.

l Centre for Environment Planning & Tech (CEPT), Ahmedabad.

l Sir J.J. School of Architecture, Mumbai.

l School of Architecture& Planning,

Anna university, Chennai.

l MS University, Baroda.

l TYB School of Habitato Studies, New Delhi.

l University of Roorkee, Utrapradesh.

அடுத்த இதழில் B.V.Sc வெட்னரி சயன்ஸ் மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற இருக்கும் AIPVT-2010 நுழைவுத் தேர்வைப் பற்றி விரிவாக பார்ப்போம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்