Home » Articles » தேர்வு என்றால் திகிலா

 
தேர்வு என்றால் திகிலா


தங்கவேலு மாரிமுத்து
Author:

– தங்கவேலு மாரிமுத்து

படிப்பது என்பது மிகவும் சுலபமான வேலை.

தூங்குவது, ஊர்சுற்றுவது, அரட்டை அடிப்பது, விளையாடுவது, விளையாட்டுக்களை வேடிக்கை பார்ப்பது இவையெல்லாம் தான் மிகவும் சுலபாமான வேலைகள் என்று நீங்கள் நினைப்பது சரிதான்.

ஆனால் அந்த வேலைகள் எந்த வகையில் உங்களை உயர்த்துவதற்கு உதவக்கூடும்? என்றைக்காவது யோசித்திப்பார்த்தீர்ளா?

ஆனால் உங்கள் வாழ்க்கையை பல வகையிலும் பல மடங்கு உயர்த்தக் கூடிய வேலை, அதேசமயம்

மிகவும் சுலபமான வேலை எது என்றால் படிப்பதுதான் என்று கண்ணை மூடிக் கொண்டும் சொல்லலாம். கண்ணைத் திறந்து கொண்டும் சொல்லாம்.

எப்படி?

க்ஷி படிப்பு உடலை வருத்தாத வேலை உடலுக்குச் சிரமமே இல்லை. களைப்பு இல்லை. காயம் இல்லை வலி இல்லை.

க்ஷி படிக்கிற காலத்தில், மாணவனுக்கு வேறு எந்தப் பொறுப்பும் இல்லை. அதனால் படிப்பதைத் தவிர வேறு வேலைகள் இல்லை. அதனால் படிப்பதற்கு என்று நிறைய நேரம் கிடைக்கிறது. ரசிகர் மன்றவேலை கல்லூரித் தேர்தல் களமிறங்கும் வேலை என்று எதையாவது நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. என்னைப் படிக்க விடுங்கள் என்று மட்டும் வீட்டில் சொல்ப் பாருங்கள் அப்பாவும் அம்மாவும் அண்ணனும் அக்காவும் போட்டி போட்டிக்கொண்டு உங்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்வார்கள். ஒருதுரும்பை தூக்கிப் போடக் கூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.

க்ஷி படிக்கிற பிள்ளை அவனைப் போய் ஏன் தொந்தரவு செய்யணும் என்று உங்கள் வேலைகளைக் கூட அவர்களே ஓடிவந்து செய்வார்கள்.

இவ்வளவு சுலபமான வேலையைச் செய்வதற்கு ஏன் வலிக்கிறது

வலிக்கிறது உங்களுக்கு? மூன்று சாக்கு களை சொல்வீர்கள். ரெடியாக வைத்திருப்பீர்கள் அல்லது தேடிப்பிடிப்பீர்கள். ‘நீங்க சொல்றது எல்லா வீட்டுக்கும் பொருந்தாது சார். எங்க வீட்டுல நான் தினமும் என்னென்ன வேலை செய்ய வேண்டியிருக்கு தெரியுமா?’

இருக்கட்டுமே அந்த வேலைகளைச் செய்யும் போதே, வீட்டின் நிலைமை பற்றி உணர்வு உள்ளே உறுத்த வேண்டுமே. அந்த உறுத்தல், அந்த வேலைகளை முடித்த கையோடு உங்களை ஒர மன வைராக்யத்தோடு ஆணி அடித்து உட்கார வைத்துப் படிக்க வைக்க வேண்டுமே.

‘படிக்கிறேன் சார் ஆனா எங்க புரியுது? மண்டையில எதுவும் ஏறமாட்டாங்குதே.

அரை மனதோடு உள்ளே ஒரு வெறுப் போட ஒரு பயத்தோடு , பள்ளிக்கூடம் போகிற வர்களும், உடம்பை வகுப்பிலும் மனதை வெளி யிலும் வைத்திருப்பர்களும் தான் இப்படிச் சொல்வார்கள்.

>> செயற்கையாகவாது ஒரு விருப்பத்தை வர வழைத்து பள்ளிக்குச் செல்லுங்கள் அங்கே போய் மற்ற அக்கப்போர் சமாசாரங்களில் ஈடுபடாதீர்கள்.

>> சந்தேகங்கள் வரும். வந்தால் ஆசிரியர் அனுமதித்தால் அப்போதே அவைகளைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் இல்லையா? வகுப்பு முடிந்தவுடன் அவரைச் சந்தித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அதுவும் முடியவில்லை? வகுப்பில் மிகவும் நன்றாகப் படிக்கும் இன்னொரு மாணவனிடம் நட்பு கொண்டு உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

>> அக்கறைஆழமாக இருந்தால் முயற்சி முழுமையாக இருந்தால் எப்படி புரியாமல் போகும்? எப்படி மண்டையில் ஏறாமல் இருக்கும்?

>> ‘சார் நான் கிராமத்துல இருக்கிறவன் சார். ஏழைக்குடும்பம் சார். வசதிபடைச்சவங்களுக்கு ஈடா டவுன் பசங்களுக்கு ஈடா நான் எப்படிசார் படிக்க முடியும்?’

இதுதான் தாழ்வு மனப்பான்மை என்பது. இது உங்கள் இதயத்தில் இருந்தால், எதிலும் நீங்கள் ஜெயிக்க முடியாது.

>> வீட்டில் படிப்பதற்கு விளக்கு வசதியில்லா மல் தெரு விளக்கில் படித்து வக்கீல் ஆன முத்துசாமி ஐயரைப் பற்றி படித்தில்லை நீங்கள்.

>> பள்ளிக்கூட நேரத்திற்கு முன்னாலும் பின்னாலும் காலையிலும், மாலையிலும் கடைகளுக்குச் சென்று ஊழியம் செய்து விட்டு, மீது நேரங்களில் படித்து வகுப்பில் முதன்மையாக வரும் மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

>> புத்தகங்கள் வாங்கக் கூட காசில்லாமல், இரவல் புத்தகங்களையும் நூலகப் புத்தகங் களையும் படித்தே ரேங்க் வாங்கும் மாணவர் களை அறிந்ததில்லையா நீங்கள்?

>> செருப்பு வாங்கக் கூட வசதியில்லாமல் தினமும் நாலைந்து கிலோமீட்டர் நடந்தே சென்று படித்து நிறையவே மார்க் எடுத்த மாணவர்களும் நிறையவே இருக்கிறார்கள்.

>> படிப்பதற்குத் தனி அறைஇன்றி, மேஜை நாற்கா இன்றி சிரமப்படுபவர்கள் கூட, அவற்றைசிரமம் என்று எடுத்துக் கொள்ளா மல் பெரிதுபடுத்தாமல் ‘படித்து முடித்து விட்டால் போதும் நிலைமை மாறி விடும்’ என்ற நம்பிக்கையோடு தரையில் உட்கார்ந்து படித்து எழுதி பாஸாகித் தலை நிமிர்கின்ற மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

>> அவ்வளவுஏன்? இன்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுகிறவர்களில் ஐந்தாறு பேராவது, கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் தானே? வறுமைச்சூழல் வாழ்கிறவர்கள் தானே?

இதையெல்லாம் நீங்கள் பத்திரிகைகளில் படிப்பதே இல்லையா? வேறு எதைத்தான் படிக்கிறீர்கள்……?

ஆக படிப்பதற்கு மனம் இருந்தால் முதல் மாணவனாக வர வேண்டும் என்ற வெறி இருந்தால்……

படிப்பு என்றால் பயமும் வராது. தேர்வு என்றால் திகிலும் வராது.
(தொடரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்