Home » Articles » முயன்றேன், வென்றேன்

 
முயன்றேன், வென்றேன்


வசந்தி மெய்யப்பன்
Author:

– விஷ்வாஸ் வசந்தி மெய்யப்பன்

எனது பெயர் ந.கு. வசந்தி. ஒரு சாதாரண சந்தை வியாபாரியின் மகள் நான். இராசி புரம் ஆர்.சி. விடுதிப் பள்ளியில் துவக்கக்கல்வி பயின்று, 1976ல் இராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு முடித்து விட்டு, 1977ல் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் PUC முடித்துவிட்டு வீட்டில் இருந் தேன். எதையாவது செய்து முடிக்க வேண்டும். எப்படியாவது ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற தன்னார்வம் எப்போதும் என்னிடம் உண்டு. சேலம் ஹோமியோபதி சென்டர் மூலம் சர்ட்டிபிகேட் கோர்ஸ் முடித்தேன். வீட்டிருந்தபடியே ‘இருமலர்’ என்ற பத்திரிக்கை மூலம் நடத்தப் பட்ட டிப்ளமோ இன் சித்தா மெடிசின் பயின்று தேர்ச்சி பெற்றேன். சேலம் செவ்வாய்ப் பேட்டையில் டாக்டர் அனந்த பத்மனாபன் என்பவரிடம் பயோ கெமிஸ்ட்ரி பயின்று அதிலும் சான்றிதழ் பெற்றேன்.

குறுக்கெழுத்துப் போட்டி, வானொ கேட்டல், துண்டு சீட்டைக் கூட துருவிப் படிக்கும் வழக்கமும் எனக்கு இருந்தது. இந் நிலையில்தான் 1981ல் நான் படித்த பள்ளியிலேயே எனக்கு ரெக்கார்டு கிளார்க் எனும் பதிவறை எழுத்தர் பணி கிடைத்தது. அது அரசு உதவி பெறும் பள்ளி. அப்போதும் எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறையவில்லை. பின் சுமார் 5 ஆண்டுகளுக்குப்பின் 1982ல் இளங்கலை தமிழ் பட்டப்பிரிவில் மதுரை காமராஜர் அஞ்சல் வழி மூலம் சேர்ந்தேன். அதை முடித்து (எம்.ஏ) முதுகலை தமிழ் பட்டம் பெற்றேன். தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் கல்வியியல் இளங்கலை, முதுகலைப் பட்டமும் பெற்றேன். இதற்கிடையில் மும்பை British Institution மூலம் Chemical Industry படிப்பில் சேர்ந்தேன். பட்டப்படிப்புகள் காரணமாக அதிருந்து விடு பட்டு அப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன்.

இந்நிலையில் 1989ல் IAS Preliminary தேர்வெழுத விண்ணப்பித்து இúந்தேன். அப்போது கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் அறிவித்து இருந்த கோடைக்கால M.Phil சிறப்பு வகுப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இப்படிப்பட்ட ஒரு போராட்டச் சூழல் தான் எனக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டது. திருமணமா! ங.டட்ண்ப் பட்டமா? என்ற குழப்பத்திற் கிடையில் எனது கணவர் திரு. மெய்யப்பன் அவர்களின் ஒத்துழைப்புடன் 2 தினங்கள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொண்டு கொடைக் கானல் இருந்து வந்து திருமணம் செய்து கொண்டு மீண்டும் M.Phil படிப்பைத் தொடர்ந் தேன். அதனை 1992ல் முடித்துவிட்டும் கூட முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்பின் 60ல் எனக்கிருந்த மோகம் குறையவில்லை. சென்னை ராணிமேரி கல்லூரியில் பணிபுரிந்து வந்த எனது சித்தி திருமதி சரோஜாகிருஷ்ணன் உதவியுல்ன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1998ல் டட்.ஈல் சேர்ந்தேன். எனது நெறியாளர் திருமதி ஞானபுஷ்பம் அவர்கள் எனக்கு வழங்கிய தெளிவுரைகள் மற்றும் உதவியுல்ன் 2006ல் Ph.D பட்டமும் பெற்றேன்.

தொடர்ந்து 26 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து வந்த சூழல்தான் வேலை வாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப் படையில் 2007ம் ஆண்டு தமிழ் ஆசிரியையாக அரசு உயர்நிலைப்பள்ளி, அலங்காநத்தம் எனும் ஊரில் பணி நியமனம் செய்யப்பட்டேன். இதற்கு இடையில் கவிதைகள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதி கௌரவிக்கப்பட் டுள்ளேன். எனது “பூவே! பூகம்பம் ஏன்?” என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. தமிழுக்கு நான் ஆற்ற வேண்டிய தொண்டினை யும், எனக்கு வழங்கப் பட்ட ஏழைக் குழந்தை களின் கல்வி நலனிலும் மனம் இயைந்து செயல்படுகிறேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இரு புதல்விகள். செல்வி விசாலி B.E., செல்வி சுவாதி, IT.

நெருப்பு சுட்டுவிடும் என்று பயந்தால் சமைத்து உண்ணமுடியாது. படுத்திருந்தால் வெற்றிக்கனியை சுவைக்க முடியாது. சந்தர்ப்பங் களை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு நானே சிறந்த எடுத்துக்காட்டு. அதற்கு உதவிய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

 

2 Comments

  1. senthil says:

    அச்ட்ப் அச்ட்பாச்த் அச்ட்பாஸ்

  2. Vlora says:

    A prvocoaivte insight! Just what we need!

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்