Home » Articles » புகழ்பட வாழ…!

 
புகழ்பட வாழ…!


அழகுதாசன்
Author:

– கவிஞர் அழகுதாசன், கோவை

அடுத்தவர் வாழ நாம்வாழ்வோம்
அவரவர் உழைப்பால் வாழ்ந்திடுவோம்
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக்
குறுகத் தரித்த குறள்படிப்போம்!
கெடுத்திடும் எண்ணம் இல்லாமல்
கெழுதகை நட்பை வளர்த்திடுவோம்
உடுக்கை இழந்தவன் கைபோல
இடுக்கண் களைந்து நட்பாவோம்!
துணிவெனும் சிகரம் ஏறிடவே
பணிவெனும் மந்திரம் கற்றிடுவோம்
அணிவது, உண்பது, உறைவதெல்லாம்
அனைவரும் பெற்றிடத் துணைநிற்போம்!
பணிகள் செய்தே நம்நாட்டைப்
பாரில் உயர்த்திட உயிர் கொடுப்போம்
பொன்னும், மண்ணும், பெண் மீதும்
பொல்லா ஆசையைத் தவிர்த்திடுவோம்!
சூதும் வாதும் செய்வோரைச்
சூழ்ந்திடும் அவலம் ஓர்நாளே!
போதுமென்ற மனஉறுதி
பொன்செயும் மருந்தாய் ஏற்றிடுவோம்!
வேதனை வெடிக்கும் வெறிச் செயலை
வேருடன் அகற்றி மகிழ்வடைவோம்
போதி மரத்துப் புத்தரைப்போல்
புகழ்பட வாழக் கற்றிடுவோம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்