Home » Articles » சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50

 
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50


மோகன்குமார் இரா
Author:

– பேராசிரியர். டாக்டர். இரா. மோகன்குமார்

வாழ்க்கைப் பாடம்

பேராசிரியர். டாக்டர். இரா. மோகன்குமார்
மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்,
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி.

2. உறவுகளை மேம்படுத்துவோம்

மகிழ்ச்சி நிச்சயம்

நண்பர்களுடன், உறவினருடன், குடும்பத் தாருடன், சுற்றத்தாருடன், உடன் பணிபுரி வோருடன், எந்த அளவிற்கு சுமுக உறவை தொடர்கின்றோமோ அந்த அளவிற்கு சந்தோஷம் நம்மோடு உறவாடும். நட்புறவு என்பது ஒரு மனநிலை மட்டுமே. இயற்கையான மனநிலை என்பது இன்பமும், துன்பமும் அற்ற மனநிலையே. அத்தகைய சுத்தமான மன நிலையை இன்பம் மற்றும் துன்பம் போன்ற புற மாயைகளால் (நாம் நமக்கு கிடைக்கும் அனுபவங்களின் அடிப்படையில் உள் உலகிற்கு மனதிற்குள்) இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆகவே இன்பம் மற்றும் துன்பம் என்பது நம்மால், வெற்றி உலகில் இருந்து, சூழ்நிலைகள், மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் உள் உல கிற்கு (மனதிற்குள்) இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆகவே நம் மனது இன்பமாக இருக்கின்றதா அல்லது துன்ப மனநிலையில் காணப்படுகிறதா என்பது, நாம் என்ன செய்தியை மனதிற்கு வழங்குகிறோம் என்பதை பொறுத்ததே!

நாம் நம் மனதிற்கு வழங்கும் செய்திகள் அனைத்துமே, நமக்கு நம் சுற்றுப்புறத்தில் காணப்படும் மனிதர்கள், உணர்வுகள் உயிரற்ற பொருட்கள், மற்றும் மிருகங்களோடு காணப் படும் உறவினை/தொடர்பினை அடிப்படை யானவையே. எடுத்துக்காட்டாக,

நமக்கு மிகவும் பிடித்த களிமண் பொம்மையோடு விளையாடுகிறோம். மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். சந்தோஷ செய்தியை மனதிற்குள் செலுத்துகிறோம். உள்ளம் மகிழ்ச்சிக் களிப்பில் தத்தளிக்கின்றது.

தீடீரென்று நம் கவனக் குறைவு காரணமாக, களிமண் பொம்மை கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.

இத்தகைய சூழலில் நாம் என்ன செய்தியை மனதிற்கு வழங்குகிறோம் என்பது மிக மிக முக்கியம். மட்டுமல்ல இத்தகைய சூழலில் நாம் நம் மனதிற்கு வழங்கும் செய்திகள், நம் அனுபவம், மனோபாவம், குணநலன்கள், மதிப் பீடுகள், மனநலம், மற்றும் உளவியல் நிலையை பொறுத்தது.

நம்முடைய மனோபாவம் பலமான, நேர்மறையான, உலக ஞானத்துடனான, உன்னத நிலையில் இருக்குமானால், அந்த களிமண் பொம்மை உடைந்து போனதை உலகத்தில் அன்றாடம் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாக ஏற்று பரவாயில்லை, இன்னொரு சிறந்த பொம்மையை வாங்கும் வாய்ப்பு வந்துவிட்டது என்ற முதிர்ச்சியுடைய மேன்மை கொண்ட, மகிழ்ச்சியின் செய்தியை மனதிற்கு நாம் வழங்குவோம்.

மனோவியல், அல்லது உளவியல் என்பது மிகவும் சிக்கலான ஒரு துறை. ஏனென்றால் மேற்கண்ட எடுத்துக் காட்டில் பொம்மை உடைந்த போது ஒருவர் எடுக்கும் நிலைபாடு என்பது, அவர் சிறுவயதில் இருக்கும் போது இதே போன்று சூழ்நிலைகள் ஏற்பட்டிருந்த போது அவர் பெற்றோர் அவரிடம் எப்படி நடந்து கொண்டனர் என்பதை பொறுத்தும் அமைகிறது.

அவர் சிறுவயதில் இதே போன்று தெரிந்தோ (அ) தெரியாமலோ ஒரு பொம்மை கீழே விழுந்து உடைந்திருந்த போது, தாய், தந்தை யிடமிருந்து அடி, உதை, திட்டு வாங்கி யிருந்தால், அவர் மனதில் தீய அனுபவங்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும்.

அதை விட முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய இடியாப்ப சிக்கல் என்ன வென்றால், உங்களை ஒரு பொம்மை கீழே விழுந்ததற்காக அடித்து உதைத்த பெற்றோர் அப்படி துன்புறுத்த, அவர்கள் பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தினரிடமிருந்து பெற்ற அனுபவங்களே காரணம் ஆகும்.

இந்த இடியாப்ப சிக்கன், முடிச்சுகளை அவிழ்த்து, சந்தோஷ பெருவாழ்வு என்னும் ஏரியில் மகிழ்ச்சி முத்துக்குளியல் நடத்துவது முடியுமா? என்ற கேள்வி வருகின்றதா!

Pages: 1 2 3

Comments are closed

Sorry, but you cannot leave a comment for this post.

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்