Home » Articles » மகிழ்ச்சி

 
மகிழ்ச்சி


பாலா
Author:

– பாலா

கதவு எண் 117/66 முன் ஆட்டோ ஒன்று வந்து நின்றது. ‘இங்கதான்ப்பா டெலிவரி…… அத இறக்கு!’ என்று ஆட்டோ ஓட்டுநர் கூற, மற்றொருவர் காதிதத்தால் பொதிந்து வைக்கப் பட்ட பொருளொன்றை இறக்கி வைத்தார். அதே வீட்டிற்கு பைக்கில் ஒருவர் வந்திறங்கினார்.

‘ரத்தினம் சார்ங்களா?’ என்றகேள்விக்கு ஆமாமென்று தலையாட்டினார் பைக்கில் வந்தவர் ‘சார் உங்களுக்கு டெலிவரி பண்ணி யாச்சு இதுல ஒரு கையெழுத்து……’ என்று ஓட்டுநர் நீட்டிய காதிதமொன்றில் ரத்தினம் கையெழுத்திட்டார். காதிதத்தால் பொதிந் திருந்த அந்த பொருளை அவர் வீட்டினுள் கொண்டு சென்றார். வீட்டின் வரவேற்பரையில் அவர் இளைய மகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தனது பாடப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அப்பா கொண்டு வந்த பொதியினை ஓர கண்களால் பார்த்து விட்டு மீண்டும் தன் வேலைகளினுள் மூழ்கினாள்.

ரத்தினம் அந்த பொருளை எடுத்துக் கொண்டு அடுத்த அறையினுள் சென்றார். அங்கே அவர் மூத்த மகன் கணினியில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தான். பெருத்த இரைச்சல்! ‘டேய்! அத நிறுத்திட்டு ஏதாவது படிடா! அடுத்த வாரம் பரீட்சை தொடங்குதில்லை……’ என்ற குரல் சமையறையி லிருந்து வந்து எல்லோர் காதுகளையும் கிழித்தது.

அவர் ரத்தினத்தின் மனைவி ரஞ்சிதம், சமையல் செய்தபடியே தனது கோபங்களை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள். ‘இந்த வீட்டில எதுவும் சரியில்லை. டி.வி பார்த்துட்டு படிச்சா, படிப்பு எப்படி மண்டையில ஏறும்? கம்யூட்டரை போட்டா போட்டதுதான்! அதுல அப்படி என்னதான் இருக்கோ?’ என்று ரஞ்சிதம் பொறிந்து கொண்டிருக்க, தன் உடுப்புகளை யெல்லாம் மாற்றிவிட்டு தான் கொண்டுவந்த பொதியினை பிரித்து கொண்டிருந்தார். அதுவரை அப்பா வந்தது கூட தெரியாமல் கணினியுள் மூழ்கியிருந்த ரத்தினத்தின் மகன் திரும்பி தந்தையையும் அந்த பொருளையும் பார்த்தான்.

‘இவங்க அப்பா! அவரு அதுக்கு மேல…… காலையில போனா போனவருதான் அப்புறம் ராத்திரிதான் வர்றது! இந்த வீட்டில என்ன நடக்குது…. பசங்க படிக்கறாங்களா…… ஏதாவது கவலையிருக்கா? இங்க நான் ஒருத்தியே கிடந்து கஷ்டப்பட வேண்டியிருக்கு! எல்லாம் என் தலைவிதி…’ என்று அலுத்துக் கொண்டிருக் கையில் வெளியே இரைச்சலை கிளப்பி கொண்டிருந்த கணினியின் சப்தம் அடங்கி போனது தொலைக்காட்சியின் சப்தமுமில்லை. விறுவிறு வென்று போட்டது போட்டபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தார் ரஞ்சிதம். தனது கணவன் மற்றும் பிள்ளைகள் சேர்ந்து கேரம் போர்டு விளை யாடிக் கொண்டிருப்பதைப் பார்த் தாள். ரத்தினத்தின் மனைவி கண்களில் மகிழ்ச்சி புன்னகை. அதைக் கண்டு ரத்தினம் ஓர் மெல்லிய சிரிப்பை உதிர்த்தார். மூவருடன் ரத்தினத் தின் மனைவியும் விளையாட அமர்ந் தார். சிரிப்பொ அவ் வீட்டினை அலங் கரித்தது.!

அன்றிரவு படுக்கையில் ரத்தினம் புத்தக மொன்றுடன் அமர்ந்தி ருந்தார். அவர் மனைவி துணிகளை மடித்து வைத்துக் கொண்டே ‘பசங்க ரெண்டு பேரும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணாங்க…… உங்க வேலை அதோட நேரம்…… அவங்க கிட்ட பேசக்கூட நேர மில்லாம இருந்தீங்க… ஆனா இப்போ பரவாயில்லை! சந்தோஷமா இருக்கு! ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம வீட்டில எல்லோரும் சிரிச்சு சந்தோ ஷமா இருந்தோம். இதுதாங்க எங்களுக்கு வேணும்!’ என்று கூறிமுடித்து திரும்பி பார்த்தார் ரஞ்சிதம்.. கேரம் போர்டில் கட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டு மனைவிக்காக காத்துக் கொண்டிருந்தார் ரத்தினம். மீண்டும் புன்னகை, பொலிவு…… எங்கும் நிறைந்தது!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்