Home » Articles » உன்னைப்பற்றி ஒரு நிமிடம்

 
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்


admin
Author:

– ‘சாதனை மாணவன்’ வருண் செந்தில்

உன்னைப் பற்றி கூறு என்று யாராவது கேட்டால் நாம் அனைவரும் முக மகிழ்ச்சி உடன் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்து விடுவோம். ஏன் என்றால் தன்னைப் பற்றி சொல்ல அனைவருக்கும் ஒரு ஆழ்மன ஆசை இருக்கத்தான் செய்யும். தன்னைப் பற்றிச் சொல்ல வேண்டும் என எண்ணி பல லட்சங்கள், கோடி கள், செலவு செய்து மேடைகள், கூட்டங்கள் என தாங்களே ஏற்படுத்திக் கொள்ளும் பல நிறுவனங் கள், தனி மனிதர்கள், ஊடக துறையின் மூலமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இணையதள வரலாற்றில் “You tube” ஒரு மிகப்பெரிய புரட்சியை செய்து கொண்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சிறு கம்பெனிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தங்களைப் பற்றி “You tube” இணைய தளத்தில் பதிவுகளை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். நேர்முகத் தேர்வில் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்வி? உன்னைப்பற்றி ஒரு நிமிடம் சொல்!

இதைக் கேட்டவுடன் பதறிப்போய் எப்படி ஒரு நிமிடத்தில் நமது 20 ஆண்டு படிப்பை சொல்வது என்று பதட்டத்துடன் பல செய்திகளை மறந்து, வேகமாக கூறவேண்டும் என்று நினைத்து தேவையான செய்திகளை சொல்லாமல் விட்டுவிடும் நண்பர்கள் நம்மில் பலபேர்! பல கோடி ரூபாய் செலவழிக்க தேவையில்லை, “You tube” என்ற இணைய தளத்தில் உங்களைப்பற்றி (உங்கள், உங்கள் குடும்ப நிகழ்ச்சிகள், கம்பெனி நிகழ்ச்சிகள்) குறும்படம் எடுத்து அதை எந்த செலவும் இல்லாமல் வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் குறும்படம் உள்ள செய்தியை இமெயில் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கலாம் அல்லது உங்களைப் பற்றிய தேடும் வார்த்தைகளை உபயோகித்து “You tube” இணைய தளத்தில் தேடி அதில் உள்ள குறும் படத்தை பார்த்து மகிழலாம். உங்களுக்கு என்று தனி “You tube” செய்தி இட்ஹய்ய்ங்ப் ஒன்றை உருவாக்கி கொள்ள முடியும் அதில் உங்களுக்கு வேண்டிய குறும்படங்களை தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இந்த அதிசய வாய்ப்புகள் காரணமாக, 2005ல் நிறுவப்பட்ட “You tube” என்ற இணையதளம், பல கோடிக்கான மக்களின் அன்பான இணையதளமாக மாறியது.

Google நிறுவனம் இதன் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு, “you tube” நிறுவனத்தை தன் நிறுவனத்துடன் 1.6 மில்யன் கொடுத்து நவம்பர் 2006-ல் இணைத்துக் கொண்டது.

தற்போது உலகில் உள்ள நம்பர் 1 வீடியோ இணையதளமாக விளங்குகிறது. ஒரு நாளைக்கு 1 மில்யன் மக்கள் பார்த்து மகிழ்கிறார்கள்.

அக்டோபர் மாதம் You tube நடத்திய உன்னைப்பற்றி ஒரு நிமிடம் என்ற தலைப்பில் நடத்திய உலக அளவில் நடந்த போட்டியில் பங்கு கொண்டு ஒரு HP வெப்பில் கம்ப்யூட்டரை பரிசாக 13வது வயதில் சாதனை நிகழ்த்தி இருக்கும் வருண், 9ம் வகுப்பு பயிலும் யுவபாரதி பப்ளிக் ஸ்கூல் மாணவன் சாதனையை பாராட்ட வேண்டும்.

உன்னைப் பற்றி ஒரு நிமிடம் என்ற தலைப்பில் “HP-You tube” போட்டி ஜூலை 24ம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் 30ம் தேதி உங்களை பற்றி குறும்படம் இணையதளத்தில் வெளியிட கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டது.

உருவான விதம்

சாட் ஹர்லி, திவ் சென், ஜாவித் கரீம் ஆகிய நண்பர்கள் விருந்தில் எடுத்த வீடியோ படத்தை சான்பிரான்சிஸ்கோவிவ் இருக்கும் நண்பருக்கு அனுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் தான் “You Tube”. இந்த இணையதளம் பிப்ரவரி 15 2005ல் ஆரம்பிக்கப்பட்டது.

வருண் தன்னைப் பற்றி குறும்படம் தயாரித்து ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி ‘இணைய தளத்தில்’ வெளியிட்டார். இதன் போட்டி முடிவுகள் அக்டோபர் 3ம் தேதி வெளியானது. உலகில் பல நாடுகளில் இருந்து 15 ஆயிரம் குறும் படங்கள் இணைய தளத்தில் சேர ஆரம்பித்தன. இதில் மிகச்சிறந்த 100 குறும்படங்களுக்கு HP Laptop Artist editor கம்ப்யூட்டர் பரிசு அறிவிக்கப் பட்டு இருந்தது. இதில் இந்தியாவில் மொத்தம் 10 பேரும் தமிழகத்தில் இருந்து ஒரே வெற்றி பெற்ற போட்டியாளராக வருண் தேர்வு செய்யப் பட்டுள்ளார். டிசம்பர் 7 ஆம் தேதி ஏட கஹல்ற்ர்ல் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 15 ஆயிரம் உலக போட்டியாளர்களுக்கு நடுவில், தன்னுடைய இளம் வயதில் செய்துள்ள சாதனை மிகவும் வியக்கத்தக்கது. கம்ப்யூட்டரை, இணையதளத்தை நல்லவழியில் இளைய தலைமுறை உபயோகிப்ப தில்லை என்ற பெற்றோர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இணையதளத்தை தன் திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக உபயோகப்படுத்துகிறோம் என்று நிரூபித் திருக்கும் இளம் பள்ளி மாணவனை ஒரு எடுத்துக்காட்டாக கூறலாம்.

“கம்ப்யூட்டரில் உள்ள இணையதள மானது உலகை இணைக்கும் ஒரு கருவி, உலகி-ருந்து பல்வேறு மூலை முடுக்கிலிருந்தெல்லாம் செய்திகளும் மக்களது கருத்துகளும் அலை பாயும். யாரை வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் இதில் அறிந்து கொள்ள முடியும். இதுவே எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது.

ஒரு நாணயத்தில் இருபக்கம் உண்டு. அதுபோல அனைத்திலும் இருபக்கம் உண்டு. கணினியை நல்வழியில் பயன்படுத்துவதும், தீயவழியில் பயன்படுத்துவதும் அவரவர் கையில் உள்ளது. நான் இணையதளத்தை நல்வழியில் தான் பயன்படுத்துகிறேன். எனவே எனது படிப்பாற்றல் மேன்மேலும் அதிகரித்துதான் செல்கின்றது. நான் 5 வயதிருந்து கணினியை உபயோகித்து வருகிறேன்.

வீடியோ உருவாக்கும் ஆர்வம் எனக்கு சோம்பேறித்தனத்தால்தான் வந்தது. ஆரம்பத்தி-ருந்து எனக்கு எழுதுவதை விட பேச பிடிக்கும். கையால் செய்வதைவிட கம்ப்யூட்டரில் செய்வதே பிடிக்கும். இவ்விரண்டை இணைத்தேன். வீடியோ பிளாக் Video Blog ஆன விலாக் (Vlog) வந்தது. செய்தேன். கேமராவைப் பற்றியும் அதில் அடிப்படை களையும் திரு அஷ்ரப் அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்தார்.

எனக்கு மற்ற மாணவர்களைப் போல் விளையாட்டில் ஈடுபாடு இல்லை. டென்னிஸ் தவிர வேறு விளையாட்டில் வல்லமை இல்லை, சாதிக்கவும் என் பெயரை நிலைநாட்டவும் முயன்றேன் ”You tube”ஐ சந்தித்தேன், சாதித்தேன்.

இணையதளம் ஒரு அருமையான இடம். ஆனால் மாணவர்கள் அதனைப் பயன்படுத்தும் போது அதில் பயனுள்ள பகுதிகளை மட்டுமே பார்க்க பழகிக்கொண்டால் சாதிக்க நிறையவே இருக்கிறது” என்கிறார் சாதனை மாணவன்

படிக்கும் காலத்திலேயே பக்குவப்பட்ட மனநிலை பெற்று சாதித்திருக்கும் வருணை தன்னம்பிக்கை வாழ்த்தி மகிழ்கிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment