Home » Articles » வெற்றி என்னும் பூங்கவிதை!

 
வெற்றி என்னும் பூங்கவிதை!


நிலவுசேகரன்
Author:

வெற்றி உன்னை அழைக்கிறது!
நீ தேடிக்கொண்டிருக்கிறாய்
அது எங்கே என்று!
நான்கு திசைகளிலும் பூத்துக்குலுங்குவது
மலர்கள் மட்டுமல்ல;
வெற்றியும்தான்!
எப்படிக் கொய்வது எனத் தயங்கினால்
மலர்கள் சொந்தமாவதில்லை!
எப்படிப் பெறுவது எனத் தடுமாறினால்
வெற்றி வசமாவதில்லை!
வீரத்தின் மறுபெயர் வெற்றி!
விவேகத்தின் மகுடம் புகழ்!
வீரமும் விவேகமும் உன்னிடத்தில்!
நீ விரும்பும் வெற்றி ஏதோ ஒரிடத்தில்
உனக்காகக் காத்திருக்கிறது!
அது எங்கே என்று திசைகளின்
திரைவிலக்கிச் செல்!
தோல்வியைத் தந்த சுவடுகளில்
மீண்டும் கால்பதிக்காதே!
உதித்தெழும் கதிரவனைக் கற்பனைசெய்!
புதிய பாதையில்…,
புதிய வெளிச்சத்தில் நட!
உன்முயற்சியின் ஸ்பரிசம்
பட்ட ஓர்நொடியில்
உனது மடியில் வந்துவிடும்
வெற்றி என்னும் பூங்கவிதை!

– கவிஞர் நிலவுசேகரன், அம்மாபேட்டை, சேலம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்