Home » Articles » உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!

 
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!


அனுராதா கிருஷ்ணன்
Author:

– டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

என் இனிய நண்பர்களே! உடனை உறுதி செய்யும் நான்காம் படி நிலையான சதை கொழுப்பாக உருவெடுக்கும் இரகசியங் களை இனி காண்போம். நமது ஆரோக்கிய புரிதலில் கொழுப்பு என்பது குழப்பும் மாயை யாகத்தானே உள்ளது? இதை புரிந்து கொள்ளாததால் கொழுப்பு என்ற குழம்பிய குட்டைக்குள் புதை குழியாக சிக்கிக் கொண்டு எண்ணிலல்ங்கா நோய் களுக்கு ஆட்பட்டு நிம்மதி இழந்து நரக வாழ்க்கையை வாழத்தான் வேண்டுமா?. அன்பர்களே! கொழுப்பை புரிந்து கொள்ளுமுன், கொழுப்பு உல்ல் ஆரோக்கியத் திற்குத் தேவையா? இல்லையா? நண்பர்களே? உங்கள் மருத்துவ ஆலோசகர் எவரேனும், உங்களுக்கு கொழுப்பு (Cholesterol) அதிகம் உடல் இருக்கிறது ஆகவே கொழுப்பு எடுத்துக்கொள்வதை நிறுத்தி விடுங்கள் என்று கூறினால், உங்களுக்கு நரகத்திற்கு போக வழி சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். இது பற்றி விரிவாக புரிந்து கொள்ள வேண்டு மாயின், நமது உடல் கொழுப்பின் இன்றியமையாத பயன்களை (இரகசியங் களை) தெரிந்து புரிந்து உவ்ர்ந்து செயல்படவேண்டும்.

அன்பர்களே! நமது உடல் கொழுப் பானது மூன்று முக்கிய செயல்பாடுகளை புரிகின்றது. அவை

1. உடல் பாதுகாப்பு அரன் (Defense system) ஆக இருப்பது.

2. நரம்பு சூட்டிகை மற்றும் மூளைத் திறனுக்கு பங்களிப்பு (Nervous system)

3. இரத்த குழாய் மற்றும் இருதய செயல் பாட்டில் பங்களிப்பு (circulatory system)

இந்த மூன்று பணிகளும் நம் உடல் ஆரோக்கியம், உடல் பாதுகாப்பு, உடல் செயல்திறன் மற்றும் புத்திசாத்தனம் ஆகிய தன்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

இவற்றை பற்றி நாம் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், இந்த மூன்றில் ஒன்றை மாத்திரம் இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். முதல் பணியான உடல் பாதுகாப்பு பற்றி இங்கு காண்போம்.

அன்பர்களே! நமது உடல் உள்ள சேமிக்கப்பட்ட நல்ல கொழுப் பானது பாதுகாப்பு கவசமாக விளங்கு கிறது. இந்த சேமிப்பு கொழுப்பானது நமது தோலுக்கு அடியில் (சதைக்கு மேல்) உள்ளது. இந்தக் கொழுப்பு நல்ல கொழுப்பாக இருக்கும் பட்சத்தில், நமது உடன் நோய் எதிர்ப்பு மற்றும் தட்ப வெப்ப சூழ்நிலைகளை தாங்கிக் கொள்ளும் தன்மையை அளிக்கிறது. நல்ல கொழுப்பானது மிக இலகுவாக சுúங்கி விரியும் தன்மையை கொண்டிருக்கும். நமது உடன் வெளியே குளிர் வாட்டி எடுப்பதாக வைத்துக் கொள் வோம். அவ்வாறு குளிர் நம்மை தாக்கும் போது அதை தாங்கும் வழிமுறைகளை உடல் கையாளாவிட்டால், இரத்தம் உரைநிலைக்கு ஆளாகி நாம் இறக்க நேரிடும். ஆப்வே குளிர் அதிகம் ஆனால், தோலுக்கு கீழ் உள்ள நல்ல கொழுப் பானது சுúங்கி, நமது தோனை இறுக்கப்படுத்தி வியர்வை சுரபிகளை இறுக்க மாக மூடிக் கொள்ள உதவும். இதன் மூலம் குளிர் ஊடுருவி இரத்தத்தை உரையச் செய்யாமல் வைத்து நம் உயிரை காப்பாற்றுகிறது. இதுவே வெப்பம் (வெயில்) அதிகமாகி வாட்டி எடுத்தால், தோன் கீழ் இருக்கும் நல்ல கொழுப்பானது விரிந்து தோலை தளர்வு நிலைக்கு (தளர்ச்சி அல்லது சோர்வு நிலை அல்ல) கொண்டு வந்து வியர்வை சுரப்பிகளை அகல விரித்து அதிகப் படி யான வெப்பத்தை வியர்வையாக வெளியேற்று கிறது. நீர் ஆவியாவதால் குளிர்ச்சி உண்டாகும் (Evaporation causes cooling) என்ற விஞ்ஞானத்தின் படி உடல் வெப்பத்தை சமாளிக்கிறது. எவர் ஒருவர் குளிர் தாங்க முடியாதவரோ அவரே வெயிலும் தாங்கமாட்டார். இவர்களுக்கு உடல் கெட்ட கொழுப்பு பிளாஸ்டிக் போல் செயல்படும். நல்ல கொழுப்பு இலாஸ்டிக் போல் செயல்படும். இலாஸ்டிக் சுúங்கவும் விரியவும் முடியும். பிளாஸ்டிக் வெப்பத்தில் விரிந்தாலும் சுருங்க முடியாது. விரிந்து தளர்ந்து விடும். வேலைக்கு ஆகாது.

நண்பர்களே! நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று எப்படி புரிந்து கொள்வது என்று பார்ப்போம். நல்ல கொழுப்பு என்பது சதை தனி, கொழுப்பு தனி என்று விளங்கும் (உதாரணம் : நாட்டுக் கோழியில் இருப்பது போல்). கெட்ட கொழுப்பானது தனித்தனியே இல்லாமல் சதையும் கொழுப்பும் ஒன்றென கலந்து இருக்கும் (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி) நல்ல கொழுப்பு என்பது இலகுவாக பிரிந்து சக்தியாக மாற உதவும். கெட்ட கொழுப்பு சதையிருந்து பிரிக்க முடியாத அளவிற்கு கடினத்தன்மையாக இருக்கும். கெட்ட கொழுப்பு சக்தியாக மாறாது. அது வெறும் கழிவுப் பொருள்தான்.

நீங்கள் உண்ணா விரதம் இருக்கும்போது நல்ல கொழுப்பு உங்கள் உடல் சேமிப்பாக இருக்கும் பட்சத்தில், உங்கள் உடல் உழைப்பிற்கும், உள்ளுறுப்புகளின் செயலாக்கத் திற்கும் சக்தியளிப்பதாக இருக்கும். அப்படி நடந்தால், உண்ணாவிரதம் இருக்கும் போது புத்துணர்வாக உணர்வீர்கள். அதுவே உங்கள் உடல் கெட்ட கொழுப்பு அதிகமிருந்தால், உங்கள் கொழுப்பு சக்தியளிக்காது. எலும்பும் சதையும் சக்தியளிக்க கரைவதால், உல்ல் சோர்வு ஏற்படும். என் இனிய நண்பர்களே! உண்ணா விரதம் இருந்து பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் உடல் உள்ள கொழுப்பு எல்லாம் சொக்கத் தங்கமா? சோடை போன அங்கமா என்று.

நல்ல உணவை எடுத்துக் கொள்வோம்! சொக்க தங்கமாக வாழ்வோம்.

அன்பர்களே, நல்ல, கெட்ட கொழுப்பு களின் விதங்களையும், அவைகளின் தன்மை களையும், அழ்ன் விளைவுகளையும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

– இரகசியங்கள் தொடரும்.


Share
 

1 Comment

  1. P.Balaji says:

    Valuable information thank u sir

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்