Home » Articles » விழித்தெழு மனமே…

 
விழித்தெழு மனமே…


உஷா ராஜலஷ்மி
Author:

– R. உஷா ராஜலஷ்மி

கீழ்காணும் ஆறு காரணங்களும், வெற்றிப் பயணத்தில் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் தடைக்கற்களாகும்.

1. நான் கல்வியறிவு அற்றவன்! நான் புத்திசா இல்லை!

2. என்னால் அதை செய்ய முடியாது! எனக்கு அந்த திறமை இல்லை!

3. என்னால் முதலீடு செய்ய இயலாது! நான் ஏழை!

4. நான் வயது முதிர்ந்தவன்! நான் மிகவும் இளையஹ்ன்!

5. எனக்கு உல்ல்நலம் சரியில்லை! சோம்பலாக உள்ளது!

6. எனக்கு பழகிப் போய்விட்டது! என் தலைஎழுத்து இதுதான்!

இந்த ஆறு காரணங்களையும் பொருட் படுத்தாமல், உழைத்து வெற்றி வாகை சூடியவர் களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்தான் விழித்தெழு மனமே…

காரணம் 1 : நான் கல்வியறிவு அற்றவன்! நான் புத்திசா இல்லை!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அன்று முதல் இன்று வரை மிக்க அறிவாளியாகக் கருதப்படுபவர் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!!

உங்களுக்கு தெரியுமா?

ஐன்ஸ்டீன் குழந்தைப் பருவத்தில் மிக மெதுவாகவே பேசக் கற்றுக் கொண்டார். பள்ளிப் பருவத்தில் சராசரி மாணவனைக் காட்டிலும் மிகக் குறைவாகவே கல்வி கற்றார். மேலும் பெரும்பாலான வகுப்புகளில் உறக்கம் கொள்வார். கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டதால் அசாதாரணமான மாணவன் என்று ஆசிரியரால் வெறுக்கப்பட்டார். அவரது பதில் வயதுகளில் உயர்கல்வி தேர்வில் தோல்வி யடைந்தார். சூரிச் தொழில்நுட்ப பள்ளிக் கூடத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தார்.

ஆகவே, மிகக் குறைவான கல்வி அறிவைக் கொண்டு இருந்த ஐன்ஸ்டீனை உலகின் மிகச் சிறந்த அறிவாளியாக உயர வைத்தது எது?

ஹென்றி ஃபோர்டு

ஹென்றி ஃபோர்டு முதன் முதல் மகிழுந்தை அமெரிக்காவில் உருவாக்கியவர். மேலும் மகிழுந்துகளின் மொத்த உற்பத்தியில் முதன்மையானவராக திகழ்ந்தவர்!!

உங்களுக்கு தெரியுமா?

ஹென்றி ஃபோர்டு ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். துவக்கக் கல்வியைத் தவிர வேறு மேற்படிப்புகள் படித்ததில்லை. தமது 12-வது வயதில் குதிரையின்றி புகைவண்டிகள் ஓடுவதைக் கண்டு ஊக்கமடைந்தார். எனவே புகைவண்டியைப் போன்று ஒரு தனியார் வாகனத்தை வடிவமைப்பதில் ஆர்வம் கொண் டார். அக்கனவை அடைவதற்காக வாகனப் பணிமனையில் வேலைக்குச் சேர்ந்து பல்வேறு நுணுக்கங்களை கற்றறிந்தார். தமது 29-வது வயதில் இயற்கை வாயுவினால் இயங்கும் மகிழுந்தை வெற்றிகரமாக உருவாக்கி, அத்தகைய ஓர் வண்டி இயங்காது என்ற போட்டியாளர் களின் கருத்தை பொய்ப்பித்தார். பிற்காலத்தில் கார் தொழிற் சாலையை அமைத்து உலக அளவில் வியாபாரம் செய்தார்.

‘அறிவு’ என்பது நாம் எவ்வளவு கற்கிறோம் என்பதைப் பொருத்ததல்ல. அதை அடைவதில் நன்க்கு இருக்கும் ஆர்வத்தைப் பொறுத்தது என்பதே அவர் கொள்கையாகும். எவ்வாறு துஹ்க்க கல்வி மட்டுமே பெற்றவரால், பெரிய பொறியாளர்கள் செய்ய முடியாததை கூட செய்ய முடிந்தது?

சொய்கிரோ ஹோண்டா

சொய்கிரோ ஹோண்டா பள்ளிக் கூடத்தில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ வில்லை. மிகக் குறைவாகவே மதிப்பெண்கள் பெற்றார். படிப்பதே அவருக்குப் பிடிக்காது. கட்டுரை எழுதுவதைக் கூட மிகக் கடினமான காரியமாக கருதியவர். மோட்டார் வாகனங்களை பழுது பார்க்கும் பணிமனையில் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் அத்தொழிற்சாலை முதலாளி இவருக்கு வயது மிகக் குறைவாக இருப்பதைக் கண்டு, தம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பணிக்கு அமர்த்தினார். அதிர்ஷ்ட வசமாக சிறிது காலத்திற்குப் பிறகு தொழிற் சாலையில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தொழில் நுணுக்கங்களை கற்றறிந்து புதியதாக ஒரு பணிமனையை தோற்றுவித்தார். இவரால் வடிவமைக்கப்பட்ட பிஸ்டன் சரியில்லை என்று ‘டயேடா’ நிறுவனம் கூறியது. எனவே பிஸ்டனைப் பற்றி அறிந்து கொள்வதற் காக ஒரு தொழிற்கல்லூரியில் சேர்ந்தார். பிஸ்டனைப் பற்றிய வகுப்புகளை மட்டுமே கவனித்த அவர் பிறபாடங்களை கற்பதில் ஆர்வம் காட்டவில்லை. பொன்னான நேரத்தை மற்றபாடங்களை கற்பதற்காக செலவிடக்கூடாது என்பது அவர் கருத்து. பிஸ்டனைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு, மீண்டும் வடிவமைத்து வெற்றிகண்டார். பலபல வெற்றிகள் அவரைத் தேடி வந்தன!

பட்டங்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், இவையல்ல; தொழில் கற்பதில் இருந்த ஆர்வமே ஹோண்டாவை உயர்த்தியது.

எனவே, நாம் எத்தகைய கல்வியறிவைப் பெற்றிருந்தாலும், ஆர்வம், மன ஒருமைப்பாடு, தன்னம்பிக்கை இருந்தால் வெற்றிப்பாதையில் வீறுநடை போடலாம்.

(தொடரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்